- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 21 June 2013

டெய்லரும் அருட்பணியும்

சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் என்பவர் நான்கு அல்லது ஐந்து வயதாக இருந்தபோதே, “நான் பெரிய மனிதனாகும்போது மிஷனரியாக சீனாவுக்குப் போவேன்" என்று அடிக்கடி கூறுவாராம். அவருடைய 17 வயதில் ஒரு துண்டுப்பிரதியை வாசித்து அதற்கூடாக இரட்சிக்கப்பட்டார். ஒருநாள், “எனக்காக சீனாவுக்குப் போ” என்ற கட்டளையைப் பெற்றார். ஒரு குரல் பேசியதைப்போலவே அது இருந்தது, அவர் அதற்கு தன்னை ஆயத்தம் பண்ணத் தொடங்கினார். அவர் சீனா சம்பந்தமான புத்தகங்களை வாசித்ததுடன் தனது பணிக்கு மருத்துவம் பெரிதாகப் பங்களிக்குமென எண்ணி, ஒரு வைத்தியரின் கீழ் வைத்தியம் கற்றார். அக்காலத்தில் தன் உணவுக்குக் கூட தேவனை நம்புவதற்குக் கற்றுக் கொண்டார். தனது ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொடுத்துதவுமளவிற்கு எளிய வாழ்க்கை நடத்தினார். சீனாவில் கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கத்தக்கதாக தன்னை ஆயத்தப்படுத்தினார். 

1853இல் சீனாவுக்கு போய் சுமார் ஏழு வருடங்கள் இருந்தவர், சுகயீனம் காரணமாக வீட்டுக்குத் திரும்பினார். வைத்தியத் துறையில் தன்னை சிறப்பாக்கிக் கொண்டதுடன் சீனருடைய வாழக்கைமுறையுடன், அவர்களது உடையையும் அணியத் தொடங்கினார். 1858இல் மரியா டைய்யர் என்பவரை மணம்முடித்து, ஆறு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆனார். மூன்று குழந்தைகள் மரித்தனர். 1870இல் மனைவியும் மரித்துவிட்டார். சில முரண்பாடுகள் காரணமாக சீன சுவிஷேச சங்கத்திலிருந்து விலகிய ஹட்சன் டெய்லர், சீனாவுக்கு மிஷனரிகள் எழும்பவேண்டுமென பாரப்பட்டார். ஒருநாள் பிரைட்டன் என்ற இடத்தில் நண்பரோடு தங்கியிருக்கையில், தனது வேதாகமத்தை எடுத்து, பிரிட்டனில் 24 திறமைமிக்க ஊழியர் வேண்டுமென ஜெபித்தார். இரண்டு நாட்களுக்குப் பின்பு ஒரு வங்கியில் 10 மாரக் பணத்தையிட்டு  “சீன உள்நாட்டு மிஷன்” என்ற பெயரில் கணக்கொன்றை ஆரம்பித்தார். 18 மிஷனரிகளைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சீனாவில் சங்காய்க்குப் போய் ஊழியம் செய்தார். 1866இல் இரண்டாக இருந்த மத்திய ஸ்தாபனம் 1872இல் 13 ஆகவும், 1884இல் 20 அதிகமாகவும் 80-90 இடைப்பட்ட மிஷனரிகளையும் சுமார் 100 உதவியாளர்களையும் கொண்டதாக வளர்ந்த்து. 1890இல் 10000 ஊழியர்களுக்காக ஜெபித்தபோது 1153 பேர் முன்வந்தனர். பெண் ஊழியர்களும் ஊழியத்தில் சேவையாற்றினர். 

சீன உள்நாட்டு மிஷனரி சங்கத்தில் ஊழியர்கள் அதிகரிக்க அதிகரிக்க பணத்தேவையும் அதிகரித்தது. தேவஊழியத்திற்கு தேவனுடைய சந்திப்புக்கள் ஒருபோதும் குறைவாக இருந்த்தில்லை. டெய்லர் தன் தேவைகளுக்காக தேவனை மாத்திரமே நம்பியிருந்தார். அவரை உற்சாகப்படுத்திய இரண்டு வேதாகமச் சொற்கள் “எபனேசர்”, “யெகோவாயிரே” என்பனவாகும். 

ஹட்சன் டெய்லர் வெளிநாடுகளுக்குச் சென்று சீனாவில் நடக்கும் ஊழியங்களைப் பற்றிக் கூற அநேகர் பணஉதவி செய்ததுடன் ஆண்களும் பெண்களும் தங்களை ஊழியத்திற்கு ஒப்புக் கொடுக்கவும் செய்தனர். பல எதிரப்புகள் மத்தியில் ஊழியம் வளர்ந்தது. 1900 ஆண்டு பெக்சர் புரட்சியின் போது 58 மிஷனரிகளும் 21 பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். இந்தக் காரியமானது, அவ்வேளையில் லண்டனில் இருந்த ஹட்சன் டெய்லரை பெரிதும் கவலைக்குள்ளாக்கியது. சிறிது காலத்தின்பின் சீனா சென்ற ஹட்சன் டெய்லர் சுகவீனம் காரணமாக ஒருவருடத்தின் பின் மரித்துவிட்டார். 

ஹட்சன் டெய்லர் முதன்முறையாக மிஷனரியாகப்போக எண்ணியபோது, ஒரு வயதானவர் அவரை எச்சரித்து, “உன்னைத் தாங்க ஒரு ஸ்தாபனமும் இல்லாத நிலையில் சீனா செல்வதால் பெரிதான ஒரு தவறை நீ செய்கிறாய் இந்த மிஷன் ஏழு வருடங்கள் கூட நிலைக்காது என்றார். ஆனால், அவரது கணிப்பு தவறாக இருந்தது. சீன உள்நாட்டு மிஷன் ஆற்றிய சேவை அளப்பெரியது. அதுவே சபை சார்பற்ற முதல் மிஷனரி சங்கம் எனலாம். அது இங்கிலாந்திலிருந்து அல்ல, சீனாவிலிருந்தே இயங்கிய சங்கம். அது விசுவாசத்தில் இயங்கிய சங்கம். எந்தப் பெரிய அர்ப்பணம் அது. 

நாம் தேவனை நம்பி தேவனுக்குக் கீழ்ப்படிந்து தேவ ஊழியத்தில் இறங்குகையில் தேவன் எம்மோடு இருப்பதுடன், எமது எல்லாத் தேவைகளையும் சந்திக்கின்றார். “தேவனுடைய வழியில் செய்யப்படும் தேவ ஊழியத்திற்கு தேவனுடைய சந்திப்புக்கள் ஒருபோதும் குறைவாக இருந்ததில்லை” இந்த அனுபவம் எனக்குண்டா? ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையில் காணப்பட்ட விசுவாசமும் உனது வாழ்க்கையில் உண்டா? உனது நாளாந்த தேவைகள், ஊழியத் தேவைகள், தேவ வழியாக அவருடைய சித்தத்தின்படி அமைந்திருக்குமானால் நீ ஒருபோதும் கலங்கத் தேவையில்லை. ஏனெனில் எல்லாவற்றையும் அவரே சந்தித்து, உன் குறைவுகளை தமக்குள் அவரே நிறைவாக்குவார். அந்த விசுவாசத்துடன் உன்னுடைய ஓட்டத்தை ஓடு. 

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். (பிலிப்பியர் 4:19)(திருவிவிலியம்)


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment