- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 14 June 2012

பிரியமான வைத்தியர்

19 வயதான ஐடா ஸ்கடர் அவர்கள், 1890ம் ஆண்டு தென் இந்தியாவில் மிஷனரியாகப் பணிபுரிந்த தன் பெற்றோரைச் சந்திக்க போயிருந்த போது, மூன்று பேர் (ஒருவர் பிராமணர், ஒருவர் முஸ்லீம், ஒருவர் இந்து) தனித்தனியே அவரிடம் வந்து தஙகள் இளம் வயதான மனைவிகளின் உயிரைக் காப்பாற்றும்படிக்க கேட்டனர். மருத்துவ அறிவற்ற ஐடாவால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. மருத்துவ மிஷனரியாக இருந்த தனது தந்தையை அழைக்க முற்பட்டாள். ஒரு ஆண் வைத்தியர் தங்கள் மனைவிற்கு பிள்ளைப்பேறு பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. பிராமணன் “ என் மனைவியின் முகத்தை இன்னொரு மனிதன் பார்ப்பதை விட அவள் மரிப்பதே மேல்“ என்றான்.

மறுநாள் இந்த மூன்று பெண்களும் மரித்துவிட்டார்கள் என்பதை அறிந்த ஐடா, குழப்பமுற்றவளாய் அவர்களுக்கு உதவ முடியவில்லையே எனக் கலங்கியவளாக தன் பெற்றோரிடம் “நான் அமெரிக்காவிற்குப் போய் ஒரு டாக்டராகப் படித்து இங்கு வந்த இந்தியப் பெண்களுக்கு உதவப் போகிறேன்“ என்றாள். சொன்னபடியே ஐடா ஒரு வைத்தியராகப் பட்டம் பெற்று தனது தந்தையின் கீழ் வைத்தியத்தில் ஈடுபட்டாள்.

ஐடாவின் வாஞ்சையை அறி்ந்த மிஷன் இயக்கம் வேலூரில் அவளது தகப்பன் வேலை செய்த இடத்தில் ஒரு வைத்தியசாலையை அமைக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். 1984 இல் ஐடா உரிய பணத்தைத் திரட்டிக் கொண்டு வேலூர் நோக்கிப் புறப்பட்டாள். ஆரம்பத்தில் மக்கள் ஐடா மேல் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் நிலைமை மாறியது. தந்தை மரித்த பின்பு சிறிய டிஸ்பென்சரியை ஆரம்பித்தவர், 1902 இல் வேலூர் மருத்துவமனையை ஆரம்பித்தார். முதல் வருடத்திலேயே 21 பெரிய சத்திரசிகிச்சைகளையும், 420 சிறிய சத்திர சிகிச்சைகளையும் செய்து, 12,359 நோயாளர்களுக்கு வைத்தியமும் செய்தார். 1924 இல் 200 ஏக்கர் நிலத்தில் தனது வைத்தியசாலையை மீள்நிர்மாணம் செய்ததுடன், மருத்துவதுறையில் மக்களுக்குப் பயிற்சியும் கொடுத்தார். இன்று வேலூர் மருத்துவனை ஒரு பிரதான வைத்தியசாலையாகத் திகழ்கின்றது.

லூக்காவும் ஒரு வைத்தியன். உங்களில் சிலரையும் தேவன் இவ்விதமான ஊழியத்திற்கு அழைக்கலாம். உங்கள் படிப்பு, தகைமைகள், திறமைகளை தேவனுக்குப் பயன்படுத்துங்கள். பணத்திற்காக வாழ்வை வீணாக்கி விடாதீர்கள். நீங்களும் வைத்திய, ஆசிரிய துறைகளில் இருப்பீர்களேயானால், வசதி இல்லாத பின்தங்கிய இடங்களில் வாழும் மக்களுக்கு அதனைப் பயன்படுத்துங்கள்.


பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(கொலோ 4:14)

நன்றி அனுதினமும் தேவனுடன், June - Sept 2012 (சத்தியவசன தியான நூல்)

No comments:

Post a Comment