- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 21 October 2012

ஏழைகளை நேசிக்க 50 வழிகள்

டாக்டர் திருமதி லில்லியன் ஸ்டான்லி

1. ஏழைகளைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கக்
கற்றுக்கொள்ளுங்கள். அன்போடும் மரியாதை
யோடும் அவர்களிடம் பேசுங்கள்.

2. அவர்களது பெயரைக் கேட்டு அவர்கள் குடும்பம்
மற்றும் இல்லத்தைப் பற்றி விசாரியுங்கள்.
அவர்கள் தங்குமிடத்திற்கு விஜயம் செய்யுங்கள்.

3. பயணத்தின்போது கொடுக்க ஏழைகளுக்காகக்
கூடுதல் ஒன்றிரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்
களை எடுத்துக்கொள்ளுங்கள்.

4. சொந்தக் காரில் பயணம் செய்யும்போது சில
பழைய, புதிய ஆடைகளைக் கொண்டு
செல்லுங்கள். அனேகமாக வழியில் சில
ஏழைகளைச் சந்திப்பீர்கள்.

5. உதவியற்றோருக்கு முகமலர்ச்சியுடன் கடன்
கொடுங்கள்.

6. விதவைகள், பெண்கள், முதியவர், பெண்
குழந்தைகள் போன்றோருக்கான அரசாங்கச்
சலுகைகள் மற்றும் வங்கிக் கடன்களை விசாரித்
தறிந்து ஏழைகளுக்கு அவை கிடைக்கச்
செய்யுங்கள்.

7. தொழுநோயாளர், முதியோர், அநாதைகள்,
மனவளர்ச்சி குறைந்தோர், ஊனமுற்றோர்,
ஊமை, செவிடர் மற்றும் குருடர் இல்லங்களைக்
குறித்து விவரங்கள் சேகரித்து ஏழைகளை அங்கு
சேர்த்துவிடுங்கள். இப்படிப்பட்ட சில
இல்லங்களுக்குக் கிரமமாகச் சென்று உதவி
செய்யுங்கள்.

8. ஏழை மாணவர் படிப்பிற்குக் கல்விக் கட்டணம்
கொடுத்துதவுங்கள்.

9. ஏழை மாணவருக்கு இலவச ட்யூஷன் எடுங்கள்.
கல்வியறிவற்றோருக்கு எழுதப்படிக்கக் கற்பி
யுங்கள். இளைஞர் முதியோருக்குங்கூட
சேரிகளில் கிரமமான வகுப்புகள் துவங்கலாம்.

10. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஏழைப் பிள்ளை
களைத் தத்தெடுத்து கடவுளுக்காக வளர்க்
கலாம். பிள்ளைகள் உடையவரும் தத்தெடுக்கத்
தடையில்லை!

11. திக்கற்றோருக்கு ஒரு கருணை இல்லம்
நடத்துங்கள்.

12. கல்கத்தாவிலுள்ள அன்னை தெரசாவின்
கருணை இல்லத்தைப் பார்த்து வாருங்கள்.
அவர்களது மிஷனரிகளின் இல்லம் அண்மையில்எங்குள்ளதோ அங்கே சென்று கூடிய உதவி
வாக்களியுங்கள்.

13. அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று நோயா
ளிகளைச் சந்தியுங்கள். அவர்கள் சரியான
சிகிச்சை பெறுகிறார்களா என்று பாருங்கள்.
இல்லையேல் மருத்துவர்களைச் சந்தித்து ஆவன
செய்யுங்கள். குழந்தைகள் பிரிவிலுள்ள மிகச்
சுகவீனமான குழந்தைகளுக்கு விளையாட்டுச்
சாமான்கள் கொடுங்கள்.

14. ஏழைகளைச் சிகிச்சைக்கு மருத்துவர்களிடம்
கூட்டிச் செல்லுங்கள்.

15. விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு
விவாகம் செய்து வையுங்கள்.

16. உங்கள் அண்மையிலுள்ள வறிய குடும்ப
மொன்றைத் தெரிந்துகொண்டு அவர்கள்
வாழ்வை முன்னேற்றுங்கள்.

17. எளியவரின் உரிமைகள் மற்றும் வழக்கு
களுக்காடீநு வாதாடுங்கள். எடுத்துக்காட்டாக,
அவர்கள் நிலம் அபகரிக்கப்படும்போது தலை
யிடுங்கள்.

18. பிச்சைக்காரருக்காக ஆண்டொருமுறையாவது
ஒரு நற்செய்திக் கூட்டம் நடத்தி நல்லதொரு
உணவளியுங்கள்.

19. உங்கள் பிறந்தநாள், திருமண நாளன்று
ஏழைகளை அழைத்து உணவளியுங்கள்.

20. நிறைய பலகாரங்கள் செய்து அல்லது வாங்கி
பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு வரும்
ஏழைகளுக்குக் கொடுங்கள்.

21. ஆலயத்திற்கு வெளியே தருமம் வாங்கக் காத்து
உட்கார்ந்திருப்போருக்கு ஒரு சுருக்கமான
ஞாயிறு ஆராதனை நடத்துங்கள்.

22. எளிய குடும்பம் ஒன்றை எங்காவது விடு
முறைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

23. தோட்டத்தில் விளையும் சிலவற்றை ஏழை
எளியவருக்காகப் பிரித்து வையுங்கள்.

24. பரண்கள், பெட்டிகள், அலமாரிகள், அடுக்குத்
தட்டுகளைச் சுத்தம் செய்து ஓராண்டிற்கு
மேலாகப் பயன்படுத்தாத பொருட்களைக்
கொடுத்து விடுங்கள்.

25. சேரிகளில் கிறிஸ்து ஜெயந்தி பாடல்களைப்
பாடிக்கொண்டு சென்று தள்ளப்பட்டோருக்குவாழ்த்துதல் அட்டைகளும் இனிப்பும் கொடுத்து
வாழ்த்துங்கள்.

26. குட்டிக் குட்டி விளையாட்டுச் சாமான்கள்,
பலூன்கள் போன்றவற்றை மொத்த விற்பனைக்
கடையில் வாங்கி வைத்துக்கொண்டால் ஏழைச்
சிறுவர் சிறுமியர் கண்ணில்படும்போது
கொடுத்து மகிழ்விக்கலாம்.

27. பணக்காரருக்கு வெகுமதிகளைக் கொடுத்து
அவர்களிடமிருந்து வெகுமதிகளை வாங்கிக்
கொள்ளும் பழக்கத்தை நிறுத்தி அப்பணத்தை
ஏழைகளுக்குத் திருப்புங்கள்.

28. சேரிவாழ் மக்களுக்குக் கழிவறைகள் கட்டிக்
கொடுங்கள்.

29. உங்கள் வருமானம் மற்றும் சொத்தில் பத்தில்
ஒன்றை ஏழைகளுக்காக ஒதுக்கி வையுங்கள்.

30. ஏழைகளுக்குத் தொண்டு செய்யும் ஒரு
நிறுவனத்திற்கு உங்கள் பணத்திலும் சொத்திலும்
ஒரு பகுதி உயில் எழுதி வையுங்கள்.

31. கைக்கு வரும் சில்லரைக்காசு யாவற்றையும்
வறியவருக்கென்று ஒதுக்கி வையுங்கள்.

32. அதிகபட்சம் 10 நல்ல ஆடைகளும் 10 சாதா
உடைகளும் வைத்துக் கொண்டு மற்றவற்றைத்
தேவைப்பட்டோருக்குக் கொடுத்துவிடுங்கள்.

33. ஏழை வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்.

34. திருமண அன்பளிப்புகளில் ஒரே பொருள்
ஒன்றிற்கும் அதிகமாக வந்தால் அவற்றைக்
கடைகளில் மாற்றாமல் பாவப்பட்டவருக்குக்
கொடுங்கள். பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளை
களுக்கென்று சேமித்து வைக்காதீர்கள்.

35. பிள்ளையின் உடைகளை அடுத்த பிள்ளைக்
கெனப் பத்திரப்படுத்தும் பழக்கத்தை விட்டொழி
யுங்கள். அடுத்தப் பிள்ளை புதுத்துணிதான்
போடட்டுமே!

36. பழைய புத்தகங்களை ஏழைகளுக்கு விநியோ
கியுங்கள்.

37. இரப்போர் தங்கும் இடங்களில் பாடல்
நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.

38. உணவுப் பொட்டலங்கள் தயாரித்து பிச்சைக்காரர்
தங்குமிடங்களில் விநியோகியுங்கள். விருந்து
நாட்களில் பிரியாணி போன்றவை மீதமானால்
உறவினருக்குக் கொடுத்தனுப்பாமல் ஏழை
களுக்குக் கொடுத்துவிடுங்கள்.

39. தங்க இடமில்லாதோருக்குக் குடிசைகள் கட்டித் தாருங்கள்

40. எளியோரின் இடிந்த வீடுகளைச் சரிசெய்து
உதவுங்கள்.

41. திக்கற்றோரைச் சந்தித்து அவர்கள் வீட்டைச்
சுத்தம் செய்து நல்லதொரு உணவு சமைத்துக்
கொடுத்து வாருங்கள்.

42. தினந்தோறும் பிச்சைக்காரரைச் சந்திப்பது
உங்கள் வேலைக்கு இடையூறானால் ஒவ்வொரு
மாதத்தின் முதல் தேதி அல்லது முதல் ஞாயிறு
அவர்களை வரப் பழக்குங்கள். அப்பொழுது
அவர்களுக்குப் போதித்து, தருமம் கொடுத்து,
ஜெபித்து அனுப்பலாம்.

43. எளிமையான வாழ்க்கை முறையைப் பின்
பற்றினால் வறியவருக்குக் கூடுதல் செலவழிக்கலாம்.

44. சேரிப் பிள்ளைகளுக்கு விளையாட்டுகள் மற்றும்
போட்டிகள் நடத்துங்கள். ஷட்டில் காக், கால்
பந்து, கேரம் போர்ட், செஸ் போர்ட் போன்றவை
வாங்கிக் கொடுங்கள். ஊஞ்சல் போன்ற
சிலவற்றைப் பொருத்திக் கொடுங்கள்.

45. நீங்கள் மருத்துவர் அல்லது தாதியரானால்
ஆதிவாசிக் கிராமங்கள் மற்றும் அவைபோன்ற
இடங்களில் தங்கி, உங்கள் அறிவையும்
பயிற்சியையும் பயன்படுத்தி மக்களை
உங்களுக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம்
முன்னேற்றுங்கள்.

46. எளியவரின் வீடுகளுக்கு விஜயம் செய்து
அவர்களது நண்பராயிருங்கள். அவர்களது
திருமணங்கள், மரணங்கள் மற்றும் பிற வைபவங்
களில் கலந்துகொள்ளுங்கள்.

47. பொறுமையாய் எளியவரது அவல நிலையின்
சோகக் கதைகளைக் காதுகொடுத்துக் கேட்க
நேரமெடுங்கள்.

48. தேய்ந்த செருப்பு மற்றும் கிழிந்த உடைகளைச்
செப்பனிட்டுப் பயன்படுத்தாமல் ஏழைகளுக்குக்
கொடுத்துவிட்டால் அவர்கள் சில மாதங்கள்
அவற்றை அனுபவிக்கலாமே.

49. சாலையோரத்தில் யாரேனும் விழுந்து கிடப்பதைக்
கண்டால் நில்லுங்கள். உயிரோடிருக்கிறாரா
என்று பாருங்கள். செத்திருந்தால் நல்லடக்கம்
செய்ய நகராட்சிக்கு அறிவியுங்கள். உயிருட
னிருந்தால் ஆவன செய்து உதவுங்கள்.

50. விருந்தினர் மற்றும் அயலகத்தார் உங்கள்
வீட்டிற்குக் கொண்டுவரும் பலகாரங்களை
அவசியமாய்த் தின்றுத் தீர்க்கவேண்டுமென்பது
கட்டாயமல்ல. பகிர்ந்து தின்றால் பசியாறும் !

(இக்கட்டுரையை நகல் எடுத்து விநியோகிக்கலாம்)
டாக்டர் திருமதி லில்லியன் ஸ்டான்
http://www.facebook.com/golda.jasmine/posts/298082126967136

Friday 12 October 2012

நீங்களும் இப்படிதானா?



நாங்கள் கிறிஸ்தவர்கள்
ஜாதி சான்றிதழ்களிலும்
ஜனத்தொகை கணக்கெடுப்பிலும்
நாங்கள் கிறிஸ்தவர்கள்

உலகத்தின் ஓலத்தில்
உதவ மறுத்து
நிதம் உல்லாதசத்தில்
உழல்கின்ற கிறிஸ்தவர்கள்

பணமும் பதவியுமே
எங்கள் பயண வழியின்
பாத சாம்ராஜ்யங்கள் ஆனதால்
நித்தியத்தை மறந்து
சத்தியத்தை மறுதலித்த
சாட்சியற்ற கிறிஸ்தவர்கள்

உலகில் எங்கள் வாழ்வு
விகற்பமாகிப் போனதால்
வாய்மை வழியைச் சொல்ல
வாழ்நாள்ளெல்லாம் வாயடைத்துப் போன
வெற்றுக் கிறிஸ்தவர்கள்

ஆனால்...
இன்று
எங்கள் கல்லறைத் தோட்டங்களில்
பகட்டான
கற்சிலுவைகள் மட்டும்
பாலுலகிற்காய் பரன்
பாரஞ் சுமந்து விட்டார் என்று
பாறை சாற்றிக் கொண்டிருக்கின்றன

நண்பா!
இப்படித்தான் நீயும்
வாழ்கின்றாயா?

நன்றி - மகிமையின் செங்கோல் 

Tuesday 9 October 2012

நீங்கள் அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்


துக்கத்தில்
யோவான் 14 அழையுங்கள்

மனிதர்கள் விழத்தாட்டும் போது
சங்கீதம்27 அழையுங்கள்

பலன் கொடுக்க விரும்பினால்
யோவான்15 அழையுங்கள்

பாவம் செய்து விட்டால்
சங்கீதம்51 அழையுங்கள்

ஆபத்துவேளையில்
சங்கீதம்91  அழையுங்கள்


தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம்139 அழையுங்கள்

விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர்11 அழையுங்கள்

தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம்23 அழையுங்கள்

கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
1 கொரிந்தியர்13 அழையுங்கள்

பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ. 3:12-17 அழையுங்கள்

கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
2 கொரி.5:15-19 அழையுங்கள்

வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31  அழையுங்கள்

சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30  அழையுங்கள்

தேவனைவிட உலகம் பெரிதென எண்ணினால்
சஙகீதம் 90  அழையுங்கள்

வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121 அழையுங்கள்

உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்
சங்கீதம் 67 அழையுங்கள்

பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55 அழையுங்கள்

இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1 அழையுங்கள்

சோர்வடைந்தால்
சங்கீதம் 27  அழையுங்கள்

உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம்37 அழையுங்கள்

மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்
1 கொரி. 13 வாசியுங்கள்

மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்
யோவான் 15 வாசியுங்கள்

வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந் தட்டப்பட்டால்
சங்கீதம் 126 வாசியுங்கள்