- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 1 July 2011

ஆத்தும நண்பர் இயேசு



பாவ சஞ்சலத்தை நீக்க“ என ஆரம்பிக்கும் பாடல் ஒரு அருமையான ஆங்கிலப் பாடலின் தமிழாக்கமாகும். ஆங்கிலத்தில் அப்பாடல் 'What a friend we have in Jesus' என்று ஆரம்பமாகின்றது. இப்பாடலை இயற்றிய ஜோசப் ஸ்கிரிவென்(1819-1886) என்பார் வாழ்வின் பல விதமான துயரங்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியில் இயேசுக்கிறிஸ்துவைத் தன் ஆத்தும நண்பராக அறிந்து கொண்டவராவார். 

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசப் ஸ்கிரிவென் இளவயதில் ஒரு பெண்ணைக் காதலித்தார். அவளையே திருமணம் முடிக்க இருந்தார். ஆனால் 1840 இல் திருமணம் நடைபெறவிருந்த தினத்திற்கு முதல் நாள் அவள் தற்செயலாக ஏரியொன்றில் விழுந்து மரணமடைந்தாள். 

காதலியின் திடீர் மறைவினால் மனமுடைந்து போன ஜோசப் ஸ்கிரிவென் கனடாவிற்குச் சென்றார். அங்கு வறியவர்களுக்கு அங்கவீனர்களுக்கும் வியாதியஸ்தர்களுக்கும் உதவிடும் சேவகனாக மாறினார். அவர் கனடாவிலிருக்கும் போது உறவினப் பெண் ஒருத்தியை காதலித்தார் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற காலத்தில் அப்பெண்ணும் வியாதிப்பட்டு மரித்தாள். 

மனிதர் எவராலும் ஆறுதல்படுத்த முடியாத துயரத்தில் வேதனைப்பட்ட ஜோசப் ஸ்கிரிவென் தன் நிலையை அறிந்து துயரப்படும் தன் தயாரை ஆறுதல்படுத்த எழுதிய கடிதவரிகள் தான் Whats a friend we have in Jesus all our sins and griefs bear ஆரம்பமாகும் பாடல் வரிகளாகும். “ நமது பாவங்கள் துயரங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு இயேசுகிறிஸ்து நமக்கு எவ்விதம் ஒரு அருமையான நண்பராய் இருக்கிறார்.“ என்பதே இப்பாடலின் ஆரம்ப வரிகளின் அர்த்தமாகும். 

தனிமையிலும் வேதனையிலும் இழப்புகளிலும், நஷ்டங்களிலும் இயேசுகிறிஸ்து எப்போதும் ஜோசப் ஸ்கிரிவெனுடன் இருந்துள்ளதையே அவரது பாடலின் வரிகள் அறியத்தருகின்றன. நம்மைப் பற்றிய சகல விடயங்களையும் அதாவது நம்முடைய உண்மையான நிலையை அறிந்தும் நம்மை நேசிப்பவனே உண்மையான நண்பனாவான். இயேசுக்கிறிஸ்து நம்மைத் தன்னுடைய “சிநேகிதன்“ என்றே கூறுகிறார். (யோவான் 15:15) அவர் எப்போதுமே நம்மோடிருந்து, நமது துயரங்களிலும் இழப்புகளிலும் நம்மை ஆறுதல்படுத்துகிறவராய் இருக்கிறார். இதை அனுபவரீதியாக அறியந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல் “எங்களுக்கு வரும் சகல உபத்திரங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்“ என்று குறிப்பிட்டுள்ளார். (2 கொரி. 1:4)   
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment