- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 3 June 2013

அருட்பணிக்கு அர்ப்பணம்

மேற்கிந்திய தீவுகளில் ஏராளமான கறுப்பினத்தவர்கள் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மிருகங்களைப் போல் மிகவும் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். அடிமைகள்  மத்தியில் மிஷனரிமார்கள் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அடிமையாக இருந்த ஒருவன் தன் எஜமானால் ஐரோப்பாவிற்குக் கொண்வரப்பட்ட போது அவன் கிறிஸ்துவை அறிந்தான். அத்தோடு அடிமைகளாக இருப்பவர்களுக்கும் கிறிஸ்துவை அறிவிக்கப் பிரயாசைப்பட்டான். மொரோவிலிருந்த விசுவாசிகளின் ஐக்கியத்தைச் சேர்ந்த சின்சன்டோ இவரது சாட்சியைக் கேட்டு தனது ஐக்கியத்திலும் அந்த சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு வாலிபர்கள் துள்ளி எழுந்து மிஷனரிகளாகப் போகத் தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். அந்த அடிமையை அவர்கள் சந்தித்துப் பேசியபோது “மிஷனரிகளாக அங்கு யாரும் போகமுடியாது. மிஷனரிமார்கள் ஒருவரும் அங்கு வரக்கூடாது என் தீவின் அதிபதி கங்கணங் கட்டியிருக்கிறான்” என்றான். “அப்போ நாம் அடிமைகளாகப் போவோம்” என்றார்கள் அவர்கள்.


அந்த அடிமையானவன் சிரித்துக் கொண்டே, “கொஞ்சம் பொறுங்கள். அடிமை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இதோ பாருங்கள்” என்று தன் சட்டையைக் கழற்றி, தன் முதுகைக் காட்டினான். அந்த முதுகிலே இரும்பு ஆணியைக் கொண்டு கீறியதைப் போன்ற பயங்கரமான தழும்பு காணப்பட்டது. “அடிமை என்றால் இப்படித்தான் வாரினால் அடிக்கப்படுவர். சிறு குற்றங்களுக்குக் கூட மரக்கட்டையில்மேல் கிடத்தி வாரினால் அடிப்பார்கள். இப்படி அடிக்கப்பட்டதினாலேயே என் முதுகு உழுதநிலம்போல இருக்கின்றது.” எனக்கூறி “இதற்கு நீங்கள் ஆயத்தமா?” என்றான். அவ்விருவரும் தங்கினார்கள். 


அன்றிரவு அவர்கள் இருவருக்கும்  தூக்கமே வரவில்லை. ஒரு பக்கத்தில் அந்த அடிமையின் முதுகிலுள்ள தழும்புகள். அவற்றைப் பார்க்கவே அவர்களால் சகிக்கமுடியவில்லை. மறுபக்கம் ஆண்டவரின் வதைக்கப்பட்ட முகம், முள்முடி சூட்டப்பட்ட தலை, அவரது கன்னங்களிலே வடிந்தோடும் இரத்தம், அன்பு கலந்த வேதனை நிறைந்தமுகம், இவ்விரண்டுக்கும் நடுவிலே அவ்விரு வாலிபர்களும் அன்றிரவு சிக்கித் தவித்தனர். இதனால், தூக்கம் வரவில்லை. பொழுதுவிடியும் நேரத்தில் முடிவு செய்துவிட்டனர். “ஆண்டவரே உமக்காக நாம் அடிமைகளாகச் செல்கிறோம். இந்த உடலை நீர் தந்தீர். அது உமக்காகவே பயன்பட வேண்டும்.” என்று கூறி தங்களை ஒப்புக் கொடுத்தார்கள். 


மொரேவியன் மிஷனரி வாலிபர்கள் இருவரும் புறப்படும் நாள் வந்தது. ஹேம்போக் துறைமுகத்தின் கப்பலிலே இவ்விரு வாலிபர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். மிஷனரிகளாகச் சென்றுவிட்டு சில ஆண்டுகள் கழித்து, விடுமுறையில் வருவதுபோல் அவர்களால் வரமுடியாது. அடிமைகளாகச் செல்வதால் விடுமுறையும் கிடையாது. திரும்ப வரவும் முடியாது. திரும்பவும் தம் பிள்ளைகளைப் பார்ப்போம் என்ற நம்பிக்கைக்கூட அவர்களுடைய பெற்றோருக்குக் கிடையாது. ஆகவே, அவர்கள் குமுறி அழுவதைப் பார்த்தபோது அவ்விரு வாலிபர்களும் அழுதார்கள். கப்பல் புறப்படவேண்டிய சமயம் வந்தத, கரைக்கும் கப்பருக்குமிடையே உள்ள தூரம் பெரிதாக்கிக் கொண்டு வந்தது, இடம் பெரிதாக பெற்றோரும் அதிகம் கதறி அழுதார்கள். அதனைப் பார்த்து உள்ளம் பொறுக்காதபடி அந்த இரண்டு வாலிபர்களும் ஒருவன் கையை ஒருவன் பிடித்துக் கொண்டு தங்கள் கரங்களை உயர்த்தி உரத்த குரலில் “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் பாடுகளின் பலனை அவருக்கு அளிப்பதற்காக இதோ எங்கள் உடலைத் தருகின்றோம்” என்று உரத்த குரலில் சொன்னார்கள். 


மொரோவின் மிஷனரி இயக்கம் உலகின் பல பாகங்களுக்கும் மிஷனரிகளை அனுப்பிய ஒரு இயக்கமாகும். அந்த மிஷனரிகளின் குழு ஒன்றே மெதடிஸ்த சபையின் ஸ்தாபகர் ஜோன் வெஸ்லிக்கும் சுவிஷேசத்தை அறிவித்தது. இவ் இயக்க மிஷனரிகளின் வாழ்வும், விசுவாசமும் தொலைந்து போனவர்களைக் குறித்த பாரமும், அர்ப்பணமும் வியக்கத்தக்கது. அந்த விதமான மிஷனரி ஊழியங்களைக் குறித்தான, புத்தகங்களை நாம் வாசிக்க வேண்டும். பிறரையும் ஊக்குவிக்க வேண்டும். எமது சபை, எமது பிரதேசம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வந்து தூரத்திலிருக்கும் தொலைந்துபோன மக்களைக் குறித்து பாராப்படுவோமா? 


தங்களைத் தாங்களே அடிமைகளாக ஒப்புவித்த இந்த வாலிபரின் அர்ப்பணம் நம்மை அசைக்கவில்லையா! இதனை வாசிக்கும் சகோதர சகோதரிகளே, இன்றைய தியானவேளை, நீயே உன் வாழ்க்கையை கர்த்தருக்குக் கொடுக்கும் தருமணமாக இருக்கட்டும். தேவனை அறியாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கும் மக்களுக்கு கிறிஸ்துவை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவிணன்டையில் கொண்டுவர உன்னை ஒப்புக்கொடுப்பாயா? கர்த்தர்தாமே உன்னை ஆசீர்வதிப்பாராக!

நான் யாருக்கும் அடிமையாய் இல்லாதிருந்தும் பலரைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர என்னை எல்லாருக்கும் அடிமையாக்கிக் கொண்டேன்.  (1கொரிந்தியர் 9:19) (திருவிவிலியம்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment