பிரசங்கம் கருத்தாழம் உடையனவாயிருக்க வேண்டும். நாம் பிரசங்கிக்க நிற்பது பொழுது போக்கிற்காக அல்ல. முக்கியமான சத்தியங்களை அறிவிப்பதற்கே.
வார்த்தை அலங்காரத்தையல்ல. மனிதர் தங்கள் இருதயத்தை கிறிஸ்துவிற்கு ஒப்புக்கொடுத்து அவர் விரும்புகின்ற பரிசுத்தத்தை அடைந்து கொள்வதையே நாட வேண்டும்.
சபையார் போதகருக்காக அல்ல. போதகரே சபையாருக்காக ஊழியம் செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். ஆதலால் அவர்களுடைய நன்மைக்காகவும் பிரயோஜனத்திற்காகவும் அவர் தம்மைத் தாமே செலவிட வேண்டும்.
வேத சாஸ்திர தர்க்க காலத்தில் சாஸ்திர நிபுணர் என்று முடிசூட்டப்படவதிலும் இயேசுக்கிறிஸ்துவின் முகத்தில் விளங்கிய வேதவெளிச்சத்தைத் திறந்து காட்டி ஓர் ஆத்துமாவை நரகக் குழியினின்று தப்புவிப்பதே அதிக மகிமையான வேலை ஆகையால் கிறிஸ்து நிறைந்த ஊழியம் பாக்கியமானது.
வேதசத்தியங்களை தகுதியின்படி போதிக்காவிட்டால் சபைகளில் வேளாவேளைகளில் தோன்றுகின்ற நல் எழுப்புதல்கள் விறகில்லாத நெருப்பைப் போல சீக்கிரம் அணைந்துபோகும். திவ்விய சத்தியங்களை ஜனங்களின் உள்ளததில் படாமலிருப்பதே அநேகர் தவறிப்போவதற்கான காரணம் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் என்று தேவன் எபி. 8:10 இல் சொல்லுவது போல் பிரசங்கிமார் செய்வார்களானால் தற்போது நடமாடுகின்ற தீயப் பழக்கவழக்கங்கள் ஏற்படாது. கிறிஸ்தவர்களுக்குள் உண்டாகும் மதபேதங்களைத் தடுக்கத்தக்க ஒரு பெரிய கருவி சத்தியத்தின் தெளிவான போதனையே.
பிரசங்கத்தின் கருப்பொருள்
வேதப்புத்தகம் பிரசங்கியின் வல்லமைக்குப் பெரிய ஆயுதமாய் இருக்கிறது. ஆவியானவர் வார்த்தையோடு மாத்திரமல்ல. வார்த்தைகளுக்குள்ளும் இருக்கிறார்.
பிரசங்கியார் எதைக் குறித்து சொல்லாமென்று திகையாமல் வேத வசனத்தையே திரும்பத் திரும்ப வாசித்து வாக்கியம் வாக்கியமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு வாக்கியத்தைத் தெரிந்து கொண்டு அதிலேயே முழு மனதையும் செலுத்த வேண்டும். பிரசங்கிக்க வேண்டிய வாக்கியம் அந்த வசனத்தில் அல்லது அதிகாரத்தி்ல் கிடையாதுவிட்டாலும் பரிசுத்த விஷயங்களில் மனதைச் செலுத்தும் சரியான வார்த்தை எப்படியும் அகப்படும்.
பிரசங்கியானவன் வேதவாக்கியங்களை நன்றாய் அறிந்தவனாயிருக்க வேண்டும். பிரசங்கி வேதவசனத்தின் ஊழிக்காரனாயிருக்கிறான். ஆகையால் வேதம் அவன் வேலைக்கு மிகப் பெரிய ஆயத்தமாகும். வேதாகமம் தான் அவனது பாடப்புத்தகம். அது பிரசங்க வாக்கியங்களைத் தேடிப் பிடிக்கும் இடமாய் மாத்திமல்ல. பிரங்ககளுக்கெல்லாம் அடிப்படையுமாயிருக்கிறது. பிரசங்கி போதிக்க வெண்டிய பொருள் தேவனுடைய வசனமே. அப்படியிருக்க போதகன் வேத அறிவில் தேறினவனாயிருக்க வில்லையானால் அவன் எப்படி போதிக்கக் கூடும்?
பிரசங்கத்தில் அடங்கிய போதனை வேத வசனத்திற்கு இசைவாயிருக்க வேண்டும். பிரசங்கத்திற்கென்று தெரிந்துகொண்ட வாக்கியத்தில் பரிசுத்த ஆவியானவர் கருதிய பொருள் இன்னதென்று கண்டுபிடித்து அதில் எமது சிந்தனையைச் செலுத்துவோமானால் நமது பிரசங்கம் எப்பொழுதும் ஒன்றுபோலிராமல் விதவிதமாய் தோன்றும். பரிசுத்த ஆவியின் வார்த்தைகளையே எடுத்து பொருள் விளங்க பிரசங்கமாக செய்வது சபையாருக்கு அதிக பிரயோஜனமும் ஏற்றதுமாயிருக்கும். இப்படி மறைந்திருக்கும் பொருளை எடுத்துக்கூறும் பிரசங்கத்தின் போதனை ஆத்துமாவுக்கு ஆன்மீக ஆதாரமும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதோனுமாகக் கேட்போரின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற் கேதுவாயிருக்கும்.
பிரசங்கத்தின் ஒழுங்கு
பிரசங்கத்திற்கு ஒழுங்கு முறை முக்கிய இலக்கணம் ஆகும். நன்றாய் ஒழுங்கு செய்யப்பட்ட பிரசங்கத்தை ஒரு கோபுர மாளிகைக்கு ஒப்பிடலாம். அப்படியானால் படிப்பினைகள் அடியிலும் உபதேசம் உச்சியிலும் அல்ல. உதாரணங்கள் அஸ்திபாரத்திலும் சித்தாந்தங்கள் தலைப்பிலும் அல்ல. முக்கியமான உபதேசங்கள் பிரசங்கத்தின் துவக்கத்திலும் முக்கியமல்லாத போதனைகள் முடிவிலுமல்ல. பிரசங்கத்தின் பொருளும் சாரமும் கிரமம் கிரமமாய் உயர்ந்து எழும்ப வேண்டும். கேட்போரின் மனதை ஒர் சத்தியத்திலிருந்து இன்னோர் சத்தியத்திற்கு வழிநடத்தி அதனதன் பொருள் அதனதன் இடத்தில் என்கிற சூத்திரம் பிரசங்கத்திலும் அனுசரிக்கப்பட வேண்டியது.
யாதொரு ஒழுங்கு முறையும் இலக்கும் இல்லாமல் விவரிக்கத் தொடங்கினால் எல்லாம் குழம்பிப் போகும். பிரசங்கி இந்தப் பயிற்சியை கைவிட்டால் ஒழுங்கும் ஸ்திரமுமாய் பேசும் திராணியை விரைவில் பறிகொடுப்பான். அதனால் பிரசங்கம் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவுகின்ற வெறும் வசனிப்பாய் மாறிபோகும். கடைசியாக சில காரியங்களைப் புத்திமதியாய் மட்டும் சொல்லக்கூடிய வாயாடி ஆவான். இவ்விதப் பேச்சைப் போல் சாரமற்றதாய்ப் பேசுவது வேறென்றுமில்லை.
அ. முகவுரை
முகவுரையானது ஜனங்கள் பொருளைக் கவனித்துக் கேட்க அவர்களை ஆயத்தப்படுவத்துவதற்கு அவசியம். கேட்போரின் கவனத்தை வசப்படுத்துவதே அதன் நோக்கம் முகவுரை சுருக்கமாயிருக்க வேண்டும்.
ஆ. பிசங்கத்தில் தவிர்க்க வேண்டியது.
பிரசங்கத்தை அநேக விஷயங்களை நிரப்புவதும் நல்லதல்ல. எல்லா சத்தியங்களையும் ஒரே பிரசங்கத்தில் அமைக்க கருத வேண்டாம்
நமக்கு இஷ்டமான சில கொள்கைகளுக்கும் ஆதாரம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடல்ல. வேத புத்தகத்தில் போதிக்கபபட்டிருக்கின்ற உபதேசம் என்னவென்று அறிந்து அவைகளையே பிரசிங்கிக்க வேண்டும்.
ஒவ்வொரு உபதேசமும் அதனதன் உண்மையுடன் காட்டப்பட வேண்டும். ஏனெனி்ல் வேதபுத்தகததின் ஒவ்வொரு பாகமும் பிரயோஜனமுள்ளது. நாம் ஒரு சில சத்தியங்களை மட்டும் பிரசங்கித்தால் போதாது.
அதிக முக்கியமில்லாத உபதேசங்களை மிகவும் முக்கியமானவைகள் போல் பிரசங்கிப்பது பெரிய குற்றம். நமது பிரசங்கங்களுக்கெல்லாம் நடுநாயகமாய் இருக்க வேண்டிய போதனை பரத்திலிருந்து வந்த இரட்சண்ய நற்செய்தியே.
முடிவுரை
பிரசங்கப் பொருளை அவர்களுடைய நிலைமைக்குக் ஒப்பிட்டு பரிசோதிப்பதும் நற்கிரியைக்கு எழுப்பிவிடுவதும் முடிவுரையின் காரியம். ஆகையால் அது மிகுந்த உக்கத்தோடும் வாஞச்சையோடும் கூறப்பட வேண்டும். பிரசங்கத்தின் உரையெல்லாம் முடிவுரையில் ஒன்றாய்க் சுட்டிக்காண்பிக்க வேண்டும். கேட்பாரின் இருதயத்தை அரசக்கும் தருணம் இதுவே. பிரசங்கத்தினால் ஒருவனுடைய சித்தத்தை வசப்படுத்தி அவனில் நற்பலனைப் பிறப்பிக்கும் சமயம் ஒன்று உண்டு என்பது உண்மையானால் அது முடிவுரையிலேதான். முடிவுரை பிரசங்கத்தில் முந்திய பாகத்திலிருந்து இயல்பாய்ப் புறப்பட்டு வைராக்கிய வாஞ்சையும் அனலும் பொருந்தியதாய் இருக்க வேண்டும்.
சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் முடிவுரை இருதயத்தை வசப்படுத்தத்த்ககதும் தைரியத்தையும் நம்பிக்கையையும் பிறப்பிக்கத்தக்கதுமாய் இருப்தாக சபையாரின் நிலைமைக்கு அவசியமானது இன்னதென்று பிரங்கி நன்றாய் ஆராய்ந்து மனதில் நிர்ணயம் பண்ணிக்கொண்டபின் அதற்க வலம் இடம் சாயாமல் அவர்களுக்கு நல்லுணர்வு உண்டாக்கத்தக்க விதமாய்ப் பேச வேண்டும்.
முடிவுரை குணப்பட்டவர்களுக்கும் குணப்படாதவர்களுக்குமான இருவகுப்பினரையும் சுட்டுகிறதாய் இருக்க வேண்டுமோவென்று கேட்டால் அதுவும் பிரசங்கப் பொருளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டியது.
வேதத்தின் முக்கிய சத்தியங்களோ கருக்கான பட்டங்களுக்குச் சமானம். ஆகையால் மனசாட்சியையும் இருதயத்தையும் அசைக்கத்தக்க சத்தியங்களை பிரதானமாய் எடுத்துப் பிரங்கிப்போமாக. நாம் கிறிஸ்துவைக் குறித்து எப்பொழுதும் பிரசங்கிக்க வேண்டுமாக! முழுச்சுவிஷேசம் அவரே!. உலகத்திற்கு அதன் இரட்சகரைக் குறித்தும், அவரிடத்திற்குப் போகும் வழியைக் குறித்தும் அறிவிப்பதே நமது தலையாயப் பணி.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment