- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 25 February 2014

வேதமும் விளக்கமும் -ஆதி.37:9 -10 ஆம் வசனங்களில் யோசேப்பை எப்படி அவரது தாயும் வந்து வணங்கியிருப்பார்?

ஆதியாகமம் 37:9 ஆம் 10 ஆம் வசனங்களில் யோசேப்பின் சொப்பனத்தில் தனது தகப்பனும் தாயும் தனது சகோதர்களும் தன்னை பணிந்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில், யோசேப்பு இந்த சொப்பனத்தைக் காணும் போது, அவருடைய தகப்பனும், சகோதர்களுமே தன்னை பணிந்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது இதில் யோசேப்பு இந்த சொப்பனத்தைக் கா’ணும்போது அவருடைய தகப்பனும், சகோதர்களுமே உயிரோடு இருந்தனர். அவரது தாய் ராகேல் முன்பே இறந்து விட்டார். இதனைப் பார்க்கும்போது அவரது சகோதர்கள் மற்றும் தகப்பன் மட்டுமே எகிப்து தேசத்தில் யோசேப்பு அதிபதியாய் இருக்கும்போது அவனை வணங்கினர். எப்படி அவரது தாயும் வந்து வணங்கியிருப்பார். இதற்கு விளக்கம் தாருங்கள்.
 
யோசேப்பு கண்ட இச்சொப்பனத்தில் சந்திரன் அவனது தாயாராகவே குறிப்பிட்டப்பட்டுள்ளது எனினும் அச்சமயம் அவள் உயிரோடிராதமையால், ராகேலின் சகோதரியும் யாக்கோபின் முதல் மனைவியுமான லேயாளே இவ்விடத்தில் யோசேப்பின் தாயாக குறிப்பிட்டுள்ளார் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
 
 
ஆதியாகமம் - 37 அதிகாரம்
9. அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான்.

10. இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்க வருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். 

Tuesday 18 February 2014

வேதமும் விளக்கமும் நியாயாதி 1: 19 கர்த்தருடைய வல்லமையினால் இருப்புரதங்களை மேற்கொள்ள முடியவில்லையா?

நியாயாதிபதிகள் 1: 19கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக் கூடாமற்போயிற்று என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் கர்த்தருடைய வல்லமையினால் இருப்புரதங்களை மேற்கொள்ள முடியவில்லையா? 

இவ்வசனத்தை மட்டும் வாசிக்கும்போது கர்த்தரை விட இருப்பு இரதங்களுக்கு வல்லமை அதிகம் என்றே எண்ணத் தோன்றும். ஆனால் நியாயாதிபதிகள் 2ம் அதிகாரத்தில் முதல் மூன்று வசனங்களையும் பார்க்கும்போது இஸ்ரவேல் மக்கள், எல்லோரோடும் யுத்தம் பண்ணவில்லை என்பதை அறிந்திடலாம். இதற்காக கர்த்தர் அவர்களை கடிந்து கொள்கிறார். கர்த்தர் யூதாவோடே இருந்தும் அவர்கள் பள்ளத்தாக்கின் குடிகளோடு யுத்த்திற்கு செல்லவில்லை. இதற்கு காரணம் பள்ளத்தாக்கின் குடிகளிடம் இருப்பு இரதங்கள் இருந்தமையாகும். அவர்கள் யுத்தத்திற்கு சென்றிருந்தால் பள்ளத்தாக்கின் குடிகளையும் அவர்கள் துரத்தி விட்டிருப்பார்கள். இருப்பு ரதம் எதிரிகளிடம் இருக்கின்றது என்பதனால் அவர்கள் யுத்தத்திற்கு செல்லாமல் இருந்து விட்டார்கள் இதனால் அவர்களை துரத்தக் கூடாமற் போயிற்று.  
 நியாயாதிபதிகள்
2 அதிகாரம்

1. கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,

2. நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்?

3. ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார்.

Saturday 15 February 2014

ஆவிக்குரிய பரிசீலனை (2)

13. இன்று நான் யாருடனாவது பொறுமையிழந்து நடந்தேனா?1 கொரி. 13:4
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,  
 
14. இன்று நான் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் சரியாக நடந்தேனா? கொலோ 4:1
எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள். 
 
15. இன்று நான் உற்சாகப்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பேசினேனா? எபி. 3:13
ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. 
 
16. இன்று நான் என் குடும்பத்தாருக்கு எனது அன்பைக் காண்பித்தேனா? 1 தீமே. 5:8
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். 
 
17. இன்று நான் மற்றவர்களை விட என்னை மேலானவனாக எண்ணினேனா? பிலி. 2:3
 ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
 
18. இன்று நான் வேறொருவரை பிழையாக நியாயம் தீர்த்தேனா?  1கொரி. 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 
 
19. இன்று நான் முழுவதுமாக மன்னியாதவர்கள் யாரேனும் உண்டா? மத். 6:12
 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
 
20. இன்று நான் சிந்தனை , நடத்தை தூய்மையாய் இருந்ததா? பிலி. 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 
 
21. இன்று நான் என்னை துன்ப்ப்படுத்தியவர்களுக்காக மன்றாடினேனா?  மத். 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
 
 
22. இன்று நான் யாரிலாவது பொறாமை கொண்டேனா? 1 கொரி. 13:4
  அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
 
23. இன்று நான் எனது சக விசுவாசிகளை மதித்து அன்பு காட்டினேனா? 1 பேதுரு 2:17
எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். 
 
24. இன்று நான் சகோதரனின் தேவைகளில் கரிசனை செலுத்தினேனா? யாக். 2:15-16
  ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்களென்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?
 
25. இன்று நான் கொடுத்த வாக்கை காப்பாற்றினேனா? சங். 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். 
 
26. இன்று நான் சந்தித்தவர்களுள் என்னை ஒரு அடிமையாக்க் கொண்டேனா? 1கொரி 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
 
 27. இன்று நான் எனது எல்லாவித கவலைகளையும் கடவுளிடம் ஒப்புவித்தேனா? 1 பேதுரு 5:7
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 
 
28. இன்று நான் மனிதருடைய கருத்தை மட்டும் கவனத்திற் கொண்டேனா? 1 கொரி. 4:3
ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 
 
29. இன்று நான் கிடைத்த சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக செலவிட்டேனா? எபே. 5:16
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 
 
30. இன்று நான் எனது பிள்ளைகளுடன் ஆவிக்குரிய காரியங்களைப் பேசினேனா? உபா. 6:6-7
இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, 
 
31. இன்று நான் என்னைப் போல என் அயலவனில் அன்பு செலுத்தினேனா? லேவி. 19:18
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர். 
 
(முற்றிற்று)

Saturday 8 February 2014

வேதமும் விளக்கமும் -சிமியோன் மரியாளிடம் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று சொல்வதற்கான காரணம் என்ன?

19. இயேசுகிறிஸ்து குழந்தையாயிருந்தபோது அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு அவருக்காக தேவனைத் ஸ்தோத்தரிக்கும் சிமியோன் மரியாளிடம் உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று சொல்வதற்கான காரணம் என்ன? 
 
லூக்கா 2ஆம் அதிகாரம் 33முதல் 35 வரையிலான வசனங்களில் இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றி சிமியோன் கூறிய தீர்க்கதரிசனத்தை நாம் வாசிக்கலாம். அதில், இயேசுகிறிஸ்துவுக்கு வரும் எதிர்ப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் இயேசுகிறிஸ்துவின் ஊழியம் அவரது சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியதொன்றாகும். இயேசுகிறிஸ்துவின் மரணம் அவரைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற மரியாளுக்கு அதிக வேதனையளிப்பதாய் இருக்கும். இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக மரியாளுக்கு வரும் கடுமையான வேதனையே சிமியோன். உன் ஆத்துமாவையும் ஒருபட்டயம் உருவிப் போகும் என முன்னறிவித்தார். 
 
லூக்கா 2 :33- 35  
 
33. அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

34. பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

35. உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். 

Saturday 1 February 2014

வேதமும் விளக்கமும் இயேசுகிறிஸ்து கழுதையின் மீதா அல்லது கழுதைக்குட்டியின் மீது பவனி வந்தார்?

இயேசுகிறிஸ்து கழுதையின் மீது பவனி வந்தாரா? அல்லது கழுதைக்குட்டியின் மீது பவனி வந்தாரா? மத்தேயு 21:2இயேசுகிறிஸ்து கழுதையையும் அதனோடு கட்டப்பட்டிருக்கும் குட்டியையும் கொண்டுவரும்படி சொல்கிறாரே? (எ.ராயப்பன், செல்லபுரம், இந்தியா)
மத்தேயுவில் மட்டுமே இச்சம்பவத்தில் கழுதையையும் அதனது குட்டியையும் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் மத்தேயு 21:4 இல் கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளமையால் இயேசுகிறிஸ்து இரண்டின்மீதும் சவாரி செய்தார் எனும் எண்ணத்தை தோற்றுவிப்பதாக உள்ளது. உண்மையில் இவ்வசனம் சகரியா 9:9இலுள்ள தீர்க்கதரிசன வாக்கியமாகும். அத்தீரக்க்தரிசனப் பகுதி மூலமொழியில் கவிதை நடையிலேயே உள்ளது. எபிரேயக் கவிதை முறையின்படி அவ்வசனத்தில் முதலாம் வரியில் கழுதை என்று உள்ளது. இரண்டாவது வரியில், அக்கழுதை எப்படிப்பட்டது என்று விபரித்து, கழுதைக்குட்டி என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்வேதாகமத்தில் இரண்டின்மீதும் பவனிவருகிறார் என்னும் எண்ணதைத் தோற்று’விக்குமாறு அவ்வசனம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மாற்கு, லூக்கா என்போரது சுவிசேஷப் புத்தகங்களைப் பார்க்கும்போது இயேசுகிறிஸ்து தாய்கழுதையையும், அதன் குட்யையும் கொண்டுவரும்படி சொன்னது நமக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனினும் கழுத்தைக்குட்டியைக் கொண்டுவருவதற்கு அதனது தாயையும் கொண்டுவருவது அவசியமானாயிருந்திருக்கும். தாயக்கழுதை வராவிட்டால் கழுதைக்குட்டி வந்திருக்காது. இதனால்தான் இரண்டையும் கொண்டுவரும்படி இயேசுகிறிஸ்து கூறினார். 

மத்தேயு-21 அதிகாரம்
2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 

மத்தேயு-21 அதிகாரம்
4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, 

சகரியா 9 அதிகாரம்
9. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.