- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 12 September 2012

இயேசு திருமணம் முடித்தவரா? The Davinci Code திரைப்படம் சொல்லும் கதை உண்மையா?



மானிட வரலாற்றில் மாபெரும் சர்ச்சைக்குரிய நபராக இருப்பவர் இயேசு இயேசுகிறிஸ்து என்றால் அது மிகையாகாது. அவரைப் பற்றி இதுவரையில் எழுபதாயிரத்திற்கும் அதிகமான சரிதைகள் எழுதப்பட்டுள்ள போதிலும் ஒவ்வொரு தலைமுறையிலும்இயேசு கிறிஸ்து யார்? என்னும் சர்ச்சை உருவாகுவதைத் தவிரக்க முடியாதுள்ளது. (1) இயேசுகிறிஸ்துவைப்பற்றி பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள சத்தியத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அவரை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆனால், வேதாகம சத்தியத்தை நம்பாதவர்களும், வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளவற்றையும் வேதாகமம் எழுதப்பட்டுள்ள காலகட்டத்தையும் சரியாக அறியாதவர்களும் இயேசுகிறிஸ்துவைப் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட வித்தியாசமான கருத்துக்களையும் பொய்யான கதைகளையும் உலகில் பரப்பி வருகின்றனர்.(2)

இயேசுகிறிஸ்துவைப் பற்றி சமீபகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ள எவ்வித சரித்திர  ஆதாரமும் இல்லாத கற்பனைக் கதை, அவர் திருமணம் முடித்தவர் என்றும், அவருடைய இரத்தவழி வம்சத்தினர் பிரான்ஸ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகின்றது. 2006 இல் முழு உலகிலும் அதிக பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள டாவின்சியின் இரகசியக் குறியீடுஎன்று அர்த்தம் தரும் The Davinci Code என்னும் திரைப்படம் எவ்வித சரித்திர ஆதாரமும் இல்லாத ஒரு கற்பனைக் கதையை உண்மை என்று மக்களை நம்பவைத்து வருகின்றது.

 பிரபலமான நாவல்
The Davinci Code என்னும் திரைபடத்தின் கதை 2003ம் ஆண்டு இதே பெயரில் ஒரு நாவலாக வெளிவந்து உலகிலேயே குறுகிய காலத்தில் அதிகமாக விற்பனையாகிய புத்தகம் என்னும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது 21ம் நூற்றாண்டின் புதுமை என்றும்புத்தகங்களின் அதிசயம் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. (3) இப்புத்தகம் ஒருவருட காலத்தில் 6 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளதோடு 2004ம் ஆண்டில் ஒரு கிழமைக்கு ஒரு இலட்சம் பிரதிகள் அளவில் விற்பனையாகியுள்ளது.(4) மேலும், இந்நாவல் இன்றுவரை 45 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதோடு, 40 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி யுள்ளன(5) . தற்பொழுது இந்நாவல் திரைப்படாகப் பல மொழிகளில் வெளிவந்து, புத்தகத்தின் விற்பனையை அதிகரித்துள்ள தாகவும் கூறப்படுகின்றது(6)

அமெரிக்காவில் Times சஞ்சிகையின் கணிப்பீட்டின்படி, உலகிலிருக்கும் அதிக செல்வாக்கு மிக்க 100 பேரில் ஒருவராக இந்நாவலின் ஆசிரியர் கருதப்படுகிறார். (7) இதனால், The Davinci Code என்னும் நாவல் ஒரு சரித்திர பொக்கிஷம் போல கருதப்பட்டு, இதற்குப் பலதரப்பட்ட விளக்கவுரைகளும் வியாக்கியானங்களும் என இது வரை 90 இற்கும் அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன.(8) தொலைக்காட்சி  நிலையங்களும் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு இயேசுகிறிஸ்துவைப் பற்றிய விபரண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளன. (9)  இந்நாவலில் எழுதப்பட்டுள்ளவற்றை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன், இதிலுள்ள விஷயங்களை கேள்வி-பதில் புத்தகங்கள், புதிர்கள் மற்றும் பலதரப்பட்ட விளையாட்டுப் பொருட்களும் உருவாக்கப்பட்டள்ளன. இதிலிருந்து டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவல் தற்கால பிரபல நாவல் என்பது தெளிவாகின்றது.

பின்பற்றப்படும் நாவல்

டாவின்சியின் இரகசியக் குறியீடு நால் உலகின் பிரபலமான நாவலாக இருப்பது மட்டுமல்ல இது தற்கால மனிதரால் பின்பற்றப்படும் நாவலாகவும் உள்ளதுஇந்நாவலை வாசித்தவர்களில் பெரும்பாலா னோர் இயேசுகிறிஸ்துவைப் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள சரித்திர உண்மைகளை சந்தேகிக்கும் அல்லது மறுதலிக்கும் நிலையில் உள்ளனர். பலர் இந்நாவலில் எழுதப்பட்டுள்ளவைகள் உண்மையானவை என்றே நம்புகின்றனர். இவர்களில் சிலர் தாங்கள் இனிமேல் ஆலயத்திற்கு செல்ல மாட்டோம். ஏனெனில் கிறிஸ்தவம் பொய்களில் கட்டப்பட்டுள்ள மார்க்கம் என்றும் (10)  வேதாகமத்தையும் கத்தோலிக்க சபையையும் பற்றிய தங்களுடைய கருத்தை இந்நாவல் தலைகீழாக மாற்றி விட்டது (11)  என்றும் தெரிவித்துள்ளனர்  இணையதளத்தில் பல இடங்களில் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்கு இந்நாவலே உபயோகிக்கப்படுகின்றது. (12)

டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலை வாசிப்பவர்களில் பலர் இதில் குறிப்பிடப்பட்டுள்ள சரித்திர ரீதியான விடயங்கள் சரியானவை என்றே கருதுகின்றனர் (13) சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் அடிப்படையில் இந்நாவலை வாசித்தவர்களில் மூவரில் ஒருவர் இயேசுகிறிஸ்துவின் இரத்தவழி வம்சத்தினர் இவ்வுலகில் வாழ்வதாக நம்பத் தொடங்கியுள்ளனர்.“(14)  உண்மையில் பல கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை இந்நாவல் அசைத்துள்ளது. (15) புத்தகத்தை வாசித்த ஒரு சதவீதத்திற்கும்  குறைவானவர்களுக்கே இது அதிர்ச்சியையும் குழப்பதையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்நாவலாசிரியர், மதத் தலைவர்கள்  உட்பட பல கிறிஸ்தவர்கள் இந்நாவலின் சரித்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறுகிறார். (16) எனவே இது நாவலாக உள்ளபோதிலும், மனிதரால் பின்பற்றப்படும் வேதம் போலவே உள்ளது.
அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தது போல மக்கள்சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் இப்பொழுது வந்துள்ளதையே (2 தீமோ. 4:4) டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலுக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு சுட்டிக் காட்டுகிறது. மெல்கிப்சன் என்பவர் வேதாகமத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் இயேசுக்கிறிஸ்துவின் பாடுகளை The Passion of Christ எனும் பெயரில் திரைப்படமாக வெளியிட்டபோது, இது வேதாகமத்திற்கு முரணானது என்றும், பணம் சம்பாதிப்பதற்காக எடுக்கப்பட்ட அறிவீனமான படம் என்றும் பலர் குற்றம் சாட்டினார்கள். (17) ஆனால் உண்மையிலேயே வேதாகமத்தையும் உலக சரித்திரத்தையும் முரண்படுத்தும் விதத்தில் கற்பனையில் உருவான The Davinci Code நாவலை எழுதியவரைத் தற்கால சமுதாயத்தின்அறிவுமிக்க வரலாற்றாசிரியர்என்று வாழ்த்துப் பாடுவததோடு, அது அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய சரித்திரம் என்றும் கூறுகிறது.(18) தற்காலத்தில் மக்கள் சத்தியத்தை மறுதலித்துப் பொய்யை உண்மை என்று நம்புவதற்கு இது சிறந்த உதாரணமாக உள்ளது

பிழைகளுள்ள நாவல்
இயேசுகிறிஸ்துவை திருமணமானவராகச் சித்தரிக்கும் டாவின்சியின் இரகசியக் குறியீட்டு நாவல். உலகிலேயே அதிக சரித்திரப் பிழைகள் உள்ள ஒரு நாவலாக உள்ளது.  இதில் 70 இற்கும் அதிகமான சரித்திரப்  பிழைகள் உள்ளன. (19) இந்நாவலாசிரியரின் நோக்கம் இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்தையும் கிறிஸ்த மார்க்கத்தையும் தாக்குவதாகவே உள்ளது(20) உண்மையில் இவர், “கிறிஸ்தவத்தை வெறுப்பவராகவும், எதிர்ப்பவராகவும் இருக்கிறார். (21) இதனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு சவாலாகவும் (22) வாசகர்களுக்கு கிறிஸ்தவத்தின் மீது வெறுப்பையும், வேதாகமம் நம்பகமற்றது  என்னும் எண்ணத்தையும் ஏற்படுத்துகின்ற விதத்திலும் இவர் இந்நாவலை எழுதியுள்ளார். (23) இந்நாவல் கிறிஸ்தவ சரித்திரத்தை முரண்படுத்துவதற்கும், இதில் பலதரப்பட்ட சரித்திரப் பிழைகள் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவல் கற்பனையில் எழுதப்பட்டுள்ள நாவல் எனும் போர்வையில் பொய்யான விஷயங்களை மிக தந்திரமாக முறையில் சரித்திர உண்மைகளாக அறிவிக்கும் அபாயகரமான புத்தகமாகியுள்ளது. (24) “இந்நாவலின் சம்பவங்கள், நபர்கள், இடங்கள் யாவும் ஆசிரியரின் கற்பனையில் உருவானவைஎன்னும் குறிப்புடன் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளபோதிலும்இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஓவியங்கள், கட்டிடங்கள், ஆவணங்கள், இரகசிய சடங்குகள் அனைத்தும் சரியானவைஎன்னும் அறிமுகக் குறிப்புடனேயே இந்நாவல் ஆரம்பமாகின்றது.(25) இதனால் இந்நாவலை வாசிப்பவர்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயங்கள் உண்மையானவை என்று நம்பக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.(26) இந்நாவலின் ஒரு பக்கத்தில்கற்பனையில் உருவானவைஎன்றும் மறுபக்கத்தில்சரித்திர ரீதியாகச் சரியானவைஎன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாவலின் முரண்பட்ட தன்மைக்கும் நாவலாசிரியரின் வஞ்ச குணத்திற்கும் சான்றாக உள்ளது

 இந்நாவல் சரித்திர உண்மைகளை அறியத் தருவதாகவே இதன் ஆசிரியர் Dan Brown என்பவர் தெரிவித்துள்ளார்.(27) உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதே இந்நாவலின் தனித்துவம்(28) என்று கூறும் இந்நாவலாசிரியர் இந்நாவலில் பல விஷயங்களைவரலாற்றாசிரியர்களின் முடிவு எனும் அறிமுகத்துடனே எழுதியுள்ளார்(29) இதனால் இந்நாவலை வெளியிட்டவர்கள் இதை,கத்தோலிக்க சபையினதும் ஓவியக்கலையினதும் சரித்திரப் பாடப் புத்தகம்என்று விளம்பரப்படுத்தியுள்ளனர். (30)

  இதற்கு விளக்கவுரைகள் எழுதுகிறவர்களும் இதை உண்மையான சரித்திரமாகவே நம்புகின்றனர். (31)  இதனால்கதை வடிவில் எழுதப்பட்டுள்ள சரித்திர உண்மைகள்(32) என்றும் உண்மையான சரித்திர சூழலில் எழுதப்பட்டுள்ள நாவல் (33) உண்மையை அடிப்படையாகக் கொண்ட துப்பறியும் நாவல்(34) சரித்திர ஆதாரமுள்ள நாவல் (35) என்றும் இப்புத்தகம் வர்ணிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த பாண்டித்தியம் கல்விப் புலமை என்னும் போர்வையில் தற்காலத்தில் சத்தியத்தை மறுதலிக்கும் பொய்கள் வெளிவருதவற்கு இந்நாவல் உதாரணமாக உள்ளது. (36)

கிறிஸ்தவர்களுடைய வேதநூலில் இயேசுகிறிஸ்துவைப் பற்றி கூறப்பட்டுள்ளவைகள் அனைத்தும் தவறானவைஎன்றும் (பக். 235) “பழங்கால மதக் கருத்துக்களும் சடங்காசாரங்களுமே இயேசுகிறிஸ்துவினுடைய மாரக்கத்தில் உள்ளன. இதில் புதியவைகள் எதுவும் இல்லைஎன்றும் (பக். 232) டாவின்சியின் இரகசியக் குறியீடு கூறுவதோடு, இயேசுகிறிஸ்துவிற்கு புதியதொரு சரித்திரத்தை உருவாக்கி, இதுவே உண்மை என்று மக்களை நம்பவைக்க முற்படுகின்றது. இந்நாவலில் மொத்தம் 96 தடவைகள்இயேசுஎன்னும் பெயர் இடம்பெறுகின்ற போதிலும், இவற்றில் ஒரேயொரு தடவை மட்டுமே அவரைப் பற்றி உயர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய 95 இடங்களிலும் அவர் இழிவான முறையில் சித்திரிக்கப்பட்டுள்ளார்.


இயேசுகிறிஸ்துப்பற்றி இதுவரை காலமும் நாம் அறிந்திருந்தவைகள் அனைத்தும் பொய் என்னும் எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இந்நாவலின் நோக்கமாகும்.(37)  பலவருட கால ஆட்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்  என்னும் அறிமுகத்துடன் பரப்பப்படும் இயேசுகிறிஸ்துப் பற்றிய இத்தகைய பொய்கதைகள் தற்கால உலகில் அதிகமாக பிரபலமடைந்துள்ளன(38) தற்கால உலகில் பெரும்பாலானவர்கள், கிறிஸ்தவ மார்க்கத்தின் ஆரம்பகால சரித்திரத்தை அறியாதவர்களாக இருப்பதனால்(39) டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலைப் போன்ற பொய்களை மக்கள் உண்மை என்று எண்ணி விடுகின்றனர்.

, இவற்றில் எதுவித உண்மைகளும் சரித்திர ஆதரமும் இல்லை என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய பொய்க்கதைகளை உண்மை என்று நம்பும் மக்களுக்கு சரியான சரித்திரத்தையும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை அறியத் தருவதற்காகவும் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. 

(முகவுரை முற்றிற்று)
(வளரும்)

அடிக்குறிப்புகள்
(1)  J.A. Beverly, Counterfeit Code : Answering The Da Vinci Code Heresies p. 13

(2) இக்கதைகளின் விபரங்களுக்கு “இயேசுகிறிஸ்து ஒரு சரித்திர நபரா? என்னும் ஆசிரியரின் நூலையும், பின்வரும் தலைப்புக்களில் இலங்கை சத்தியவசனம் சஞ்சிகையில் வெளிவந்த “இயேசுவின் கன்னிப் பிறப்பு கற்பனையா? இயேசு உயிர்த்ழுந்தாரா? அல்லது மயக்கநிலையிலிருந்து மீண்டாரா? இயேசு கிறிஸ்து இந்தியாவிற்கு வந்தாரா? மகதலேனா மரியாள் இயேசுகிறிஸ்துவின் மனைவியா? என்னும் கட்டுரைகளை பார்க்கவும்.

(3)  B. Kirkwood, Unveiling, The Da Vinci Code p. 13

(4)  Publishers Weekly, 9 February 2004

(5) 2006ம் ஆண்டு வரை 50 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

(6) டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலுக்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்களும் பத்திரிகை விமர்சனங்களுமே இந்நாவலின் பிரபலத்திற்கு காரணமாக கருதப்படுகின்றது. எனினும் கடந்த இரண்டு வருட காலத்திலும் இந்நாவலை விட வேதாகமமே உலகில் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக 2005ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் Times சஞ்சிகையின் கணிப்பீடு கூறுகின்றது. (B. Edwards, Da Vinci : A Broken Code, p1) வருடந்தோறும் 21 மில்லியன் வேதாகமங்களும் 20 மில்லியன் புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் உலகெங்கும் விற்பனைன செய்யப்பட்டும் விநியோகிக்கப்பட்டும் வருகிறது. (J,. McDowell, The New Evidence That Demands a Verdict, pp. 4-6) வேதாகம்ம் 2200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள் ளதோடு உலகில் 90 சதவீதமானவர்களின் மொழிகளில் உள்ளது. (www.bible.society.org)

(7)  B. Kirkwood, Unveiling, The Da Vinci Code p. 14

(8)  --

(9)  ‘Jesus, Mary, and the Da Vinci’ in ABC Special 3 November 2003

(10) E.W.Lutzer, The Da Vinci Deception, P. xxv

(11) Citied in R. Roberts. ‘Mysteries of Mary Magdalene: The Da Vinci Code Resurrects a Debate of Biblical Proportions in Washington Post, 20 July 2003

(12) R. Abanes, The Truth Behind The Da Vinci Code p. 6

(13) R. Abanes, The Truth Behind The Da Vinci Code p. 10

(14)  A Survey by Dedcima Research Inc, Cited in Exploring the Da Vinci Code p. 8

(15) C.E. Olson & S. Miesel, The Da Vinci Hoax: Exposing The Error in the Da Vinci Code p. 30

(16) D. Brown ‘A Collision of Indiana Jones and Joseph Campbell’ in Secrets of the Code, p.312

(17)L. Wieseltier ‘The Worship of Blood: Mel Gibson’ Lethal Weapon’ in New Republic, 26 February 2004

(18)  J. Ayers Library Journal. ! February 2003, p. 114 Publishers Weekly, 18 March 2003, P. 76

(19)  B.H. Edwards, Da Vinci : A Broken Code, p. 14

(20) D. Klinghiffer, ‘Religious Fiction’ in The National Review. 8 December 2003

(21) J. Hitchcock , “Fantasy Faith’ in Touchstone (December 2003), p. 16

(22) C.E. Olson & Miesel, The Da Vinci Hoax: Exposing The Error in the Da Vinci Code p.18

(23)  S. Clark, The Da Vinci Code on Trial : Filtering Facts from Fiction, p. 21

(24) கி.பி. 1840 களில் Bruno Bauer என்பவர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி வேதத்தில் உள்ளவைகள் புராணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்னும் கருத்தில் கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதினார். இவற்றினுடைய செல்வாக்கு காரணமாக கம்யூனிசத்தின் தந்தையாக கருதப்படும் கால்மார்க்ஸ் என்பவர் இயேசுகிறிஸ்து என்பவர் உலகில் வாழவில்லை என போதித்தார். இதனால் இத்தகைய ஒரு தவறான கருத்து கம்யூனிசப் போதனையின் ஒரு பகுதியாகிவிட்டது. (R.E. Van Voorst, Jesus Outside the New Testament, pp 8-10) இதேபோலவே, தற்காலத்தில் டாவின்சியின் இரகசியக் குறியீடு நாவலும் இயேசுகிறிஸ்துவைப் பற்றி பொய்யான காரியங்களை மக்களின் உள்ளத்தில் விதைத்து வருகின்றது. மேலும், உலகில் எந்த மூலையில் இருக்கும் மனிதனும் இந்நாவலைப் பற்றிக் கேள்விபடக்கூடிய விதத்தில் இதனது பிரபல்யமும் இதைப் பற்றிய பிரசாரமும் உள்ளது. (A. Ward, ‘Decoding The Da Vinci Code’ in Fort Worth Star Telegram. 24 January 2004 pp 1-2)

(25)  ----

(26)  B. Kirkwood, Unveiling, The Da Vinci Code p. 15

(27) D. Brown, Interview by M. Lauer, The Today Show, NBC 9 June 2003

(28) D. Brown, Interview with Borders, www.broderstores.com/features/feature.jspfile=browndan

(29) D.Brown, The Da Vinci Code, pp 36, 88, 113, 134, 158, 217, 254

(30) Cited in B. Goldstein ;As A Novel Rises Quickly, Book Industry Takes Note’ in New York Times 21 April 2003.

(31) பின்வரும் புத்தகங்களின் தலைப்புகள் நேரடியாகவே அறிவிக்கின்றன.
S. Newman, The Real History Behind the Da Vinci Code(New York : Berkley, 2005), S. Cox, The Dan Brown Companion : The Truth Behind Fiction (Edinburgh/London: Mainstream Publishing, 2006) M. York: Disinformation Company Ltd, 2004) S. Cox Cracking  Da Vinci Code: The Unauthorized Guide to the Facts Behind the Fiction (London: Michael O’Mara Books Ltd, 2004)

(32) B. Minzesheimer ‘Code, Deciphers Intrest in Religious History’ in USA Today. 11 December 2003

(33) ‘The Da Vinci Code: Book Review’ cf.www.counterculture.co.uk/book-review/the da-vinci-code.html

(34) V.MacEwen ‘Try Putting This Book Down’ Cf.www.popmatters.com/book/reviews/d/ da-vinci-code.html

(35)  C. Taylor, Cf.www.archive.salson.com.books/review/2003/03/27/da_vinci

(36) P.G. Davis Goddess Unmasked : The Raise of Neopagan Feminist Spirituality, p.x. 

(37) J. Hitchcock ;Fantasy Faith’ p. 15
தற்காலத்தில் மேற்குலக நாடுகளிலுள்ள புத்தக கடைகளில் “கிறிஸ்தவ நூல்கள்“ பகுதிகளில் அநேகமாக கிறிஸ்வத்திற்கு எதிரான புத்தகங்களே உள்ளன


இவ்வாக்கமானது DR. M.S. வசந்தகுமார் எழுதிய டாவின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மை சரிதையா? எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும் 
வெளியீடு : Divine Christian Church

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

4 comments:

  1. (1) இயேசுவின் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வதால் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.?
    (2) அவர் 32 வயதுவரை காமத்துடன் நடந்தார் எனச் சொல்ல வருகிறீரா?
    (3) திருமணம் செய்துகொண்டால் புனித தன்மைக் கெட்டுவிடும் என விவிலியம் சொல்கிறதா?
    (4) திருமணம் செய்து கொள்வது பாவச் செயலா?
    (5) காமத்தைக் கட்டுப்படுத்த இயேசு தியானம் செய்தார் எனச் சொல்கிறீரா? அதற்காத்தான் இயேசு இமயமலை வந்து கல்வி கற்றதாக சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்ளலாமா?
    (6) உனக்கு அப்படி எண்ணப் பிரச்சனை? ஏசுவுக்கு காமவுணர்வு இல்லையென்றால் அவருக்கு ஆண்மை இல்லை என்று பறை சாற்றுவோமா?
    (7) வசந்தகுமார், பெயருக்கு முன்னால டாக்டர் எனப் போட்டாக் காணாது. என் கேள்விக்கு நீ பதில் சொல்லணும்.
    காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. ஐயா நீங்கள் வணங்கும் இயேசு கிறிஸ்து குறித்து பைபிளில்...

    இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
    யோபு 24:5

    அழகான கேள்வி "ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன்" (பெண்ணிடம் பிறக்கும் அனைவருக்கும் பொருந்தும் மற்றும் இது இயேசுவிற்கும் பொருந்தும்) சுத்தமாக இருக்க முடியுமா? இந்த கேள்வி எனக்குள் எழும்போது இயேசு கிறிஸ்துவின் 2 வயது முதல் 30 வயது முடிய வரலாறு பைபிளில் இல்லை ஏன்? அது மறைக்கப்பட்டதற்கான காரணம் தாவீது செய்யும் லீலைகளை காட்டும் பைபிள் இயேசு கிறிஸ்துவின் வரலாறு காட்டாமல் போகும் காரணம்?

    இதிலிருந்தே தெரிகிறது ஐயா... இயேசு கிறிஸ்துவின் மகிமை...

    ReplyDelete
  3. (1) இயேசுவின் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வதால் உனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.?
    ஆகவில்லை என்று ஒப்புக் கொள்வதால் உனக்கு என்ன பிரச்சினை? உலகத்தில் அநேகர் திருமணம் ஆகாமல் இருக்கின்றனரே.
    அவர் இறைவன் எனவே அவருக்கு திருமணம் அவசியமில்லை

    (2) அவர் 32 வயதுவரை காமத்துடன் நடந்தார் எனச் சொல்ல வருகிறீரா?
    இதற்குரிய ஆதாரங்களை தரவும். சும்மா வாய்க்கு வந்த படி எதையும் சொல்லக் கூடாது

    (3) திருமணம் செய்துகொண்டால் புனித தன்மைக் கெட்டுவிடும் என விவிலியம் சொல்கிறதா?
    இல்லை. பலதார திருமணம் செய்து கொள்வது. ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பது என்பன விபச்சாரம்

    (4) திருமணம் செய்து கொள்வது பாவச் செயலா?
    பைபிள் அப்படி போதிக்கவில்லையே

    (5) காமத்தைக் கட்டுப்படுத்த இயேசு தியானம் செய்தார் எனச் சொல்கிறீரா?
    திருமணம் செய்வதே பொருத்தமான வழி. விசேட அழைத்தல்கள், அதற்குரிய தகுதியில்லாதவர்கள் திருமணம் புரியக் கூடாது. இயேசு இறைவன் அவருக்கேன் காமம்

    அதற்காத்தான் இயேசு இமயமலை வந்து கல்வி கற்றதாக சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்ளலாமா?
    இதற்குரிய ஆதாரங்களை எடுத்து முன்வைக்கவும்

    (6) உனக்கு அப்படி எண்ணப் பிரச்சனை? ஏசுவுக்கு காமவுணர்வு இல்லையென்றால் அவருக்கு ஆண்மை இல்லை என்று பறை சாற்றுவோமா?
    இயேசு இறைவன். நீ வேண்டுமானால் பலரைக் கட்டிக் கொண்டு கூத்தடி உன்னை யார் தடுத்தது.

    (7) வசந்தகுமார், பெயருக்கு முன்னால டாக்டர் எனப் போட்டாக் காணாது. என் கேள்விக்கு நீ பதில் சொல்லணும்.
    காத்திருக்கிறேன்.
    மேலே சொல்லிவி்ட்டேன். ஆண்மையிருந்தால் நீ சொல்வதற்குரிய ஆதாரங்களை எடுத்து வை.











    ReplyDelete
  4. (7) வசந்தகுமார், பெயருக்கு முன்னால டாக்டர் எனப் போட்டாக் காணாது. என் கேள்விக்கு நீ பதில் சொல்லணும்.
    காத்திருக்கிறேன்.
    உனது உண்மை பெயரை கூட நீ போடவில்லை. அது சரி வழக்கறிஞர் என்று நீ ஏன் உன்னை பற்றி குறிப்பிட்டுள்ளாய் விளக்கம் தேவை.

    ReplyDelete