இயேசுகிறிஸ்து லூக்கா 9ம் அதிகாரத்தில் தன் பன்னிரு சீடர்களையும் ஊழியத்திற்காக அனுப்பும்போது 5ம் வசனத்தில் “உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்று சொன்னமைக்கான காரணம் என்ன? (ஆர் டேவிட். கொழும்பு 10)
அக்கால யூதர்கள் புறஜாதி மக்களது பட்டணத்திற்கு சென்று வந்தால், அவர்கள் அப்பட்டணத்தை விட்டு வெளியேறும்போது தம் காலில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுவது வழமை. இச்செயல் அவர்கள் புறஜாதியாருடனான உறவை முறித்துக் கொணடு தமது ஊருக்கு வருவதற்கான அடையாளச் செயலாகக் கருதப்பட்டது. லூக்கா 9ஆம் அதிகாரத்திலுள்ள இதே சம்பவம் மத்தேயு 10ம் அதிகாரத்திலும் எழுதப்பட்டுள்ளது(5-6). மத்தேயு சுவிஷேசத்தின் மூலம், இயேசுகிறிஸ்து தன் சீடர்களை யூதர்களுடைய பட்டணங்களுக்கே அனுப்புகிறார் என்பதை அறிகின்றோம். அக்கால யூதர்கள் புறஜாதியினரை தேவனுடைய ராட்சியத்திற்குப் புறம்பானவர்களாகவே கருதினர். ஆனால் இயேசுகிறிஸ்து தன்னுடைய செய்தியை விசுவாசிக்காதவர்களையே தேவனுடைய ராட்சியத்திற்கு புறம்பானவர்களாக கருதினார். இதனால், தன் சீடர்களது செய்தியை விசுவாசிக்காமலும் அவர்களை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்கும் யூதர்களை அவர்கள் புறஜாதியாரை எவ்வாறு நடத்தினார்களோ அதேவிதமாக நடத்தும்படியே அறிவுறுத்துகின்றார்.யூதர்களுடைய பட்டணங்களை விட்டு வெளியேறும் சீடர்கள் தம் காலில் படிந்த தூசியை உதறும் செயலானது அப்பட்டணத்து யூதர்களும் புறஜாதியினரைப் போலவே தேவனுடைய ராட்சியத்திற்குப் புறம்பானவர்கள் என்பதை அறிவிக்கும் அடையாளச் செயலாக இருந்தது.
மத்தேயு 10:5-6
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மேலதிக விளங்கங்களுக்கு இந்த தொடுப்பினை பாருங்கள்
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment