நவீன மருத்துவத்தின் தந்தையாகப் புகழப்படும் சேர். ஜேம்ஸ் சிம்சன் என்பார் 1847ம் ஆண்டு, அறுவைச் சிகிச்சையின் போது நோயாளிக்கு வேதனையுணர்வு ஏற்படாதிருக்கும் “குளொஃரோபோம்“ எனும் மருந்தைக் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பு மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பெரும் திருப்புமுனையாக உள்ளது.
குளொஃரோபோம் மருந்தைதக் கண்டுபிடித்த சில வருடங்களின் பின்னர் சேர். ஜேம்ஸ் சிம்சன், எடின்பேர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் அவரிடம், “உங்களுடைய கண்டுபிடிப்புகளிலேயே மிகவும் பெறுமதியானதாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? என்று கேட்டான்.
சேர். ஜேம்ஸ் சிம்சன் அக்கேள்விக்கு குளோரோஃபோர்ம் என்றே பதிலளிப்பார் என்ற எதிர்பார்த்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் அவர் 'நான் பாவி என்பதையும், இயேசுக்கிறிஸ்து என்னுடைய இரட்சகர் என்பதையும் நான் கண்டுபிடித்ததையே என்னுடைய கண்டுபிடிப்புகளில் அனைத்திலும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்“ என்றார்
கணிதமேதையும் அண்டவெளி ஆராய்ச்சிளாளரும் பிரபல விஞ்ஞானியுமான கொப்பர்நிக்கஸ் என்பார் மரிக்கும் தருவாயில், தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக அல்ல, மாறாக இரட்சகரின் உதவி தேவைப்படும் ஒரு பாவியாகவே கண்டார். அவருடைய அறிவுத்தலின்படி அவரது கல்லறையில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது. “பவுலுக்கு காட்டப்பட்டது போன்ற இரக்கம் எனக்கு காட்டப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதேபோல், பேதுருவிற்குக் கிடைத்தது போன்ற ஒரு கிருபை எனக்குக் கிடைக்கவேண்டும் என்றும் நான் விரும்பவில்லை. ஆனால் நீர் அந்தக் கள்ளனுக்கு கொடுத்த மன்னிப்பை எனக்கும் கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்“
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகளும் மேதைகளும் கூட தாங்கள் பாவிகள் என்பதையும் தம்மை இரட்சிப்பவர் இயேசுக்கிறிஸ்து என்பதையும் உணர்ந்துள்ளனர். இத்தகைய உணர்வு மனிதர் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும் அப்போது அவர்கள் தங்கள் பாவங்களுக்கான மன்னிப்பையும் பரலோக வாழ்வின் மகிமையையும் பெற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் உலக மக்கள் அனைவரும் பாவிகளாக உள்ளனர். (ரோமர் 3:23) அவர்களை இரட்சிப்பதற்காகவே இயேசுக்கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் (1 தீமோ. 1:15) உண்மையில், நாமும் கண்டுபிடிக்க வேண்டிய உண்மையாக இது உள்ளது.
(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment