- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 6 April 2014

:வேதமும் விளக்கமும்-சீத்தீம் எனுமிடத்தில் மரித்தவர்கள் எத்தனை பேர்? 24,000(எண்.25:9) 23,0000 1 கொரி10:8)

 இஸ்ரவேல் மக்கள் சீத்தீம் எனுமிடத்தில் இருக்கையில்  மோவாப்பிய பெண்களோடு வேசித்தனம் பண்ணியமையால் ஏற்பட்ட வாதையில் 24,000 பேர் மரித்தாக எண்ணாகமம் 25:9 கூறுகின்றது. ஆனால் 1 கொரிந்தியர் 10:8 இல் அவ்வாதையில் மரித்தவர்கள் 23,0000 பேர் என்று சொல்லப்பட்டுள்ளதே இது ஏன்? (ஆர்.ரோஸ்மேரி, கொழும்பு) 
1 கொரிந்தியர் 10:8 இல் ஒரே நாளில் 23,000 பேர் மரித்தாகவே பவுல் கூறுகின்றார். அதாவது அவ்வாசதையில் ஒரு நாளில் மரித்தவர்கள் 23,000 ஆனால்எண்ணாகமம் 25:9  இல் அந்நாளுக்குப் பின்னர் மரித்தவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தமாக வாதையில் 24,000 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிகமாக இந்த 1000 பேரில் கர்த்தருடைய கட்டளைப்படி தூக்கிலிடப்பட்டவர்களும் அடங்குவர். (எண். 25:4)
 
 
எண்ணாகமம் 25:8-9  
8. இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று.

9. அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர் 
 
1 கொரிந்தியர் 10:8
8. அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.
 
1 கொரிந்தியர் 25:4 
4. கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment