- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 23 March 2011

கிறிஸ்துவிற்கு தேவன் தலைவராயிருக்கிறார் (I கொரி. 11:3)


நூல்: யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி

(வேதப்புரட்டர்கள் பிதாவை விட இயேசு தாழ்வானவர் என்பதை நிரூபிப்பதற்காக உபயோகிக்கும் வசனங்களில் ஒன்று I கொரி. 11:3 ஆகும். கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால் தங்களின் போதனைக்கு ஏற்ற விதமாக துர்உபதேசங்களை பரப்பி வருகின்றனர். அப். பவுல் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆசிரியர் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்)

இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல மாறாக அவர் மகிமையடைந்து பரலோகத்திற்கு சென்ற பின்பும் தேவனைவிடத் தாழ்வானவராகவே இருக்கிறார் என்பதே யெகோவா சாட்சிகளின் போதனையாகும். இதை நிரூபிப்பதற்காக இவர்கள் சுட்டிக் காட்டும் வேதவசனம் I கொரி. 11:3 ஆகும் கொரிந்து நிருபம் இயேசுக்கிறிஸ்து பரலோகத்திற்குச் சென்ற பின்னர் எழுதப்பட்டுள்ளமையால், இந்நிருபத்தில் இயேசுகிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அவர் மகிமையடைந்த நிலையிலும் தேவனைவிட தாழ்வானவராக இருப்பதற்கான ஆதாரமாய் இருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் கூறுகின்றனர்(49). “ இயேசுக்கிறிஸ்து எப்போதும் தாழ்வானவராகவே இருப்பதாகவே வேதம் கூறுகிறது.(50) என்பதே இவர்களது கருத்தாகும். எனினும் நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து அவர் பிதாவின் வலது பரிசத்தில் வீற்றிருப்பதாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர் தேவனுக்கு சமமானவராகவே இருக்கிறார் என்பதை மறுக்க முடியாதுள்ளது.
I கொரி. 11:3 இயேசுக்கிறிஸ்து தேவனைவிட தாழ்வானவர் என்று கூறவில்லை. இவ்வசனத்தில் “கிறிஸ்துவுக்குத் தேவன் தலைவராயிருக்கிறார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும். இது தேவனுக்கும் இயேசுக்கிறிஸ்துவிற்கும் இடையிலான உயர்வுதாழ்வு பற்றிய விபரணம் அல்ல. ஏனென்றால் இவ்வசனம் இடம்பெறும் பகுதியில் தேவனினதும் இயேசுக்கிறிஸ்துவினதும் செயற்பாடுகள் பற்றியல்ல. மாறாக சபையில் ஆணும் பெண்ணும் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றியே விளக்கப்பட்டுள்ளது. இதனால் “இயேசுக்கிறிஸ்துவையும் தேவனையும் பற்றிய குறிப்பு இதற்கான உதாரணமாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. (52) 3ம் வசனத்தில் “தலை“ என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் (kephale) (53) உருவக விபரணமாய் இருக்கும்போது “அதிகாரம்“ அல்லது “ஆரம்பம்“  எனும் இரு அர்த்தங்களைத் தரும்.  எனவே தலையாயிருப்பவர் அதிகாரமுடையவராக அல்லது மற்றவரது ஆரம்பமாக இருப்பதாக இவ்வசனம் கூறுகிறது. (55) எனினும் இவ்வசனம் இடம் பெறும் பகுதியில் வழிபாட்டின் போது ஆணும் பெண்ணும் செயற்பட வேண்டிய விதம் பற்றியே விளக்கப்பட்டுள்ளமையால் அதிகாரம் எனும் அர்த்தமே பொருத்தமுடையதாக உள்ளது(56) உண்மையில். இயேசுக்கிறிஸ்து தேவனின் அதிகாரத்துக்குக் கீழாக செயற்படுவது போல சபையில் பெண்கள் ஆணினுடைய தலைமைத்துவத்திற்கு கீழாகச் செயற்பட வேண்டும் என்பதையே இப்பகுதியில் அப்..பவுல் விளக்கியுள்ளார்.
சபையில் ஆணினுடைய தலைமையின் கீழாகச் செயற்படும் பெண் ஆணைவிடத் தாழ்வானவள் என்று வேதம் கூறவில்லை. ஆணும் பெண்ணும் சம்மானவர்கள் என்பது வேத்த்தின் தெளிவான போதனையாகும். ஆண், பெண் இருவருமே தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதோடு (ஆதி. 1:26-28) கிறிஸ்துவுக்குள் இருவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (கலா. 3:28) எனவே, பெண் பெண்ணுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் அவள் ஆணுக்குச் சம்மானவளகவே இருக்கிறாள். அதேபோலவே. இயேசுக்கிறிஸ்து தேவனுக்குக் கீழாக இருந்து செயற்பட்டாலும் தேவனுக்குச் சம்மானவராகவே இருக்கிறார். “இயேசுக்கிறிஸ்து தேவன் தலையாயிருப்பது அவரது தேவத்துவத்திலும் தேவதன்மையிலும் அல்ல. மாறாக அவரது செயல்களினாலாகும். (57). இது செயற்பாட்டு ரீதியிலான தலைமையே தவிர மேன்மையான தன்மை அல்ல“(58). நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் இருந்த காலத்திலும் அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்களாகவே இருந்தனர். அப்படியிருந்தும் இயேசுக்கிறிஸ்து தம்மை பிதாவிற்குக் கீழ்படுத்திச் செயற்பட்டார். இதனடிப்படையிலேயெ இயேசுக்கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். இது தேவனை விடத் தாழ்வானவர் என்பதற்கான ஆதாரம் அல்ல.

Footnote & Reference
(49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140
(50) Anonymous, Should You Believe in the Trinity? p. 20
(51) என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் (யோவான் 14:28) எனும் கட்டுரையை பார்க்கவும்
(52) ,இதனாலேயே 3ம் வசனத்தின் இறுதிப்பகுதியில் தேவனையும் இயேசுக்கிறிஸ்துவையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (C.Blomberg 1 Corinthians: The NIV Application Commentary p 209)
(53) கெஃபாலே (keohale) எனும் கிரேக்க பதமாகும்.
(54) J. Fitzmyer, ‘Another Look at ;Kephale in 1 Corinthians: 11:3 pp503-511)
(55) இவ்வசனம் சபையில் பெண்களின் நிலை மற்றும் அவர்களது ஊழியப்பணிகள் பற்றி நிர்ணயிக்கும் வசனங்களில் ஒன்றாக இருப்பதனால், வேத ஆராய்ச்சியாளர்கள் தலை என்ற பதத்தை அப்.பவுல் என்ன அர்த்தத்தில் உபயோகித்துள்ளார் என்பது பற்றி கருத்து முரண்பாடுடையவர்களாய் இருக்கின்றனர்.பெண்கள் சபையின் ஊழியப் பணிகளில் ஈடுபடலாம். அவர்களும் சபையின் தலைமைத்துவ பதவிகளில் எனும் கருத்துடைய தேவஆராய்ச்சியாளர்கள் இவ்வசனத்தில் தலை எனும் பதம் அதிகாரம் எனும் அர்த்த்த்தில் அல்ல. மாறாக ஆரம்பம் எனும் அர்த்தத்திலேயே உள்ளது என்று கூறுகின்றனர். இவர்களது கருத்தின்படி பெண்ணுக்கு ஆண் தலையாயிருக்கிறான் எனும்போது  பெண்ணுக்கு ஆண் ஆரம்பமாயிருக்கிறான். அதாவது ஆணிலிருந்து பெண் உருவாக்கப்பட்டுள்ளாள் என்றே அப்.பவுல் குறிப்பிட்டுள்ளார். (S.Bedale, The Meaning of ‘Kephale’ in the Pauline Epistles’ pp 211-215; G.D. Fee, The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament pp 501-505) ஆனால் இவ்வாதத்தின்படி கிறிஸ்துவுக்கு தேவன் தலைவராயிருக்கிறார் என்று கூறும்போது “இயேசுக்கிறிஸ்து தேவனிலிருந்து வந்தவர். அவர் தேவனால் உருவாக்கப்பட்டவர். எனும பிழையான அர்த்தத்தையே கொடுக்கும் இதனால் இவ்வசனத்தில் தலை என்பதை ஆரம்பம் என்று கருதுபவர்கள் இயேசுக்க்கிறிஸ்துவின் மானிடப்பிறப்பை பற்றிய விபரமாக இதை விளக்குகின்றனர் (Ibid, p.505) ஆனால் இவ்வசனம் இடம்பெறும் பகுதி சபையின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆணினதும் பெண்ணினதும் நிலைமை பற்றிய விபரணமாருப்பதால் அதாவது சபையின் செயறபாடு ஆண் பெண்ணுக்கு மேலானவனாக இருப்பது பற்றிய விளக்கமாயிருப்பதால் இவ்வசனத்தில் தலை என்பது அதிகாரம் என்னும் அர்த்தத்திலேயே  உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. (C, Blomberg, I Corinthians : The NIV Application Commentary pp 208-209)

(56) சபை வாழ்வில் ஆணிணுடைய தலைமைத்துவத்தின் கீழ் பெண் இருப்பதனால் அதை வெளிப்படையாக் காட்டும் அடையாளமாகப் பெண்கள் தங்கள் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். என்று இப்பகுதியில் விளக்கியுள்ளார். (1 கொரி. 11:3-15) எனினும் இவ்வடைளம் கொரிந்து பிரதேசக் கலாசாரத்தில் உயர்ந்தவருக்கு முன்பாகத் தாழ்ந்தவர் இருப்பதைக் காட்டுவதாக இருந்துபோல் ஏனைய பிரதேசங்களில் இராதமையால் சகல பிரதேசங்களிலும் சபைகளில் கைக்கொள்ள வேண்டிய முறை இதுவல்ல என்பதையும் 16ம் வசனத்தில் பவுல் சுட்டிக் காட்டியுள்ளார்.

(57) G.B. Wilson I Corinthians : A Digest of Reformed Comment , p.115
(58) R.M. Bowman, Why You Should Believe in the Trinity, p81

 
Footnote & Reference குறித்த எனது சுருக்க விளக்கங்கள்
இக்கட்டுரையில் இலக்கமிடப்பட்டு உ-ம் (49) R. Rhodes, Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, p.140 என இருப்பவை Citation ஆகும்
ஆய்வுக்கட்Lரைகள் Citation உடன் எழுதப்படுவது வழமையாகும். குறிப்பிட்ட துறையில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்களை மீண்டுமாக ஆய்வுக்கு உட்படுத்தாமல் அதனை மேற்கோளாக பயன்படுத்த இம்முறை உபயோகிக்கப்படுகிறது. அதிக Citation உடன் எழுதப்படுபவை அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக விளங்கும். ஒரு ஆசிரியர் தான் அக்கருத்தை எங்கிருந்து பெற்றார் என துல்லியமாக இவ்வண்ணக்கரு சுட்டிக்காட்டும். ஆனால் Reference பாவித்த முழு நூல்களையும குறிப்பிடுவதால் குறிப்பாக எந்நூலிலிருந்து இக்கருத்தினை பெற்றார் என்பதை துல்லியமாக காட்டுவதில்லை. ஆகவே மேற்குறிப்பிட்டபடி (49) கருத்தை நிருபிக்க R. Rhodes ஆசிரியர் எழுதிய Reasoning from the Scriptures with Jehovah’s Witnesses, நூலில் பக்கம் 140 இலிருந்து அக்கருத்து பெறப்பட்டுள்ளது.
Ibid , - used in formal writing to refer to a book or article that has already been mentioned
ஒரு நூலை மேற்கோளாக காட்டியபின் அதை தொடர்ந்து இன்னுமொரு முறை அதே நூல் மேற்கோள் காட்ட வேண்டிஏற்படின் அதன்போது இம்முறை உபயோகிக்கப்படுகிறது. இதன்போது முழு விபரத்தையும் கொடுக்காமல் Ibid என இட்டு பக்க இலக்கம் மட்டும் குறிப்பிடப்படும்.
Ibid, p.505 என குறிப்பிடப்படுவது The First Epistle to the Corinthians: New International Commentary on the New Testament என்ற நுலின் 505 ஆம் பக்கத்தையாகும்.
Anonymous, ஆசிரியரின் பெயர் இன்னதென்று குறிப்பிடப்பிடாதுவிட்டால் ஆசிரியர் பெயருக்குரிய இடத்தில் Anonymous என இடப்படும். யெகோவா சாட்சிகளின் எந்த வெளியீடுகளிலும் ஆசியர்களின் பெயர்கள் இடம்பெறுவதில்லை (1942 இலிருந்து Nathan Homer Knoor காலத்திலிருந்து) 
Footnote 55
கட்டுரைக்கு மேலதிகமாக எழுதப்படும் விளக்கங்களாகும். இது அக்கட்டுரையை மேலுமாக ஆய்வு செய்வதற்காகவோ அன்றேல் மாற்றுக்கருத்தை சொல்லுவதற்காகவோ உபயோகிக்கப்படலாம். அநேகமாக ஆய்வு செய்வற்குரிய குறிப்புகள் இப்பகுதியில் வழங்கப்படும். ஆய்வு செய்து படிக்கும் வாசகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment