- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 15 September 2011

மரிக்கும் வரையிலான பணி



இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான அந்திரேயா மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் கொண்டுவருவதையே தன் கடமையாகக் கருத்திச் செயற்பட்டு வந்தவராவார். வேதாகமத்தில் அவரை நாம் சந்திக்கும் இடங்களில் எலலாம் அவர் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துக் கொண்டு வருவதை நாம் அவதானிக்கலாம் (யோவான் 1:40-42, 6:8-9, 12:20-22) இயேசு கிறிஸ்து பரமேறிய பின்னர் சின்ன ஆசியாவின் பல பகுதிகளிலும் அந்திரேயா அவரைப் பற்றி அறிவித்துள்ளார். 

அந்திரேயா கிரேக்கத்தின் பெட்ராயி எனுமிடத்தில் இருக்கையில், தேசாதிபதி வழிபடும் விக்கிரகங்களுக்கு எதிராகப் பிரசங்கித்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அநதிரேயாவோ தேசாதிபதியின் கட்டளைக்குப் பயப்படாமல் தொடர்ந்தும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வந்தார். இதனால் ஒரே அளவான நீளமுடைய இரு மரத்துண்டுகளினால் செய்யப்பட்ட சிலுவையில் அந்திரேயாவைத் தொங்கவிடும்படி தேசாதிபதி கட்டளையிட்டான். 

அந்திரேயாரவைக் கட்டித் தொங்கவிட்ட சிலுவையின் இருமுனைகள் நிலத்தில் பொருத்தப்பட்டிருந்தன. அத்தோடு, அந்திரேயாவின் மரண வேதனையை அதிகரிக்கும் நோக்குடன் அவரை நன்றாக அடித்து கயிற்றினால் சிலுவையில் கட்டித் தொங்கவிட்டனர். இவ்வாறு மூன்று நாட்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்திரேயா, கடுமையான வேதனையை அனுபவித்தாலும், உற்சாகத்துடன், தன்னை சுற்றிலும் குழுமியிருந்த மககளுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். 

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்திரேயாவின் வார்த்தைகளைக் கேட்டுப் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். இவர்கள் சிலர் தேசாதிபதியிடம் சென்று அந்திரேயாவை சிலுவையிலிருந்து எடுத்து விடும்படி வேண்டிக் கொண்டனர். தேசாதிபதியும் கடைசியில் அந்திரேயாவின் கட்டுக்களை அவிழ்த்துவிடும்படி கட்டளையிட்டான். ஆனால், கடைசிக் கட்டு அவிழ்க்கப்படும்போது அந்திரேயாவின் சரீரம் மரித்த நிலையில் கீழே விழுந்தது. 

அந்திரேயாவைப் போல கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் கடைசி மூச்சு இருக்கும்வரை இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறக்கலாகாது. 

(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment