- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday 2 November 2010

பரியாசம்

சில இளம் பெண்கள் நன்றாகக் குடித்துவிட்டு தங்கள் தோழி ஒருத்தியை அழைத்துச்செல்ல அவள் இல்லத்திற்கு ஒரு காரில் சென்றனர். இந்தப்பெண்ணின் தாய் தன் மகளுடன் கார் வரை வந்தார். அவர்கள் எல்லோருமே மிகவும் குடித்து போதையில் இருப்பதைக்கண்டு மிகவும் வருந்தினார்கள். ஆனால், மகளோ தன் தோழிகளுடன் காரில் செல்லவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். அப்போது பக்தியுள்ள அந்தத்தாய் தன் மகளைப் பார்த்து ""அன்பு மகளே தேவனோடுகூட செல், அவர் உன்னைப் பாதுகாப்பார்" என்றார். ஆனால் துன்மார்க்கம் நிறைந்த அந்த இளம் பெண்ணோ தாயையும், தேவனையும் பரியாசம் செய்து ""காரில் இடமே இல்லை, வேண்டுமானால் கடவுள் காரின் பின்பகுதியில் சாமான்கள் வைக்கும் டிக்கியில் அமர்ந்து கொண்டு வரட்டும்"" என்று கேலியாக பேசினாள். பின்பு அந்தக்காரை ஓட்டிக்கொண்டு அவளுடைய குடிகாரத்தோழிகள் வேகமாக சென்றுவிட்டனர். 


சில மணி நேரத்திற்குப்பிறகு செய்தி வந்தது. அந்தப் பெண்கள் சென்ற கார் கொடிய விபத்தில் சிக்கி நொறுங்கிபோய்விட்டது. அதில் பயணம் செய்த அனைவரும் மரித்துவிட்டனர். அந்த கார் என்ன வகையான கார் என்பதைக்கூட கண்டுக்கொள்ள முடியாதபடி முற்றிலும் சிதைந்துவிட்டது. ஆனால், ஆச்சரியபடத்தக்க வகையில் காரின் டிக்கிப் பகுதிமட்டும் எந்த சேதமும் இல்லாமல் நன்றாக இருந்தது! விபத்தை புலன் விசாரணை செய்த போலீசார் அப்பளமாக நொறுங்கிப்போன காரின் டிக்கிப்பகுதி மட்டும் எந்தவிதமான சேதமும் இன்றி இருந்ததைக் குறித்து மிகவும் வியப்புற்றனர். அது அவர்களுக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த டிக்கியில் ஒரு கூடைக்குள் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் கூட உடையாமல் எந்த பாதிப்பும் இன்றி அப்படியே இருந்தன!வாலிபபிள்ளைகளே, நம்முடைய வார்த்தைகளில் நாம் கவனமாயிருக்கவேண்டும். இதைத்தான் வசனமும் சொல்கிறது

"மோசம் போகாதிருங்கள்; தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. இந்த கட்டுரையின் எழுத்தாளர் கோல்வின் அவர்களா என்று அறியவிரும்புகிறேன்;மிகவும் அருமையான எளிமையான நடையும் செய்தியும்...நன்றி.!

    ReplyDelete
  2. இல்லை சகோதரரே. இதனை ஜெபம் இணையத் தளத்திலிருந்து எடுத்தேன். அதனை குறிப்பிட மறந்து விட்டேன்

    ReplyDelete