ஆதியாகமம் 46:27 இல் எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தினர் 70 பேர் என்றும் அதேவிடயம் அப்போஸ்தலர் 7:14 இல் எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தினர் 75 பேர் என்றும் உள்ளதே. இந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன? (எஸ். போவாஸ் ரவிச்சந்திரன், குடவாசல், இந்தியா)
பழைய ஏற்பாட்டில் ஆதி 46:26 யாத். 1:5 உபா. 10:22 போன்ற வசனங்களில் எகிப்திற்குச் சென்ற யாக்கோபின் குடும்பத்தினர் 70 பேர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு, கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது எண்ணாகமம் 26:29-36 ஐ அடிப்படையாகக் கொண்டு ஆதியாகமம் 46:20 இல் யோசேப்பின் குமாரர்களில் 5 பிள்ளைகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. புதிய ஏற்பாட்டுக்கால கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பையே உபயோகித்தமையால் அப்போஸ்தலர் 7:14 இல் 75 பேர் என குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் யாத். 1:15 உபா. 10:22 இலும் 75 பேர் என்றே உள்ளது.
ஆதியாகமம்
26. யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப் பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர்.
27. யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
அப்போஸ்தலர் 7:14
14. பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான்.
யாத். 1:5
யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.
உபா. 10:22
22. உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.
எண்ணாகமம் 26:29-36
29. மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
30. கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,
31. அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,
32. செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
33. ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
34. இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
35. எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,
36. சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.
ஆதியாகமம் 46:20
20. யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment