- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 7 April 2013

உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு (மத். 5:29-30)




இயேசு கிறிஸ்துவின் கூற்றுக்களில் கடுமையான உபதேசமாகவும் அதேசமயம் அர்த்தமற்ற அறிவுரையாகவும் இன்று அநேகரால் கருத்தப்படுவது இடறல் உண்டாக்கும் அவயவங்களைச் சரீரத்திலிருந்து அகற்றும்படி அவர் கூறிய ஆலோசனையாகும்.  மத்தேயு 5:29-30 ல் “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.“ என்று இயேசு குறிப்பிட்டுள்ளார். இன்று அநேகர் இயேசுவின் இந்த வார்த்தைகளை சொல்லர்த்தமாக விளக்குவதாலேயே இவற்றைக் கடுமையாகவும் அறிவீனமானவையாகவும் கருதப்படுவதற்கு காரணமாயிருக்கின்றது.  எனவே, இயேசுவின் இக்கூற்று சொல்லர்த்தமாக சொல்லப்படவில்லை என்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். “இது சொல்லர்த்தமான சரீர சிகிச்சை அல்ல, மாறாக, ஆவிக்குரிய சிகிச்சை முறையாகும். (1)

இயேசுவின் இக்கூற்றை சரீரப்பிரகாரமாக விளங்கிக் கொண்டு சில கிறிஸ்தவர்கள் தம் சரீர அவயவங்களைக் காயப்படுத்தியுள்ளனர்.(2) உண்மையில், இயேசு சொல்லர்த்தமாக அல்ல. மாறாக, நம் சரீரத்தில் நமக்கு இடறல் உண்டாக்கும் அவயவத்துடன் நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றே அறிவுறுத்தியுள்ளார். அதாவது சரீரத்தின் ஒரு அவயவம் பாவமான காரியத்தைச் செய்ய விரும்பும்போது, அதன் விருப்பதற்திற்கும் தூண்டுதலுக்கும் இணைங்காது அவ்விருப்பத்திற்கு எதிராகச் செயற்படும்படி இயேசு கூறியுள்ளார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது அவளோடு விபசாரம் செய்வது எனக் கூறியபோதே இயேசு பார்ப்பது அவளோடு விபசாரம் செய்வது எனக் கூறியபோதே இயேசு இடறலுண்டாக்கும் கண்ணையும் கையையும் தறித்துப் தறித்துப் போடும்படி கூறினார். (மத். 5:29-30) எனவே, கண்ணாவது இச்சையோடு பார்ப்பதை விரும்பினால் அதன் விருப்பத்திற்கு இடம் கொடுக்காதிருக்க வேண்டும்.(3) என்பதே இயேசுவின் போதனையாகும். கண்ணின் மீது பரிதாப்பட்டு அதன் விருப்பப்படி செயல்பட இடங்கொடாமல் அதனோடு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். “பாவம் செய்யும் அவயவத்தைச் சரீரத்திலிருந்து அகற்றுவதைப் பற்றியல்ல மாறாக, அவ்வவயவம் செய்யும் செய்யும் பாவத்தைச் செய்யாதிருக்கும்படியே இயேசு அறிவுறுத்தியுள்ளார்(4) அதாவது “கண் இடறலுண்டாக்கினால், கண்ணை இழந்தவன் போல, அதாவது இச்சையைத் தூண்டும் காட்சியைப் பாரக்காதவனாக இருக்க வேண்டும்.(5) 

இச்சையான பார்வையின் மூலம் உருவாக்கும் பாலியல் பாவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது இடறல் உண்டாக்கும் கண்ணைப் பற்றி மட்டுமல்ல இடறல் உண்டாக்கும் கையைப் பற்றியும் இயேசு குறிப்பிட்டுள்ளார். கைக்கும் விபசாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது எனும் கேள்விக்கு சில வேத ஆராய்சியாளர்கள் “கை“ எனும் பதமானது இங்கு ஆணின் பாலுறப்பைக் குறிக்கும் இன்சொல்லணியாக(6) இருப்பதாக விளக்கியுள்ளனர்(7)எனினும் இச்சையான பார்வை இருதயத்தில் விபசாரத்தை நடப்பிப்பது மட்டுமல்ல இச்சையை ஏற்படுத்திய பெண்ணோடு தவறாக நடந்து கொள்ள்ளவும் தூண்டும் என்பதனால் அதற்’கு உதவிடும் அவயவமான கையைப் பற்றியும் இயேசு குறிப்பிட்டுள்ளார். அதாவது அப்பெண்ணைத் தொடுவதற்கு கையே உபயோகிக்கப்படுவதனாலயே இயேசு கையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கண்ணையும் கையையும் பற்றி கூறும்போது இயேசு “வலது“ கண் “வலது“ கை எனக் குறிப்பிட்டுள்ளதற்குக் காரணம் யூதர்களுடைய மொழிவழக்கில் வலது முக்கியமானதையும் பெறுமதியானதையும் குறிக்கும் விபரணமாக இருந்தமையேயாகும்(8) பாவத்தைத் தூண்டும் அவயவம் நமக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் அதனோடு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இயேசு சுட்டிக் காட்டியுள்ளார். 

இயேசுவின் இவ்வார்த்தைகள் மத். 18:8-9லும், மாற்கு 9:43-47 லும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், மத்தேயு 5ம் அதிகாரத்தில் ஒருவனுக்கு அவனுடைய சரீர அவயவம் ஏற்படுத்தும் இடறலைப் பற்றி கூறுகையில், ஏனைய இரு பகுதிகளிலும் மற்றவருக்கு ஏற்படுத்தப்படும் இடறலைப் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் இக்கூற்று இடம்பெறும் வசனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்களை வாசிக்கும்போது அதை அறிந்திடலாம் (மத். 18:6-10, மாற். 9:42-47) எனவே நாம் நமக்கு இடறல் ஏற்படுத்தும் அவயவத்துடன் மட்டுமல்ல மற்றவர்களுக்கு இடறலை ஏற்படுத்தும் நம் சரீர அவயவங்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறோம். (9) மேலும் மத்தேயு 5ம் அதிகாரத்தில் 'இடறல்' பாலியல் பாவத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்தேயு 18லும் மாற்கு 9லும் இயேசுவின் கூற்று இடறலைப் பற்றிய பொதுவான போதனையாயுள்ளது. “இயேசுவின் கூற்றானது ஒன்றில் சுவிஷேச நூலாசிரியர்களினால் வித்தியாசமான சந்தர்ப்பங்களுக்கான பிரயோகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது இயேசுவே வித்தியாசமான சந்தர்ப்பங்களில் பிரயோகிக்கக் கூடிய விதமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு கூறியிருக்கலாம்.(10) என தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுவின் கூற்றானது நமது வாழ்விலும் இடறலை ஏற்படுத்தும் நமது சரீர அவயவங்களின் எந்தவொரு செயலையம் குறித்து நாம் கவனமாயிருக்க வேண்டும் என்பதையும் அவற்றுக்கெதிராக நாம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறியத்தருகின்றது. 


குறிப்புகள்
(1) Walter W. Wessel, The Expositor’s Bible Commentary: Mark. P708

(2) ஆதிசபை பிதாக்களில் ஒவருவரான ஒரிகன் (185-254) என்பார் இயேசுவின் இவ்வார்த்தைகளை சொல்லர்த்தமாக விளக்கியதோடு தன் சரீரத்தை வெகுவாய் துன்புறுத்தியுள்ளார. (John D. Woodbridge, Great Leaders of the Christian Church. Chicago: Moody Press, 1988, p.56) இதனால் கி.பி. 325ல் நைசீயா எனும் இடத்தில் கூடிய கிறிஸ்தவத்  திருச்சபையின் ஆலோசனைச் சங்க்க் கூட்டம் இத்தகைய சரீர வேதனைகள் தவறானவை என்பதை அறிவித்த்து. 

(3) பாலியல் பாவங்களைப் பொறுத்தவரையில் கண்களே ஒருவனைத் தவறான வழியில் இட்டு செல்வதை வேதம் பலதடவைகள் சுட்டிக் காட்டியுள்ளது. (எண். 15:39, நீதி. 21:4, எசே. 6:9இ 18:12இ 20:8, பிர. 11:9) 

(4) Walter W. Wessel, The Expositor’s Bible Commentary: Mark. P 708

(5) John R.W. Stott, The Message of the Sermon on the Mount. P. 89

(6) பாலியல் சம்பந்தமன விடயங்களை நேரடியாக்க் கூறுவதற்கு முடியாதிருப்பதனால் அவற்றை வேறு வார்த்தைகளில் குறிப்பிடுவதற்கு உபயோகிக்கப்படும் உருவகமே இச்சொல்லணியாகும். 

(7) S.T. Lachs ‘Some Textual Observations on the Sermon on the mount p. 89

(8)

(9)  சில வேத ஆராய்ச்சியாளர்கள் இயேசு 1 கொரிந்தியர் 12:12-2 இல் உள்ளது போல சபை அங்கத்தினர்களையே அவயவம் எனக் குறிப்பிட்டுள்ளதாக கருதுகின்றனர். இதன்படி இடறல் உண்டாக்கும் அவயவத்தைத் தறித்துப் போடுவதானது ஒழுக்க நடவடிக்கைக்காகப் பாவம் சயெயும் விசுவாசியைச் சபையிலிருந்து வெளியில் போடுவதைப் பற்றியதாக்க் கருதப்படுகின்றது. எனினும், பவுலைப் போ சரீரம் எனும் வார்த்தையை இயேசு இங்கு சபையைக் குறிக்கும் உருவகமாக்க் குறிப்பிடவில்லை. அவர் ஒரு மனிதனுடைய சொந்தச் சரீரத்தைப் பற்றியே விளக்கியுள்ளார். (D.A. Carson, The Exposilors Bible Commentary: Matthew, p. 399)

(10) Donald A. Hagner, World Bibleical Commentary, Mathew, p.119 

நன்றி - சத்தியவசனம் சஞ்சிகை
கட்டுரையாசிரியர் : Dr. M.S. வசந்தகுமார். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment