- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 23 May 2011

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 2

சங்கீதங்களின் உருவகங்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்


வேதாகமத்திலுள்ள உருவக விபரணங்கள் வித்தியாசமான அர்த்தங்களுடன் உபயோகிக்கப்பட்டிருப்பதனால் ஒரு வசனத்தில் உள்ள அர்த்தத்தை இன்னுமொரு வசனத்திற்குக் கொடுப்பது தவறாகும். ஓசியா 6:4 இல் “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும் விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்துபோகிறதுஎன்று மக்களிடம் கூறப்பட்டுள்ளது. இவ்வசனத்தில், காலை நேர மேகம்”“ “விடியற்காலைப் பனி“ என்பன மக்களுடைய பக்தியை வர்ணிக்கும் உருவக விபரணங்களாக உள்ளன. காலைநேர மேகமும் விடியற்காலைப் பனியும் சிறிதுநேரம் மட்டுமே இருப்பதனால், மக்களுடைய பக்தியும் சிறிது நேரம் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது என்பதை விளக்கும் விவரணங்களாக உள்ளன. இதனால் ஓசியா 14:5 இலும் பனி என்னும் உருவகம் இதே அர்த்தத்துடனேயே உபயோகிக்கப்பட்டுள்ளது என்று கருதுவது தவறாகும். இவ்வசனத்தில் தேவன் மக்களிடம் “நான் இஸ்ரவேலுக்குப் “பனியைப் போலிருப்பேன்”“ என்று  தெரிவித்துள்ளார். ஓசியா 6:4 இல் “பனி“ என்பது “இஸ்ரவேல் மக்களுடைய பக்தியை“ உருவகிக்கும் விபரணமாக இருந்தாலும் ஓசியா 14:5 இல் இது தேவனுடைய செயலொன்றை” வர்ணிக்கும் உருவகமாக உள்ளது. மேலும் ஓசியா 6:4 இல்  பனியின் சிறிது நேரம் மட்டும் இருக்கும் தன்மையே உருவக விவரணத்தின் அர்த்தமாக உள்ளது. ஆனால் ஓசியா 14:5 இல் “பசுமை“ அல்லது “ஈரலிப்புத்தன்மையே“ உருவக விபரணமாக உபயோகிக்கப்பட்டு்ளளது. அதாவது “மண்ணை ஈரமாக்கும் பனி, தாவரங்களுக்குச் செழிப்பைக் கொடுப்பது போல, தேவன் இஸ்ரவேலுக்கு ஆசிர்வாதமாக இருப்பார்” என்பதே இவ்வசனத்தில் “பனி“” என்னும் உருவகத்தின் அர்த்தமாக உள்ளது. இதனால் ஓசியா 14:5 இல் “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்“ என்று தெரிவித்துள்ளார். எனவே, ஒரேவிதமான உருவக விபரணங்கள், பல வசனங்களில் உபயோகிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் அர்த்தம் வித்தியாசமானதாக இருப்பதனால், நாம் உருவக விபரணம் இடம்பெறும் வசனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்த்து, அவ்வசனங்களுக்கு ஏற்ற அர்த்தத்தின்படி உருவகங்களை வியாக்கியானம் செய்யவேண்டும். இல்லையென்றால் வேத வசனங்களின் அர்த்தத்தை நாம் பிழையான விதத்தில் புரிந்து கொள்வோம். உதாரணத்திற்கு வேதாகமத்தில் “புளித்தமா“ என்பது பாவத்திறகும் தீமைக்குமான உருவகமாக (1 கொரி. 5:6-8) அல்லது பிழையான போதனைக்கான விவரணமாக (கலா. 5:8-9, மத். 16:6, 16:11-12, மாற். 8:15) இருந்தாலும் மத்தேயு 13:33லும் லூக்கா 13:21லும் இவ்விபரணம் தேவனுடைய இராட்சியத்தையே குறிக்கின்றது. எனவே, வேதாகமத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு உருவகத்திற்கு ஒரு அர்த்தம் மட்டுமே உள்ளது எனக் கருதி, அவ்வுருவகம் இடம்பெறும் சகல வசனங்களையும் ஒரே அர்த்தத்தில் வியாக்கியானம் செய்யக் கூடாது. ஒவ்வொரு உருவகத்தையும் அது இடம்பெறும் வசனத்தையும் வேதப்பகுதியையும் கருத்தாய் ஆராய்ந்து பார்த்து அது எதற்கான உருவகம்? என்பதையும் எவ்வர்த்தத்துடனான உருவகம் என்பதையும் நாம் அறிந்த கொள்ள வேண்டும்”

வேதாகமத்திலுள்ள உருவக விவரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு, குறிப்பிட்ட உருவகம் இடம்பெறும் வசனத்தையும் அவ்வசனம் இடம்பெறும் வேதப்பகுதியையும் ஆராய்ந்து பார்ப்பது ஒரேயொரு வழியாக உள்ளது. இதைத் தவிர வேறு வழிகளில் வேதாகமத்திலுள்ள உருக விபரணங்களுக்கான அர்த்தங்களை அறிந்துகொள்ள முடியாதிருப்பதனால் வேறு முறைகளைக் கையாளுவது தவறானதாகும். சிலர் வேதாகம உருவகங்களுக்குத் தங்களுடைய கற்கனையினால் அர்த்தம் கற்பித்து , வேத வசனங்களின் அர்த்தங்களை குழப்பி, பிழையான விளககங்களைக் கொடுத்து வருகின்றனர். வேதாகமத்தில் உபயோகி்கப்பட்டுள்ள உருவக விபரணங்கள் வேதாகமம் எழுதப்பட்ட பிரதேசத்திலிருந்த பொருட்கள், காட்சிகள், சம்பவங்கள் என்பவற்றிலிருந்தே பெறப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு “கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறார்“(சங். 23:1) என்று ஆரம்பமாகும் பாடலை, சங்கீதக்காரன் தன்னுடைய பிரதேசத்திலுள்ள மேய்ப்பர்களின் தன்மையையும் பணிகளையும் கருத்திற்கொண்டே எழுதியுள்ளான். இதனால் பாலஸ்தீனப் பிரதேசத்து மேய்ப்பர்களின் தன்மையையும், பணிகளையும் பற்றி அறியாத நிலையில் 23ம் சங்கீதத்தைச் சரியான விதத்தில் விளங்கிக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மேய்ப்பர்களைப் பற்றி அறியாத நிலையில் நாம் நம்நாட்டு மேய்ப்பர்களை அடிப்படையாகக் கொண்டு 23ம் சங்கீதத்தை முழுமையாகவும் சரியான விதத்திலும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருப்போம். எனவே வேதாகமக் காலத்தின் சூழலை அறியாதவர்களாக நாம் நம்முடைய கற்பனைகளையும் நாம் வாழும் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு வேதாகமத்திலுள்ள உருவகம் விபரணங்களுக்குத் தவறான அர்த்தம் கற்பிக்கக் கூடாது.

வேதவசனங்களில் சாதாரண உருவவிபரணங்கள் மட்டுமல்ல, சில சிறப்பான உருவகங்களும் உபயோகிக்ப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்திற் கொள்ளாமல் வேதவசனங்களை வியாக்கியானம் செய்யும்போதும், வேதவசனங்களையும் பிழையான விதத்திலேயே நாம் விளங்கிக் கொள்வோம். எனவே, வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வித்தியாசமான உருவக விபரணங்கள் எவை என்று இப்போது பார்ப்போம். சங்கீதங்களிலும் இத்தகைய உருவகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
       (இன்னும் வரும்) 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment