- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 13 December 2012

பாலியல் : கவனமாயிருக்க வேண்டியதொரு பகுதி




……..நீங்கள் எதிர்பாலாருடன் சேர்ந்த ஒருவரைக் குறித்து மிதமான உணர்வைக் கொண்டிருக்கையில் …….. இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்தவன் தனது வாழ்வில் ஓர் உறவுக்குள்ளோ அல்லது நிதானக் குறைவால் ஏற்படும் உறவுக்குள்ளோ, முன்னதாகவே திட்டமிட்டுப் போவது மிகவும் அரிதாகவே காணப்படும். அநேகமான நேரங்களில் பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகளைக் குறித்தது கவனக் குறைவாக இருத்தலே, அவர்கள் இப்படியான உறவுக்குள்ளே சறுக்கிச் செல்வற்கு காரணமாகின்றது. அவர்கள்  அந்நியொன்னியமான காரியங்களைக் குறித்து  அதிகமான  அளவாளாதிருப்பார்கள். அல்லது தனிமையில் அநேக நேரங்களைச் செலவிட்டிருப்பார்கள். வேறொருவரால் கொடுத்திருக்க கூடிய உதவியை அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்திருப்பார்கள். அல்லது தனது துணை வீட்டில் இல்லாத வேளையில் குறிப்பட்ட நபரை வீட்டில் அதிக காலம் வைத்திருந்திருப்பார்கள். எம்மைப் பாவத்தில் வீழ்த்த்தக்க சூழ்நிலைகளி லிருந்து தப்புவதற்கு நாமாகவே அவதானமாய் தப்ப வேண்டிய வேளைகளும் உண்டு. யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பின் வஸ்திரத்தைப் பிடித்து என்னோடு சயனி என்று சொன்ன வேளையிலே, அவன் இதனையே செய்தான். மாறாக, எல்லையே மீறாமல், நின்று, அவளோடு கதைப்பேன் என்று யோசேப்பு தீர்மானிக்கவில்லை. அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியில் ஓடிப்போனான். (ஆதி. 39.12) பவுல் தீமோத்தேயுவிடம் பாலியலுக்குரிய இச்சைகளுக்கு விலக்கியோடும்படி ஆலோசனை வழங்கினார். (2 தீமோஃ 2.22)

வாழ்க்கையிலே மிகவும் நிச்சயமற்ற காரியங்களில் ஒன்று பெண்ணை நாடிய ஒரு ஆணின் வழியென்று வேதாகமம் சொல்கிறது. (நீதி. 30.18-19) அதாவது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒரு முக்கிய பகுதி இதுவாகும். ஏனெனில் இந்த இடத்தில் நாம் எளிதில் பாவத்தில் விழுந்து விடலாம். (நீதி. 2.16-19, 5:1-23, 7:4-27) ஒரு காரியம் அசுத்தமானதாக இருக்கும்போது அது அசுத்தமானது என்று எம்மையே நம்ப வைத்து ஏமாற்றிவிடக் கூடியது மனிதனது இதயம். இதனால், எமது வாழ்க்கையில் ஆபத்தானதொரு காரியம் நிகழக்கூடும் என்பதை நாம் எளிதில் கண்டுகொள்ளாமல் இருக்க கூடும். ஆனால்,  அதனை எடுத்துச்  சொல்வதில் அவர்களுக்குப் பயம் இருக்கலாம். அல்லது அவர்கள் அதனை சந்தேகப்படாமல், அவர்கள் காணும் நிகழ்வை அசுத்தமானதாகவும் எண்ண மாட்டார்கள். 

நீங்கள் எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரைக் குறித்து பிடித்தமான உணர்வைக் கொண்டிருக்கையில் நீங்களோ அல்லது அவரோ திருமணமாகாதவராய் இருந்தால், இந்த நபருடனான உங்களது உறவைக் குறித்து நீங்கள் மிகவும் அவதானமாயிருக்க வேண்டும். இது பாலியல் ரீதியான உணர்வாய் இருக்க வேண்டியதில்லை. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது அவரை சந்திக்க வேண்டுமென்கின்ற உணர்வு, அல்லது அவருடன் அடிக்க கதைக்க வேண்டும் அல்லது அவரை அடிக்கடி பாரக்க வேண்டும் அல்லது அவருக்கு எப்பொழுதும் உதவி செய்ய வேண்டும் என்றதான உணர்வுகளாயிருக்கலாம். எதிர்பாலைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்படக்கூடிய இப்படியான உணர்வுகள் நீங்கள் தேவ ஊழியம் செய்யும்போது கூட ஏற்படும். ஏனெனில் நீங்கள் மிகவும் அழகான ஒரு காரியத்தை இணைந்து செய்கிறீர்கள். அது மிகவும் அழகானதும் சுத்தமானதுமாக ஆரம்பிக்கலாம். ஆனால் அது ஒரு ஆபத்தானதாக மாறிவிடலாம். 

நான் கிறிஸ்துவுக்காக இளைஞரில் பணியாற்றுகின்றேன். வாலிபருக்கான ஊழியங்களிலே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சினை என்னெவெனில் இளம் பெண்பிள்ளைகள் தங்களது ஆண் வாலிபத் தலைவர்மீது அளவில்லா மதிப்பு வைத்திருப்பதன் காரணமாக, அவர்களையும் அறியாமலே அந்த வாலிப தலைவர் மீது ஓர் நெருக்கமான ஈர்ப்பை வளர்த்துக் கொள்வார்கள். சாத்தானானவன் இப்படியான சந்தர்ப்பங்களை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைகளை சின்னாப்பின்னப்படுத்த முயலுவான். திருமாணமான ஆண் ஊழியர்கள் குறிப்பாக அவர்களுடைய மனைவிமார் அவர்களது ஊழியங்களிலே அதிகம் இசைவாக இல்லாத நிலைமைகளில், இப்படியான சூழ்நிலைகளில் விழுந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாயிருக்கும். 

எமது பழைய ஆண் நண்பர்களையும் பெண் நண்பிகளையும் குறித்து எமது உள்ளத்திலுள்ள இனிமையான உணர்வுகள் எமது இதயத்திலிருந்து விட்டுப்போகும் என்று நான் எண்ணவில்லை. சில வேளைகளில் இந்த உணர்வுகள் சச்சரவான சூழ்நிலைகளில் வெளிப்படுத்தப்படலாம். இதுவும் ஒரு வகையான இனிமையான உணர்வு என்ற காரணத்தால் அது விரைவில் காதலுணர்வாக மாறிவிடலாம். நீங்கள், குறிப்பிட்ட நபரை அநேக ஆண்டுகளாக சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவரைக் கண்டவுடன் வித்தியாசமான உணர்வுகள் வெளிப்பட்டு, அதைக் கட்டுப்படுத்தவும்  கடினமாகலாம். ஒரு காலத்தில் சாதாரண உணர்வு ரீதியான பந்தத்தை விட அதிகமான பிணைப்பை வைத்திருந்த எதிர்பாலாரை இப்போது சந்திக்கும்போது, நாம் இந்த ஆபத்துக்களைக் குறித்து அவதானமாயிருந்து கவனமாய் நடந்து கொள்ள வேண்டும். 

ஜெரி ஜெக்கின்ஸ் என்பர் எமது திருமணங்களை எப்படிக் காத்துக் கொள்வது என்பதனைக் குறித்து எழுதியுள்ள ‘HEDGES’ (புதர்வேலி) என்ற புத்தகத்தில் எமது திருமணங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வளர்க்க வேண்டிய புதர்வேலிகளைக் குறித்துக் குறிப்பிடுகின்றார். இப்படியானதொரு புதர்வேலியைக் குறித்து அவர் இப்படிச் சொல்கின்றார். “நான் வேடிக்கையாகவேனும் கிளர்ச்சியூட்டும் அல்லது பகிடிக் காதல் தொடர்பான சம்பாஷனைகளைத் தவிர்த்துக் கொள்வேன். “அவர் தொடர்ந்து சொல்லும்போது, இதற்கான காரணம் வார்த்தைகளின் வல்லமையை நாம் நம்புவதாலும் தமக்குக் கிடைக்கும் பாராடுதலுக்கும் மக்கள் சார்பான முறையில் மறுஉத்தரவு கொடுப்பதுமே என்கிறார் “பயனற்ற பகிடியான காதல் உறவுகள் தேவையற்ற பிரச்சினைகளைக் கொண்டுவரும்“ ஏனெனில் அடுத்தவர் அதிக கவனத்தை எதிர்பார்க்கின்றவராகவும் கவனம் தேவைப்படுகின்றவராகவும் இருக்கலாம். ஒருவரை அதிகமாகப் பாதிக்கக் கூடியது “நீங்கள் அழகானதொரு உடையை அணிந்திருக்கின்றீர்கள்“ என்று சொல்வதற்குப் பதிலாக, எம்மை அறியாமலேயே “இன்று நீங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளீர்கள்“ என்று புத்தியீனமாக நாம் சொல்லக்கூடும் என்று ஜென்கின்ஸ் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார். 

“நாங்கள் இருவரும் எவ்வளவு பொருத்தமானவர்கள். நீங்கள் என்னைத் திருமணம் செய்திருக்க வேண்டும்“. அல்லது “எனது மனைவியைச் சந்திக்க முன்னர் உங்களைச் சந்தித்திருந்தால் உங்களையே நான் திருமணம் செய்திருப்பேன்“ போன்ற பேச்சுக்கள் மிகவும் ஆபத்தானவை.அத்துடன், அது எமது துணையைக் கேவலப்படுத்துவதாகும். ஆனாலும் கிறிஸ்தவர்கள் இப்படியான கூற்றுக்கள் சொல்லப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களை நான் அறிவேன். 

இந்த விடயத்தில் எமது துணையிடமோ அல்லது நமக்கு வரப்போகும் துணையிடமோ பகிர்ந்துகொள்ள முடியாத எதனையும் துணை தவிர்ந்த வேறொரு எதிர்பாலான ஒருவரோடு செய்யவோ, கதைக்கவோ கூடாது என்பது என்பது நாம் பின்பற்ற வேண்டிய நல்லதொரு காரியமாகும். கலாநிதி ஜேய் கெஸ்லர் அவர்கள், தனது திருமணமான மகள் தனக்குக் கூறிய ஒரு விடயத்தை எழுதியுள்ளார். “என்னுடைய கணவர் ஓரிரவு மட்டும் ஒரு பெண்ணுடன் எதேச்சையாக பாலுலறவில் ஈடுபட்டார் என்று கேள்விப்படும்போது மனப்பாதிப்புக்குள்ளாவதைவிட ஒரு பெண்ணுடன் ஆழமான நட்பை வைத்திருந்து அவர் என்னிடம் பகிரமுடியாத அல்லது பகிர்ந்து கொள்ளாத காரியங்களை அவளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் எனக் கேள்விப்படுவதால் அதிக பாதிப்புக்குள்ளாவேன்.“ என்றாள். இந்தக் குறிப்பின் மூலம் கலாநிதி கெஸ்லரோ அல்லது நானோ இப்படியான ஓரிரவு பாலுறவுக்கு அங்கீகாரம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், இங்கே, தனது கணவன் தன்னிடம் மட்டுமே செல்ல வேண்டிய காரியங்களை, பகிர்ந்து கொள்ளும்படியாக வேறொரு பெண் தனது கணவனின் இதயத்தைக் கவர்ந்துள்ளாள் என்பது தன்னை மிகவும் அதிகமாய் பாதிக்கும் என்ற அவளுடைய கூற்றே இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். 


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்




தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. வாலிபருக்கான ஊழியங்களிலே காணப்படும் மிகவும் பொதுவான பிரச்சினை என்னெவெனில் இளம் பெண்பிள்ளைகள் தங்களது ஆண் வாலிபத் தலைவர்மீது அளவில்லா மதிப்பு வைத்திருப்பதன் காரணமாக, அவர்களையும் அறியாமலே அந்த வாலிப தலைவர் மீது ஓர் நெருக்கமான ஈர்ப்பை வளர்த்துக் கொள்வார்கள். சாத்தானானவன் இப்படியான சந்தர்ப்பங்களை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைகளை சின்னாப்பின்னப்படுத்த முயலுவான். திருமாணமான ஆண் ஊழியர்கள் குறிப்பாக அவர்களுடைய மனைவிமார் அவர்களது ஊழியங்களிலே அதிகம் இசைவாக இல்லாத நிலைமைகளில், இப்படியான சூழ்நிலைகளில் விழுந்துவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாயிருக்கும்.

    ReplyDelete
  2. சாத்தானானவன் இப்படியான சந்தர்ப்பங்களை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கைகளை சின்னாப்பின்னப்படுத்த முயலுவான்.

    ReplyDelete