- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 29 November 2011

ஒரு தாயின் புதிய தீர்மானங்கள்



  • இன்று முதல் குடும்ப ஜெபம் நடத்த தீர்மானித்திருக்கிறேன். எல்லாத் தடைகளையும் மேற்கொண்டு குடும்ப ஜெபம் நடத்த என்னால் இயன்றதைச் செய்வேன். தினமும் அரைமணி நேரம் குடும்பத்திற்காக மட்டும் ஜெபிக்கத் தீர்மானித்திருக்கிறேன். 

  • ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் கர்த்தரைத் துதிப்பேன். வாரயிறுதி நாட்களிலும் ஒவ்வொரு பிள்ளையோடும் தனித்தனியே கூடி ஜெபிப்பேன். அவர்கள் தினமும் வேதத்தை வாசிக்கவும், ஜெபிக்கவும் கட்டாயப்படுத்துவேன்

  • வேதாகம வார்த்தைகளை கற்பிப்பேன். அளவுக்கு மீறி மதத்தை திணித்து, அதை அவர்கள் வெறுக்காதபடிக்கு கவனமாயிருப்பேன். பிள்ளைகளை ஒழுங்காக ஆலயத்திற்கும் ஞாயிறு பள்ளிக்கும் அழைத்துச் செல்வேன். 

  • என் பிள்ளைகளுக்கு நான் ஒரு நல்ல முன்மாதிரியாயிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். நானே சாதிக்க முடியாததை அவர்களிடம் எதிர்பார்கக மாட்டேன். என் குறையை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நானாகவே அதைத் தாழ்மையோடு ஒத்துக் கொள்வேன். நான் தவறிழைக்கும்போது அவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டேன். 

  • பிள்ளைகள் குறைபாடுகள், கல்வி, ஞானம், என்னிடம் நடந்துகொள்ளும்முறை யாவற்றுக்கும் அப்பாற்பட்டு அவர்களிடம் அன்புகாட்ட தீர்மானித்திருக்கிறேன். மற்றப் பிள்ளைகளோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியோ, கேலி செய்தோ, பிறர்முன் அவர்களை குற்றஞ்சாட்டியோ குறைகூறியோ எரிச்சல் மூட்ட மாட்டேன். 

  • என் சொல்லாலும் செயலாலும் அவர்கள் எனக்கு வேண்டுமென்பதை அவர்கள் உணரும்படி செய்வேன். ஒரு பிள்ளையை மற்றொரு பிள்ளைகளோடு ஒப்பிடமாட்டேன். எல்லாரையும் ஒன்றாகவே நடத்துவேன். அவர்களது உழைப்பு, முயற்சி, நன்னடத்தையைப் பாராட்டி பெருமைப்படுத்துவேன். 

  • பிரம்பைக் கையாடத் தீர்மானித்திருக்கிறேன். கீழ்படியும்வரை பிள்ளைகளைப் பயமுறுத்திக் கொண்டும் கத்திக் கொண்டும் இராமல் ஏற்றவேளையில் அடி கொடுப்பேன். அவர்களின் தவறை அவர்களாகவே உணரச்செய்வேன். முழுக் கீழ்ப்படிதலையும் பிள்ளைகளிடம் இனி எதிர்பார்ப்பேன். 

  • பாவம் செய்யும்போது தவறிழைக்கும்போது தண்டித்து அன்போடு திருத்துவேன். இருதயத்தில் கசப்பை சுமந்துகொண்டே திரிந்து நாள்முழுவதும் அதை வெளிப்படுத்த மாட்டேன். தண்டித்தபின் பழைய அன்பின் உறவைக் காட்டுவேன். 

  • பிள்ளைகளை முரட்டு்க கோபத்தில் நடத்தாமல், அன்பிலும், நல்ல நடத்தையினாலும், பாசத்தை வெளிப்படுத்துவேன். அம்பலத்தில் அவர்களைத் தண்டிக்காமலும் வார்த்தைக்கு வார்த்தை பதில் கொடுத்து அவர்களைக் கோபப்படுத்தாமலும் பொறுமையுடனும் உண்மையுடனும் கண்டிப்பேன். 

  • என் கண்வர் அவர்களைத் தண்டிக்கும்போதோ திருத்தும்போதோ குறுக்கிட்டுத் தடை செய்யக் கூடாதெனத் தீர்மானித்திருக்கிறேன். அவரது கண்டிப்பு தவறென்பதுபோல பின்னர் நடந்து கொள்ளாமல் பொறுமையுடன் பிள்ளைகளுக்கு அவர்கள் செய்த தவறினை விளக்குவேன். கணவரோடு எனக்கு மனவேறுபாடுகள் ஏதுமிருந்தால் அதைப் பிள்ளைகளிடம் வெளிப்படுத்த மாட்டேன். 

  • என் முன்மாதிரியைப் பிள்ளைகள் பின்பற்றும்படியாக கணவனுக்கு எல்லா அன்பும் மரியாதையும் பணிவும் கீழ்படிதலுடனும் காண்பிக்கத் தீரமானித்திருக்கிறேன். பிள்ளைகள் தங்கள் தகப்பனோடு நல்லறவுக்கொள்ள என்னாலான முயற்சிகளை எடுப்பேன். பிள்ளைகளிடம்  அளவுக்கு மீறிப் பரிவு காட்டி கணவன் மீது பொறாமைக்கொள்ள இடங் கொடுக்க மாட்டேன். 

  • வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கத் தீர்மானித்திருக்கிறேன். பி்ள்ளைகளோடு உட்கார்ந்து பேசி, விளையாடிப் பொழுதுபோக்குவதை நான் வீணென்று கருதமாட்டேன். அவர்கள் பாடாசலையிலிருந்து திரும்பும்போது நான் வீட்டிலிருப்பேன். அந்ததந்த நாளின் விபரங்களைப் பகிர்ந்து கொள்வேன்.

  • பிள்ளைகளின் பேச்சைக் கவனமாகக் கேட்பேன். என் மனநிலையினால் அவர்கள் பாதிக்கப்படாதபடி எப்பொழுதும் மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் காணப்படுவேன். மாதம் ஒருமுறையாவது நான் அவர்களை வெளியே அழைத்துச் செல்வேன். 

  • பிள்ளை படிக்கும் பாடசாலை ஆசிரியர்களோடு தொடர்புகொள்ளத் தீரமானி்த்திருக்கிறேன். ஆசிரியரின் குற்றச்சாட்டுக்களை அசட்டை செய்யாது அதைத் தீரவிசாரித்தறிந்து பிள்ளையைத் திருத்துவேன். அக்கம் பக்கத்தார் குற்றஞ்சாட்டும்போது எனது பி்ள்ளையின் பக்கமாக மட்டும் சாய்ந்து பேசாமல் உண்மை நிலையை ஒத்துக் கொள்வேன். 

  • பி்ள்ளைகளின் படிப்பில் நான் கவனஞ் செலுத்துவேன். பாலியல் சம்பந்தமான காரியங்களைக் கூடத் தயங்காமல் பேசி அவர்களின் சந்தேகங்களைப் போக்கிடச் செய்வேன். புத்தகங்களை பரிசீலனை செய்வேன். கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாய் பதிலுரைப்பேன்

  • கூடுமான நாள்வரை என் குழந்தைகளுக்கு தாய்பாலூட்டத் தீர்மானித்திருக்கிறேன். உணவுக்காரியத்தில் “அது வேண்டாம்; இது வேண்டாம்“ என ஒதுங்காது வீட்டில் சமைப்பதை வீணாக்காது முறுமுறுக்காது முகமலர்ச்சியோடு உண்ணும்படி பழக்குவிப்பேன். வீட்டில் சரிவிகித உணவு திட்டத்தை மேற்கொள்வதோடு, நானே அவர்களுக்குப் பரிமாறுவேன்.

  • பி்ள்ளைகளின் காரியங்கள் யாவற்றையும் நானே அவர்களுக்குப் பதிலாகச் செய்து அவர்களின் வளர்ச்சியை தடுக்காதிருக்கத் தீர்மானித்திருக்கிறேன். பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான விடுதலையையும் சுந்திரத்தையும் அளிப்பேன். 

  • பிள்ளைகளை எப்பொழுதும் பிடித்து வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் அதேசமயம் அவர்கள் நண்பர்கள், பிள்ளைகள் செல்லும் இடங்களைக் குறித்து நிர்விசாரமாயிருக்க மாட்டேன். நன்மையானதைத் தெரிந்து கொள்ள பழக்குவிப்பேன். தன் வேலையைத் தானே செய்யவும் வீட்டுவேலைகைளில் பங்கெடுக்கவும் பழகுவிப்பேன். 

  • பிள்ளைகள் கேட்டதெற்கெல்லாம் சரி சொல்லாமல் “இல்லை“ என்ற பதிலையும் மகிழ்ச்சியாய் ஏற்க பழக்குவிப்பேன். எனனுடைய பிள்ளைகளை எளிய வாழ்க்கைகத் தரத்தில் வளர்ப்பேன். 

(நன்றி சத்தியவசனம் January - March - 2008 ஆசிரியர் - டாக்டர் லில்லியன் ஸ்டான்லி)






Tuesday 22 November 2011

வேதாகமத்திற்கு வெளியில் ...(2) எபிரேயர் 1:1-2, யோவான் 1:9, யாத்திராகமம் 3:2-4, மல்கியா 1:11 விளக்கங்கள்


இதன் முதல் பகுதியை வாசிக்க இங்கு அழுததுங்கள்

(அ) பிதாக்களுடன் பேசிய தேவன் (எபிரேயர் 1:1-2)



“இயேசுகிறிஸ்து பிற மதங்களில் வேறு பெயர்களில் மறைந்திருக்கிறார்“ எனும் உபதேசம் வேதவசனங்களைத் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தவறான போதனையாகும்.(41) ஏனென்றால் எபிரேயர் 1:1 ஐ ஆதாரமாகக் கொண்டு இவர்கள் ஏனைய மத நூல்களும் இயேசுகிறிஸ்துவினாலே அருளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இவர்கள் எபிரேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை கருத்திற் கொள்ளாமல், “பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் பிற மத பக்தர்களுடனும் பேசியுள்ளார்“ என்று வாதிடுகின்றனர். (42) இஸ்ரவேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்த தேவனே, பிறமத மக்களுடைய வாழ்விலும் செயல்பட்டு வந்தார் என்பதே இவர்களின் தர்க்கமாகும். (43)

நாம் ஏற்கனவே பார்த்தபடி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் வித்தியாசமான முறைகளில் மனிதர்களோடு தொடர்பு கொண்டு தம்மை பற்றி இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தார் என்பதே எபிரேயர் 1:1 நமக்கு அறியத்தரும் விடயமாகும். (44) இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எபிரேய நிருப ஆசிரியர் “நம்முடைய பிதாக்கள்“ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்நிருபம் எபிரேயர்களான யூதக் கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளது. (45) எனவே, அவர்களைப் பொறுத்தவரை “நம்முடைய பிதாக்கள் பழைய ஏற்பாட்டு பக்தர்களாவார்(46) எனவே, தேவன் பழைய ஏற்பாட்டு பக்தர்களோடு பேசியுள்ளதைப் பற்றி இவ்வசனததில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, உலக மதங்கள் அனைத்திலும் தேவ வெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படவில்லை.

(ஆ) எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளி (யோவான் 1:9)

உலகின் சகல மதத் தலைவர்களும், தத்துவ ஞானிகளும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் உபதேசங்களை எழுதினார்கள் என்னும் கருத்தை நிரூபிப்பதற்காக சிலவேத ஆராய்ச்சியாளர்கள் யோவான் 1:9 ஐயும் உபயோகிக்கின்றனர். இயேசுகிறிஸ்துவைப் பற்றி எழுதும் யோவான் இவ்வசனத்தில், உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோவான் 1:9) என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வசனத்தை விளக்கும் சில வேத ஆராய்ச்சியார்கள், “ஏசாயா, பிளேட்டோ, புத்தர், கான்ஃபூசியஸ் போன்றவர்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே தங்களின் போதனைகளை உலகிற்கு அறிவித்துள்ளனர்“ என்று கூறுகின்றனர் (47) உலகத்தில் பிறக்கின்ற சகல மனிதருக்கும் இயேசுகிறிஸ்து ஆன்மீக ஒளி கொடுக்கிறார் என்றே இவ்வசனம் கூறுவதாக இவர்கள் கருதுகின்றனர். (48) எனினும் இயேசுகிறிஸ்துவின் இச்செயல் பிற மதத் தத்துவங்களும் உபதேசங்களும் உருவாக்குவற்குக் காரணமாக இருந்ததாக யோவான் கூறவில்லை. (49) இயேசுகிறிஸ்து மக்களைப் பிரகாசிக்கப்பண்ணுவது, அவர்களின் உண்மையான நிலையை அவர்களுக்கு உணர்த்தும் செயலாகவே இருப்பதை யோவானின் சுவிசேஷம் அறியத்தருகிறது. (50)

ஒளியாகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்திருக்கின்றார். அவ்வொளியில் தங்கள் ஆவிக்குரிய நிலையைக் கண்டு, மனந்திரும்பி அவரை விசுவாசிப்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றார்கள். மற்றவர்கள் அவ்வொளியில் தங்கள் பாவ செயல்கள் வெளிப்படாமலிருப்பதற்காக அவரிடம் வராமலிருக்கிறார்கள் என்னும் உண்மையை யோவான் 3:18-21 அறியத்தருவதனால் (51) மக்களைப் பிரகாசிக்கப்பண்ணும் இயேசு கிறிஸ்துவின் செயலை, சகல மனிதரும் அவரால் ஆவிக்குரியபிரகாரம் நன்மையடையும் செயலாக விளக்க முடியாது.(52) மனிதர்கள் அனைவரும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக யோவான் தன்னுடைய சுவிஷேசத்தை எழுதினாலும் (யோவான் 20:31) (53) எல்லோரும் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார் (யோவான் 1:11)(54) எனவே “இயேசுகிறிஸ்துவின் ஒளி சகல மனிதர்களுக்கு கிடைத்தாலும் அது அவர்கள் அவ்வொளியை என்ன செய்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அவர்களை இரு பகுதியாகப் பிரிக்கின்றது.(55) இயேசுகிறிஸ்துவை விசவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர். நிராகரிப்பவர்கள் ஆக்கினைக்குட்படுகின்றனர். (யோவான் 3:36)(56) எனவே, சகல மதத்திலுள்ளவர்களுக்கும் இயேசுகிறிஸ்துவினால் ஆன்மீக ஒளி கிடைப்பதாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. சகல மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒளியாக இயேசுகிறிஸ்து உள்ள போதிலும், அவ்வொளியில் தங்களின் உண்மையான பாவநிலைமையைக் கண்டு, அவரிடம் வருவார்கள் மட்டுமே அவரால் ஆவிக்குரிய பிரகாரம் நன்மையடைகிறவர்களாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. 

(இ) முட்செடியின் நடுவில் தரிசனமளித்தவர் (யாத்திராகமம் 3:2-4)

பிறமதங்களிலும், அவற்றின் தெயவச் சிலைகளுக்குள்ளும் இயேசுகிறிஸ்து இருக்கிறார் என்று தர்க்கிப்பவர்கள் தங்களது உபதேசத்தை நிரூபிப்பதற்காக, தேவன் மோசேக்கு முட்செடியின் நடுவில தரிசனம் கொடுத்த சம்பவத்தை கூட்டிக்காட்டுவது வழமை. “தேவன் சகல இடங்களிலும் இருக்கின்றார் என்பதைக் காண்பிப்பதற்காகவே அவர் மோசேக்கு முட்செடியில் தரிசனம் அளித்தார்“ என்று கூறும் இவர்கள், “தேவனுடைய பிரசன்னம் முட்செடியில் இருந்தது போலவே, இயேசுகிறிஸ்து சகல மதங்களிலும் கலாசாரத்திலும் இருக்கிறார்“ என்று தர்க்கிக்கின்றனர். (57) தேவன் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமளித்தது உண்மை என்றாலும் (யாத். 3:2-4) அந்த “முட்செடிக்குள் தேவன் இருந்தார்“ என்று வேதாகமம் கூறவில்லை. அவர் “முட்செடிக்கு நடுவில்“ அக்கினி ஜூவாலையாகத் தரிசனமளித்தாகவே யாத்திராகமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேவன் ஓரிடத்தில் மக்களுக்குத் தரிசனம் கொடுத்தார் என்பதற்காக, பிறமதத்தவரின் சிலைகளுக்கள் எல்லாம் அவர் இருக்கின்றார் என்று கூறமுடியாது. எனினும், சில புதிய மொழிபெயர்ப்புக்களில், உபாகமம் 33:16 இல் “தேவன் முட்செடியில் வாழ்ந்ததாகக்“ குறிப்பிட்ப்பட்டுள்ளது. நாம் உபயோகிக்கும் வேதாகமத்தில் இவ்வாக்கியம் “முட்செடியில் எழுந்தருளினவர்“ என்று உள்ளது. (58) புதிய மொழிபெயர்ப்புகளிலுள்ள “வாழ்ந்தார்“ என்னும் பதம் மூலமொழியில் “நிரந்தரமாக இருந்ததைக்“ குறிக்கும் விதத்தில் அல்ல. அவர் இருந்ததன் நிச்சியத்தை அறியத்தரும் விதத்திலேயே உள்ளது. (59) எனினும் யாத்திரகாமம் 3:2-4 இல் குறிப்பிடப்பட்டுள்ளபோல தேவன் “முட்செடிக்க நடுவில்“ மோசேக்கு தரிசனமானார் என்பதை மறுப்பதற்கில்லை. அவர் முட்செடிக்குள் நிரந்தரமாக இருப்பதாக இவ்வசனம் கூறவில்லை. எனவே, இவ்வசனசத்தை ஆதாரமாகக் கொண்டு, தேவன், பிறமதச் சிலைகளுக்குள் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்றது. (60)


(ஈ) எல்லா இடங்களிலும் என் நாமத்திற்கு தூபமும் காணிக்கையையும் செலுத்தப்படும் (மல்கியா 1:11)


பிறமத வழிபாடுகள் தேவனுக்கே ஏறெடுக்கப்படுகின்றன என்னும் தங்களின் தவறான கருத்தை நிரூபிப்பதற்காக சில வேதஆராய்ச்சியாளர்கள் மல்கியா 1:11ஐ உபயோகிக்கின்றனர். இவ்வசனத்தில் சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசை வரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு. “உண்மையான உள்ளத்தோடு செய்யப்படுகின்ற ஆராதனை எந்த மதத்தில் செய்யப்ட்டாலும் அது தேவனுக்கே செய்யப்படுகின்றது. (62) இவர்கள் இவ்வசனத்திலுள்ள “மகத்துவமாயிருக்கும்“ “செலுத்தப்படும்“ என்னும் சொற்களை நிகழ்காலத்தில் உள்ளவைகளாக விளக்கி, மல்கியாவின் காலத்திலேயே வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதைப் பற்றியே இவ்வசனம் கூறுவதாகத் தர்க்கிக்கின்றனர். (63) ஆனால் புறஜாதியாருடைய வழிபாடுகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கு வேதாகமத்தில் இதுவித ஆதாரங்களும் இல்லை. மல்கியாவின் புத்தகத்திலும் புறஜாதியாருடைய வழிபாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. (மல். 1:5, 2:13-16) மேலும் இவர்கள் கூறுகின்ற விதமாக, இவ்வசனத்தின் வினைச்சொற்கள் நிகழ்காலத்தில் இல்லை. உண்மையில், “எதிர்காலத்தில் சகல ஜாதியினரும் தேவனை சேவிப்பதைப் பற்றியே தேவன் இவ்வசனத்தில் முன்னறிவித்துள்ளார்.“(65) எனினும் இது புறஜாதி மக்கள் தங்களுடைய மதங்களில் செய்யும் வழிபாட்டை அல்ல, அவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டு அவரை மகிமைப்படுத்தும் ஆராதனையைப் பற்றிய முன்னறிப்பிப்பாகவே உள்ளது. 

(வளரும்)

Footnote and References
(41) C. Wright 'The Unique Christ in the Plurality of Religions' in The Unique Christ in our Pluralist World, p 35

(42) R. Panikkar, The Unknown Christ of Hindusim, p 137

(43). K. Abraham, Prajapathi : The Cosmic Christ, p.30

(44) பக்கங்கள் 29-32 இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

(45) இந்நிருபத்தில் பழைய ஏற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயங்களே அதிக அளவில் இருப்பதனால், இது அக்காலத்தில் பழைய ஏற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த யூதக் கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. “நிருபத்தின் விடயங்கள், இதன் முதல் வாசகர்கள் அக்கால யூத சிந்தனைகளிலும் வழிபாட்டு முறைகளிலும் நன்கு பரிச்சயமானவர்களாக இருந்துள்ளதை அறியத்தருகின்றது. (G.H. Guthrie, Hebrews: The NIV Applications Commentary, p. 19) புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களில் எபிரேய நிருபத்திலேயே அதிகளவு பழைய ஏற்பாட்டு வசனங்களும் கருத்துக்களும் உள்ளன. (G.H. Guthrie, 'The Old Testament in Hebrews' in Dictionary of the Later New Testament Quotations in Hebrews' in New Testament Studies, pp. 363-379) “எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம்“ எனும் தலைப்பு இந்நிருபத்திற்கு முதற்தடவையாக இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கொடுக்கப்பட்டாலும், இது யூதக்கிறிஸதவர்களுக்கே எழுதப்பட்டது என்னும் ஆதிச் சபைப் பிதாக்களின் கருத்து சரியானதாகவே உள்ளது. (D.A. Hanger, Hebrews : New International Biblical Commentary, pp. 1-2)

(46) இவ்வசனத்தில் “பிதாக்கள்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் புதிய ஏற்பாட்டில் “முதற்பிதாக்களையே“ குறித்தாலும் (யோவான் 7:22, ரோ. 9:5) இவ்வசனத்தில் பழைய ஏற்பாட்டு பக்கதர்களைக் குறிப்பிடும் விதத்திலேயே உபயோகிக்கப்பட்டுள்ளது. (L. Morris, Hebrews : The Expositor's Bible Commentary Volume 12, p. 12) புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த யூதர்கள், உலகிலுள்ள மதங்களின் பக்தர்களை அல்ல, தங்களது மூதாதையார்களான இஸ்ரவேல் மக்களையே தங்களுடைய பிதாக்களாகக் கருதினார்கள். 

(47) W. Temple, Readings in St. John's Gospel Volume 1, p.10

(48) Ibid. p 10 இரண்டுவிதமான முறைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் “உலகத்தில் வந்து“ என்னும் சொற்பிரயோகம், “உலகத்தில் வருகி்ன்ற மனிதர்களைக்“ குறிக்கின்ற விதத்திலும், “உலகத்திற்கு மனிதராக வந்த இயேசுகிறிஸ்துவைக்“ குறிக்கின்ற விதத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை ஆங்கில வேதாகமங்களில் நாம் அவதானி்கலாம். எனினும், ஒளியாகிய இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதைப் பற்றியே யோவான் இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதை இவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதி அறியத் தருகிறது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentaries, pp. 121-122) 'இயேசுகிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வந்தமையால், சத்தியத்தின் வெளிச்சம் சகல மனிதருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது“ என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். (M.C Tenney, John : The Expositor's Bible Commentary Vol 9, p 31)

(49) இது சகல மனிதருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான வெளிப்படுத்தலைப் பற்றிய விபரணம் என்பது சில தேவஆராய்ச்சியாளர்களினது கருத்தாய் உள்ளது. (L.  Morris, John : New International Commentary on the New testament, p. 95; J. Calvin, St. John 1-10 : Calvin's New Testament Commentaries, p. 15)

(50) மூலமொழியில் உபயோகிக்கப்படடுள்ள “ஃபோத்தீஸ்ஸாய்“ (photizei) எனும் கிரேக்கப் பதம் “வெளிச்சம் கொடுத்தல்“ அல்லது “தென்பட அல்லது புலப்பட வைத்தல்“ என்னும் அர்த்தங்களையே கொண்டுள்ளது. எனவே, மானிட அறிவுக்கு ஒளியூட்டும் செயலாக யோவான் 1:9 ஐ விளக்க முடியாது. (D.A. Carson, John : The Pillar New Testament Commentary, p. 124; E.A. Blum : John : The Bible Knowledge Commentary New Testament, p 272)

(51) யோவான் 3:18-21  18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்' என்று குறிப்பிடப்பட்டள்ளது.


(52) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(53) யோவான் 20:30 இல் “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.“ என்று குறிப்பிட்டுள்ளார்

(54) யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்திலேயே, அவர் (இயேசு) தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை“ என்பதை அறியத் தந்துள்ளார். (யோவான். 1:11) இயேசுகிறிஸ்து யூதவம்சத்தில் இவ்வலகத்திற்கு வந்தமையால் யூத ஜனங்களே இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்துவின் சொந்த ஜனங்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

(55) G.M. Burge, John : The NIV Application Commentary, p 58

(56) யோவான் 3:36 இல் “ குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் “ என்னும் உண்மையை அறியத்தருகிறது. இதனால்தான் 1 யோவான் 5:12 இல் “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

(57) J. Taylor, 'Primal Vision' cited in M. Goldsmith What About other Faiths, p. 125

(58) NIV மொழிபெயர்ப்பில்  இவ்வாக்கியம் 'dwelt in the bush; என்று இருப்பதனால், இதனை அடிப்படையாகக் கொண்ட புதிய இலகு தமிழ் மொழிபெயர்ப்பில் இவ்வசனம் “எரிகின்ற புதரில் வாழ்ந்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோனஹன் மொழிபெயர்ப்பில் “முட்செடியில் தங்கியவர்“ என்றும், திருவிவிலியத்தில் “முற்புதரில் வீற்றிருந்தவர்“ என்றும் இவ்வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(59) E.S. Kalland, Deuteronomy: The Expositor's Bible Commentary Vol 3, p 227. இப்பதமே வனாந்திரப்பிரயாணத்தின்போது, இஸ்ரவேல் மக்கள் தங்கியிருந்த இடங்களில் அவர்களோடு சென்ற மேகஸ்தம்பம் தரித்து நின்றதைக் குறிக்கவும் உபயோகிக்கப்பட்டுள்ளது. (எண். 9:17-18) அச் சந்தர்ப்பங்களில் மேகஸ்தம்பம் நிரந்தரமாக அல்ல, தற்காலிகமாக குறுகிய காலத்திற்குத் தங்கியிருந்ததையே இப்பதம் குறிக்கின்றது. (Ibid, p227) எனவே, தேவன் நிரந்தரமாக முட்செடியில் தங்கியிருந்தார் என்று இவ்வசனத்தை மொழிபெயர்ப்பது தவறாகும். 

(60) அக்காலத்தில் உயிர்ந்தவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்ததினாலேயே, பாதரட்சைகளைக் கழற்றிப் போடும் பழக்கம் இருந்தமையினாலேயே, தேவன் மோசேயிடம் பாதரட்சைகளைக் கழற்றும்படி யாத்திராகமம் 3:5 இல் கூறினார். (F.B. Huey, Exodus : Bible Study Commentary, p28) மேலும், தேவன் அச்சமயம் முட்செடியின் நடுவில் தரிசனமளித்தமையினாலேயே அவ்விடம் பரிசுத்த பூமி என்று சொல்லப்பட்டதே தவிர அது நிரந்தர பரிசுத்த பூமியாக இருக்கவில்லை. (R.A. Cole, Exodus : Tyndate Old Testament Commentaries, p 65) மேலும், அப்பிரதேசத்தின் உஷ்ணம் காரணமாக செடிகள் தீப்பிற்றி எரிவது சாதாரணமான சம்பவமானாலும்ஈ தேவன் மோசேக்குத் தரிசனமளித்தபோது, அக்கினி முட்செடியை எரிக்காதது அற்புதமான செயலாகவே உள்ளது. (H.L. Ellison, Exodus : The Daily Study Bible, p 16)

(61) W.Neil, Malachi : The Interpreters Dictionary of the Bible Volume 3, p 232

(62) ரோமன் கத்தோலிக்க வேத ஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தைத் தங்களின் ஆலயத்தில் நடைபெறும் பூஜையைப் பற்றிய தீர்க்கதரிசனமானகக் கருதுகின்றனர். (J. Packard, Malachi : Lange's Commentary on the Minor Prophets, p 4) இது, மேசிய யுகத்தில் செலுத்தப்படும் சடங்காச்சாரப் பலியைப் பற்றிய முன்னறிப்பு என்பதே இவர்களது விளக்கமாகும். (E.F. Sutcliffe, 'Malachy's Prophecy of the Eucharistic Sacrifice' in Irish Ecclesiastical Record pp. 502-513) சிதறிப்போயிருந்த யூதர்களின் வழிபாட்டைப் பற்றிய முன்னறிவிப்பாகவும் இவ்வசனம் சிலரால் விளக்கப்படுகின்றது. நியாயப்பிரமாணத்தை படிப்பதே, இவ்வசனங்களில் தூபமும் காணிக்கையும் செலுத்தப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதே இவர்களின் கருத்தாகும். (J.Swetnam, 'Malachi 1:11 : An Interpretation' in Catholic Biblical Quarterly. pp 200-209) சில வேத ஆராய்ச்சியாளர்கள், யூதர்களுடைய மாய்மாலான வழிபாட்டை விட புறஜாதியாருடைய வழிபாடுகள் தம்முடைய பார்வையில் சுத்தமானவைகளாக இருப்பதாகவே இவ்வசனத்தில் தேவன் குறிப்பிட்டுள்ளதாககக் கருதுகின்றனர். அக்கால யூதர்களுடைய வழிபாட்டைக் கண்டிப்பதற்காகவே தேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதே இவர்கள் இவ்வசனத்திற்கு கொடுத்துள்ள விளக்கமாகும். (J. Blau The Missionary Nature of the Church, 142;R.L.Smith, Micah-Malachi: Word Biblical Commentary Volume 32, pp314-315) ஆனால் இவ்விளக்கங்கள் திருப்பதிகரமானதாக இல்லை.

(63) Evangelical Alliance (U.K) 'The Salvation of Gentiles : Implications for Other Faiths' i Evangelical Review of Theology p 39

(64) இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே, தேவனை வழிபடமுடியும் என்பதே தேவதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் ஒரேயொரு மத்தியஸ்தராக இயேசுகிறிஸ்துவே இருக்கிறார். (1 தீமோ. 2:5) உண்மையில் இயேசுகிறிஸ்துவினுடைய பலியே மனிதர்கள் தேவனிடம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளமையினால் (எபே. 2:18, எபி. 10:19-22) இயேசுகிறிஸ்துவின் மூலமாக மட்டுமே மனிதர்களினால் தேவனை வழிபட முடியும். 

(65) J. Baldwin, Malachi : Tyndale Old Testament Commentaries, p. 230

Sunday 20 November 2011

நீங்கள் அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்




துக்கத்தில்
யோவான் 14 அழையுங்கள்

மனிதர்கள் விழத்தாட்டும் போது
சங்கீதம் 27 அழையுங்கள்

பலன் கொடுக்க விரும்பினால்
யோவான் 15 அழையுங்கள்

பாவம் செய்து விட்டால்
சங்கீதம் 51 அழையுங்கள்

ஆபத்துவேளையில்
சங்கீதம் 91  அழையுங்கள் 

தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம் 139 அழையுங்கள்

விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர் 11 அழையுங்கள்

தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம் 23 அழையுங்கள்

கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
1 கொரிந்தியர் 13 அழையுங்கள்

பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ. 3:12-17 அழையுங்கள்

கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
2 கொரி.5:15-19 அழையுங்கள்

வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31  அழையுங்கள்

சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30  அழையுங்கள்

தேவனைவிட உலகம் பெரிதென எண்ணினால்
சஙகீதம் 90  அழையுங்கள்

வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121 அழையுங்கள்

உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்
சங்கீதம் 67 அழையுங்கள்

பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55 அழையுங்கள்

இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1 அழையுங்கள்

சோர்வடைந்தால்
சங்கீதம் 27 அழையுங்கள்

உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம் 37 அழையுங்கள்

மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்
1 கொரி. 13 வாசியுங்கள்

மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்
யோவான் 15 வாசியுங்கள்

வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந் தட்டப்பட்டால்
சங்கீதம் 126 வாசியுங்கள்













Tuesday 15 November 2011

வேதாகமத்திற்கு வெளியில் சிறப்பான வெளிப்படுத்தல் இருக்கிறதா?


தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல், பரிசுத்த வேதாகமத்தின் மூலமே மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக சங்கீதக்காரன் 19ம் சங்கீதத்தில் எழுதியுள்ள போதிலும், இன்று பல கிறிஸ்தவர்கள் வேதாகமத்திற்கு வெளியிலும தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல் இருப்பதாகக் கருதுகின்றனர். ஒரு தேவனே பலதரப்பட்ட மதநூல்களிலும் இருக்கின்றார்(19) என்று கூறும் இவர்கள், “உலகின் சகல நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் அவருடைய மதநூல்களில் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தேவவெளிப்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. (20) என்று வாதிடுகின்றனர். மேலும், சிறப்பான வெளிப்படு்த்தல் இயேசுக்கிறிஸ்துவின் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ள மையால், (21)இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களிலும் அவற்றைப் பின்பற்றுபவர்களிலும் இருக்கிறார் என்பதும் இவர்களின் கருத்தாய் உள்ளது (22) உண்மையில், இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் மறைந்தும் அறியப்படாமலும் இருக்கிறார்(23) என்பதே இவர்களின் உபதேசமாகும். இதனால்  இயேசுகிறிஸ்து பிறமதத்தினரினை அவர்களின் மதங்களிலேயே சந்தித்து, அம்மதச் ங்காக்சாரங்கள் மூலமாகவே அவர்களை இரட்சிக்கின்றார் என்றும் இவர்கள் கருதுகின்றனர். (24) இவர்களைப் பொறுத்தவரை உலகமதங்கள்இரட்சிப்பின் சாதாரண வழியாகவும்“, கிறிஸ்தவம் அதற்கானசிறப்பான வழியாகவும்உள்ளது. (25) இதனால், இயேசுகிறிஸ்துவின் மூலம் ஏனைய மதங்களில் இரட்சிக்கப்படுவதாக இவர்கள் கூறும் மக்களைஅறியப்படாத கிறிஸ்தவர்கள்என்று அழைக்கின்றனர். (26) எனினும். இவர்களின் கருத்துக்களும் இவற்றை உறுதிப்படுத்துவதாக இவர்கள் உபயோகிக்கும் தர்க்கங்களும் உண்மையென்றால், “ஒவ்வொரு மதமும் கிறிஸ்தவத்தின் அறயப்படாத மதமாகவே இருக்க வேண்டும்“(27) ஏனென்றால், இக்கருத்தின்படி, கிறிஸ்தவர்களுக்குநசரேத்தில் வாழ்ந்த இயேசுகிறிஸ்துவேஇரட்சிப்பின் காரணராக இருக்கிறார். (28) எனினும் இத்தகைய உபதேசங்களுக்கு வேதாகமத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.

இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் இருக்கிறார் என்று தர்க்கிப்பவர்கள் கிறிஸதவத்திற்கு முன்னுரையாக யூதமதம் இருப்பது போலவே, உலகின் ஏனைய மதங்களும் இருக்கின்றன. (29) என்றும் கூறுகின்றனர். “ஒவ்வொரு நாடும் கலாசாரமும், மக்கள் குழுவும, தங்களுக்கென்று பிரத்தியேகமானதும் தனிப்பட்ட ரீதியானதுமான இரட்சிப்பின் சரித்திரத்தைக் கொண்டுள்ளன“ (30) என்று கூறும் இவர்கள், பிறமதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருப்பதாக கருதுகின்றனர் (31) ஆனால், உலக மதங்கள் ஒவ்வொன்றும் வித்தயாசமான தன்மையையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதனால் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. “சகல மதங்களும் அடிப்படையில் ஒரே விதமானது அல்ல. அவை ஆராயும் விடயங்கள், கேட்க்கும் கேள்விகளும் ஒரே மாதிரியானவை அல்ல“(32) எனவே, கிறிஸ்தவத்திற்கும் ஏனைய உலக மதங்களுக்கும் இடையில், மானிட இரட்சிப்போடு சம்பந்தப்பட்ட தொடர்புகள் இருப்பதாகக் கூறுவது அர்த்தமற்ற ர்க்கமாகும் (33)

தேவனுடைய செயற்பாடுகள், இஸ்ரவேலுக்கும் கிறிஸ்தவத்திற்கும் அப்பாலும், முழு உலகத்திலும் நடைபெறுகின்றன என்பது உண்மை என்றாலும் (34) இயேசுகிறிஸ்து ஏனைய மதங்களில் மறைந்திருந்து செயற்படுகிறார் என்று வேதாகமத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. வேதாகமத்தைப் பொறுத்தவரை உலக மதங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை மக்கள் நிராகரித்ததன் விளைவாக உருவானவைகளாகவே ள்ள. நாம் ஏற்கனவே பார்த்தபடி, தேவன் உலகிலுள்ள சகல மனிதர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தியுள்ள போதிலும் (35) வேதாகமம் இதைப் பற்றி கூறும்போது,  அவர்கள் தேவ வெளிப்படுத்தலை நிராகரித்து, தங்களின் அறிவுக்கு ஏற்ற விதத்தில் வழிபாட்டு முறைகளை உருவாக்கிக் கொண்டனர். தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.  21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், (ரோமர் 1:19-25). என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “புறஜாதி மதங்கள் தேவனுடைய வெளிப்படுத்தலை நிராகரித்ததன் விளைவாக இருப்பதாகவே இவ்வசனங்கள் கூறுகின்றன. (36) மிகவும் உயர்வான புறமதத் தத்துவங்களும் உண்மையான தேவனை அறியாதவைகளாகவே இருக்கின்றன. (37) இயேசுகிறிஸ்து எங்கும் இருப்பதாக வேதாகமம் அறிவித்துள்ளதுண்மை என்றாலும், அவர் தம்முடைய நாமத்தில், கூடுகின்ற மக்கள் மத்தியில் இருக்கிறாரே தவிர (மத். 18:20, 28:19) பிறமதங்களிலும அவற்றின் தெய்வச் சிலைகளிலும், அவற்றைப் பின்பற்றுபவர்களிலும்  இருக்கிறார் என்பது வேதாகம சத்தியத்திற்கு முரணான போதனையாகவே உள்ளது (38) மேலும் வேதாகமம் விக்கிர வழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதால் (யாத். 20:3-5, 1 யோவான் 5:21) (39) பிற மத தெய்வச் சிலைகளுக்குள் இயேசு கிறிஸ்து மறைந்திருக்கின்றார் என்றும், அச்சிலைகளுக்குள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்கின்றது என்றும் கூறுவது வேதாகமத்திற்கு முரணான ர் உபதேசமாகவெ உள்ளது. வேதாகமத்தைப் பொறுத்தவரை, பிறமதத் தெய்வச் சிலைகள் தேவனையோ, இயேசுகிறிஸ்துவையோ பிரதிநிதித்துவம் வகிப்பவைகள் அல்ல. (1 கொரி. 10:20) (40) எனவே, அவற்றில் இயேசுகிறிஸ்து இருக்கிறார். என்று கூறுவதும், பிறமதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருக்கின்றது என்று தர்க்கிப்பது பாரியதோர் தவறாகும்.

புராதன உலக மதங்களின் தொடர்ச்சியாகவே கிறிஸ்தவம் இருக்கிறதுஎன்றும்இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார்என்றும் தர்க்கிப்பவர்கள்,சில வேத வசனங்களைத் தவறான விதத்தில் வியாக்கியானம் செய்வதன் மூலமே தங்களின் உபதேசத்தை உருவாக்கியுள்ளனர். பெரும்பாலானவர்கள் இவ்வேதவசனங்களின் சரியான அர்த்தத்தை அறியாதவர்களாக இருக்கி்னறமையால், (அல்லது அறிந்தும் அவற்றைத் தங்களது உபதேசத்திற்கு ஏற்றவிதத்தில் மாற்றியுள்ளமையால்) சகல மதங்களிலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய வெளிப்படுத்தல்களும் அவரது  இரட்சிப்பின் செயலும் இருப்பதாக நம்புகின்றனர். எனவே, இவ்வேத வசனங்களின் சரியான அர்தத்தை அறிந்து கொண்டால் மட்டுமே மனுக்குலத்ததிற்கான தேவனுடைய வெளிப்படுத்தலைப் பற்றி வேதாகமம் அறியத் தரும் சத்தியத்தைச் சரியான விதத்தில் புரிந்து கொள்ள முடியும். எனவே, பிறமதங்களிலும் தேவனுடைய சிறப்பான வெளிப்படுத்தல் இருப்பதாகத் தர்க்கிப்பவர்கள் உபயோகிக்கும் வேத வசனங்களை ஆராயந்து பார்ப்போம்.

(வளரும்)
இரண்டாம் பாகத்தை வாசிக்க இங்கு அழுத்துங்கள். 

(இவ்வாக்கமானது Dr. வசந்தகுமார் எழுதிய மனிதகுலத்துக்கான மகத்தான வெளிப்படுத்தல்கள் : 19 சங்கீதத்திற்கான விளக்கவுரை“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)

Footnote and References
(19) S.Chellappa, Is Christianity Necessary? p 118

(20) J.Padinjarekara, Gospel for India in Indian Cups p. 13


(21) பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் தேவவெளிப்படுத்தல்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே மக்களுக்கு கொடுக்கப்பட்டன. பழைய ஏற்பாட்டுக் கால தீர்க்கதரிசிகளினூடாகப் பேசியவர் இயேசுகிறிஸ்துவே என்பதே 1 பேதுரு 1:11 அறியத் தருகிறது. இவ்வசனத்தில் தங்களிலுள்ள (தீர்க்கதரிசிகள் 1:10 ஒப்பிடுக) “கிறிஸ்துவின் ஆவியானவர்எனும் சொற்பிரயோகம், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகளில் வாசம் செய்தவர் இயேசுகிறிஸ்துவே என்பதை அறியத் தருகிறது. இவ்வசனத்தில்கிறிஸ்துவின் ஆவியானவர்எனும் சொற்பிரயோகம் பரிசுத்த ஆவியானவரையே குறிக்கின்றது என்று சில வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலு்ம் (W.Gruderm, 1 Peter : Tyndale New Testament Commentaries, p 69 ; E.A. Blum, 1 & 2 Peter : The Expositor's Bible Commentary Volume 12, p223) இது பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கும் விபரம் அல்ல. “இது கிறிஸ்து மனிதராக இவ்வுலகத்திற்கு வருவதற்கு முன்பு அவர் இருந்த நிலையைக் குறிக்கும் விபரணமாகவே உள்ளது. (N.Hillyer 1&2 Peter, Jude : New International Biblical Commentary, p. 42) எனவே, இயேசுகிறிஸ்துவே இவ்வசனத்தில் தெய்வீக ஆவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். (J.N. SD. Kelly, 1 Peter & Jude : Black's New Testament Commentaries, p 60) என்பதை மறுப்பதற்கில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்களோடு வனாந்திரப் பிரயாணத்தில் சென்ற இயேசுகிறிஸ்துவே (1 கொரி. 10:4) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்களுக்குத் தேவனாகத் தரிசனம் கொடுத்தவர் என்பதை யோவான் 12:37-41) அறியத் தருகிறது. பல சந்தர்ப்பங்களில்கர்த்தருடைய தூதுவனானவர்என்னும் பெயரில் பழைய ஏற்பாட்டில் மக்களுக்கு தரிசனம் அளித்தவர் இயேசுகிறிஸ்துவே. (இதைப் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு ஆசிரியரின்யெகோவா சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள் எனும் நூலில் 141 முதல் 143 வரையிலான பக்கங்களைப் பார்க்கவும்) “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். (யோவான் 1:18) தேவன் மனிதரில் ஒருவரும் கண்டிராதவராக, காணக்சுடாதவருமாய் இருக்கின்றமையால் (1 தீமோ. 6:16) இயேசுகிறிஸ்து அவரை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். இதனாலேயே இயேசுகிறிஸ்துவே பழைய ஏற்பாட்டுக்காலத்திலும், தீர்க்கதரிசிகளில் வாசமாயிருந்து அவர்களுக்கூடாகத் தேவ வெளிப்படுத்தல்களைக் கொடுத்துள்ளார். யோவான் 12ம் அதிகாரத்தில் 36 முதல் 41 வரையான வசனங்களை வாசிக்கும்போது, ஏசாயா 6ம் அதிகாரத்தில் தீர்க்கதரிசிக்குத் தரிசனம் கொடுத்தவர் இயேசுகிறிஸ்துவே என்பதை அறிந்திடலாம்)

(22) Cited in M. Goldsmith, What About Other Faiths? P. 121

(23) R. Panikkar, The Unknown Christ of Hinduism, p 137

(24)  R. Panikkar, The Unknown Christ of Hinduism, p 54

(25) H. Kung, 'The World Religions in God’s Plan of Salvation; in Christian Revelation and World Religions in God's Plan of Salvations; in Christian Revelation and World Religions pp 52-53

(26) K. Rahner, 'Christianity and Non-Christian Religions' in Christianity and other Religions, pp 75-77 ஆங்கிலத்தில் இத்தகைய கிறிஸ்தவர்களுக்கு 'Anonymous Christians' என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் என்று மக்களால் அறியப்படாதவர்களாகவே இருக்கின்றனர் எனும் அர்த்தத்திலேயே இப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

(27) S.Sumithra ;Conversion : To Cosmic Christ? in Evangelical Review of Theology. p 389

(28) D.A. Carson, The Gagging of God p. 328

(29) C.E. Braaten, ;The Uniqueness and University of Jesus Christ' in Mission Trends 5: Faith to Faith p 87

(30) M.Nazir-Ali, 'Culture, Conversation and Conversion : Some Priorities in Contemporary Mission' in AD 2000 and Beyond p 36

(31) E.L. Allen, Christianity Among Religions, p 70

(32) L. Newbigin, The Open Secret pp 139-140

(33) கிறிஸ்தவத்தைப் போலவே, ஏனைய மதங்களிலும் ஒழுக்கம் சம்பந்தமான அறநெறிக் கோட்பாடுகள் உள்ள போதிலும் மானிட இரட்சிப்பைப் பற்றிய கிறிஸ்தவப் போதனைக்கு இணைய போதனைகள் உலகில் வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லை. மானிட பாவத்திற்கான பிராய்சித்தப் பலி தெய்வத்தினால் செருத்தப்படுவதைப் பற்றி வேறுமதங்களிலும் இருப்பதாகச் சிலர் கருதுகின்ற போதிலும் , இயேசுகிறிஸ்துவின் சிலுவைப் பலிக்கு இணையான பலியைப் பற்றி உலகின் வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லை. (M.S. Vasnthakumar 'Expounding Christ from Non-Christian Texts; in Dharma Deepika, p 5-20)

(34) பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தேவன் புறஜாதி ராட்சியங்களுக்கும் வெற்றியைக் கொடுத்துள்ளார். (2 ராஜா 5:1) அவர் தமமுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பறஜாதி அரசர்களையும் உபயோகித்துள்ளார் (ஏசா 44:28, 45:1-7) புறஜாதியருக்கு நாடுகளைக் கொடுத்துள்ளார். (உபா. 2:5, 2:19, 2:21-22) எனினும், தேவன் அவர்களுக்கு தமது இரட்சிப்பின் செய்தியை அருளியுள்ளதாக வேதாகமம் கூறவில்லை. தேவன் ஆபிரகாமோடு செய்துகொண்ட உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டே அக்காலத்தில் அவர் புறஜாதியாரை இரட்சிக்கிறவராக இருந்தனர். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் மக்களே ஜாதிகளுக்கு ஒளியாக, மறற ஜாதியினர் அனைவரும் தேவனண்டை வரும் ஊடகமாகச் செயற்பட்டனர். இதனால்தான் மக்களுக்குத் தேவன் தரிசனங்களைக் கொடுத்த போதிலும், தேவனுடைய ஜனங்களே அவற்றுக்கு சரியான விளக்கத்தைக் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தனர். (தானி 3:3-4, ஆதி. 41)

(35) முதலாம் இது பற்றி விளக்கப்பட்டுள்ளது.

(36) R.C. Sproul, Reason to Believe, p 55

(37) D.L. Bock, 'Athenians Who Have Never Heard' in Through No Fault of Their Own? 118 1 கொரி். 1:18-25 ல் சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 19 அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. 20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா?  21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள். 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். 24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

(38) புத்தர், காந்தி, லெனின், கார்ல் மார்க்ஸ் போன்ற மனிதர்களிலும் இயேசுகிறிஸ்துவே இருந்து செயல்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர் இவர்களை இயேசுகிறிஸ்துவின் அவதாரங்களாகக் கருதுபவர்களும் இருக்கின்றனர். (Cited in Goldsmith What About Other Faiths? p. 121) எனினும் இத்தகைய கருத்துக்கள் வேத ஆதாரம் அற்ற தவறான உபதேசங்களாகும். இயேசுகிறிஸ்து இவர்களுக்கு ஊடாகச் செயற்பட்டிருந்தால், இவர்கள் அனைவரும் இயேசுகிறிஸ்துவைத் தங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால், இவர்களில் எவரும் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதமையினால் இவர்களில் இயேசுகிறிஸ்து இருந்தார் என்று எவ்விதத்திலும் கூற முடியாது.

(39) “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிற வைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; (யாத். 20:3-5) என்று கூறும் வேதாகமம் பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.(1 யோவான் 5:21) என்று அறிவுறுத்துகிறது.

(40) 1 கொரிந்தியர் 10:20 ல்அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உபாகமம் 32:17 இலும் சங்கீதம் 106:37 இலும் பிறமதத் தெய்வச் சிலைகளைப் பற்றிய இவ்வுண்மையை அறியத்தருகின்றது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் சங்கீதம் 96:5 இல்விக்கரகங்கள்என்பதற்குப் பதிலாக பேய்கள் என்ற பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது. “இஸ்ரவேல் மக்டகள் ஒரு தெய்வநம்பிக்கையுடைய மதத்தினராக இருந்தமையால், பிறமதங்களின் தெய்வச் சிலைகளை, அவர்கள் தெய்வங்களைப் பிரதிநிதித்துவம் வகிப்பவைகளாக ஏற்றுக்கொள்ளவில்லை “ (G.D. Fee, 1 Corinthians : The New International Commentary on the Testament, p. 472) அவைகள் தீய ஆவியைப் பிரதிநிதித்துவம் வகிப்பவைகளாகவே இருந்தன. (L. Morris, 1 Corinthians : Tyndale New Testament Commentaries, pp 144, 145)