- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 29 September 2011

ஜெபத்தின் தவறான உபயோகம்



ஆலயமொன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆராதனையில் சிறுவனொருவன் கருத்துடன் ஜெபித்துக் கொண்டிருந்ததைக் குருவானவர் கண்டார். சற்று நேரம் அவனை அவதானித்துப் பார்த்த குருவானவர், அவன் “டோக்கியோ“ “டோக்கியோ“ சொல்லிக் கொண்டிருந்ததை செவிமடுத்தார். 

ஆராதனை முடிந்த பினனர் குருவானவர் அந்தச் சிறுவனிடம் சென்று “மகனே நீ பக்தியோடு ஜெபித்துக் கொண்டிருந்ததைப் பார்கக் சந்தோஷமாயிருந்தது. ஆனால், நீ டோக்கியோ டோக்கியோ என்னும் பெயரைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததன் காரணம் என்ன?“ என்று கேட்டார். 

குருவானவரின் கேள்விக்குப் பதிலளித்த சிறுவன், “குருவானவரே நான் இப்போதுதான் எனது பாடசாலையின் புவியியல் பாடப் பரீட்சையை எழுதிவிட்டு வந்துள்ளேன். எனவே, டோக்கியோவை பிரான்ஸ் நாட்டின் தலைநகராக்கும்படி ஜெபித்துக் கொண்டிருந்தேன்“ என்று கூறினான். 

மானிட ஜெபத்திற்கு உத்தரவாதமளிக்கும் தேவன், அற்புதமான காரியங்களைச் செய்வது உண்மையாயினும், அவர் நம் தவறுகளை ஜெபத்தில் திருத்துவார் எனக் கருதுவது தவறாகும். அதாவது நாம் ஒரு பிழையை செய்து விடடு அப்பிழையை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்காக ஜெபிப்பது தவறாகும். 

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். (1 யோவான் 5:14) என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 





தொடர்புடைய பதிவுகள் :

Related Posts



- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment