- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday 24 December 2011

கன்னிப் பிறப்பு கற்பனையா? (4)(இறுதிப் பகுதி)

இதன் முன்னைய பகுதிகளை வாசிக்க பகுதி 1, பகுதி 2  பகுதி 3 அழுத்துங்கள்


கன்னிப் பிறப்பு உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாதிடுவது போல, மாற்குவும் யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி தங்களுடைய நற்செய்தி நூல்களில் குறிப்பிடாதது, இயேசுவின் கன்னிப் பிறப்பு நம்பகமானதல்ல என்பதற்கான சான்று அல்ல. இவர்கள் இயேசுவின் பிறப்பைப் பற்றி மட்டுமல்ல. அவருடைய பாலிய பருவத்தைப் பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லையே. இதை வைத்துக் கொண்டு, இயேசுவுக்கு பாலிய பருவம் என்றொன்று இருக்கவில்லை என்று கூறமுடியுமா? எனவே இவர்கள் இருவரும் (மாற்குவும் யோவானும்) இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாதது, மத்தேயுவும் லூக்காவும் எழுதியுள்ளது போல இயேசுவின் பிறப்பு நிகழவில்லை என்பதற்கான ஆதாரமாகிவிடாது. மேலும், பேதுருவி்ன பிரசங்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவின் சுவிஷேசம் பேதுருவின் பிரசஙகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே மாற்குவி்ன் சுவிசேஷம். பேதுருவின் பிரசங்கத்தில் கன்னிப்பிறப்பு இடம் பெறாமைக்கான காரணம், றொகர்ஸ் சுட்டிக்காட்டியதுபோல, “மரியாள் அக்காலத்தில் உயிரோடிருந்தமையும், இயேசுவின் பிறப்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தமையுமேயாகும்.“ எனினும் மக்களுடைய வாயிலிருந்துகூட இயேசுவை யோசேப்பின் மகன் என கேட்க விரும்பாத மாற்கு, மக்களுடைய கருத்தை எழுதும்போது இயேசுவை “மரியாளின் குமாரன்“ (மாற். 6:3) என குறிப்பிட்டுள்ளமை, மாற்கு இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தார் என்பதையே புலப்படுத்துகின்றது. 

மாற்குவைப் போலவே யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி எழுதவில்லை. காரணம் மற்றைய மூன்று நற்செய்தி நூல்களும் எழுதப்பட்ட பின்பே யோவான் தன்னுடைய நூலை எழுதினார். .இதனால் மக்கள் அறிந்திருந்த விடயங்களை மறுபடியுமாக எழுதுவதை அவர் தவிர்த்துள்ளார். மத்தேயுவும் லூக்காவும் கன்னிப்பிறப்பைப் பற்றி தேவையான அனைத்துயும் ஏற்கனவே எழுதியிருந்தமையினால் யோவான் அவற்றை மறுபடியுமாக தன்னுடைய நூலில் சேர்த்துக் கொள்ளவில்லை. றொகர்ஸ் இதைப் பற்றி விளக்கும்போது “மக்கள் அறிந்தவற்றை மறுபடியுமாக எழுதுவது அவசியமற்றது. மற்றைய நற்செய்தி நூல்களில் இடம்பெறாதவைகளை எழுதிய யோவான் அவைகளில் உள்ளவற்றை மறுத்துரைக்கவுமில்லை. மட்டுல்ல. அக்காலத்தில் மக்கள் கன்னிப்பிறப்பு ஏற்றுக் கொண்டிருந்தமையால் அதைப் பற்றி எழுத வேண்டிய அவசியமும் இருக்கவில்லை“ என்று அறியத் தந்துள்ளார். எனினும் ஆதியிலிருந்தே தேவனோடு இருந்த வார்த்தை (1:1) மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார். (1:14) என இயேசுவின் பிறப்பைப் பற்றி அறிவிக்கும் யோவான் இயற்கைக்கும் அப்பாற்பட்ட முறையில் இயேசு உலகிற்கு வந்ததை பல்வேறுப்பட்ட முறைகளில் வர்ணித்துள்ளார். ஜோன் ஸ்டொட் சுட்டிக்காட்டியது போல “பரலோகத்திலிருந்து வருகிறவர் (3:31) வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம் (6:51) தேவனால் அனுப்பப்பட்டவர்(3:34) போன்ற சொற்பிரயோகங்கள் அவருடைய பிறப்பு சாதாரணமானதல்ல என்பதையே அறியத்தருகின்றன.“ மேலும், “இயேசு சிலுவையிலறையப்பட்டதிலிருந்து, மரியாள், கடைசிவரை யோவானுடைய பாரமரிப்பில் இருந்துள்ளமையால் (யோவான 19:26-27) யோவான் இயேசுவின் பிறப்பைப் பற்றி அறியாதிருந்தான் என வாதிடுவது அர்த்தமற்றது“ என்பதை ஜேம்ஸ் ஓர் நம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். 

யோவானைப் போலவே அப்போஸ்தனாகிய பவுலும் இயேசுவின் இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பை வர்ணித்துள்ளார். “.இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்( 1 கொரி. 15:47) தாவீதின் சந்ததியில் பிறந்தவர் (ரோமர் 1:5) தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் (1 தீமோ. 3:16) என இயேசுவைப் பற்றி எழுதியவர், அவருடைய கன்னிப் பிறப்பைக் குறிப்பிட, “காலம் நிறைவேறின போது ஸ்திரியினிடத்திற் பிறந்தவர் (கலா. 4:5) என அறியத் தந்துள்ளார். நற்செய்தி நூலாசிரியர் லூக்காவின் நண்பான இருந்த பவுல், லூக்காவின் மூலமாக இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி அறிந்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அனைவருமே இயேசுவின் கன்னிப் பிறப்பைப் பற்றி அறிந்திருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் இதைப் பற்றி அதிகம் எழுதாதபோதிலும் அவரக்ள் எழுதியுள்ளவைகள் இவ்வுபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கு போதுமான ஆதாரங்களாக உள்ளன. அனைவருடைய குறிப்புகளிலும் காணப்படும் ஒற்றுமை, இவ்வுபதேசத்தைப் பற்றி சந்தேகப்படுவது அவசியமற்றதும் அர்த்தமற்றதுமான செயல் என்பதையே அறியத தருவதாயுள்ளது. 

கன்னிபிறப்பு உபதேசம் நம்பகமானது என்பதற்கு, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் குறிப்புகள் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றுதலாக இது இருப்பதும் மேலதிகமானதொரு ஆதாரமாக அமைகின்றது. மேசியா இவ்வுலகிற்கு எவ்வாறு வருவார் என பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் முன்னறவித்திருந்தனவோ, அதேவிதமாக இயேசு மனிதனாக இவ்வுலகுகக்கு வந்துள்ளதை புதிய ஏற்பாட்டில் நாம் காணலாம். இயேசுவின் மானிட பிறப்பைப் பற்றிய முதல் தீர்க்கதரிசனம் ஆதியாகமம் 3:15 இல் உள்ளது. இதில் இயேசுகிறிஸ்து “ஸ்திரியின் வித்தாக“ குறிப்பிடப்பட்டுள்ளார். ஜோஸ் மெக்டோவெல் சுட்டிக்காட்டியது போல, “இயேசுகிறிஸது ஸ்திரியின் வித்தாக இவ்வுலகிற்கு வந்தாரேயன்றி, பொதுவாக இனப்பெருக்க முறையின்படியான ஆணின் வித்தின் மூலமாக அல்ல“ அதேபோல மேசியாவின் பிறப்பைப் பற்றிய இன்னுமொரு தீர்க்கதரிசனப் பகுதியான மீகா 5:2-3 இலும் பெத்லகேமில் பிறக்கும் இஸ்ரவேலை ஆளும் பிரபுவினுடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது, ஆனாலும் பிரசிக்கிறவள் பிரசவிக்கிற மட்டும் அவளை ஒப்புக்கொடுப்பார்“ என காணலாம். இவ்வசனத்தில் ஜோன் பெவென்கர்க் சுட்டிக் காட்டியது போல “பிரசவிக்கிறவள் மரியாளைக் குறிக்கிறது“ என்பது உண்மையே. இதனால் தான் பவுலும் இயேசுவை ஸ்திரியிடத்தில் பிறந்தவர் (கலா. 4:5) என குறிப்பிட்டுள்ளார். 

தீரக்கதரிசன நிறைவேறுதல் கன்னிப் பிறப்பு உபதேசத்தை எவராலும் மறுக்க முடியாது. ஸ்திரியின் வித்தாக முன்னறிவிக்கப்பட்ட அவர் (ஆதி. 3:15) கன்னிப்பெண் மூலமாக பிறப்பார் எனும் தீர்க்கதரிசனத்தின்படி (ஏசா 7:14) ஸ்திரியினிடத்தில் பிறந்தார்(கலா. 4:5) கன்னிப் பெண்ணான மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என அறியத்தரும் மத்தேயு “தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. (1:22) என கூட்டிக்காட்டிவிட்டு கன்னிகை கர்ப்பவதியாகி குமாரனைப் பெறுவாள் என எசாயா 7:14 இல் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தைக் குறிப்பி்ட்டுள்ளார். (1:23) கன்னிப்பெண் கர்ப்பவதியாளவாள் என கூறப்பட்டது, பரிசுத்தாவியினால் கர்ப்பவதியாகி இயேசுவைப் பெறுவதில் நிறைவேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் ஏசாயா உண்மையிலேயே கன்னிப் பெண்ணைப் பற்றி குறிப்பிட்டிருந்தால் “பெத்உல்லா(bethulah) எனும் எபிரேயப் பதத்தினையே உபயோகித்திருக்க வேண்டும். மத்தேயு கன்னிப்பெண்ணைக் குறிக்கும் “பார்தினொஸ் (Parthenos) எனும் கிரேக்க பதத்தை உபயோகித்தது பிழை. அவர் திருமண வயதையடைந்த இளம்பெண்ணைக் குறிக்கும் கிரேக்க பதமான “நியானிஸ்” சையே(neanis) உபயோகித்திருக்க வேண்டும் என வாதிடுவோரும் உண்டு.

கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏசாயா உபயோகித்த பதமான “அல்மா“வின் (almah) சரியான அர்த்தம் என்ன என்பத பற்றிய தர்க்கம் நிலவிருவது உண்மையே. எனினும் எபிரேய மொழிவல்லுநரும், இறையிலளாளரும் ஏற்பாடடு வேதப்பண்டிதருமான மறைந்த ஈ.ஜே.யங் என்பார் தெரிவித்ததுபோல ஏசாயா உபயோகித்த “அல்மா“ எனும் பதம், பழைய  ஏற்பாட்டிலோ அல்லது மற்றைய எபிரேய இலக்கியங்களிலோ திருமணமான பெண்ணைக் குறிக்க உபயோகிக்கபடவேயில்லை. மட்டுமல்ல, எப்போதும் கன்னிப்பெண்ணை மட்டுமே குறிக்கும் பதமும் எபிரேய மொழியில் இல்லை. அத்தோடு ஏசாயா 7:14 இல் உள்ள பதத்திற்கு இணையான ஆங்கில வார்த்தையும் இல்லை. இப்பதம் ஆங்கிலத்தில் demsel (இளம் பெண்) அல்லது maiden (சிறுமி) எனும் அர்ததங்களையே தரும். எனினும் இப்பதங்கள் திருமணமான பெண்களுக்குப் பொருத்தமற்றது. என்பதும் உண்மையே. “அல்மா“ எனும் பதம் திருமண வயதையடைந்த இளம் பெண்யையே குறிக்கின்றது என்றாலும் ஆதி 24:43, யாத். 2:6, சங். 68:25, நீதி. 30:19, உன். 1:3, 6:8 வசனங்களில் இப்பதம் திருமணமாகாத கன்னிப்பெண்களைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளமையால் ஏசாயா 7:14 இலும் இதே அர்த்த்ததுடனேயே உபயோகிக்க்பபட்டிருக்க வேண்டும். “பழைய ஏற்பாட்டில் இவ்விடங்களில் மட்டுமே “அல்மா“ எனும் பதம் உபயோகிக்கப்பட்டுள்ளது“ என கூறும் ஹென்றி மொரிஸ், “இப்பதத்தின் சரியான அர்த்தம் சர்ச்சைக்குரியதாகயிருந்தாலும், வேதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இடங்களில் கன்னிப் பெண்ணைக் குறிக்கவே உபயோகிக்கப்பட்டுள்ளது மட்டுமல்ல சில இடங்களில் இதைத் தவிர வேறு அர்த்தங்கள் இல்லாததாகவும் உள்ளது என அறியத் தருகிறார். மேலும், வில்லியம் ஹென்றிக்சன் சுட்டிக்காட்டியது போல, “சில சமயங்களில் திருமணமான பெண்ணைக் குறிக்கவும், அதேசமயம் க்னனிப் பெண்ணைக் குறிக்கவும் உபயோகிக்கப்படும் எபிரேய பதமான “பெத்உல்லா“ ஏசாயா 7:14 குறிப்பிடப்படாதது, எப்போதும் கன்னிப் பெண்ணை மட்டுமே குறிக்கும் கிரேக்க பதமான “பார்தினொஸ்“ மத்தேயுவினால் உபயோகிக்கப்பட்டது. இயேசு க்னனிப் பெண்ணான மரியாளிடம் பிறந்தது உண்மை என்பதற்கான ஆதாரமாகின்றது. மட்டுமல்ல. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பழைய ஏற்பாட்டு முதன் முதலில் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க்பபட்ட போது இப்பணியை மேற்கொண்ட 70 மொழியில் வல்லுநர்களும் ஏசாயா 7:14 இலுள்ள “அல்மா“ கன்னிப் பெண் என்பதனால் அதை சரியான விதத்தில் “பார்த்தினொஸ்“ என மொழிபெயர்த்துள்ளனர். இதுவும் ஏசாயா கன்னிப் பெண் கர்ப்பவதியாவதைப் பற்றியே எழுதியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

இயேசுவின் கன்னிப்பிறப்பு நம்பகமானது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருப்பினும் இதை ஏற்றுக்கொள்ளாத அறிவியலாளர்கள், வேதத்தில் உள்ள கன்னிப்பிறப்பு புராணக் கதையொன்றின் தழுவல் என வாதிட்டு வருகின்றனர் விஞ்ஞான யுகத்தில் வாழும் நாம் பின்தங்கிய மூடக்கொள்கையுடைய காலகட்டத்தில் எழுதப்பட்ட நூலை நம்பமுடியாது என தர்க்கின்றனர். எனினும் இறையியல் அகராதி சுட்டிக்காட்டுவது போல், “இயேசுவின் கன்னிப் பிறப்புக்கு இணையான கதைகள் எதுவும் ஆதிகால புராணங்களில் இல்லை. என்பது உண்மையே. புராணங்களில் உள்ள கதைகள் தேவர்களுக்கும் மானிட பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகளைப் பற்றி வர்ணித்தாலும் அப்பிள்ளைகள் பாதி மனிதனாகவும் பாதி தேவனாகவும் இல்லையென்றால் பாதி மனிதனாகவும் பாதி மிருகமாகவும் இருந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் இயேசு கிறிஸ்து இப்படிப்பட்டவராக இவ்வுலகத்தில் இருக்கவில்லை. அவர் முழுமையான  மனிதனாகவும் அதேசமயம் முழுமையான தேவனாகவும் இருந்தார். மட்டுமல்ல வே நூல் ஆசிரியர்கள் புராணக கதைகளை எழுதவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, புராணக் கதைகளை விட்டு விலகச் சொல்லி, மக்களுக்கு கட்டளையிட்டவர்கள், தங்களுடைய புத்தகங்களில் புராணங்களை எழுதினார்கள் என்று சொலவது அர்த்தமற்றது. “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு” (1 தீமோ. 4:7) என கட்டளையிட்ட பவுல் “
வேற்றுமையான உபதேசங்களையுப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு, நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,(1 தீமோ. 1:3) ,இயேசுவின் கன்னிப்பிறப்பு புராணக்கதையாயிருந்தால் அதையும் விடடுவிலகச்சொல்லி கட்டளையிட்டிருந்திருப்பார் என்பதையே புலப்படுத்துகின்றது. ஆனால், தன்னுடைய நண்பனான லூக்கா இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றி எழுதியவைகள் சரித்திரபூர்வமான உண்மையாயிருந்தமையினாலேயே இயேசுவை “ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்“ (கலா. 4:5) என்று குறிபபிட்டு, கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அது புராணமாயிருந்திருந்தால் அவர் நிச்சியம் அதை நம்ப வேண்டாம் என எழுதியிருப்பார். 

ஆதிச்சபை விசுவாசிகள் புராணத் தெய்வங்களையெல்லாம் விட்டுவிட்டு அவை உண்மையல்ல என்று அறிந்து, ஜீவிக்கும் மெய்யான தேவனை சேவித்தவர்கள். இயெசுவின் பிறப்பு புராணமாயிருந்திருந்தால் அவர்கள் அதை நம்பயிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் கன்னிப்பிறப்பை நம்பியவர்கள், இவர்களைப் ப்றறி பவுல் எழுதும்போது “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிப்பவர்கள் (1 தெச. 1:9-10) என குறிப்பிட்டுள்ளார். விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திருப்பியவர்கள்“ என கூறும்போது அம்மதங்களின் புராணக் கதைகள் அனைத்தையும் பொய்யென்று கருதியமையே ஜீவனுள்ள உண்மையான தேவனை நம்ப காரணமாயமைந்தது என்பதையே புலப்படுத்துகின்றது. எனவே, இயேசுவின் கன்னிப் பிறப்பு புராணமல்ல உண்மைச் சம்பவம் என்பதை அறிந்து ஏற்றுக் கொண்டவர்களே இவர்கள் என்பதில் எவ்வித சநதேகமுமில்லை. மேலும் ரேமண்ட் பிரவுண் என்பார் குறிப்பிட்டது போல “இயேசுவின் தாய்,ஈ சகோதரர், குறிப்பாக யாக்கோபு என்போரது பிரசன்னம் (அப். 1:14, 15:13, கலா. 1:19, 2:9) இயேசுவின் பிறப்பைப் பற்றிய புராணக்கதைகள் உருவாவதை நிச்சியம் தடுத்திருக்கும்“ மட்டுமல்ல சரித்திராசிரியரும் வைத்தியருமான லூக்கா “சகலவற்றையும் திருவிசாரித்தறிந்த தன்னுடைய நற்செய்தி நூலை எழுதிள்ளமையும்( 1:1-4) அவர் புராணக் கதையை எழுதியிருக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்துவதாயுள்ளது. இயேசுவின் கன்னிப்பிறப்பு உண்மைச் சம்பவம் எ்னபதனாலேயே ஆதிச்சபை இதை விசுவாசப் பிரமாணத்தில் சேர்த்துக் கொண்டது. இதைப் பற்றிய வேதாகமக் குறிப்புகளும் முற்றிலும் நம்பகமானவை. இயேசுவின் கன்னிப்பிறப்பு எவருடைய கற்பனையுமல்ல. மாறாக கற்பனைக்கும் எட்டாத அற்புத தேவன் தன் மைந்தனை இவ்வுலகுக்கு அனுப்பிய உண்மைச் சம்பவமாகும். 
.

(இ) அதன் அவசியம்




கன்னிப்பிறப்பு உபதேசத்தின் அர்த்தத்தையும் அதற்கான ஆதாரங்களையும் கடந்தமுறை பார்த்தோம். எனினும் இவ்வுபதேசத்தைப் பற்றி இந்த அளவுக்கு விபரமாக அறிந்திருக்க வேண்டியது அவசியம்தானா? என நாம் வினவலாம். சிலர் இவ்வுபதேசம் முக்கியமானதொன்றல்ல. இதை நம்புவதும் நம்பாமலிருப்பதும் நம்மை எவ்விதத்திலும் பாதிக்காது. ஒருவன் இரட்சிப்படைவதற்கு இவ்வுபதேசத்தைப் பற்றிய அறிவு அவசியமற்றது. எனவே இதைப்பற்றி அதிகளவு அலட்டிக் கொள்ளக்கூடாது என கருதுகின்றனர். எனினும் இயேசுகிறிஸ்துவின் கன்னிப்பிறப்பு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் - அது அவசியமற்றது என வாதிடுபவர்கள், இவ்வுவதேசத்தைக் கற்பனைக் கதை என கருதுபவர்களே என்றால் அது மிகையாகாது. மட்டுமல்ல, லொறேன் பொயிட்னர் குறிப்பி்ட்டது போல, “இயேசுவின் கன்னிப்பிறப்பை ஏற்றுக்கொள்ளாதவன், வேதத்திலுள்ள மற்றைய அற்புத சம்பவங்களையும் நம்பாதவனாகவே இருப்பான். “எனவே இவ்வுபதேசததைப் பற்றிய ஒரு மனிதனுடைய நம்பிக்கை மிக மிக முக்கியமானது. மேலும், இவ்வுபதேசம் கிறிஸ்துவைப் பற்றிய மற்றைய உபதேசங்களுடன் தொடர்புடையதாயிருப்பதனால் இதை அவசியமற்ற உபதேசம் என நம்பாமல் ஒதுக்கிவிட முடியாது, ஜேம்ஸ் ஓர் தெரிவித்தது போ, “கிறிஸ்துவைப் ப்றிய நாம் விசுவாசிப்பவைகளில் இருந்து, கன்னிப்பிறப்பை பற்றிய நம்பிக்கை பிரித்துவிட முடியாது“ என்பதை மறுப்பதற்கில்லை. முதலாவதாக, கன்னிப்பிறப்பு உபதேசமானது கிறிஸ்துவினுடைய தெய்வீகத் தன்மையுடன் (Divinity) தொடர்புடையது, இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பது அவருடைய தேவத்துவத்தை மறுதலிப்பதாகும. இயேசு தேவனாயிருந்தமையால், சாதாரண பிறப்பு மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்திருக்க முடியாது. இதனாலேயே இயற்கைக்கம் அப்பாற்பட்ட கன்னிப்பிறப்பு அவசியமாகியது, “இயேசுவின் தேவத்துவத்தை மறந்துவிடுதவாயேயே கன்னிப்பிறப்பின் நிஜத்தையும் அவசியத்தையும் அநேகர் மறந்துவிடுகின்றனர்“ என லெறேன் பொயிட்னர் அறியத்தருகிறார். இயேசுகிறிஸ்து தேவனாக இருப்பதனால் அவருடைய கன்னிப்பிறப்பை பறறிய நம்பிக்கை நம்முடைய விசுவாசப்பிரமாணத்திற்கு அவசியமாயுள்ளது மட்டுமல்ல, கிறிஸ்துவின் கன்னிப்பிறப்பை மறுதலிப்பவன் அவருடைய தேவத்துவத்தையும் மறுதலிப்பதனால்ஈ யோவான் சுட்டிக் காட்டுவதுபோல அத்தகைய மனிதன் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவியை உடையவனாகவே இருப்பான். (1 யோவான் 4:1-3) கன்னிப்பிறப்பைப் பற்றிய நம்பிக்கை “மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை தேவன் என அறிக்கையிடுவதற்கான சான்றுகளுள் ஒன்றாய் அமைவதோடு, நாம் தேவனுடையவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. (4:2) எனவே, இவ்வுபதேசத்தை நம்புவதும் நம்பாததும் அற்பமான விடயமல்ல. நாம் தேவனுடைய ஆவியை உடையவர்களாக அல்லது அந்திக்கிறிஸ்துவின் ஆவியை உடையவர்களாக எ்னபதைக் கண்டறிய, இவ்வுபதேசத்தைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் ஒரு காரணமமைகிறது என்றால் அது மிகையாகாது. 

இரண்டாவதாக இயேசுவினுடைய பாவமற்ற தன்மைககும் (Sinless Nature) கன்னிப்பிறப்பு காரணமாகிறது. அவர் சாதாரணமான முறையில் பிறந்திருந்தால். பாவத்துடனேயே பிறந்திருப்பார். ஆனால் அவர் பரிசுத்தவியானவர் மூலமாக கன்னிப் பெண்ணிடத்தில் பிறந்தமையால் பாவமற்றவராக இருந்தார். அவருக்கு அன்பாயிருந்த சீடன் “அவரிடத்தில் பாவமில்லை. (1 யோவான் 3:5) என குறிப்பிட்டுள்ளார். அப்போஸ்தலனாகிய பேதுருவும் “அவர் பாவஞ் செய்யவில்லை. (1 பேதுரு 2:22) என கூறுகிறார். அவர் “பாவம் அறியாதவர்“ (2 கொரி. 5:21) என பவுலும் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், அவர் எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியர் (எபி.4:15) பரிசுத்தரும், குற்றமற்றவரும் மாசிலலாதவரும் பாவிகளுக்கு விலகினருமாயிக்கிறார். (2:26) இதனால் தான் “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? (யோவான் 8:46) என அவரே ஒருமுறை கேட்டார். 

தான் பாவமற்றவர் என்பதை இயேசு அறிந்திருந்தமையினாலேயே தன்னுடைய பாவமன்னிப்பிற்காக அவர் ஜெபிக்கவேயில்லை. மட்டுமல்ல நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு அதன்படி வாழ்நத இயேசு ஆலயத்திற்கு தவறாது சென்றாலும் கூட அவர் ஒருநாளும் எந்தவொரு பலியையும் செலு்த்தவேயில்லை. காரணம் பாவமற்ற அவர் பாவநிவாரணத்துக்காக பலி செலுத்த வேண்டியிருக்கவில்லை. இதையெல்லாம் ஏற்றுக்கொள்பவனால் கன்னிப்பிறப்பை நம்பாமல் இருக்கவே முடியாது. லொறேன் பொயிட்னர் சுட்டிக்காட்டியது போல, “மானிட ஆள்தத்துவத்தையல்ல, மானிட தன்மையையே இயேசு மரியாளிடத்திலிருந்து பெற்றமையால், அவரை பாவி என நம்மால் கூறமுடியாது. அவர் எந்த ஒரு மனிதனுடைய குமாரனுமல்ல, இதனால் அவர் பாவமற்றவராக இருந்தார். மரியாளிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது. தேவனுடைய குமரன் எனப்படுவார் (லூக். 7:35) என தேவதூதன் தெரிவித்தது போல அவர் பாவமற்றவராக இருந்தார். கன்னிபிறப்பை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இயேசு பாவமற்றவர் என்பதனால் கன்னிப்பிறப்பு அவசியமற்றதாகின்றது.“

மூன்றாவதாக கன்னிப்பிறப்பு உபதேசம், கிறிஸ்துவின் சிலுவைப்பலியுடன் தொடர்புடையதாக உள்ளது. மறைந்த பிரபல இறையியலாளர் பெஞ்சமின் வோர பீல்ட் குறிப்பிட்டது போல, “புதிய ஏற்பாட்டு மீ்ட்பின் உபதேசத்து்டனான தொடர்பிலேயே கன்னிபிறப்பு உபதேசத்தின் அவசியம் முழுமைபெற்று விளங்குகின்றது“. மீட்பானது, பாவத்திலிருந்து மீட்கப்படுவதாயிருப்பதனால் மக்களை பாவத்திலிருந்து மீட்கும் மீட்பர் பாவமற்றவராக இருக்க வேண்டும். எனவே, மீட்பர் சாதாரண முறையில் இவ்வுலகிற்கு வருவதில் எவ்வித பயனுமிருக்காது. காரணம் கன்னிப்பிறப்பு மட்டுமே பாவமற்றவராக மீட்பர் இவ்வுலகிற்கு வருவதற்கு மாரக்கமாயிருக்கிறது. பெஞ்சமின் வோர்பீல்ட் மேலும் இதைப்பற்றி எழுதும்போது “கிறிஸ்துவின் மீட்பின் செயல், அவருடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட பிறப்பைச் சார்ந்துள்ளது“ என அறியத் தந்துள்ளார். 

கன்னிப்பிறப்பு உபதேசமானது. இயேசு கிறிஸ்துவின் தேவத்துவத்துடனும் அவருடைய பாவமற்ற தன்மையுடனும், அவருடைய மீட்பின் செயலுடனும் சம்பந்தப்பட்டிருப்பதனால், இதை ஏறறுக்கொள்ளமலிருப்பது, இதனுடன் சம்பந்தமற்றவைகளையும் ஏற்றுக்கொள்ளாமலிபதபற்கு சமமானது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, கன்னிப்பறிப்பு உபதேசத்தை நம்முடைய விசுவாசப் பிரமாணத்ததில் சேர்த்துக் கொண்டு அது, சரித்திரத்தல் நடைபெற்ற உண்மை சம்பவமாக விசுவசிப்பது நம்முடைய கிறிஸ்தவ வாழ்வுக்கு மிக மிக அவசியமானது. இதை ஒரு கற்பனை கதையாக கருதுவதும்- இது முக்கியமானதொன்றல்ல என எண்ணுவதும் அர்த்தமற்ற அறிவீனமான செயலாகும். தேவனுடைய பிள்ளைகளுக்கு இந்த உபதேசம் அவசியமானதும், அடிப்படையானதும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 




Footnotes
1) Collected writing of John Murry vol. 2
2) The Virgin Birth of Christ by James Orr
3) Authentic Jesus, by John Stott
4) Thy word is Truth, by E.J.Young
5) The Virgin Birth of Christ, by Machen
6) The Virgin Birth by R.I.Humberd
7) The Plain man looks at the Apostle's Creed by William Barclay
8) Sermons on the Apostle's Creed, ed. by Hery J. Kulper
9) The Bible has the Answers by Henry Morris
10) Evidence that demands a Verict by John Mc Dowell
11) The Case for Miracles by Clements F. Rogers
12) Evangelical Dictionary of Theology ed. by Walter A. Elweli.
13) Christology and Criticism by B.B. Warfield
14) Christianity is Christ by Griffith Thomas
15) New Testament Commentary : Mathew, by William Hendriksen
16). The Person of Christ by Loraine Boe Hner

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment