லூக்கா 10ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்து 70 பேரை ஊழியத்திற்கு அனுப்பும்போது 7ஆம் வசனத்தில் அவர்களை வீட்டிற்கு வீடு போகாதிருங்கள் என்று ஏன் கூறினார்? (திருமதி. எல்.ராமநாதன், பதுளை, இலங்கை)
இயேசுகிறிஸ்து லூக்கா 9ம் அதிகாரத்தில் பன்னிரு சீடர்களை ஊழியத்திற்காக அனுப்பும்போதும் அவர்கள் ஒரு பட்டத்திற்குச் சென்றால் அங்கு இருக்கும் நாட்களில் அவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு வீட்டிலேயே இருக்கும்படி கூறினார். அதேவிதமாக 10ஆம் அதிகாரத்திலும் 70 பேரை அனுப்பும்போது கூறுகின்றார். இயேசுகிறிஸ்துவினால் அனுப்பபடுகின்றவர்கள் ஒரு பட்டத்திற்குச் சென்று தேவனுடைய செய்தியை அறிவித்தபின் அடுத்த பட்டணத்திற்குச் செல்ல வேண்டும். அவர்கள் ஒரு பட்டணத்தில் எல்லோருடைய வீடுகளுக்கும் விஜயம் செய்து கொண்டிருந்தால், ஒரு பட்டத்தில்அதிக நாட்கள்இருக்க வேண்டிவரும். இதனால்அவர்கள் வேறு பட்டணங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படும். அவர்களது பணி அவசரமானதொன்றாய் இருந்தமையினால் அவர்கள் ஒரு பட்ணத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்து அப்பட்டணத்தில் தாம் செய்ய வேண்டிய பணி முடிவடைந்ததுடன் அடுத்தப பட்டணத்திற்கு செல்ல வேண்டும். இதனாலேயே வீட்டுக்கு வீடு போகாதிருங்கள் என்று சொன்னார்.
லூக்கா 10:7
7. அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment