- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 6 February 2013

பாலியல் விடயங்களில் மக்களுக்கு உதவுதல்



… பிறருக்கு குறிப்பாக எதிர்பாலாருக்கு உதவுவது … சில சமயங்களில் தாம் உதவி செய்பவர்களுடனேயே உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் முடிந்து விடுகின்றது. 

சபையிலே திருமணத்திற்கப்பால் உறவுகள் ஏற்படும் உறவுகள் ஏற்படுகின்றதை நாம் காணலாம். இதற்கு பல பொதுவான சூழ்நிலைகள் காரணமாகின்றது. அவற்றில் ஆலோசகர் தான் ஆலோசனை கொடுத்தவருடன் தவறான உறவை ஏற்படுத்துவது ஒரு பொதுவான விடயமாகும். இது இன்றைய நாட்களில் காணப்படும் பொதுவானதொரு பிரச்சனைக்கான உதாரணம் ஆகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனிதர்கள் குறிப்பாக எதிர்பாலருக்கு ஆலோசனை வழங்கல் மூலமாக உதவி செய்பவர்கள், சிலவேளைகளில் தாம் உதவி செய்பவர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆலோசனை பெற்றுக் கொள்ளலில் எமது உணர்வுகளை ஆழமாகப் பாதித்த காரியங்களை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளடங்கும். எனவே, நீங்கள் யாருடன் பகிர்ந்து கொள்கின்றீர்களோ அவருடன் ஓர் உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்படுவது சாத்தியமாகும். முக்கியமாக ஆலோசனை வழங்குபவரும் இப்படியான உணர்வு ரீதியான பிணைப்பை உற்சாகப்படுத்துகின்றார் என்பதை நீங்கள் உணர்வீர்களாயின் அது நிச்சியம் நடக்கும். எனவேதான் ஆலோசனை வழங்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையான வழிகாட்டல் அறிவுறுத்தல்களை எமது பணியில் கடைபிடிக்க வேண்டும்

என்னுடைய கொள்கை என்னவெனில், ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் எந்தவொரு பெண்ணுக்கும் தனிமையாக இருந்து ஆலோசனை வழங்கக்கூடாது என்பதாகும். அதற்குப் பிற்பாடு அவளை வேறொரு பெண்ணிடம் பொறுப்பாக கொடுத்துவிட வேண்டும். அல்லது, அவளை சந்திப்பதானால் அவளது கணவனுடன் அல்லது எனது மனைவியுடன் அல்லது வேறொரு நபருடன் அவளைச் சந்திப்பேன். ஆலோசனை வழங்குதலைத் தொழிலாக்க் கொண்டவர்களுக்கு இந்த நியமனத்தைக் கடைபிடிப்பது இயலாத காரியம் என அறிவேன். ஆனால், நான் சொன்ன பிரகாரம் ஆலோசனை வழங்கலைத் தொழிலாகக் கொண்டவர்கள் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கடுமையான வழிகாட்டுதலைக் கொண்டிருப்பது அவசியமாகும். 



இலங்கை கிறிஸ்துவுக்காக இளைஞர் பணியில் மேற்பார்வை செய்யும் பணி பல சந்தர்ப்பங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்கள் பெண்களையோ அல்லது பெண்கள் ஆண்களையோ வழிநடத்துவதையோ நாம் உற்சாகப்படுத்துவதில்லை. இதனைக் குறித்ததான விதிமுறைகள் ஒவ்வொரு கலாசாரத்தின் அடிப்படையில் வித்தியாசப்படலாம். ஆனால் குறிப்பிட்ட குழுவிலுள்ள வழக்கங்கள் எப்படியானவையாக இருப்பினும் வரையறைகள் மீறப்படாமல் காக்கப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே நான் சொல்லக் கூடிய விடயமாகும். நீங்கள் எதிர்பாலாரைச் சேர்ந்த ஒருவருக்கு உதவி செய்யும்போது ஒரு தனிப்பட்ட உணர்வு பூர்வமான விடயம் ஏதாவது வெளிப்படுமாயின், அந்தப் பிரச்சினையை, மிக நெருக்கமாகவும் சுயாதீனமாகவும் கையாளக்கூடிய அதே பாலார் ஒருவரிடம் பொறுப்புக் கொடுத்துவிடுவது சிறந்தது. 

அநேகமான நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உணராத போதும், மற்றவர்களால் வரையறைகள் மீறப்படுவதை அவதானிக்க முடியும். இந்த உறவு அதிக தூரம் சென்ற பின்னும் அந்த அழகு இன்னும் இருப்பதாக நமது மனது நம்பவைக்கும். ஆனால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் விதத்தை வைத்து சாதாரண நட்பைவிட அதிகப்பட்டியானதொன்று உருவாக்கியுள்ளது என்பதனை மற்றவர்களால் ஊகிக்கக்கூடும். நானும் எனது மனைவியும் ஒரு நண்பனைச் சந்திக்கச் சென்ற வேளையில் எமக்கு இப்படியானதொன்று நடந்தது. அந்தப் பெண்ணும் அவளுடன் தொழில் புரியும் இன்னொருவரும் ஒருவரையொருவர் பார்த்த விதத்தில் அவர்களிடையே காதல் தொடர்பான உறவு உருவாகின்றது என்று நாம் பயந்தோம். ஆனாலும் அதனைக் குறித்து அவளுடன் கதைக்க எமக்குத் தைரியம் இருக்கவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் இந்தப் பெண் அந்த மனிதனுடன் மிகவும் நெருக்கமானதால் அவளது வாழிடத்தை விடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அறிந்து கொண்டோம். 

ஏதாவது பிழையான காரியம் உருவாவதை நாம் கவனித்தால் நாம் அதனைக் குறித்து அவர்களை எச்சரிக்க வேண்டும். அவர்களுக்கு இதனைச் சொல்லும்போது அவர்கள் மற்றவர்களது எச்சரிப்பான அறிவுரைகளை ஆழமாக கருத்திற் கொள்ள வேண்டும்.  அநேகமான நேரங்களில் நடப்பது என்னவென்றால் அவர்கள் மனமுடைந்து பிழையானது எதுவும் நடைபெறவில்லையென மறுப்பார்கள். அவர்களை எச்சரித்தவரை குறுகிய மனப்பாங்குடையவர், நம்பிக்கையற்றவர் அல்லது மற்றவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுபவர் என அவர்கள் குற்றஞ்சாட்டக் கூடும். 

உங்களுக்கு உதவக்கூடிய இன்னுமொரு காரியம், எதிர்பாலைச் சேர்ந்த ஒருவருடன் நீங்கள் நீண்ட உரையாடல் ஒன்றில் ஈடுபடப்போகிறீர்களெனில் அவரை ஒரு திறந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்க்கூடிய விதத்தில் சந்தியுங்கள். எதிர்பாலைரைச் சந்திக்கும் ஒவ்வொருவருடைய அறைக்கும் கண்ணாடியிலான கதவை நான் பரிந்துரைக்கிறேன். அநேக கிறிஸ்தவர்கள் இந்தப் பரிந்துரையைப் பின்பற்றுவதில்லை என்பதனை நான் அறிவேன். அவர்கள் நெருப்புடன் விளையாடுகின்றார்கள் என்பதையே அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இவ்விடயத்தைப் பொறுத்தவரை கவலைப்படுவதை விட கவனமாயிருப்பது நலமானது. 

சிலவேளைகளில், எதிர்பாலாரைச் சேர்ந்த ஒருவருக்கு அதிகமாக உதவி செய்ய சிலர் எத்தனிப்பதுண்டு. இதற்கு, தன்னால், பிறருடைய தேவைகளை முழுமையாகவே சந்திக்க முடியும் என்றதான ஒரு ஆரோக்கியமற்ற சிக்கலான மனப்பான்மை இவரிடம் காணப்படுவதே காரணமாகும். இதனை “மேசியா மனப்பான்மை“ என்று சொல்லலாம்.

கிறிஸ்துவின் சபையில் அநேகர் இருக்கின்றனர். நாம் எதிர்கொள்ளும் அவர்களுடைய சகல தேவைகளையும் நாமே சந்திக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தலைவருக்குரிய பிரதான பணிகளிலொன்று தமது தலைமைத்துவத்துவத்தின் கீழ் இருப்பவர்களுக்கென தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகும். அத் தலைவர் தான் எதிர்கொள்ளும் சகல தேவைகளையும் சந்திக்க முடியாது என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். எனவே, தேவை உள்ளவரை அவரது தேவையைச் சந்திக்க கூடியவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். 

ஒரு நல்ல பெண் சிநேகிதிக்கு உத்தியோக பூர்வமற்ற ஒரு கடிதம் நான் எழுதினால் அதனை வழக்கமாக மனைவிக்கு காண்பிப்பதுண்டு. திருமணமாகாதவர்கள் இந்த செய்முறையைப் பின்பற்ற முடியாது. ஆனாலும் அவர்கள் இந்தச் செயல்முறையில் காணப்படும் சிந்தனையைக் கடைபிடிப்பதில் கவனமாயிருக்க வேண்டும். 

நாம் கையடக்கத் தொலைபேசியின் மூலம் எமது துணை அல்லது வருங்காலத் துணை அல்லாத எதிர்பாலாருக்கு அன்பார்ந்த அல்லது தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்புவதைக் குறித்தும் கவனமாயிருக்க வேண்டும். கையடக்கத் தொலைபேசியினூடாக அனுப்ப்படும் குறுஞ்செய்திகளைப் பொறுத்தவரையில் சிலவேளைகளில் நாம் தவறுதலாக பிழையான நபருக்கு செய்தி அனுப்பிவிடுவோம். எனக்கு இப்படி நடந்துள்ளது. ஏனெனில் நான் வெளிநாட்டிலிருந்து எனது மனைவிக்கு அனுப்பி அன்புக் குறிப்புகள் வேறு இரண்டு பேருக்கு சேர்ந்துவிட்டது. அவர்களுக்கு அதை என்ன செய்வதென்று புரியாமல் போய்விட்டது. நான் அறிந்த கிறிஸ்தவ குழுவொன்றிலே தொழில்புரியும் திருமணமான ஒருவர் திருமணமாகாத சக ஊழியருக்கு அனுப்பிவைத்த மிகவும் தனிப்பட்ட குறுஞ்செய்தியை இன்னாரு ஊழியர் தவறுதலாக பெற்றுவிட்டார். இதன் காரணமாக ஒழுக்க விசாரணை வைக்க வேண்டியதாகிவிட்டது. 

விருந்தோம்பல் ஊழியம் வேதாகமத்தில் வெகுவாக உற்சாகப்படுத்தப்பட்டுள்ள ஒன்று. ஆனாலும் இதுவும் நம்மை ஆரோக்கியமற்ற உறவுகளுக்கு இட்டுச் செல்லாமல் இருப்பதைக் குறித்து அவதானமாயிருக்க வேண்டும். உதாரணமாக, தன்னுடைய துணை, கணவனோ, மனைவியோ, வீட்டில் இல்லாதிருக்கும்போது எதிர்பாலைச் சேர்ந்த ஒரு விருந்தாளியை அதிக காலத்திற்கு அந்த வீட்டில் வைத்திருப்பது விவேகமானதொரு காரியமல்ல. அவர்கள் வீட்டில் தனியாக இருக்க நேர்ந்தாலும் துணையில்லாத வேளையில் நீண்ட சம்பாஷணைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வீடுகளில் இது பெரியதொரு பிரச்சினையாகும். இலங்கையில் இது குறித்து கேள்விபட்டுள்ளேன். விருந்தாளியாக ஒருவர் வீட்டுக்கு வரும்போது இரவில் கணவன் மனைவியின் அறையில் அவர் உறங்குகிறார். சிலவேளைகளில் ஒரே கட்டிலில் உறங்குகின்ற சந்தர்ப்பங்களைக் குறித்தும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியான சந்தர்ப்பங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது. 


இவ்வாக்கமானது Dr. அஜித்குமார் (இயக்குநர், கிறிஸ்துவிற்காக இளைஞர்(இலங்கை) ஆங்கிலத்தில் எழுதிய  “உணர்வுபூர்வமான நடத்தை - முன்யோசனையின்றி ஏற்படக் கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி“ என்ற நூலிலிருந்து பெறப்பட்டதாகும்
மொழி மாற்றம் - கலாநிதி அன்பழகன்


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

2 comments:

  1. மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களின் இந்தப்பதிவு, நன்றி சகோ !

    கிறிஸ்துவில் அன்புடன்,
    ஜேசு ஜெயராஜ்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரே. எதிர்காலத்திலும் இத்தகைய பதிவுகளை தொடர்ந்தும் தர திட்டமிட்டிருக்கிறேன். குறைபாடுகள் இருந்தாலும் அறியத் தாருங்கள்.

      Delete