- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 3 May 2013

தனியாக இருப்பவருக்கு சில வார்த்தைகள் -(2)


பால் தன்மை தேவனுடைய கொடை என்பதால், அவர்கள் பாலியல் திருப்திக்காக ஆவலுடனிருந்து, தேவன் தமக்கு அதனைத் தரச் சித்தம் கொள்ளவில்லை என்று எண்ணியபடி சந்தோஷமாகவும் பரிசுத்தமாகவும் இருக்கலாம். எனவே அவர்கள் இரணடாந்தரமானவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திருமணத்திற்கு முன்பதாக பாலுறவு கிடையாது. திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபட விரும்பும் ஆண் நண்பனின் அழுத்தத்திறகு இடங்கொடுக்க கூடாது. என்னை முழுமையான அன்பு செய்யாத மதிப்பளிக்காத, எனக்கு முழு வாழக்கைக்கெனப் பொருத்தனை கொடுக்க முடியாத ஒருவனுக்கு என்னுடைய உடலை விளையாட்டுப் பொருளாகத் தர மாட்டேன். காதலன்பானது முழு வாழ்க்கைக்குமான அழகான கொடை என்பதால் திருமண நோக்கமில்லாத எதேச்சையான காதலுறவுக்கு இடமில்லை.

நான் ஐக்கிய அமெரிக்காவில் இறையியல் பயின்றபோது எனது விடுதியில் திருமணமாகாத நான்கு ஆசிய மாணவர்கள் இருந்தார்கள். வெள்ளிக்கிழமை பின்நேரங்களில் அமெரிக்க மாணவர்கள் அனைவரும் தங்களது பெண் நண்பிகளைச் சந்திக்கும் Date என்று சொல்லப்படும் சந்திப்புக்குப் போவதால் எமது விடுதிகள் வெறிச்சோடிப் போய்விடும். (மேற்கதையை கலாச்சாரத்தில் காணப்படும் திருமணத்திட்டம் இல்லாமல் ஒரு சந்திப்பைத் தொடரும் முறைமையை வேதாகமத்தில் காணப்படும் மிகவும் உன்னதமான, வாழ்நாள் முழுவதும் பொருத்தனை பண்ணுகின்ற காதலன்புடன் தொடர்புபடுத்த நான் மிகவும் சிரமப்படுகிறேன் என்பதை நான் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மேற்கதைய செய்தி நிறுவனங்களின் தாக்கத்தால் இந்த முறைமை ஆசிய நாடுகளுக்கும் பரவுவது எனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகின்றது.) வெள்ளிக்கிழமைகளில் ஆசிய நாட்டவர்களாகிய நாங்கள் நால்வரும் நமக்கொரு மனைவி வேண்டுமென ஆதங்கத்துடன் சொல்வதுண்டு. இது தேவன் மனிதர்களுக்கு வைத்திருக்கும் சாதாரண ஒழுங்குமுறையான காதல் மற்றும் பாலியல் திருப்திக்கான பரிசுத்த அவாவின் ஒரு பகுதியாகும். இருப்பினும், தேவன் என்னை தனியாறிருக்க அழைத்திருந்தால், நான் ஒரு வகையான முழுமையற்ற உணர்வுடன் மரிக்கும்வரை வாழவேண்டும் என நான் அறிவேன். ஆனாலும், நான் சங்கீதம் 138:8 இல் தரப்பட்டுள்ள சத்தியத்தில் அமைதலாயிருந்தேன். “கர்த்தர் என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்; கர்த்தாவே உமது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கின்றது”

தலைசிறந்த கிறிஸ்தவ கவிஞராகிய வெனி ஜே.குறோஸ்பி (எனது 28 கிறிஸ்தவ தலைவர்களின் படங்களில் அவருடையதும் ஒன்று) பிறந்த ஆறு கிழமைகளிலிருந்தே பார்வையற்றவராக இருந்தார். சாதாரண தடிமன் நிமித்தம் கண்ணில் ஏற்பட்ட அழற்ச்சியை குணமாக்க முயன்ற வேளையில் ஏற்பட்ட தவறின் காரணமாக அவருடைய பார்வை இல்லாமல் போனது. அவரது கீதங்களில் அவர் பரிசுத்த அவாவை வெளிப்படுத்தி, பரலோகத்தின் அதிசயத்தையும், அதன் முன்சுவையையும் குறிப்பிட்டுள்ளார். அவரது கீதங்களில் மிகவும் பிரபல்யமானது ‘Blessed Assurance, Jesus is mine’ என்பதாகும். “தேவன் உங்களுக்கு பார்வையைக் கொடாத்து துரதிஷ்டமே” என்று ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த போதகர் ஒருவர் அவரிடம் கூறியிருந்தார். ஆனால் அவரோ, “நான் பிறக்கும்போது எனக்கு தெரிந்தெடுக்கும் விருப்பம் தரப்பட்டிருந்தால் நான் பார்வையற்றவனாகவே இருக்க விரும்பியிருப்பேன்.  ஏனெனில் நான் பரலோகத்திற்குச் சென்ற பின்னர் நான் காணும் முதல் முகம் எனக்காக உயிர் துறந்தவரின் முகமாய் இருக்கும்“ என்று கூறி போதகரை வியப்பில் ஆழ்த்தினார். இதுதான் பரிசுத்த அவா. 

குறொஸ்பி பார்வையற்ற ஒரு இசைக்கலைஞரை திருமணம் செய்திருந்தார் ஆனால் அவர்களது ஒரே பிள்ளை குழந்தைப் பருவத்திலேயே மரித்துப் போனது. அப்போது தவறுதலாக தன் கண்ணைக் குருடாக்கியவரைக் குறித்து அவர் இப்படியாகச் சொன்னார். “எண்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் ஒரு தடவைக் கூட அவரைக் குறித்து மனங் கசந்ததே கிடையாது. ஏனெனில் எனது வாலிப்பிரயாயத்தின் பிற்பாடு நல்ல தேவன் தனது முடிவில்லா கருணையின் நிமித்தமாய், நான் இப்பொழுதும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியத்திற்கென என்னைப் பரிசுத்தப்படுத்தியுள்ளார்.” அவரது பாடல்கள் தேவன் தொடர்பான மகிழ்ச்சியை வெளிக் கொணர்பவையாகவே உள்ளன. 

வெனி குறொஸ்பியின் குணவியல்பு சகல கிறிஸ்தவர்களிடமும் காணப்படும் குணாதிசயமாய் இருக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் திருமணமானவர்களாயினும், தனிமையானவர்களாயினும் பாலியல் ரீதியில் பரிசுத்தமானவர்களாயும், சந்தோஷமாயும் இருக்கக் கூடும். இது தேவன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த திருப்தியுடன் தேவன் எமக்கென திட்டமிட்டிருக்கும் ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருக்கும் அவாவுடன் கலந்த ஒரு குணவியல்பாகும். தனிமையாயிருப்பவர்கள் தாம் திருமணமாக விரும்பி தம்மைக் கைவிட்டுவிட்டவர்களைக் குறித்து கசப்புணர்வு அற்றவர்களாயிருக்க வேண்டும். தேவன் இதனை அனுமதித்திருந்தால் அவர் நிச்சியமாக அவர்களுக்கு மற்றுமொரு சந்தோஷமான ஆசீர்வாதமான திட்டத்தை வைத்திருப்பார். தேவன்பால் கொண்டுள்ள இந்த சந்தோஷமும் திருப்தியும் தேவனுக்கு விருப்பமில்லாத காரியங்கள் மூலம் எமது நிறைவைப் பெற்றுக் கொள்ளும்படி எமக்கு ஏற்படும் சோதனையை மேற்கொள்ள எமக்கு உதவும். 


தனிமையாயிருப்பவர்கள் தொடர்பாக சபையின் பொறுப்புக்கள்

தனிமையாயிருப்பவர்களுக்குரிய சில தேவைகளைச் சந்திக்க சபையானது கருத்துடையதாயிருக்க வேண்டும். 

  • தேவனுடைய திட்டத்தில் தனிமையாயிருப்பவர்கள் ஆற்றும் பங்களிப்பைக் குறித்தும், கிறிஸ்துவின் நிமித்தம் அவர்கள் ஆற்ற வேண்டிய பிரத்தியேக பங்களிப்பைக் குறித்தும் சபையானது தனது அங்கத்தவர்கள் முன் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். கூடுமான வரையில் தனிமையில் இருப்பவர்களின் மனதைத் துன்புறுத்த்த்தக்கதான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்துக் கொள்ளும்படி கூடுமான வழியிலெலாம் முயற்சி எடுக்க வேண்டும்.

  • தனிமையாயிருப்பவர்கள் சுகவீனமுற்றிருக்கும்போது அல்லது உணர்வு ரீதியாகவோ, சரீர  ரீதியாகவோ ஒரு தேவையில் இருக்கும்போது, அதன்பின் பராமரிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு வீடு உள்ளது என்பதனை அவர்கள் உணர வேண்டும். சுகவீனமுற்றிருக்கும், உணர்வு ரீதியாக அழுத்தத்திற்குள்ளாயிருக்கும், அல்லது தனிமையாயிருக்கும் பெண்களை என்னுடைய மனைவி எனது வீட்டில் அடிக்கடி தங்க வைப்பதுண்டு. 

  • தனிமையாயிருக்கும் பெண்கள் ஆண்களின் பிரசன்னம் தேவைப்படும் சில சந்தர்ப்பங்களில் தமக்கு உதவி செய்ய ஆண்கள் உள்ளனர் என்பதனை அறிந்திருக்க வேண்டும். அதேபோல் தனிமையாயிருக்கும் ஆண்கள் குறிப்பாக அவர்களது பெற்றோர் அருகில் இல்லையெனில், ஆரோக்கியமான தாய்மையுறவை உணர வேண்டும்

  • தனிமையாயிருப்பவர்களுக்கு சிறந்த நண்பர்களும் நண்பிகளும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் இப்படியான நட்புறவுகளினூடாக வரும் செழிப்பை அவர்கள் அனுபவிக்கக் கூடும். மேற்கத்தைய நாடுகளிலுள்ள அநேக சபைகள் தனிமையாயிருப்பவர் களுக்கென விசேஷித்த ஊழியங்களை ஆரம்பித்துள்ளன. இது ஒரு உற்சாகமான முன்னேற்றமாகும். இருப்பினும், திருமாணமானவர் களுடன் சந்தோஷமான, பரிசுத்தமான, உதவி செய்கின்ற நட்புறவுகளை தனிமையாயிருப்பவர்கள் வைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையை இது எடுத்துப் போட மாட்டாது. 


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment