- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 7 September 2011

தேவாலயத்திற்கு போகும்போது




குறிப்பிட்ட நேரத்துக்கு முன் ஆலயத்திற்கு வந்து, ஆராதனை ஆரம்பமாகும்வரை அமைதியாக மௌனமாக சில நிமிடம் ஜெபத்தில் செலவிடும்போது ஒரு புது ஆறுதல் சந்தோஷம் தோன்றும். 

வீட்டை விட்டு புறப்படும்போது ஒரு சிறு ஜெபம் செய்துவிட்டு புறப்படு. வழியில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்

பிரசங்கிக்கும் நபர்களை எதிர்பார்த்து ஆராதனைக்குப் போகாதிருங்கள் பிரசங்கம் ஒரு மனிதனை மாற்ற முடியாது. எந்த பிரசங்கியாலும் உங்களை ஆறுதல்படுத்தவோ மாற்றவோ முடியாது. உங்களை கர்த்தரின் வசனமே மாற்றும். அதற்காகத்தான் ஆயத்தத்துடன் ஜெபித்துவிட்டுப் போக வேண்டும். 

ஆலயததிற்கு போகும்போது கவர்ச்சிகரமான அல்லது புதிய ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற கொள்கையை மாற்றிக் கொள்ளுங்கள். நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும்போது மிகத் தூய்மையானதும், தோற்றத்தில் இங்கிதமானதுமான உடைகளை உடுத்திச் செல்வதே நன்று!

ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் உட்கார வேண்டும் என்று ஆசைப்படாதிருங்கள்! ஆசனம் இருக்கும் இடத்தில் உட்காரப் பழகிக்கொள்ள வேண்டும். நீங்கள் வழமையாக உட்காரும் இடத்தில் வேறு யாராவது இருந்தால் அவர்களை அந்த ஆசனத்திலிருந்து எழுப்பிவிட்டு உட்காரும் முரட்டுத்தனமான பழக்கம் இருந்தால் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். 

தாமதித்து வந்தால், ஜெபம் செய்து கொண்டிருக்கும்போது உள்ளே நுழைய முற்படக்கூடாது. ஜெபம் முடிந்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். 

சபைக்கு ஸ்தோத்திர காணிக்கை அல்லது எந்த காணிக்கை கொடுத்தாலும் உங்கள் பெயரை வெளியில் செல்ல அனுமதிக்காதிருங்கள் அப்படிச் சொல்லப்படுமானால் காணிக்கையின் ஆசீர்வாதத்தை நீங்கள் இழந்துபோவீர்கள். ஆனால், கொடுத்த காணிக்கை சபை கணக்கில் வரவு வந்துள்ளதா என்பதை நீங்கள் கவனிக்கத் தவற வேண்டாம். அது யாரையும் சோதனைக்குட்படுத்தப் பண்ணாமல் காப்பாற்றும். 

ஆராதனை முடிந்தவுடன் உறவினர், நண்பர்களை மட்டும் சந்தித்து உரையாடாமல் சபைக்கு புதிதாக யாராவது வந்தால் அவர்களுடனும் பேசுங்கள்

ஆராதனை முடிந்தவுடன் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் சபைப் போதகரை சந்தித்து அன்போடு சுகம் விசாரித்து செல்லுங்கள். இதைதான் அந்நியோனியம் (அப். 2:42) என்று கூறுவது. 

காணிக்கை போடும்போது கர்த்தருக்காக தாராளமாகக் கொடுக்கப் பழகுங்கள். அத்துடன் நன்றியோடு காணிக்கை செலுத்துங்கள். 

கூடியவரை உங்கள் பக்கத்து வீட்டார், நண்பர்கள், யாரையாவது கூடவே கூட்டிக்கொண்டுச் செல்ல பிரயாசைப்படுங்கள்.  

உங்கள் சபையைவிட்டு வேறுசபைக்கு மாற ஆசைபடாதிருங்கள். ஒருவேளை உங்கள் சபையில் சரியான ஆத்தும ஆகாரம் இல்லாமல் இருக்குமானால் ஆராதனை முடிந்த பிற்கு ஆகாரம் கிடைக்கும் இடத்திற்குச் செல்வதில் தவறில்லை. உங்கள் ஆத்துமா பலம்பெற ஆகாரம் மிக அவசியம். என் சபையில் ஆகாரம் இல்லை. அதனால்தான் நான் பின்வாங்கினேன் என்று நியாயத்தீர்ப்பில் காரணங்களைக் காட்ட கர்த்தர் அனுமதிக்க மாட்டார். உங்கள் ஆத்துமாவிற்கு நீங்கள்தான் பொறுப்பு. தன் கூட்டில் ஆகாரம் இல்லாத எறும்பு வெளியில் சென்று ஆகாரம் சேகரித்துவரும் ஒழுங்கை கவனித்து இருப்பீர்களே!  ஆகாரம் கிடைத்த இடத்தில் அநத எறும்பு தங்கிவிடாமல் ஆகாரமில்லாத தன் கூட்டில் உள்ளவர்களுக்கு அதை பகிர்ந்து கொடுக்கும் வகையில்தான் தன் இடம்தேடி வரும் அழகைப்பார். அந்த மனப்பாரம் உங்களுக்குள்ளும் வர வேண்டும். 

(நன்றி - நியூஸ் லெட்டர்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment