பகுதி 1 ஐ வாசிக்க இங்கே அழுத்துங்கள்
தொடர்புடைய பதிவுகள் :
கேள்வி :- குறிப்பிட்ட மரங்களில் தான் அசுத்த ஆவிகள் இருக்கும் என்பது உண்மையா?
பதில் :- பொய். ஏனெனில் அசுத்த ஆவிகளானது எல்லா இடங்களிலும் இருக்கும். குறிப்பாக புளியமரம், நாவல் மரம், வேம்பு மரம், என்பவற்றிலே இருக்கும் எனக் கூறுவது பொய். அநேகமாக சுடுகாடு, அந்நிய மதவழிபாட்டுகள் உள்ள ஸ்தானம் போன்ற இடங்களில் கட்டாயம் இருக்கும் எனலாம்.
கேள்வி :- பெண்ணுக்கும் பேய்க்கும் தொடர்பு உண்டா?
பதில் :- தொடர்பு உள்ளது என்று கூற முடியாது. அதாவது அதிகமாக பேய்கள் பெண்களைத் தாக்குவதற்கான காரணம் பெண்கள் பயந்த சுபாவமுடையவர்களாக இருக்கின்றமையேயாகும். இதனால் “பேய்“ என இரவில் யாராவது கூறினால் பெண்கள் மருண்டு விடுவார்கள். பெண்களிடம் தீட்டு காரியம் காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் தான் ஆவிகள் இலகுவில் பெண்களைத் தாக்குகின்றன.
கேள்வி :- மந்திரவாதி ஒருவர் மற்றொரு மந்திரவாதிக்கு எதிராக மந்திரம் செய்தால் அது பலிக்குமா?
விடை :- பலிக்காது, ஒவ்வொரு மந்திரவாதியும் தனக்கென ஒரு ஆவியை தெரிந்தெடுத்திருப்பான். அது அவனைப் பாதுகாக்கும். ஆகையால், அவர்களுக்கு விரோதமாக ஏதேனும் செய்யும்போது அவ் ஆவிகள் உடனே தடை பண்ணும்.
கேள்வி :- ஒருவர் செய்த மந்திரத்திற்கு எதிராக இன்னுமொருவர் மந்திரம் செய்யும்போது ஆவிகளுக்குள் பிளவு ஏற்படாதா?
பதில்-:- மந்திரங்களை செய்யும்போது எல்லோரும் ஆவிகளைப் பயன்டுத்தி செய்வதனால் ஒருவர் மந்திரம் செய்துவிடும் போது இன்னுமொருவர் அதை நீக்குவதற்கு மந்திரம் செய்வது வழமை. இப்படி மந்திரம் செய்யப்பட்டாலும் இரண்டு ஆவிகளுக்குள்ளும் விரோதங்கள் ஏற்பாடாது. மாறாக பஸ்பரத்துடன் செயற்படும் இந்த ஆவிகள் பரஸ்பரத்துடன் செயற்படுவதனால் முன்பு அனுப்பிய ஆவி பின்பு அனுப்பட்ட ஆவிக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு போய்விடும். எப்படி இருந்தாலும் அந்த குறிப்பிட நபர் மீது ஒரு ஆவி இருந்து கொண்டே இருக்கும். அப்படியானால் மந்திரத்தை மந்திரத்தினால் முற்றாக எடுக்க முடியுமா என்று கேட்டால் அதை முற்றாக எடுக்க முடியாது. என்றே பதில் கூறலாம். மாறாக அதற்குள்ளே மாறிமாறி வெட்டுவார்கள். அதாவது ஏவிய ஆவிகள் அதற்கள்ளேயே சுற்றி சுற்றி நிற்குமே தவிர முற்று முழுதாக வெளியே வராது. எனவே ஒருவர் மந்திரத்திற்குட்பட்டால் அவருக்குள் ஆவிகளின் செல்வாக்கு காணப்படும். அப்படி ஆவிகளின் செல்வாக்களுக்கு உட்பட்டவருக்கு அதில் இருந்து விடுதலையாவதற்கு ஒரே வழி இயேசுக்கிறிஸ்து மாத்திரமே
கேள்வி :- மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
பதில் - மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என கூறமுடியாது. மாறாக மந்திரங்கள் செய்யும்போது சில குறிப்பிட்ட வர்ணத்தை தெரிந்து எடுத்துச் செய்வார்கள். இப்படிச் செய்யும்போது வர்ணத்தாக்கம் ஏற்படலாம்.
கேள்வி :- இறைச்சிக்கும் பேய்க்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?
பதில் :- இறைச்சிக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூற முடியாது. மாறாக மக்கள் இறைச்சிக்கும் பேயக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்பி இறைச்சியைக் கொண்டு போனால் ஆவிகள் அடிக்கும் என பயப்படும்போது இந்தப் பயத்தைப் பயன்படுத்தி ஆவிகள் தாக்குமே தவிர இறைச்சிக்கும் பேய்க்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் பயம்தான்.
கேள்வி :- ஆற்றங்கரையை நாடிப்போவதன் காரணம் என்ன?
பதில் :- தனிப்பட்ட இடங்களில் போய் இந்த மந்திரங்கள் செய்யலாம் என்பதால்
.
கேள்வி :- அமாவாசை நாள் மந்திரத்திற்கு முக்கிய நாளாக கருதப்படுவது ஏன்?
பதில் :- அமாவாசை நாளை முக்கிய நாளாகக் கருத்தக் காரணம் அந்த நாளில் ஆரம்பித்தால் ஏதாவது விஷேசமாக நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் இதைச் செய்கிறார்களே தவிர மற்றப்படி விசேஷம் ஒன்றுமில்லை. இந்த நாள் விசேஷமான நாள் இதில் காரியம் செய்தால் பலிக்கும் என்று கருதி விரதம் இருந்து செய்கிறார்கள் அதுவும் நடக்கிறது. அது அவர்களுடைய நம்பிக்கையேயன்றி நாளில் ஒன்றுமில்லை
கேள்வி – மந்திரத்திற்கு சக்தி இருக்கிறதா?
பதில் – ஆம் மந்திரத்திற்கு சக்தி இருக்கிறது தேங்காயையோ அல்லது தேசிக்காயையோ அல்லது வேறு எதையாவது மந்திரம் செய்யும்போது அது சுற்றும் என்றார். (அப்படி செய்தீர்களா என கேட்டபோது) பாதுகாப்பிற்காக தேங்காய்களை ஓதி வைக்கும்போது அவை யாரேனும் வரும்போது கதைப்பது போல் செயற்படும்.
கேள்வி :- ஒரே நேரத்தில் ஒரே ஆவியை பலரும் அழைத்தால் என்ன நடக்கும்?
பதில் :- ஒரே பெயரில் பல ஆவிகள் இருக்கின்றன. உதாரணமாக காளியின் பெயரில் 108 ஆவி இருக்கிறது. இந்த 108 ஆவிகளுக்கும் இன்னும் 108 ஆவி இருக்கிறது. ஆகவே ஒரே நேரத்தில் பலர் ஒரே ஆவியைக் கூப்பிட்டால் இவற்றில் ஏதாவது ஒன்று போகுமே தவிர ஒரு தடுமாற்றம் வராது.
கேள்வி :- மைபார்க்கிறது என்றால் என்ன?
பதில் :- பூவரசம் இலை என்ற ஒரு இலை இருக்கிறது. இதை அரைத்து சுண்ணாம்போடு கலந்து கண்ணாடியில் வைத்து அந்தப் பகுதியை மட்டும் பாரக்கும்போது தெரியும். அதாவது ஒரு சில காரியங்களைச் சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர் சிந்திக்கிறது நடப்பது போல் தெரியும். இதை வைத்துத்தான் கூறுவார்கள். ஒருவருடைய பொருளை யாராவது எடுத்துக் கொணடு போய்விட்டார் என்றால் எடுத்தவர் இவராகத்தான் இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர்கள் சிந்தித்த உருவம் போனால், எடுத்தவர் இவர்தான் என்று கூறுவார்கள். அவர் சிந்தித்த உருவமும் சிந்தித்த நபரும் சரியாக தென்பட்டால் அவர்தான் திருடியது என்று கூறுவார்கள் ஆகவே மைபார்ப்பது என்பது சிந்தித்துச் சொல்லும் ஒரு காரியமாகும். எண்ணெயை பூசிவிட்டுப் பார்க்கலாம்.
கேள்வி :- அசுத்த ஆவி பிடித்திருப்பரின் பெயரைக் கேட்கலாமா?
பதில் :- கேட்கவேண்டியதில்லை. கேட்டும் பிரயோஜனம் இல்லை. காரணம் கேட்டாலும் அவை உண்மையைச் சொல்லப் போவதில்லை. எனவே கேட்கத் தேவையில்லை.
கேள்வி :- ஊழியக்காரர்கள் அசுத்த ஆவியை துரத்தும்போது என்ன செய்ய வேண்டும்?
ஊழியக்காரர்களாகிய நாம் ஆவிகளைத் துரத்தும்போது அது அங்கிருந்து புறப்பட்டு எமது வீட்டை நோக்கியே வரும் என்பதை மறந்து போகாமல் முதலாவது எமது வீட்டை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். பின்பு அசுத்த ஆவிகளைத் துரத்த போவது நன்று
கேள்வி :- இரட்சிக்கப்பட்ட பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படுமா?
பதில் - ஏற்படுமென்று கூறுவதற்கில்லை. காரணம் நான் மந்திரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய மந்திரம் பலிக்கவில்லை. நான் மந்திரத்திற்கு பயன்படுத்திய தெய்வம் என்னை துன்புறுத்தியதால் அத்தெய்வத்தை நான் அடித்தேன். ஆனாலும் அது ஒன்றும் செய்யவில்லை. இதற்குக் காரணம் எனக்காக யாரே ஜெபம் செய்தபடியால் என்று பின்பு அறிந்து கொண்டேன். இதற்கு பின்பு என்னை சிலர் கொல்ல முற்பட்டனர். அந்த நேரம் வெளியே போக முடியாமல் உள்ளே இருந்தேன். அந்த நேரம் எனக்கு சுவிஷேசம் சொன்னவர் என்னைச் சந்தித்து எனக்காக ஜெபம் செய்தார். இதற்குப் பின்பு எல்லா மந்திரக் காரியங்களையும் சுட்டெரித்தேன். நான் மந்திரத்தை விட்டு வெளியேறிய பின்பு ஆவிகள் கனவில் தோன்றி எனக்கு உதவி செய்வதாக கூறியது. ஆனாலும் என்னை பெலப்படுத்தியவர்கள் அவ்வாறு செய்யவிடவில்லை. இதற்கு பின்பு கொழும்பில் இருந்து மந்திரிக்க வந்தார்கள். எனது மனது தளர்வது போல் இருந்த்து. அந்த நேரமும் என்னை பெலப்படுத்தியவர்கள் மூலம் அதை விட்டுவிட்டேன். நான் ஊழியத்திற்கு போன பின்பு தேவன் செய்த அற்புதத்தால் முழுமையாக அவருக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். இதற்கு பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படவில்லை என்று சாட்சி பகர்ந்தார். ஆக இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சிறிது தாக்கம் இருந்துள்ளது என்று அவருடைய கூற்றின் மூலம் புலப்படுகின்றது. இதே நேரத்தில் இந்தியாவில் பிரபல மந்திரவாதியாக இருந்து இரட்சிக்கப்பட்ட தொட்டண்ணாவின் சாட்சியைக் கவனித்தால் அவரும் தனக்கு இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் ஆவியின் செயற்பாடு அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தான் இரட்சிக்கப்பட்ட பின்பு மீண்டும் மந்திரம் செய்யப் போகக் காரணம் தன்னை யாரும் கவனிக்காமையே என்றும் கூறியுள்ளார். இவை இரண்டும் இவருடைய சாட்சியுடன் ஒத்துப் போகிறது. அதாவது இவரை யாராவது பெலப்படுத்தாவிட்டால் இவரும் மந்திரம் செய்யப் போயிருப்பார் என்பது இவருடைய கூற்றில் இருந்து தெரிய வருகிறது. எனவே ஆவியிலிருந்து விடுபட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் இனி அசுத்த ஆவிக்ள கிரியை செய்யாது என்று இருக்காமல் அவற்றுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கேள்வி :- இப்போது உங்களுக்கு அசுத்த ஆவி பிடித்திருப்பதை இனங் காண முடியுமா?
பதில் :- இரட்சிக்கப்பட்ட பின்பு நான் அசுத்த ஆவிகள் குறித்து இவைதான் என்று இனம் காண முற்படவில்லை. அதேவேளை ஊகிக்கவும் முடியாது என்பது என் கருத்து
கேள்வி :- ஜாதகத்தைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
அதாவது ஜாதகம் எழுதியிருக்கின்றபடி நடக்கும் அல்லது நடக்கிறது என்று கூறுகிறார்களே,இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அது அப்படியல்ல. அந்த நாளில் நடக்குமென்று அவர்கள் நம்புகிறபடியால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அசுத்த ஆவி கிரியை செய்து அவர்களைத் தாக்குகின்றதே தவிர ஜாதகப்படி நடப்பது என்று கூறமுடியாது. என்ற கூறியது மட்டுமல்ல. இன்னுமொரு உதாரணக் கதையையும் கூறினார். அதாவது ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கண்டம் இருப்பதாக அவருடைய ஜாதகத்தில் எழுதியிருந்தாகவும் அதேவேளையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மந்திரம் செய்தால் பிழைக்க வைக்க முடியும் என்றும் எழுதியிருந்தது. இதை அறிந்த நபர் அந்த நாளும் அந்த நேரமும் வரும்போது பயத்தாலேயே வியாதி உற்றதாகவும், பின்பு தான் அந்த நேரத்திற்குப் போய் அவருக்கு மந்திரம் செய்து அதை எடுத்துப் போட்டதாக கூறிய பின்பு அவருக்கு சுகம் கிடைத்ததாகவும் மக்களின் நம்பிக்கைத் தான் இதற்குக் காரணம் என்று கூறினார். மேலும் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் சரியான நேரம் கொடுக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் கொடுக்கின்ற நேரத்தை வைத்துத்தான் என்ன நட்சத்திரம் என்ன கண்டம் என்று பார்த்துத்தான் எழுதிக் கொடுப்பார்கள். அதை உண்மையென மக்கள் நம்புகின்றமையால் சாத்தான் அவர்களின் நம்பிக்கையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகின்றான் என்று கூறினார். இவர் ஜாதக விடயத்தில் கூறவந்த முக்கிய விடயம் என்றவென்றால் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் அவசியம். இந்தச் சரியான நேரம் யாராலும் கொடுக்க முடியாததால் எழுதப்படும் ஜாதகம் பொய்யாகும்.
கேள்வி :- மந்திரவாதிகள் மத்தியில் எப்படி சுவிசேஷத்தை கூறுவது?
இக்கேள்விக்கான பதில் அவருடைய சுவிசேஷ ஊழியத்துடன் தொடர்பு பட்ட அனுபவமான பதிலாக இருந்தது மந்திரவாதிகள் மத்தியிலே சுவிசேஷத்தினை .கூறுவதென்பது இலகுவான செயலல்ல. அதற்கு பிரதான காரியங்கள் ஐந்து தேவை. அவையாவன
1. பரிசுத்த ஆவியானவர் உதவி
2. பரிசுத்தமான வாழ்க்கை
3. ஜெபம்
4. உபவாசம்
5. விசுவாசம்
உண்மை விடயம்
மந்திரவாதி ஒருவரின் மனைவி வியாதிப்பட்டிருந்தாள். அதை குடும்பத்துடன் ஜெபத்துடன் உபவாசத்துடனே அங்கு சென்றபோது எதிரே தென்பட்டவன் அந்த மந்திரவாதிதான். தேவஆவியானவரின் பெலத்துடன் சென்றமையினால் வந்த விடயத்தை கூறியபோது அவர் ஜெபிக்கும்படி அனுமதி கொடுத்தார். ஜெபிக்கப்பட்டது. அந்த சகோதரி விடுதலை அடைந்தார். நாளடைவில் அந்த குடும்பம் இரட்சிக்கப்பட்டு பின்பு தலைவர் மந்திரவாதியும் இரட்சிக்கப்பட்டார். எனவே மேற்குறிப்பிட்ட காரியங்களை கருத்திலெடுத்து செயற்படும்போது பெரிய காரியங்களை கர்த்தர் செய்வார்
முடிவுரை.
இவ்வுலகில் எத்தனை ஆயிரம் மந்திரங்கள், பில்லி சூனியம் மாயவித்தைகள், இருந்தாலும் அத்தனையும் வீண்பிரயாசங்களாகும. ஏன்? மந்திரங்கள் பில்லி சூனியம், மாயவித்தை செய்யப்பட்டவர்களை ஒரு நொடிப்பொழுதில் இயேசுவின் வல்லமையானது விடுதலையாக்கி இயசுவின் இரத்தமானது சுத்திகரிக்கின்றதாயிருக்கின்றது. அந்த வல்லமைகள் இயேசுவின் சர்வ வல்லமைக்கு முன்பாக நிற்க முடியாது. உண்மையாகவே இந்த செய்முறை வேலையானது பிரயோஜனமாகவுள்ளது. எதிர்கால ஊழிய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் என விசுவசிக்கிறேன். மக்களின் அறியாமையெனும் இருளை நீக்கி இயேசு கிறிஸ்துவின் ஆச்சரியமான ஒளிக்குள் அழைத்து வருவதற்கு இது பெரிதும் உறுதுணையாகும்.
மந்திரம், சூனியம் எல்லாம் மன்னவன் முன் நில்லாது
அசுத்த ஆவியின் கட்டுகளெல்லாம்
அருமை இரட்சகர் நாமத்தால் உடையும்
அறியாமை இருள் நீக்குவோம்
இயேசு எனும் ஒளி வீசுவோம்
மந்திரங்கள் மாயை
இயேசுவின் மாண்பு மிகு நாமமே உண்மை
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment