- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 16 August 2012

தேவனுடைய வார்த்தையும் மானிட வாழ்க்கையும் (மத் 13:1-9,ன 18-23 லூக் 8:4-, 11-15)


உவமைகள் கற்பனைக் கதைகள் அல்ல. இயேசுகிறிஸ்து தாம் வாழ்ந்த  பிரதேசத்தின் சம்பவங்களை உவமைகளாக்கி தமது போதனையை மக்களுக்கு  விளக்கிக் கூறினார். தம்முடைய பிரசங்கத்தைத் திரளான மக்கள் கேட்டாலும் அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருக்கின்றனர் என்பதை அறியத்தருவதற்காக  இயேசுகிறிஸ்து இவ்வுவமையை கூறினார்.   

விதைப்பவனுடைய உவமையில் விதைகள் நான்கு வகையான நிலங்களில்  விழுகின்றன. இவை மனிதருடைய வித்தியாசமான இதயத்தின் நிலையைக் குறிக்கின்றன. விதை தேவனுடைய வசனம். விதைப்பவர் தேவவசனத்தைப் பிரசங்கிப்பவர்.  இவ்வுவமை தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது அல்லது வாசிக்கும்போது  நாம் எவற்றைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.     

1. உடனிருக்கும் பிசாசைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்
    
வழியருகே விழுந்தவைகளைப் பறவைகள் பட்சித்துப் போட்டன (மத்.13:4).  பாலஸ்தீனப் பிரதேசத்தில் தனிப்பட்ட மனிதர்களின் வயல்கள,; வேலிகள் மூலம்  தனியாகப் பிhpக்கப்பட்டிருப்பதில்லை. எல்லையைக் குறிக்கும் அடையாளங்கள்  மட்டுமே இருக்கும்.   அனைவருடைய வயல்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே வயலாகவே இருக்கும். இதனால், வயல்களுக்கு இடையில் மனிதர்கள் நடந்துசெல்வது  வழமை. இத்தகைய வழிகள் மனிதருடைய நடமாட்டம் காரணமாக கடினமான நிலமாக இருக்கும். இத்தகைய இடங்களையே இயேசு 'வழியருகே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.  

வழியருகில் விழுந்த விதைகள் முளைக்கவில்லை. அவற்றைப் பறவைகள் பட்சித்தன.  பறவைகள் 'பொல்லாங்கன்’’ என்றும் (மத்.13:19), 'பிசாசு’’ என்றும் (லூக்.8:12) இயேசு  குறிப்பிட்டுள்ளார். மனிதன் கேட்கும் அல்லது வாசிக்கும் தேவனுடைய வார்த்தை  அவனுடைய வாழ்வில் கிரியை செய்யாதபடி பிசாசு அவற்றை உடனடியாக எடுத்துப்  போடுகிறான்.  

யோபினுடைய சரிதையில் பிசாசு தேவனுடைய சமுகத்திற்கே போய்வந்தான். நாம்  தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது அல்லது வாசிக்கும்போது அவன்  ஆலயத்திற்குள், அல்லது நம்முடைய வீடுகளுக்குள் வந்து நம் மனம் தேவனுடைய வார்த்தையின்மீது நாட்டம் கொள்ளாதபடி செய்துவிடுகின்றான். தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது, வேறு சிந்தனைகள், ஞாபக மறதி, தூக்கக் கலக்கம்,  அசதி போன்றவை பிசாசினாலேயே வருகின்றன. எனவே, பிசாசைக் குறித்து  கவனமாக இருக்கவேண்டும்.  


2. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும்

சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன (மத்.13:5). 
பயிர்ச் செய்கைக்காக உழப்பட்ட வயல்களின் சில பகுதிகளில் மண் ஆழம் குறை வாக இருப்பதோடு, அடியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் காணப்படும். இவ்விடங்களில் பயிர்கள் ஆழமாக வேர்விட்டு வளரமுடியாது. மேலும் இப்பாறைகளில் தண்ணீர் இராதமையால், முளைக்கும் விதைகள் ஆழமாக வேர்விட்டு வளரமுடியாதிருப்பதோடு, சூரியனின் உஷ்ணம் அதிகரிக்கும்போது பயிர்கள் கருகிவிடுகின்றன (மத்.13:5-6). 

ஆழமற்ற மண்ணில் விதைக்கப்பட்டவைகள் முளைத்தாலும் சூரியனின் உஷ்ணம்  அவற்றை அழித்துப்போட்டது. இதைப்பற்றி இயேசுகிறிஸ்து விளக்கும்போது வசனத்தை உணர்ச்சிவசப்பட்டு சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்கிறவர்கள், வசனத்தின்  நிமித்தம் உபத்திரவமும் துன்பமும் ஏற்படும்போது அவர்கள் இடறலடைவதாக மத்தேயு 13:20-21ல் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் கொஞ்சகாலம் விசுவாசித்து, உபத்திரவம் ஏற்படும் போது பின்வாங்கிப்போவதாக லூக்கா 8:13 கூறுகிறது.    

உணர்ச்சிவசப்பட்டு வசனத்தை ஏற்றுக்கொள்பவர்கள், பிரசங்கத்தைப் புகழுகிறவர்கள்  அதன் பின்னர் வேறுவிதமான உணர்ச்சிகளினால் ஆட்கொள்ளப்படும்போது வசனத்தை மறந்துவிடுகிறார்கள். எனவே தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது உணர்ச்சி  வசப்படுவதைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். 


3. உலகக் காரியங்களைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும்.

முள்ளுள்ள இடங்கள் முற்செடிகள் உள்ள இடம் அல்ல. இது பயிர்ச்செய்கைக்காக உழப்பட்ட வயலில் முற்கள் மற்றும் புற்களின் வேர்கள் உள்ள இடமாகும். எனவே  பயிர்கள் வளரும்போது, முற்கள் மற்றும் புற்களின் விதைகளும் முளைத்து பயிர்களை  விட வேகமாக வளர்ந்து பயிர்களை நெருக்கிப்போட்டுவிடுகின்றன (மத்.13:7). முற்செடிகளாக உலகக் காரியங்களான கவலைகள், ஐசுவரியத்தின் மயக்கம், சிற்றின்பம் என்பன இருப்பதாக இயேசு குறிப்பிட்டுள்ளார். இவைகள், தேவவசனம் வளரமுடியாதபடி செய்துவிடுகின்றன (மத்.13:22, லூக்.8:14). 

உலகக் காரியங்களைக் குறித்து கவலைப்படுவது அர்த்தமற்றது. தேவன் நம்மை விசாரிக்கிறவராக இருக்கிறபடியால் கவலைகளையெல்லாம் அவர்மீது வைத்துவிடும்படி  வேதம் கூறுகிறது (1பேது.5:7). தேவன் நம்முடைய வாழ்வைப் பார்த்துக்கொள்வார்  (சங்.42:5). சகலவற்றையும் தேவனிடம் தெரிவிக்கும்போது நமது கவலைகள் நீங்கி  சமாதானம் கிடைக்கும் (பிலி.4:6-7). நம் இதயத்தில் தேவனுடைய வார்த்தை வளருவதற்கு கவலைகள் தடையாக இருக்காதபடி நாம் பார்த்துக்கொள்ளவேண்டும்.  

பணம் மானிட வாழ்வக்கு அவசியமானது. இயேசு பணத்தின்மீதான மயக்கத்தைப் பற்றியே இங்கு குறிப்பிட்டுள்ளார். இதயத்தில் பணத்தின்மீதான மயக்கம் இருக்கும் போது. பணம் சம்பாதிப்பதைத்தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்காது. இத்தகைய மனிதர்கள் தேவனுடைய ராட்சியத்திற்குள் பி;ரவேசிப்பது கடினம் என்று இயேசு  தொpவித்துள்ளார் (மாற்.10:24-25). 1தீமோத்தேயு 6:6-10 பார்க்கவும். 

சிற்றின்பங்களும் தேவனுடைய வார்த்தை வளருவதற்கு தடையாகவே உள்ளன.  இவை தேவனுடைய வார்த்தையின்மீதுள்ள ஆர்வத்தை இல்லாமலாக்குகின்றன.  

முடிவுரை    

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் வளர்ந்து நல்ல பயனைத் தந்தன. நாம் கேட்கும்  அல்லது வாசிக்கும் தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்வில் நல்ல பலனைத் தரவேண்டும். அதாவது நம்முடைய இதயத்தில் அவை வேர்விட்டு வளர்ந்து, தேவன்  எதிர்பார்க்கும் கனிகளை நம்முடைய வாழ்வில் உருவாக்கவேண்டும்.  

தேவனோடு நமக்கு உள்ள உறவு நம்வாழ்வில் கனிகளை உருவாக்க வேண்டும்  என்பதை யோவான் 15:1-16 அறியத்தருகின்றது. தேவனுடைய வார்த்தையின்  செல்வாக்கு காரணமாக நம்முடைய சிந்தனைகள், செயல்கள் மாற்றமடையவேண்டும். 

பாவமான சிந்தனைகளும் செயல்களும் நீங்கி பரிசுத்தமான எண்ணங்களும்  செயல்களும் நம்வாழ்வில் காணப்படவேண்டும். உலகத்திற்காகவும், உலக உல்லாசங்களுக்காகவும் வாழும் மனிதன் தேவனுக்காக வாழவேண்டும்.  

நாம் தேவனுடைய வார்த்தையை கவனமாக வாசிக்கவேண்டும். அவற்றைத் தியானிக்க வேண்டும். அதன்படி வாழவேண்டும். அப்பொழுது தேவன் நம்முடைய வாழ்வில்  எதிர்பர்க்கும் மாற்றங்கள் உருவாகும்.    


நன்றி - தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்  (Dr. M.S. வசந்தகுமார்.)



Sunday 5 August 2012

எரிந்து ஒளி கொடுத்தல்



டேவிட் பிரேனார்ட் 1781ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். 9ம் வயதில் தகப்பனையும் 14ம் வயதில் தாயையும் இழந்தார். 21ம் வயதில் ஊழியத்தைச் செய்யும்டி அழைக்கப்பட்டார். காசநோயினால் பாதிக்கப்பட்ட பலவீனமான சரீரத்தை உடையவராக இருந்தபோதிலும், அவர் தேவனின் அழைப்பை ஏற்று, செவ்விந்தியர் மத்தியில் சென்று, சுவிசேஷத்தை அறிவித்தார். 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த அவரது வாழவும் ஊழிமும், செவ்விந்தியர் அநேகர் கிறிஸ்துவை அறிய வழிவகுத்தது. 

அவர் தனது நாட்குறிப்பு புத்தகத்தில் (மே 1746) பின்வருமாறு எழுதியுள்ளார். “எவ்வித தயக்கமுமின்றி என்னை முழுவதுமாய் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். நான் ஆண்டவரிடம் கேட்பதெல்லாம், “தேவனே இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும், கரடுமுரடான காட்டுமிராண்டிகளிடம் போக ஆயத்தமாக இருக்கிறேன். உலகத்தின் சகல வசதிகளையும் விட்டுப்போகவும் - ஏன்! மரணத்தினூடேயும் செல்ல ஆயத்தம், உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்கு வேண்டுமானாலும் போகச் சித்தமாக இருக்கிறேன்.” இவ்விதமாகக் கூறி என் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். எனக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. என்னுடைய சிறு மந்தைக்காக ஆண்டவரிடம் போராடினேன். தேவனுக்கு எக்காலமும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி ஜூவாலையைப் போல என் சாவுவேளை வரையில் பிரகாசித்துக் கொண்டிருக்க வாஞ்சிக்கிறேன்” என்பதாகும். 

பலமுறை காசநோயினால் துடித்த அவரது பலவீனமான உடலையும் தேவன் உபயோகித்தார். உண்மையாகவே அவர் மரணபரிந்தியமும் எரிந்து பிரகாசித்தார் அவரது குறுகிய வாழ்வு அநேகருக்கு ஜீவ ஒளியை வெளிப்படுத்தியது. இவரது வாழ்க்கையே பின்னர் விவிலியம் கேரி, ஹென்றி மார்ட்டின் போன்றவர்களின் வாழ்க்கையில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களையும் மிஷனரி ஊழியத்திற்கு உந்தித் தள்ளியது. அன்றைய பவுலடியாரின் வழியினைப் பின்பற்றி எத்தனையோ அடியார்கள் எரிந்து பிரகாசித்தார்கள். 

இதை வாசிக்கும் அருமையானவர்களே, வியாதியின் வேளையிலும் தேவனுக்காக எரிந்து பிரகாசித்த டேவிட் பிரோர்ட்டின் வாழ்க்கை இன்று உங்களுக்கு ஒரு சவாலாக அமைகின்றதா? நீங்களும் அந்தவிதமான அர்ப்பணிப்பை இன்று செய்ய ஆயத்தமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காக எரிந்து பிரகாசித்து கொடுப்பீர்களா? 

ஜெபம்
கர்த்தாவே, என் வாழ்க்கையானது உமக்காக எரிந்து பிரகாசிக்கும் ஒரு விளக்கமாக மாற்றியருளும். ஆமென்.