- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 25 February 2013

தேவன் தாவீதுக்கு பல மனைவிகளை கொடுத்திருந்தாரா?(2 சாமுவேல் 12:7-8)


பலதரமணம் தேவனால் தடைசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ள போதிலும், இன்றைய கிறிஸ்தவ உலகில் பலதாரமணம் தேவனால் அங்கீகரிக்கப் பட்டுள்ளதென்று தர்க்கிக்கப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக 2 சாமுவேல் 12:7-8)சுட்டிக்காட்டப்படுகின்றது. இவ்விடத்தில் தீர்க்கதரிசியாக நாத்தான் தாவீதுக்கு தேவனுடைய வார்த்தைகளை அறிவிக்கிறான். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,8. உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்“ என்று சொன்னான். இதில்,உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து“ எனும் வாக்கியத்தை காண்பித்து தேவன், தாவீதுக்குப் பல பெண்களைக் கொடுத்து பலதாரமணத்தை அங்கீகரித்துள்ளார் என சிலர் தர்க்கிக்கின்றனர். எனினும், இது இவ்வசனங்களை சரியாக விளங்கிக் கொள்ளாத்தினால் ஏற்ப்டுள்ள ஒரு தவறான தர்க்கமாகும். “அக்காலத்தில் ஒரு அரசனுடைய மரணத்தின் பின், அவனுடைய வீடும் அங்குள்ளவர்களும், அவனுக்குப் பின் அரசனாகுபவனுக்குக் கொடுக்கப்படுவது வழமை(01) இதன்படி, சவுலின் மரணத்தின் பின், அவனுடைய வீடும் அங்கிருந்தவர்களும் தாவீதுக்குக் கொடுக்கப்பட்டுள்ளனர் என்பதே இவர்களது தர்க்கமாகும். 

“இவ்வசனத்திலுள்ள 'உன்மடியில்' எனும் பதம் மூலமொழியின்படி NIV ஆங்கில மொழிபெயர்ப்பில், 'உன்கரத்தில்' என்றே உள்ளது. இது NASB ஆங்கிலமொழி பெயர்ப்பில் உள்ளதுபோல 'உன் பொறுப்பில்' என அர்த்தம் தரும் வண்ணம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய பதமாகும். (02) எனவே, தேவன் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் தாவீதின் கரத்தில், அதாவது அவனுடைய பொறுப்பில் விட்டுள்ளார் என்று நாத்தான் தாவீதுக்குச் சொல்லுகிறாரே தவிர, சிலர் தர்க்கிப்பதுபோல, சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு மனைவியாக்க் கொடுத்தார் என்பது இதன் அர்த்தம் அல்ல. தாவீது உரியாவின் மனைவியாகிய பத்தேசபாளை எடுத்துக்கொண்ட பாவத்தைக் கண்டிக்கவே தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். எனவே, சவுலின் மனைவிகளைத் தேவன் தாவீதுக்கு கொடுத்திருந்தால், அவன் உரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டதற்காக அவனைக் கண்டிப்பதும் அர்த்தமற்றதாகவே இருக்கும். மேலும், சவுலுக்கு இரண்டு மனைவிகளே இருந்தனர். இவர்களுள் ஒருத்தி தாவீதினுடைய மனைவி மீகாளின் தாயாகிய அகினோவாம் (1 சாமு. 14:50) இன்னுமொருத்தி ரிஸ்பாள் என்னும் பெயருள்ள மறுமனையாட்டி (2 சாமு 3:7) எனவே சவுலின் மனைவிகளை தேவன் தாவீதுக்குக் கொடுத்தார் என்று சொன்னால் அவர் தாவீதின் மாமிகளை அவனுக்கு மனைவியாக கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். இது லேவியராகம்ம் 18:17 இல் தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிரான செயலாகும். எனவே, இது அர்த்தமற்ற செயலாகும். எனவே இது அர்த்தமற்ற தர்க்கமாகும். “தாவீது இள வயதுடையவனாக இருக்கையி மீகாளை மணமுடித்தமையால் இதன் பின்னர் அவளது தாயை அவனுக்குத் தேவன் மனைவியாக்க் கொடுத்தார் என்பது அர்த்தமற்றதாகும்(02)

2 சாமுவேல் 12:7-8 இல் தேவன் சொல்லும் விடயம் யாதெனில் அவர் சவுலின் வீட்டையும் அங்குள்ளவர்களையும் சவுலின் ராட்சியத்தையும் அதன் குடிமக்கள் அனைவரையும் தாவீதின் பொறுப்பில் விட்டுள்ளார் என்பதேயாகும்.ரசன் குதிரைகளையும் மனைவிகளையும் அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளமையால் (உபா. 17:16-17) அவர் தாவீதுக்கு அதிக மனைவிகளைக் கொடுத்திருக்க மாட்டார். தாவீதுதான் தான் பாலியல் இச்சை காரணமாக பல மனைவிகளை வைத்திருந்தான். தேவன் அவனுக்கு பல மனைவிகளைக் கொடுத்தார் என்று கூறும்போது அவர் தனது திருமணத்திற்கான தனது திட்டத்தை மீறி செயற்பட்டுள்ளார் என அவரை குற்றப்படுத்துபவர்களாக இருப்போம். எனவே, பலதாரண மணம் தேவனால் அனுமதிக்கப்பட்டுள்ளது என தர்க்கித்து தேவனையும் அவரது கட்டளைகளையும் முரண்படுத்தும் பாவத்தைக் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும். ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே மானிட திருமணத்திற்கான தேவ திட்டமாகும். பலதாரமணம் அவரால் தடை செய்யப்பட்டுள்ளதோடு அத்தகைய பாவம் அவரால் தண்டிக்கப்பட்டும் உள்ளது. எனவே, நமது அர்த்தமற்ற தரக்கங்களை விட்டுவிட்டு தேவனுடைய வார்த்தையின்படி திருமண உறவில் இருவருக்கும் மேல் இருக்கமுடியாது எனும் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். 


References 
(01) 1 & 2 Samuel in the Tyndale OT Commentaries by Joyce Baldwin

(02) Towards Old Testament Ethics by Walter Kaiser   

(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் எழுதிய திருமறையும் திருமணமும் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு - இலங்கை சத்திய வசனம்) 

Monday 11 February 2013

இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளது எடுத்துக் கொள்ளப்படும் (மத். 13:12)



இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் அவர் நியாயமான மானிட முறைகளுக்கு எதிராகப் பேசியுள்ளதாக கருதப்படும் வாக்கியம் முதல் மூன்று சுவிசேஷப் புத்தகங்களிலும் உள்ளது. எனினும் இது முக்கியமான ஒரு கூற்றாக இருப்பதனால் மத்தேயுவிலும் லூக்காவிலும் இரு தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். பரிபூரணமும் அடைவான். இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்“ எனும் இயேசுவின் கூற்று மத்தேயு 13:12, 25:29, மாற்கு 4:25 லூக்கா 8:18, 19:26 போன்ற வசனங்களில் உள்ளன. உண்மையில் உள்ளவனுக்கு கொடுப்பதைவிட இல்லாதவனுக்கு கொடுப்பதே நியாயமானது என்பதனால், உள்ளவனுக்கு அதிகமாகக் கொடுப்பதோடு இல்லாதவனிடமிருந்து இருப்பதையும் எடுத்துக் கொள்வது நியாயமற்ற கொடூரமான செயல் என்பதனால், இயேசுவின் கூற்றை மனிதாபிமானமற்றதும் ஏழைகளை ஒடுக்கி பணக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் முதலாளித்துவ வாதம் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இயேசுவின் கூற்றை இவ்வாறு விமர்சிப்பவர்கள் அனைவருமே, அவர் “உள்ளவன்“ “இல்லாதவன்“ எனும் சொற்களை என்ன அர்த்தத்தோடு உபயோகித்துள்ளார் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். உண்மையில் இயேசுவின் உபதேசம் ஏழைகளை ஒடுக்கும் பணக்காரருக்கு எதிராகவும் ஏழைகளுக்கு ஆதரவானதாகவும் இருப்பதை சுவிசேஷப் புத்தகங்களிலுள்ள அவரது பிரசங்கங்கள் அறியத் தருகின்றன. 


இயேசு பொருளாதார ரீதியாக அல்ல. மாறாக ஆவிக்குரிய பிரகாரமாகவே “உள்ளவன்“ “இல்லாதவன்“ எனும் சொற்களை உபயோகித்துள்ளார். என்பதை முதலில் நாம் அறிந்திருக்க வேண்டும். மத்தேயுவின் சுவிஷேசத்தில் இயேசுவின் இக்கூற்றைத் தொடர்ந்து வரும் வசனங்களை வாசிக்கும்போது “தேவனுடைய செய்திக்கு மக்கள் அளிக்கும் உத்தரவாத்ததோடு“ தொடர்புள்ள விதத்தில்லேயே இயேசு “உள்ளவன்“ இல்லாதவன் எனும் சொற்களை உபயோகித்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது (1) ஏசாயா 6:9-10ஐ சுட்டிக் காட்டும் இயேசு, மக்கள் எவ்வாறு தன் உபதேசத்தை விளங்கிக்கொள்ளாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்ததோடு (மத். 13:13-15) சீடர்களிடம் தேவ செய்தி இருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். (மத். 13:16-17) மேலும் 16ம் வசனத்தில் “காதுக்கள் கேட்கிறதினாலும்“ என இயேசு குறிப்பிட்டுள்ளமை கேட்ட செய்தியைச் சீடர்கள் விளங்கிக் கொண்டதையே அறியத் தருகின்றது. ஏனென்றால், “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவான்“ என இயேசு வழமையாக உபயோகித்த சொற்பிரயோகம் (மத். 11:15, 13:9, 13:43, மாற் 4:9, 23, 13:9, லூக். 8:8, 14:35) “புரிந்து கொள்ளும் விதத்தில் கேட்டல்“ எனும் அர்த்தமுடையது(2) இதிலிருந்து “உள்ளவன்“ என்பது தேவனுடைய வாரத்தையை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டவனையும், “இல்லாதவன்“ என்பது தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத்தினால் இல்லாமலிருப்பவனையும் குறிக்கின்றது எனபதை அறிந்து கொள்கிறோம். மாற்குவிலும் லூக்காவிலும் இவ்விடயம் நேரடியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேவனுடைய வார்த்தையைக் கேட்பதைப் பற்றிய அறிவுறுத்தலுடனேயே இயேசுவின் இக்கூற்றும் இச்சுவிஷேசங்களில் உள்ளது(மாற். 4:23-25 லூக். 8:18) மத்தேயு 25:29 லும் லூக்கா 19:29 லும், தாலந்து பற்றிய உவமையின் விளக்கமாக இயேசுவின் இக்கூற்று உள்ளது. இவ்வுமையின்படி உள்ளவன் தனக்கு கிடைத்த தாலந்தை உபயோகித்து அதை அதிகரித்துக் கொண்டவன். இல்லாதவன. கிடைத்த தாலந்தை உபயோகிக்காமல் தன்னிடம் இருந்ததையும் இழந்து போனவன். இயேசுவின் கூற்றில் உள்ளவன் இல்லாதவன் எனும் சொற்பிரயோகங்கள் தேவனுடைய வார்த்தையையும் தாலந்துக்களையும் அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டுள்ளன. “இது தேவனுடைய ஈவுகளுக்கு மாந்தர் அளிக்கும் உத்தரவாத்துடன் தொடர்புற்றுள்ளது(3).தேவ ஈவுகளான அவரது வார்த்தையையும் தாலந்துகளையும் நாம் உபயோகிக்கும் பொழுது அது இன்னும் அதிகமாக பெருகுகின்றது. மறுபுறத்தில் அவற்றை உபயோகிக்காமல் வைத்திருக்கும்போது இருப்பதும் இல்லாமல் போய்விடுகின்றது என்பதையே இயேசு இக்கூற்றின் மூலம் சுட்டிக் காட்டுகின்றார். எனவே, “உள்ளவன்“ தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டவன்.இல்லாதவன்“ அதை நிராகரிப்பவனாக இருக்கின்றான். “தேவ வார்த்தையைக் கவனித்துக் கேட்டு அதனை ஏற்றுக்கொள்ளும்போது நமது ஆவிக்குரிய அறிவு அதிகரிக்கின்றது. தேவ வார்த்தையை அசட்டை செய்யும்போது நம்மிடம் இருக்கும் கொஞ்சமும் இல்லாமல் போய்விடுகின்றது. (4) எனவே, நாம் தேவனுடைய வார்த்தைக்கு சரியான வித்ததில் உத்தரவாதமளிப்பவார்களாகவும், அவர் நமக்குத் தந்துள்ள தாலந்துகளையும் வரங்களையும் சரியான விதத்தில் உபயோகிக்கின்றவர்களாயும் இருக்க வேண்டும். 

குறிப்புகள்

(1) Donald A. Hagner, Word Biblical Commentary: Mathew. P. 373

(2) Ibid p. 308

(3) Leon Morris, The Gospel According to Mathew. P 340

(4) I. Howard Marshall, The Gospel of Luke A Commentary on the Greek Text. P.328 


(இவ்வாக்கமானது Dr. M.S. வசந்தகுமார் சத்தியவசனம் 2000 எழுதிய சஞ்சிகையிலிருந்து பெறப்பட்டது.) 

Wednesday 6 February 2013

பாலியல் விடயங்களில் மக்களுக்கு உதவுதல்



… பிறருக்கு குறிப்பாக எதிர்பாலாருக்கு உதவுவது … சில சமயங்களில் தாம் உதவி செய்பவர்களுடனேயே உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் முடிந்து விடுகின்றது. 

சபையிலே திருமணத்திற்கப்பால் உறவுகள் ஏற்படும் உறவுகள் ஏற்படுகின்றதை நாம் காணலாம். இதற்கு பல பொதுவான சூழ்நிலைகள் காரணமாகின்றது. அவற்றில் ஆலோசகர் தான் ஆலோசனை கொடுத்தவருடன் தவறான உறவை ஏற்படுத்துவது ஒரு பொதுவான விடயமாகும். இது இன்றைய நாட்களில் காணப்படும் பொதுவானதொரு பிரச்சனைக்கான உதாரணம் ஆகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதர்கள் குறிப்பாக எதிர்பாலருக்கு ஆலோசனை வழங்கல் மூலமாக உதவி செய்பவர்கள், சிலவேளைகளில் தாம் உதவி செய்பவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆலோசனை பெற்றுக் கொள்ளலில் எமது உணர்வுகளை ஆழமாகப் பாதித்த காரியங்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளடங்கும். எனவே, நீங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கின்றீர்களோ அவருடன் ஓர் உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்படுவது சாத்தியமாகும். முக்கியமாக ஆலோசனை வழங்குபவரும் இப்படியான உணர்வு ரீதியான பிணைப்பை உற்சாகப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் உணர்வீர்களாயின் அது நிச்சியம் நடக்கும். எனவேதான் ஆலோசனை வழங்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையான வழிகாட்டல் அறிவுறுத்தல்களை எமது பணியில் கடைபிடிக்க வேண்டும்

என்னுடைய கொள்கை என்னவெனில், ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் எந்தவொரு பெண்ணுக்கும் தனிமையாக இருந்து ஆலோசனை வழங்கக்கூடாது என்பதாகும். அதற்குப் பிற்பாடு அவளை வேறொரு பெண்ணிடம் பொறுப்பாக கொடுத்துவிட வேண்டும். அல்லது, அவளை சந்திப்பதானால் அவளது கணவனுடன் அல்லது எனது மனைவியுடன் அல்லது வேறொரு நபருடன் அவளைச் சந்திப்பேன். ஆலோசனை வழங்குதலைத் தொழிலாக்க் கொண்டவர்களுக்கு இந்த நியமனத்தைக் கடைபிடிப்பது இயலாத காரியம் என அறிவேன். ஆனால், நான் சொன்ன பிரகாரம் ஆலோசனை வழங்கலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடுமையான வழிகாட்டுதலைக் கொண்டிருப்பது அவசியமாகும். 



இலங்கை கிறிஸ்துவுக்காக இளைஞர் பணியில் மேற்பார்வை செய்யும் பணி பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்கள் பெண்களையோ அல்லது பெண்கள் ஆண்களையோ வழிநடத்துவதையோ நாம் உற்சாகப்படுத்துவதில்லை. இதனைக் குறித்ததான விதிமுறைகள் ஒவ்வொரு கலாசாரத்தின் அடிப்படையில் வித்தியாசப்படலாம். ஆனால் குறிப்பிட்ட குழுவிலுள்ள வழக்கங்கள் எப்படியானவையாக இருப்பினும் வரையறைகள் மீறப்படாமல் காக்கப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே நான் சொல்லக் கூடிய விடயமாகும். நீங்கள் எதிர்பாலாரைச் சேர்ந்த ஒருவருக்கு உதவி செய்யும்போது ஒரு தனிப்பட்ட உணர்வு பூர்வமான விடயம் ஏதாவது வெளிப்படுமாயின், அந்தப் பிரச்சினையை, மிக நெருக்கமாகவும் சுயாதீனமாகவும் கையாளக்கூடிய அதே பாலார் ஒருவரிடம் பொறுப்புக் கொடுத்துவிடுவது சிறந்தது. 

அநேகமான நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உணராத போதும், மற்றவர்களால் வரையறைகள் மீறப்படுவதை அவதானிக்க முடியும். இந்த உறவு அதிக தூரம் சென்ற பின்னும் அந்த அழகு இன்னும் இருப்பதாக நமது மனது நம்பவைக்கும். ஆனால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் விதத்தை வைத்து சாதாரண நட்பைவிட அதிகப்பட்டியானதொன்று உருவாக்கியுள்ளது என்பதனை மற்றவர்களால் ஊகிக்கக்கூடும். நானும் எனது மனைவியும் ஒரு நண்பனைச் சந்திக்கச் சென்ற வேளையில் எமக்கு இப்படியானதொன்று நடந்தது. அந்தப் பெண்ணும் அவளுடன் தொழில் புரியும் இன்னொருவரும் ஒருவரையொருவர் பார்த்த விதத்தில் அவர்களிடையே காதல் தொடர்பான உறவு உருவாகின்றது என்று நாம் பயந்தோம். ஆனாலும் அதனைக் குறித்து அவளுடன் கதைக்க எமக்குத் தைரியம் இருக்கவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் இந்தப் பெண் அந்த மனிதனுடன் மிகவும் நெருக்கமானதால் அவளது வாழிடத்தை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அறிந்து கொண்டோம். 

ஏதாவது பிழையான காரியம் உருவாவதை நாம் கவனித்தால் நாம் அதனைக் குறித்து அவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்களுக்கு இதனைச் சொல்லும்போது அவர்கள் மற்றவர்களது எச்சரிப்பான அறிவுரைகளை ஆழமாக கருத்திற் கொள்ள வேண்டும்.  அநேகமான நேரங்களில் நடப்பது என்னவென்றால் அவர்கள் மனமுடைந்து பிழையானது எதுவும் நடைபெறவில்லையென மறுப்பார்கள். அவர்களை எச்சரித்தவரை குறுகிய மனப்பாங்குடையவர், நம்பிக்கையற்றவர் அல்லது மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுபவர் என அவர்கள் குற்றஞ்சாட்டக் கூடும். 

உங்களுக்கு உதவக்கூடிய இன்னுமொரு காரியம், எதிர்பாலைச் சேர்ந்த ஒருவருடன் நீங்கள் நீண்ட உரையாடல் ஒன்றில் ஈடுபடப்போகிறீர்களெனில் அவரை ஒரு திறந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்க்கூடிய விதத்தில் சந்தியுங்கள். எதிர்பாலைரைச் சந்திக்கும் ஒவ்வொருவருடைய அறைக்கும் கண்ணாடியிலான கதவை நான் பரிந்துரைக்கிறேன். அநேக கிறிஸ்தவர்கள் இந்தப் பரிந்துரையைப் பின்பற்றுவதில்லை என்பதனை நான் அறிவேன். அவர்கள் நெருப்புடன் விளையாடுகின்றார்கள் என்பதையே அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இவ்விடயத்தைப் பொறுத்தவரை கவலைப்படுவதை விட கவனமாயிருப்பது நலமானது. 

சிலவேளைகளில், எதிர்பாலாரைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகமாக உதவி செய்ய சிலர் எத்தனிப்பதுண்டு. இதற்கு, தன்னால், பிறருடைய தேவைகளை முழுமையாகவே சந்திக்க முடியும் என்றதான ஒரு ஆரோக்கியமற்ற சிக்கலான மனப்பான்மை இவரிடம் காணப்படுவதே காரணமாகும். இதனை “மேசியா மனப்பான்மை“ என்று சொல்லலாம்.

கிறிஸ்துவின் சபையில் அநேகர் இருக்கின்றனர். நாம் எதிர்கொள்ளும் அவர்களுடைய சகல தேவைகளையும் நாமே சந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தலைவருக்குரிய பிரதான பணிகளிலொன்று தமது தலைமைத்துவத்துவத்தின் கீழ் இருப்பவர்களுக்கென தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகும். அத் தலைவர் தான் எதிர்கொள்ளும் சகல தேவைகளையும் சந்திக்க முடியாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். எனவே, தேவை உள்ளவரை அவரது தேவையைச் சந்திக்க கூடியவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். 

ஒரு நல்ல பெண் சிநேகிதிக்கு உத்தியோக பூர்வமற்ற ஒரு கடிதம் நான் எழுதினால் அதனை வழக்கமாக மனைவிக்கு காண்பிப்பதுண்டு. திருமணமாகாதவர்கள் இந்த செய்முறையைப் பின்பற்ற முடியாது. ஆனாலும் அவர்கள் இந்தச் செயல்முறையில் காணப்படும் சிந்தனையைக் கடைபிடிப்பதில் கவனமாயிருக்க வேண்டும். 

நாம் கையடக்கத் தொலைபேசியின் மூலம் எமது துணை அல்லது வருங்காலத் துணை அல்லாத எதிர்பாலாருக்கு அன்பார்ந்த அல்லது தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்புவதைக் குறித்தும் கவனமாயிருக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசியினூடாக அனுப்ப்படும் குறுஞ்செய்திகளைப் பொறுத்தவரையில் சிலவேளைகளில் நாம் தவறுதலாக பிழையான நபருக்கு செய்தி அனுப்பிவிடுவோம். எனக்கு இப்படி நடந்துள்ளது. ஏனெனில் நான் வெளிநாட்டிலிருந்து எனது மனைவிக்கு அனுப்பி அன்புக் குறிப்புகள் வேறு இரண்டு பேருக்கு சேர்ந்துவிட்டது. அவர்களுக்கு அதை என்ன செய்வதென்று புரியாமல் போய்விட்டது. நான் அறிந்த கிறிஸ்தவ குழுவொன்றிலே தொழில்புரியும் திருமணமான ஒருவர் திருமணமாகாத சக ஊழியருக்கு அனுப்பிவைத்த மிகவும் தனிப்பட்ட குறுஞ்செய்தியை இன்னாரு ஊழியர் தவறுதலாக பெற்றுவிட்டார். இதன் காரணமாக ஒழுக்க விசாரணை வைக்க வேண்டியதாகிவிட்டது. 

விருந்தோம்பல் ஊழியம் வேதாகமத்தில் வெகுவாக உற்சாகப்படுத்தப்பட்டுள்ள ஒன்று. ஆனாலும் இதுவும் நம்மை ஆரோக்கியமற்ற உறவுகளுக்கு இட்டுச் செல்லாமல் இருப்பதைக் குறித்து அவதானமாயிருக்க வேண்டும். உதாரணமாக, தன்னுடைய துணை, கணவனோ, மனைவியோ, வீட்டில் இல்லாதிருக்கும்போது எதிர்பாலைச் சேர்ந்த ஒரு விருந்தாளியை அதிக காலத்திற்கு அந்த வீட்டில் வைத்திருப்பது விவேகமானதொரு காரியமல்ல. அவர்கள் வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தாலும் துணையில்லாத வேளையில் நீண்ட சம்பாஷணைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வீடுகளில் இது பெரியதொரு பிரச்சினையாகும். இலங்கையில் இது குறித்து கேள்விபட்டுள்ளேன். விருந்தாளியாக ஒருவர் வீட்டுக்கு வரும்போது இரவில் கணவன் மனைவியின் அறையில் அவர் உறங்குகிறார். சிலவேளைகளில் ஒரே கட்டிலில் உறங்குகின்ற சந்தர்ப்பங்களைக் குறித்தும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியான சந்தர்ப்பங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது. 


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்