- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 4 February 2015

வேதமும் விளக்கமும் ஆதி. 3:3 தோட்டத்தின் ..இருக்கும் விருட்சத்தின் கனியை உண்பதனால் ஏன் மனிதன் பாவத்திற்குள்ளாகின்றான்?

75.ஆதியாகமம் 3:3 இன்படி தோட்டத்தின் நடுவில் இருக்கும் விருட்சத்தின் கனியை உண்பதனால் ஏன் மனிதன் பாவத்திற்குள்ளாகின்றான்? (அன்டன் போல், யாழ்ப்பாணம், இலங்கை)
 
 
வெறுமனே கனியை சாப்பிட்டதினால்ல, தேவன் அக்கனியை சாப்பிட வேண்டாம் என்று சொல்லியிருந்தும் (ஆதி. 2:17) மனிதன் அவரது கட்டளையை மீறி அதன் கனியை சாப்பிட்டமையினாலேயே பாவியானான். இங்கு ’தேவனுடைய கட்டளையை மீறியமையே பாவம்அவர் செய்ய வேண்டாம் என்று சொன்னதைச் செய்ததே பாவம்.இம்மரத்தின் கனியை சாப்பிடுவதற்கு முன் மனிதன் பூரண பரிசுத்தவானாக நன்மையை மட்டும் அறிந்தவனாக இருந்தான். ஆனால் கனியைப் புசித்தபின் பரிசுத்த நிலையிலிருந்து விழுந்து பாவியானான். இப்போது அவன் தீமையை அறியக்கூடியவனானான். தேவனுடைய கட்டளையை மனிதன் மீறியமையினால் நன்மையான நிலையிலிருந்து தீமையான நிலைக்கு வந்தான். ஆரம்பத்தில் நன்மையை மட்டுமே அறிந்திருந்த மனிதன் இப்போது’ தீமையை அறிந்து கொண்டான். இதனாலேயே அம்மரத்திற்கு நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
ஆதியாகமம் 3:3 
3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.   
 
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.