- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 4 July 2011

மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம் (3)

மந்திரம் மாயவித்தை பகுதி 1 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்
மந்திரம் மாயவித்தை பகுதி 1 ஐ வாசிக்க இங்கு அழுத்துங்கள்

இப்பகுதி எழுதப்படுவதன் நோக்கம் மந்திர வித்தைகளை கற்பிப்பதற்கல்ல மாறாக சாத்தான் எத்தகைய விதமாக இதன் மூலம் கிரியைகளை நடப்பிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.  கிறிஸ்தவர்கள் பலரும் சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே அவற்றையும் ஆராய வேண்டியது அவசியமாகின்றது. இத்துர்கிரியைகளை நடப்பிக்கும் மக்களுக்கு மத்தியில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு அநேகமாக இக்குறிப்பு உதவிகள் உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்


ஏவல் பில்லி சூனியம்
ஏவல் என்று சொன்னால் ஆவிகளை மனிதர்கள் மேல் ஏவிவிடுகின்றதாகும்.காட்டேரி என்ற நாமத்தையுடைய ஆவியை சமாதானத்தோடு வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் ஏவி விட்டால் குடும்பத்தில் சமாதானம் சீர்குலைந்து விடும். காட்டேரி குடும்பத்தில் புகுந்து அதை சின்னா பின்னாமாக்கி விடும். காளி என்ற நாமத்தையுடைய ஆவிக்கு பல அவதாரங்கள் உண்டு. அக்கினி காளியை ஒருவருக்குள் ஏவினால் அவர் அக்கினியில் விழுவார். அல்லது தீ மூட்டிக் கொண்டு மரிப்பார். அக்கினி ஆவி பிடித்தவர்கள் யாரையும் தீ வைத்து அழிக்கத் தயங்க மாட்டார்கள். உதிரக்காளி என்ற நாமமுடைய ஆவியை ஒரு பெண்ணுக்குள் ஏவி விட்டால் பெண உதிரப்போக்கினால் உபாதை அடைவாள். அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு விலகும் வரையும் உபாதைப்படுவாள். முனி என்ற நாமமுடைய ஆவியை ஒரு ஆணுக்குள் ஏவி விட்டால் அவர் இரவு  நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்கோ அல்லது கற்குகைகளுக்கோ சென்று விடுவார். சில வேளைகளில் அவர் இறந்து விடவும் கூடும். மிருகத்தை ஒருவர் மீது ஏவி விட்டால் அந்த மிருகம் அவரை சேதப்படுத்தும். ஏவல் என்பது இவைகள் போன்றவையாகும். 

பில்லி சூனியங்களின் வகைகள்
1. கால் அடி மண்
பில்லி சூனியம் என்பது இரண்டும் ஒன்றாகும். யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு

2. சுடுகாட்டு சாம்பல்
தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும். 

3. முட்டை
ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும். 

4. ஏந்திரம்
செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து ஏந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர். 

5. சுண்ணாம்பு
சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும். 


6. தேசிக்காய்
சில தேசிக்காய்களை (எலுமிச்சைப்பழம்) கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும். 

7. பொம்மை
சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம். 

ஆண்பெண் வசிய விளக்கம் சாதாரண தரம்
வசியமாக்க வேண்டிவரின் உடை ஒன்றில் அவருடைய பெயரையும் வசிய மந்திரத்தையும் எழுதி பூஜையில் வைத்து அதை தினமும்  விளக்குக்கு அருகில் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்தால் பலிக்கும். 

1. தலைமுடி 
வசியமாக்க வேண்டியவரின் தலை முடியினைப் பூஜையில் வைத்து துளசிக் செடியின் வேரைப் பிடுங்கி தலைமுடியை அதில் சுருட்டி காலை, மாலை, மந்திர, வசியம் செய்ய வேண்டும். 7 நாட்கள் செய்தால் பலிக்கும்

2. ஐந்து வகை எண்ணெய்
ஐந்து வகையான எண்ணெயை எடுத்து போத்தலில்  அல்லது ஒரு குப்பியில் கலந்து அதை வசியமாக்க வேண்டியவர்களின் பெயருக்கு வசிய மந்திரம் செய்ய வேண்டும். பிறகு இந்த எண்ணெயை ஓர் சுரையில் போட்டு அல்லது இடுப்பில் கட்டி கொள்ள வேண்டும் 21 நாட்களில் பலிக்கும். 

3. ஐந்து வகையான வேர்
ஐந்து வகையான வேர்களைக் கொண்டு வந்து எரித்து சாம்பல் எடுத்து அதை பூஜை தட்டில் பெண், ஆண் வசிய சக்கரத்தை சாம்பலில் வரைந்து வசியமாக்க வேண்டியவரின் பெயரை அதில் எழுதி, வசிய மந்திர பூஜை செய்து சாம்பலில் சிறியதை சுரையில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். அலலது நெற்றியில் பூசிக் கொள்ளலாம். சிறிது சாம்பலை வசியமாக்க வேண்டியவரின் மேல் தூவியும் விடலாம். 7 நாள் செய்தால் பலிக்கும். 

4. சிறுநீர்
குப்பைமேனி செடியை பிடுங்கி கொண்டு வந்து வசியமாக்க வேண்டியவரின் சிறுநீரில் போட்டு மூன்று நாள் சென்ற பின் அதன் வேரை துண்டித்து மந்திரப் பூஜையில் வைத்து உச்சாடனம் செய்து சுரையில் போட்டு, கழுத்தில் கட்டிக் கொண்டால் அல்லது இடுப்பில் கட்டிக் கொண்டால் பலிக்கும். 

5. தலைப்பனை ஓலை
வசியமாகக் வேண்டியவர்களின் வீட்டிலிருந்து 7 உப்புக்கற்களை எடுத்துக் கொண்டு வந்து தலைப்பனை  ஓலையில் சக்கரம் வரைந்து அதில் பெயர் எழுதி, மந்திர பூஜையில் வைத்து மந்திர உச்சாடனம் செய்து தாலிப்பனை ஓலையை வசியமாக்க வேண்டியவரின் வாசல் படியில் வலது பக்கம் புதைக்க வேண்டும். 7 உப்பக்கற்களை வசியமாக்க வேண்டியவரின் வீட்டில் தண்ணீர் உள்ள இடத்தில் போட்டு விட வேண்டும். இவ்விதமாக பாவித்தால் பலிக்கும்.

மந்திரம் செய்யும் முறை 
மந்திரங்கள் செய்வதற்கு முதலாவது கும்பம் பாவிக்க வேண்டும். ஒரு செம்பு அல்லது குடத்தை நன்றாக சுத்தம் செய்து அதில் நீர் நிரப்பி, மா இலைகள் வைத்து, கற்பூரம் கொழுத்தி ஆவிகளின் மந்திரங்களை சொல்லி ஆவிகைள அழைக்க வேண்டும். பிறகு ஒரு தேசிக்காய் எடுத்து அதற்கு உருவம் அமைத்து, பூக்களால் அலங்கரித்து, பூஜைக்கான பொருள்களை வைத்து, மந்திர பூழை செய்ய வேண்டும். இலையில் அரிசி வைத்து அதில் கும்பத்தை வைக்க வேண்டும். 

பூஜை பொருட்கள் இரு வகை
1. பால், பொங்கல், பழவகை, கடலை, அவல், தாம்பூலம் பூக்கள்
2. கோழி, சாராயம், முட்டை, பூக்கள், சுருட்டு, எண்ணெய், கலந்த தீனிவகை

யார் மந்திரம் செய்யலாம்?
மந்திரம் செய்பவர் நன்றாக மந்திரங்களை கற்றிருக்க வேண்டும். கற்றுக்கொடுத்த ஆசானிடமிருந்து குரு அபிஷேகம் பெற்றிக்க வேண்டும். குரு அபிஷேகம் பெறாமல் மந்திரங்கள் செய்தால் அது பலிக்காது. மந்திரங்கள் செய்யும்போது மந்திரச் சொற்களை சரியாக உச்சரிக்க வேண்டும். பூஜை பொருட்களையும் சரியாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மந்திரம் பலிக்காது. சிலவேளை மந்திரக்காரருக்கே ஆபத்து வரும். 

மந்திரம் செயய தகுதியான ஸ்தானங்கள்
1. ஆற்றங்கரையில் பூஜைப்பொருட்களை வைத்து ஆற்று நீரில் இருந்து மந்திரம் செய்யலாம்
2. அமைதியான இடம், ஆலயம், அல்லது சுடுகாடு போன்ற இடங்களிலிருந்து செய்யலாம். ஆள் நடமாட்டமில்லாத காடுகளிலிருந்தும் செய்யலாம். 

அச்சரங்கள் சில (ஏந்திரங்கள்)
மந்திரங்கள் செய்யும்போது செம்புத் தகட்டில் அச்சரம் எழுதி அதில் மந்திர பதித்து செய்து கொள்பவர்களின் பெயர்களையும் அதில் பதித்து பூஜை ஆரம்பிக்க வேண்டும். 


ஜோசியம் பற்றிய சில தகவல்கள்
பொதுவாக ஜோசியத்தை நம்பாதவர்கள் யாரும் கிடையாது. அனைவருமே ஜோசியத்தை நமபுகிறவர்களும் கிரகத்திற்கு பயப்படுகின்றவர்களுமே இருப்பார்கள். ஜனங்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது தம்முடைய கிரகநிலை சரியில்லை என்றே கருதுவார்கள். இதன் காரணமாக தன் கஷ்டத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக ஒரு ஜோசியரை நாடி தன்னுடைய கிரக நிலையை அறிந்த அதற்கேற்ற பரிகாரம் செய்வதுண்டு 

பன்னிரண்டு ராசிகளும் அதற்குரிய நட்சத்திரங்களும்
1. மேடம்  - அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் கால்

2. இடபம்  - கார்த்திகை, 2ம், 3ம் கால்
ரோகினி, மிருகசீடம், 1ம் 2ம் 3ம் கால். 

3. மிதுனம் - மிருக சீடம், 3ம், 4ம் கால், திருவாதிரை
புனர்பூசம், 1ம், 2ம், 3ம் கால்

4.   கடகம் - புனர்பூசம், 4ம் கால், ஆயிலியம்

5. சிம்மம் - மகம், பூரம், உத்தரம் 1ம் கால்

6. கன்னி - உத்தரம் 2ம் 4ம் கால் அத்தம், சித்திரை

7. துலாம் - சித்திரை 3ம் 4ம் கால், சுவாதி, விசாகம் 1ம், 2ம், 3ம்

8. விருச்சிகம் - விசாகம் 4ம் கால் அனுஸம் கேட்டை

9. தனுசு - மூலம்,  பூராட்டம், உத்தராட்ம், 1ம் கால்

10. மகரம் - உத்தராட்டம் 2ம்,ஈ 3ம் 4ம் கால் திருவோணம் அவிட்டம் 1ம், 2ம் கால்

11. கும்பம் - அவிட்டம், 3ம் 4ம் கால், சத்யம் பூரட்டாதி 1ம் 2ம் 3ம் கால்

12. மீனம் பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி உண்டு. அதற்கேற்ற நட்சத்திரங்களும் உண்டு. பூமியில் ஒருவர் பிறக்கின்றபோது அந்த நேரம் எந்த நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்தின்படி ராசியை கண்டுபிடிக்க வேண்டும். நேரம் வினாடியை சரியாக கணித்தே ராசியை கண்டுபிடிக்கலாம்.

கிரகங்கள் 9
(1) சூரியன் (2) சந்திரன் (3) செவ்வாய் (4) புதன் (5) குரு
(6) சுக்கிரன் (7) சனி (8) இராகு (9) கேது

ஒவ்வொரு வருடமும் இந்த 9 கிரகங்களும் 12 ராசிகளையும் சுற்றி வருகின்றன. ராசிக்காரர் ஒருவருடைய 10வது ஸ்தானத்தில் சனி, கிரகம் அல்லது ராகு கேது அமைந்தால் ராசிக்காருக்கு கெட்ட காலம் என கணிக்கப்படும். சுக்கிரன். சூரியன், புதன் இம்மூவரும் ஒரே ஸ்தானத்தில் அமைந்தால் ராசிக்காரனுக்கு சுபீட்சகரமானதாக இருக்கும். 10வது ஸ்தானத்தில் சந்திரன் ஆட்சி பெற்றால் ராசிக்காரின் கருமங்கள் தடையின்றி முடியும் என்பதாக கணிக்கப்படும். சனி, வியாழன், வீட்டில் இருக்க வியாழன் சனியை நேரடியாக பார்வையிட்டால் ராசிக்காரருக்கு துன்பங்கள், தொல்லைகள் அதிகமாக ஏற்படுவதாக கணிக்கப்படும். 5ம் ஸ்தானத்தில் ராகு அமைந்து 3ம் ஸ்தானத்தில் சனி இருந்து ராகுவை நேரடியாகப் பார்வை செய்தால் ராசிக்காருககு துன்பங்களும் தொல்லைகளும் தேவனைகளும் உருவாகும். குரு 2ம் ஸ்தானத்திலும் சனி 9ம் ஸ்தானத்திலும் ராகு 12லும் கேது 6 இலும் அமைந்தால் ராசிக்காரருக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. சனி விலகிவிட்டது எனக் கணிக்க்கப்படும். 10வது ஸ்தானத்தில் ஆட்சி புரிந்தால் ராசிக்காரருக்கு நல்லதல்ல


நேரங்கள் பற்றிய சில தகவல்கள்
(1) இராகு காலம் - இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(2) அந்தப்பிரகண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(3) குலிகண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(4) யமன் கண்டன் காலம் -  இதில் சுப கருமங்கள் நடப்பிக்கக் கூடாது
(5) சுப காலம் -  இதில்  மாத்திரம் சுப கரும காரியங்கள் நடப்பிக்கலாம். 

ஜோசியம் பற்றிய உண்மை  விளக்கங்கள்
ஜோசியம் என்பது சரியாகக் கணிப்பிடுகின்ற ஒன்றல்ல. சரியான வினாடியை வைத்து ராசிபலன் கண்டுபிடிப்பது யாராலும முடியாததொன்றாகும. ஜனங்கள் ஜோசியத்தை நம்பி அதை எழுதுதற்காக ஜோசியரை நாடிச் செல்கின்றபடியால் ஜோசியரும் அவர்கள் கொண்டுவரும் நேரத்தின்படி கணித்து ஜாதகத்தை எழுதிக் கொடுப்பார். அவர் ஜாதக் குறிப்பு எழுதும்போது ஏதாவதொரு குறையையும் அதில் போட்டு இவருக்கு கிரகம் சரியில்லை. நேரம் சரியில்லை என்று ஏதாவதொன்றை எழுதி, அவருக்கு சாந்தி கழிக்க வேண்டும் கிரகம் சரியில்லை என்று எழுதிவிடுவார். இதை கேள்விபடும் மனிதன் கிரகம் கழிக்க வேண்டும் சாந்தி கழிக்க வேண்டும் ஜோசியர் சொல்லும் எல்லாப் பொருட்களையும் சேகரித்துக் கொண்டு பணத்தோடு ஜோசியரிடம் போவான். அங்கே நடக்கிறது என்னவென்றால் ஜோசியர் பொய்யை எழுதி ஜனங்களிடம் பணத்தை பிடுங்க முயற்சி செய்கிறார். 

இதை அறியாத மனிதனோ கிரகத்திற்கு பயந்து தானாகவே பணத்தை கொண்டுபோய் கொடுத்து விட்டு வருகிறான். ஜோசியம் எனபது உண்மையானதொன்றல்ல. அது வெறும் பொய்யான காரியமாகும். ஒருவன் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அவனுக்கு எந்த கிரகமும் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. காரணம் ஜோசியம் பிசாசினால் உண்டாகி அவனின் வழிநடத்துதலுடன் எழுதப்படுகின்ற ஒன்றாகும். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு எந்தவொரு தோஷமும் கிடையாது. இதுவே உண்மை

மந்திரங்களினால் ஏற்படுகின்ற விளைவுகள்
1. பணச்செலவு
2. நேர விரயம்
3. ஏமாற்றம்
4. தோல்வி
5. நோய்கள்
6. சமாதனம் சீர்குலைவு
7. பயம்
8. சண்டைகள், வெட்டுப்பழி, குத்துப்பழிகள் ஏற்படுதல்
9. கொலைகள், கொள்ளைகள்
10. மரணம். 

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)
தொடர்புடைய பதிவுகள் :

Related Posts



- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

11 comments:

  1. I have one doubt which if clarified by you will be helpful to me. One of my friends who is doing the work of removing the billi sunyas created by enemies. He told me that billi sunyas can be done on kerchiefs used by ladies so that when that lady uses that kerchief by keeeping it in hip, the seivinai will affect that lady through her body when it is kept in her hip. I want to know is it true? In such case if that lady does not keep that kerchief in her hip the seivinai will not affect her? Please send me your view in this regard Pl send your reply to sujaramu1@gmail.com

    ReplyDelete
  2. ஆம் சகோதரரே. அது உண்மைதான். சாத்தானின் கிரியைகளினால் இவை நடாத்தப்படுகின்றன. இதன் முன்னைய பகுதிகளை வாசித்துப் பாருங்கள். தெளிவாக பதித்துள்ளேன். மேலுள்ள தொடுப்புக்களை சொடுக்கிப் பாருங்கள். உண்மை விளங்கும். சூனியம் பல விதங்களில் செய்யப்படுகிறது. சில வேளை அது பிரதேசத்திற்கு பிரதேசம் கூட வேறுபடும்.

    ஆண்டவராகிய இயேசுக்கிறித்துவை ஏற்றுக்கொள்வதன் மூலம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    மெய்யான கிறித்தவனை சூனியமோ, வேறு எந்த கிரியைகளோ எதுவும் செய்ய இயலாது.

    ReplyDelete
  3. //ஒருவன் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அவனுக்கு எந்த கிரகமும் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு எந்தவொரு தோஷமும் கிடையாது. இதுவே உண்மை//

    ஒரு வேளை இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு தீங்கு வந்தால் அது சாத்தானுடைய செயல் அப்படித்தானே ஐயா...

    ReplyDelete
  4. //கிரகங்கள் 9//

    கிரகங்களை பற்றி பைபிளில் எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா ஐயா...

    ReplyDelete
  5. //ஒருவன் இயேசுக்கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டால் அவனுக்கு எந்த கிரகமும் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு எந்தவொரு தோஷமும் கிடையாது. இதுவே உண்மை//

    ஒரு வேளை இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பிறகு தீங்கு வந்தால் அது சாத்தானுடைய செயல் அப்படித்தானே ஐயா...

    சோதனைகள் பல விதங்களில் வரலாம். பலருக்கு கஷ்டங்கள் கூட வந்துள்ளன. ஆயினும் ஆண்டவர் நம் கூடவே இருப்பதால் ஒரு தீங்கும் நேரிடுவதில்லை. ஆண்டவர் அவற்றையெல்லாம் தாங்க கூடிய மனநிலையை தந்துள்ளார்.

    ReplyDelete
  6. //கிரகங்கள் 9//

    கிரகங்களை பற்றி பைபிளில் எங்கேயாவது எழுதப்பட்டுள்ளதா ஐயா...
    எல்லாவற்றையும் பைபிள் சொல்ல வேண்டும் என ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்

    ReplyDelete
  7. Help emergency
    ஐயா நான் செய்வினையால் நீண்ட நாட்களாக அவதிப்படுகிறேன் எங்கள் வீட்டில் உள்ள அனைவரின் உடலிலும் தீய சக்தியும்,இடு மருந்தும் உள்ளது அந்த தீய சக்தியால் எங்க உடல்ல பூர முடியாமலும், வீட்டுல நுழைய முடியாமலும் தடுக்க வழி உள்ளதா ஐயா அவசர கால எளிய வழியாக சொல்லுங்கள் இதனால் பல பிரச்சனைகளும், வீண்பழியும் உண்டாகிறது எந்த அளவு கொடுமை என்றால் செய்யாத தவறுகளை பழியாக சுமத்தி அதன் மறு நாள் எங்கள் வீட்டில் உள்ளவர்களை சண்டை போட வைப்பார்கள் மற்றவர்கள் செய்த தவறுகளை நாங்கள் செய்வதாக செய்வினை மூலம் நம்ப வைக்கிறார்கள் எனது ஊரும் உறவும் இதனை நம்பி எங்களை ஒதுக்குகிறார்கள் ஊர் பகை ஏர் படுத்துகிறார்கள் அவர்கள் பலரின் கவணத்தை எங்கள் மீது திருப்பி விட்டார்கள் நாங்கல் எது செய்தாலும் எங்கு செல்ல முயற்சி செய்தாலும் கெடுதல் மட்டுமே நிகழ்கிறது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அந்த தீய சக்தி கொண்டு தடுக்கிறார்கள் என்னையும் என் குடும்பத்தாரையும் பொம்மை போல் ஆட்டி வைக்கிறார்கள் என்னை பழிவாங்க தெருவில் பலரை மாயத்தால் அடிமை படுத்தியுல்லார்கள் அவுங்க ஏவல் ஏவி என் முகத்த பாத்தா அவுங்களுக்கு வர பிரச்சனைய எனக்கு வர வக்கிறாங்க, என்ன வெளில வரவே விடமாட்டேங்கிறாங்க, எனக்கு ஒரு வாய்ப்பு தான் இருக்கு அதில் இருந்து விடுபட வழி கூறுங்கள் எங்களுக்கு ஒரே நாள் ஒரே வாய்ப்பு மட்டுமே உள்ளது உங்களிடம் என்னால் மெஸ்ஏஜ் மூலமே தொடர்பு கொள்ள முடியும்

    ReplyDelete
    Replies
    1. சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்க பிரதோஷ அன்று..இப்படி செயிது வர அவங்களுக்கே திருபி அடிக்கும்.அதனல மந்திரம் தந்திரம் எல்லாம் வேணாம்.அது தலைமுறையை பாதிக்கும்...

      Delete
  8. ஐயா வணக்கம்,என் பெயர் சபரிகௌதம்
    எங்கள் கடையில் இருந்து ஒரு கைபேசி
    காணவில்லை.அதை கடையில் வேலை
    செய்யும் ஒருவர் எடுத்து இருக்கலாம் என்று சந்தேகமாக இருக்கிறது.அதை எப்படி அறிவது எண்பதற்காண மந்திரத்தை 9361369363 என்ற எண்ணிற்கு
    கூறவும்

    ReplyDelete