(வரும் மே மாதம் 14ம் திகதி இஸ்ரேலிய சுதந்திர தினமாகும். அதையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது)
இஸ்ரேலின் அரசியல் கட்டமைப்பு
1. ஜனாதிபதி
2. நெஸட் The Knesset (பாராளுமன்றம்)
3. அரசாங்கம்
4. நீதித்துறை
5. தேர்தல்கள்
6. 1948 – 2011 வரை இஸ்ரேலின் பிரதமர்களும் ஜனாதிபதிகளும்
இஸ்ரேல் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சியுள்ள நாடாகும். அரசாங்கமானது பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டதாக இயங்குவதோடு சுயாதீன நீதித்துறையும் காணப்படுகின்றது.
1. ஜனாதிபதி
- அரச தலைவர் கட்சி அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர். இவரது பணிகள் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளக்குகிறது. அவரது பணிகளாவன
- பாராளுமன்றத்தில் Knessetமுதல் அமர்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தல்
- வெளிநாட்டு தூதர்களின் நியமனங்களை ஏற்றுக் கொள்ளுதல்
- பாராளுமன்றத்தில் அங்கீக்ரிக்கப்படும் உடன்படிக்கைகளில் (ஒப்பந்தங்களில்) கையழுத்திடல்
- நீதிபதிகள், வங்கி ஆளுநர், இஸ்ரேலிய வெளிநாட்டு தூதுவர்கள் போன்றவர்களுக்கு நியமனம் வழங்குதல் (தகுதி வாய்ந்த ஆளுநர் குழுவின் சிபாரிசுளுக்கு உட்னபட்டே இந்நியமனங்கள் வழங்கப்படும்)
- குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் குற்றங்களுக்கான தண்டனைகளை குறைத்தல் (இதுவும் நீதி அமைச்சின் சிபாரிசின் அடிப்படையிலானதாகவே இருக்கும்)
- இவற்றை விட மேலதிகமாக பொதுப்பணி சார்ந்த சில செயற்பாடுகளும் இவரால் மேற்கொள்ளப்படும் பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடைபெறும். ஒருவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பணியாற்ற முடியும்.
ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யடுபவர் தேசத்திற்கு அவரது பங்களிப்பு மற்றும் அவரது அந்தஸ்து என்பவற்றுக்கு ஏற்பவே தெரிவு செய்யப்படுவார்.
2. நெஸ்ட் (The Knesset பாராளுமன்றம்)
இஸ்ரேல் அரசுப் பிரதிநிதிகள் சபையாகும். இது 120 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சபையாகும். என்ற haknesset hageclolah பத்த்திலிருந்து Knesset என்னும் பதம் வந்துள்ளது. இதன் பொருள் மகா சபை என்பதாகும்.
தேர்தலை அடுத்து புதிய பாராளுமன்றம் செய்ல்பட ஆரம்பிக்கும். முதல் அமர்வின்போது ஜனாதிபதியின் சம்பிரதாய பூர்வமான உரை இடம்பெறும். அதனை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் சத்தியாபிரமாணம் செய்து கொள்வர். சபாநாயகரும் தெரிவு செய்யப்படுவார். இஸ்ரேலின் முதலாவது பாராளுமன்றமானது ஜனவரி 25, 1949 இல் தெரிவு செய்யப்பட்டது. பெப்ரவரி 14 1949 அதன் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
12 கமிட்டிகளுக்கூடாக பாராளுமன்றம் செயற்படுகின்றது.
1. பாராளுமன்ற (சபை) கமிட்டி
2. வெளிவிவகார பாதுகாப்பு கமிட்டி
3. நீதி கமிட்டி
4. பொருளாதார கமிட்டி
5. உள்விவகார, சூழல் கமிட்டி
6. கல்வி, கலாசார கமிட்டி
7. தொழிலாளர் நலன்புரி கமிட்டி
8. அரசியலமைப்பு சட்டம், நீதித்துறை கமிட்டி
9. குடியரசு கமிட்டி
10. அரச கட்டுப்பாட்டு கமிட்டி
11. போதை பாவனைக்கெதிரான செயற்பாட்டுக் கமிட்டி
12. பெண்கள் முன்னேற்ற செயற்பாட்டுக் கமிட்டி
அரசாங்க கொள்கை, செயற்பாடுகள். சட்ட மசோதாக்கள் மீதான விவாதங்கள் பாராளுமன்ற அமர்வுகளின்போது இடம்பெறும். விவாதங்கள் யாவும் எபிரேய மொழியில் நடைபெறும். உறுப்பினர்கள் அரபி மொழியிலும் பேசலாம். இரண்டுமே உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராலோ அல்லது பல உறுப்பினர் கொண்ட குழுவாகவோ அல்லது முழு அரசு பிரதிநிதிகளோ அல்லது அமைச்சரோ யாதாயினும் ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தால் அம்மசோதா நீதித்துறை அமைச்சுக்கு அதன் சட்டப்பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு அனுப்ப்ப்படும். அதுபோல் நிதியமைச்சு மற்றும் இது சம்பந்தமான குறிப்புகளைப் பெறும்பொருட்டு அரசின் ஏனைய அமைச்சுகளுக்கும் அனுப்ப்ப்படும். இவற்றினால் இம்மசோதா அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டு அரசின் அங்கீகாரம் பெறப்படும்.
பாராளுமன்ற ஆயுட்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. உரிய காலத்திற்கு முன் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு
3. அரசாங்கம் (The Government)
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொணடதாக அரசாங்கம் விளங்குகின்றது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை கையாளுகின்றது. அரசின் ஆயுட்காலம் 4 வருடங்கள் கொள்கை திட்டமிடலில் பரந்த அதிகாரத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. பிரதர் இராஜனாமா செய்யும் பட்சத்தில் அல்லது நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடையும் பட்சத்தில் நான்கு வருட ஆயுட்காலம் குறுக இடமுண்டு. தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் பிரதமர் தனது அமைச்சர்களின் பட்டியலை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்பிக்க வேண்டும். அமைச்சர்கள் தமது கடமைகள் குறித்து பிரதமருக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களாக இருக்கிறார்கள். பிரதமர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 18 இதற்கு அதிகமாகவோ 8 இற்கு குறைவாகவோ இருக்க முடியாது. 6 பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படலாம். யாவரும் நெஸ்ட் உறுப்பினர்களாகவே இருக்க வேண்டும்.
வழக்கமாக பாராளுமன்ற வாராந்தம் கூடுகிறது. தேவை ஏற்படின் தேவையைப் பொறுத்து கூடலாம். பாராளுமன்றத்தில் போதுமான ஆசனங்கள் பெறமுடியாத கட்சிகள் கூட்டணி கூட்டணி அமைத்து ஆட்சயமைக்கலாம். தேர்தல் முடிந்து புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்படும் வரை பழைய அமைச்சர்கள் பிரதமர் தமது பொறுப்புகளில் இருக்கலாம். பிரதமர் ஒருவர் இராஜினாமா செய்யும் பட்சத்தில் அல்லது நம்பிக்கையில்லத பிரேரணையில் தோல்வியடையும் பட்சத்தில் அரசாங்கம் தனது உறுப்பினர் ஒருவரை பதில் பிரதமராக நியமிக்கலாம் இவருக்கு பிரதமருக்குரிய சகல அதிகாரங்களும் இருக்கும். ஆனால் பாராளுமன்றத்தை கலைத்துவிடும் அதிகாரம் இல்லை.
4. நீதித்துறை
சுயாதீனமான நீதித்துறை இஸ்ரேலில் உள்ளது. இந்த சுயாதீனமானது சட்டம் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் யாவரும் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்டுவர். ஆரம்ப நீதிமன்றங்களும் மாவட்ட நீதிமன்றங்களும் சிவில் கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும. திருமணம், விவாகரத்து, பராமரிப்பு, ஜீவனாம்சம் போன்றவற்றை விசாரிக்க அவற்றுக்கென விசேட நீதிமன்றங்கள் உள்ளன. ரபீனிக்கல் நீதிமன்றம், ஷரியா (முஸ்லிம் நீதிமன்றம்) ட்ரூஸ் நீதிமன்றம் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம்.
அதியுயர் நீதிமன்றம் (Supreme Court) எருசேலேமில் உள்ளது. அரசுக்கு அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிரான எந்தவொரு முறைபாட்டையும் விசாரிப்பதும் இதன் பணிகளில் ஒன்று. இதன் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும். அதேவேளை பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தவொரு சட்ட மசோதா மீதாக அவற்றை தீர்மானிக்கும் அதிகாரமும் நீதிமன்றத்திற்கு உண்டு.
5. தேர்தல்கள்
பாராளுமன்றத்திற்கும் பிரதம மந்திரிக்குமான வாக்கொடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகள் செலுத்த வேண்டும். ஒன்று தாம் விரும்பும் கட்சிக்கும் மற்றையது பிரதம மந்திரிக்கும் ஆகும். தேர்தல் தினம் விஷேட விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். வாக்களிக்க செல்லும் வாக்களாருக்கு இலவச போக்குவரத்து சேவை நடத்தப்படும். இராணுவனத்தினர் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும் வாக்களிக்கவென விசேட ஒழுங்குகள் செய்யப்படும். பாராளுமற்றத்தில் ஆசனங்களை கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கலாக உயர் நிதிமன்ற நீதியரசர் தலைமையில் மத்திய தேர்தல் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இக்கமிட்டியே தேர்தல்களை நடத்தும. பிராந்திய மட்டத்திலான தேர்தல் கமிட்டி உள்ளுர் தேர்தல் கமிட்டிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும். தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க முடியும்.
(அ) நெஸட் தேர்தல்
மக்கள் தாம் விரும்பும் கட்சிக்கு தமது முதலாவது வாக்கை அளிக்க வேண்டும். 120 ஆசனங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சி தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆசனங்களை கைப்பற்றலாம். இஸ்ரேலின் பிரதான இரு கட்சிகள் லிகுட் (Likud) கட்சி தொழிற்கட்சி கட்சி (Labour) இவையே. இது வரை மாறி மாறி அரசாங்கத்தை அமைத்து வருகின்றன. தேர்தலில் போட்டியிட முனையும் எந்தவொரு வேட்பாளரும் அவர் எந்த ஒர உத்தியோகம் பார்ப்பவராக இருந்தாலும் தேர்தல் நடைபெற 100 நாட்களுக்கு முன்பதாக தமது பதவிகளை இராஜினாமா செய்து விட வேண்டும். வேட்பாளருக்கான வயதெல்லை 21 இற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
(ஆ) பிரதம மந்திரிக்கான தேர்தல்
மக்கள் தமது இரண்டாவது வாக்கை தாம் பிரதமராக தெரிவு யெயப்போகும் வேட்பாளருக்கு அளிக்கலாம். நெஸட்டில் குறைந்த்து 10 ஆசனங்களை கொண்டிருக்கும் எந்தவொரு கட்சியும் தேர்தலுக்கு முன்பாகவே பிரதம மந்திரி பதவிக்கான வேட்பாளரை அறிவிக்கும். இவர்களில் யாராயினும் ஒருவருக்கே மக்கள் தமது வாக்குகள அளித்து பிரதமராக தெரிவு செய்ய வேண்டும். அதிக வாக்குகளை (50% இற்கும் அதிகமான வாக்குகள்) பெறுபவர் பிரதமாராகத் தெரிவு செய்யப்படுவார். நடைபெறும் தேர்தலில் யாரும் வெற்றி பெறமுடியாமல் போனால் இருவாரங்களில் பின்னர் அதிக வாக்க்களை பெற்றிருக்கும் முதலிரண்டு வேட்பாளர்களிடையே மீண்டும் ஒரு தேர்தல் வைக்கப்படும். தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளராவது மரணமடையும் பட்சத்தில் அல்லது சுகவீனமாகி தேர்தலில் பங்குபற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தேர்தல் நடைபெற 96 மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் சார்ந்த கட்சி இன்னொரு வேட்பாளரை அவருக்கு பதிலாக நியமனம் செய்யலாம். நடைபெற்ற தேர்தல் வெற்றி பெற்ற யாராயினும் ஒரு வேட்பாளர் இராஜனாமா செய்யும் பட்சத்தில் அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும் வேட்பாளர் அவரது இடத்தில் நியமிக்கப்படலாம்.
பிரதமர் பதவிக்கான தேர்தல் மட்டும் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள்
பாராளுமன்றம் பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பட்சத்தில் (இதற்கு 80 உறுப்பினர்களின் பெரும்பான்மை தேவை) அல்லது
பிரதமரின் நடத்தையில் குற்றமிழைத்தவராக நிரூபிக்கப்படும் பட்சத்தல் அல்லது
தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்கள் தனது அரசாங்கத்தை அமைக்க தவறும் பட்சத்தில் குறைந்த்து 8 அமைச்சர்களையாவது நியமிக்க முடியாது போகும் பட்சத்தில் அல்லது
பிரமர் மரணமடைந்து அல்லது தனது பணிகளை செய்ய முடியாமல் போகும் பட்சத்தில்
1948 இலிருந்து இன்றுவரை இஸ்ரவேலின் பிரதமர்கள், ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள்
6.1 பிரதமர்கள்
இவை தொடர்பான விபரங்களுக்கு விக்கிபீடியாவின் இந்த இணையப்பக்கத்தைப் பார்வையிடுங்கள்
6.2 ஜனாதிபதிகள்
இவை தொடர்பான விபரங்களுக்கு விக்கிபீடியாவின் இந்த இணையப்பக்கத்தைப் பார்வையிடுங்கள்
(நன்றி : இவ்வாக்கமானது சகோ. ஏ.சி. கிறிஸ்டோபர் எழுதிய இஸ்ராயேல் சரித்திரம் எனும் நூலிலிருந்து எழுத்தாளப்பட்டுள்ளது) வெளியீடு :- இலங்கை வேதாகமக் கல்லூரி
பிரதமர்கள், ஜனாதிபதிகள் தொடர்பான தகவல்கள் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment