- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 24 June 2011

கிறிஸ்தவ பணியின் அடிப்படை


சீன உள்நாட்டு மிஷனரி சங்கத்தின் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் (1832-1905) ஒரு தடவை கிறிஸ்தவ பணிக்காகத் தம்மை அர்ப்பணித்த வாலிபர்களுக்கு ஒரு நேர்முகப் பரீட்சையை நடத்தினார். நேர்முகப் பரீட்சைக்கு வந்தவர்களிடம் நடைமுறை ரீதியான பல தரப்பட்ட கேள்விகளைக் கேட்ட ஹட்சன் டெய்லர், எல்லோரிடமும் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டார். 

“வெளிநாட்டுக்கு மிஷனரியாகச் செல்லவேண்டும் எனும் வாஞ்சை உங்களுக்கு ஏற்படுவதற்கான காரணம் யாது?“ என்பதே ஹட்சன் டெய்லர் அனைவரிடமும் கேட்ட முக்கியமான கேள்வியாகும். 

“எல்லோருக்கும் சுவசேஷசம் அறிவிக்கப்பட வேண்டும் என்று இயேசுக்கிறிஸ்து கட்டளையிட்டுள்ளார்.“ என்பது ஒருவனது பதிலாகவிருந்தது. இன்னுமொருவன் இயேசுக்கிறிஸ்துவை அறியாமல் இலட்சக்கணக்கானோர் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்“ என்றான். எல்லோருடைய பதில்களும் இவற்றைப் போலவே இருந்தன.

ஹட்சன் டெய்லர் கடைசியில் அவர்கள் அனைவரிடமும் “உங்களுடைய நோக்கங்கள் அனைத்தும் நல்லவைகளே. ஆனால், நீங்கள் உபத்திரங்களுக்கு முகங்கொடுக்கம்போது, அவை உங்களில் உறுதியாய் இராது. குறிப்பாக, உங்கள் கிறிஸ்தவ சாட்சியினிமித்தம் நீங்கள் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்தால், மிஷனரிப்பணியில் ஈடுபட வேண்டும் எனும் உங்கள் வாஞ்சை இல்லாமல் போய்விடும. மரணத்தின் பிடியிலும் மிஷனரியாகப் பணிபுரிய உங்களைத் தூண்டும் ஒரே ஒரு நோக்கம் கிறிஸ்துவின் அன்பு மட்டுமே கிறிஸ்துவின் அன்பு உங்களை ஏவும்போது எத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் அவருக்காகப் பணியாற்ற முடியும்“ என்றார். 

கிறிஸ்துவின் அன்பே கிறிஸ்தவப் பணியின் அடிப்படையாய் உள்ளது. பலவிதமான இக்கட்டுகளக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலும் இறைபணியாற்றிய பவுல் “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது (2 கொரி. 5:14) என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே கிறிஸ்தவ பணியின் அடிப்படையாய் உள்ளது என்பதை ஹட்சன் டெய்லர் நமக்குச் சுட்டிக் காட்டுகிறார். உண்மையில், கிறிஸ்துவின் அன்பை விட்டு மனிதனை எதனாலும் பிரிக்க முடியாது. இதனால், எத்தகைய உபத்திரத்திலும் அவருக்காகப் பணிபுரியக்கூடியதாய் உள்ளது. (ரோமர் 8:35-37)

சபைப்பிதா ஒகஸ்டீன் இவ்வுண்மையை அறியத்தந்தமையால் “எந்த காரியத்தையும் உமக்காகச் செய்யும் போது, அது சிரமமானதொன்றாய்த் தென்படாத அளவுக்கு உமது அன்பைத் தந்தருளும்“ என்று ஜெபித்தார. கிறிஸ்தவர்களாகிய நமது ஜெபமும் இதைப்போலவே இருக்க வேண்டும்.  

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment