- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 5 August 2012

எரிந்து ஒளி கொடுத்தல்



டேவிட் பிரேனார்ட் 1781ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் திகதி அமெரிக்காவில் பிறந்தார். 9ம் வயதில் தகப்பனையும் 14ம் வயதில் தாயையும் இழந்தார். 21ம் வயதில் ஊழியத்தைச் செய்யும்டி அழைக்கப்பட்டார். காசநோயினால் பாதிக்கப்பட்ட பலவீனமான சரீரத்தை உடையவராக இருந்தபோதிலும், அவர் தேவனின் அழைப்பை ஏற்று, செவ்விந்தியர் மத்தியில் சென்று, சுவிசேஷத்தை அறிவித்தார். 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்த அவரது வாழவும் ஊழிமும், செவ்விந்தியர் அநேகர் கிறிஸ்துவை அறிய வழிவகுத்தது. 

அவர் தனது நாட்குறிப்பு புத்தகத்தில் (மே 1746) பின்வருமாறு எழுதியுள்ளார். “எவ்வித தயக்கமுமின்றி என்னை முழுவதுமாய் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். நான் ஆண்டவரிடம் கேட்பதெல்லாம், “தேவனே இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும், கரடுமுரடான காட்டுமிராண்டிகளிடம் போக ஆயத்தமாக இருக்கிறேன். உலகத்தின் சகல வசதிகளையும் விட்டுப்போகவும் - ஏன்! மரணத்தினூடேயும் செல்ல ஆயத்தம், உம்முடைய இராஜ்யத்தைக் கட்டுவதற்காக எங்கு வேண்டுமானாலும் போகச் சித்தமாக இருக்கிறேன்.” இவ்விதமாகக் கூறி என் நண்பர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். எனக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. என்னுடைய சிறு மந்தைக்காக ஆண்டவரிடம் போராடினேன். தேவனுக்கு எக்காலமும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி ஜூவாலையைப் போல என் சாவுவேளை வரையில் பிரகாசித்துக் கொண்டிருக்க வாஞ்சிக்கிறேன்” என்பதாகும். 

பலமுறை காசநோயினால் துடித்த அவரது பலவீனமான உடலையும் தேவன் உபயோகித்தார். உண்மையாகவே அவர் மரணபரிந்தியமும் எரிந்து பிரகாசித்தார் அவரது குறுகிய வாழ்வு அநேகருக்கு ஜீவ ஒளியை வெளிப்படுத்தியது. இவரது வாழ்க்கையே பின்னர் விவிலியம் கேரி, ஹென்றி மார்ட்டின் போன்றவர்களின் வாழ்க்கையில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களையும் மிஷனரி ஊழியத்திற்கு உந்தித் தள்ளியது. அன்றைய பவுலடியாரின் வழியினைப் பின்பற்றி எத்தனையோ அடியார்கள் எரிந்து பிரகாசித்தார்கள். 

இதை வாசிக்கும் அருமையானவர்களே, வியாதியின் வேளையிலும் தேவனுக்காக எரிந்து பிரகாசித்த டேவிட் பிரோர்ட்டின் வாழ்க்கை இன்று உங்களுக்கு ஒரு சவாலாக அமைகின்றதா? நீங்களும் அந்தவிதமான அர்ப்பணிப்பை இன்று செய்ய ஆயத்தமா? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காக எரிந்து பிரகாசித்து கொடுப்பீர்களா? 

ஜெபம்
கர்த்தாவே, என் வாழ்க்கையானது உமக்காக எரிந்து பிரகாசிக்கும் ஒரு விளக்கமாக மாற்றியருளும். ஆமென். 


தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment