- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 21 July 2011

மனிதனை மாற்றும் வேதாகமம்



ஆபிரிக்க நாடொன்றில் அடர்ந்த காட்டினூடாகச் சென்று கொண்டிருந்த நாத்திகன் ஒருவன், வேதாமத்தை வாஞ்சையுடன் வாசித்துக் கொண்டிருந்த வயோதிபரொருவரைக் கண்டான். வயோதிபருடைய செயல் நாத்திகனுககு ஏளனமானதாகத் தென்பட்டமையால், “இந்த இருபதாம் நூற்றாண்டில் யாராவது வேதாகமத்தை வாசிப்பார்களா?“ என்று அவரிடம் கேட்டான். 

நாத்திகனுடைய ஏளனமான கேள்விக்குப் பதிலளித்த வயோதிபர், அருகிலிருந்த கல்லொன்றையும், பானையொன்றையும் சுட்டிக் காட்டியவாறே “ இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்திராவிட்டால், இந்தப் புத்தகத்தின் இயேசு கிறிஸ்து என்னை மாற்றியிராவிட்டால், இந்தக் கல்லினால் உன்னை அடிததுக் கொன்று இந்தப் பானையில் உன்னைப் போட்டுச் சமைத்து அருமையான ஒரு விருந்தாக்கியிருப்பேன்“ என்று கூறினான். 

வேதாகம வசனங்கள் ஜீவனும் வல்லமையும் உடையவை. (எபி. 4:12) என்பதற்கு இச்சம்பவம் சிறந்த விபரணமாய் உள்ளது. அவை நரமாமிசப் பட்சினியையும் நல்லவனாய் மாற்றியுள்ளது. வேதவசனங்கள் ஜீவனுள்ள தேவனுடைய வசனங்களாய் இருப்பதனால் (யோவான் 6:63, 2 தீமோ. 3:16) அதற்கு மனிதர்களை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது. அது பயங்கரமான பாவிகளையும் பரிசுத்தவானாக மாற்றுகிறது. 

ஜப்பான் நாட்டு சிறையில் “டெக்கிசி இஷி“ எனும் பெயருடைய கைதியொருவன் இருந்தான். பயங்கரமான குற்றவாளியான இவன் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள ஈரவிரக்கமற்ற மூர்க்கமான மனிதனாவான். 

ஒருநாள் கனடா நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் டொகிசி இஷி இருந்த சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர். டொகிசி இஷி அவர்களை மூரக்க வெறியுடன் பார்த்தானே தவிர, அவர்கள் தன்னுடன் எதைப் பற்றியும் பேசுவதற்கு அவன் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பெண்கள் வேதாகமத்தைச் சிறைக் கூட்டுக்குள் வைத்து விட்டுச் சென்றனர். 

இரவில் டொகிசி இஷி வேதாகமத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். இயேசுக்கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பற்றி அவன் வாசித்தவைகள் அவனது மனதை மாற்றியது. அடுத்த நாள் காலை சிறைக்காவலர்கள் அவனிருந்த இடத்திற்கு வந்தபோது ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். வழமையாக மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் டொகிசி இஷினுடைய முகம் அன்று புதுப் பொலிவுடனும் சாந்ததுடனும் இருந்தது. ஆம். வேதாகம வார்த்தைகள் அவனை முற்றிலுமாக மாற்றிவிட்டது. 

(நன்றி - சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment