அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவரான ஆபிரகாம்லிங்கனுடைய பதவிக்காலத்தில் ஒருநாள். அவரைச் சந்திக்க ஒரு வயது முதிர்ந்த பெண் அவரது அலுவலகத்த்திற்குச் சென்றாள். தன்னைத் தேடி வந்த பெண்ணிடம் ஆபிரகாம் லிங்கன், “பெண்ணே, நான் உனக்கு செய்யவேண்டியது என்ன?“ என்று கேட்டார்.
மூடப்பட்டிருந்த சிறுகூடையொன்றை ஜனாதிபதியின் மேசையின் மீது வைத்த அப்பெண் “ஜனாதிபதி அவர்களே, இன்று நான் எனக்காகவோ இல்லையென்றால் மற்றவர்களுக்காகவோ, எதுவும் கேட்பதற்காக உம்மிடம் வரவில்லை. உமக்கு கொக்கீஸ் மிகவும் பிடிக்கும் என்று கேள்விப்பட்டேன். அதனால் இக்கூடை நிறைய கொக்கீஸ்சை மிகவும் பிடிக்கும் என கேள்விப்பட்டேன். அதனால் இக்கூடை நிறைய கொக்கீஸ்சை உமக்காக கொண்டு வந்தேன்“ என்றாள்
தன்னைப் பார்க்க வந்த பெண் கூறியவற்றைக் கேட்ட ஜனாதிபதியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. சில நிமிடங்கள் அவரால் எதுவும் பேசமுடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் அவர் அப்பெண்ணிடம் “பெண்ணே, சுயநலமின்றி என்னைப் பற்றிய நினைவுடன் நீ செய்த செயல் என் உள்ளத்தை உருக்குகிறது. நான் ஜனாதிபதியானதில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்துள்ளனர். ஆனால், இஙகு வந்தவர்களில் தனக்காகவோ இல்லையென்றால் மற்றவர்களுக்காகவோ எந்தவித உதவியையும் கேட்காதவர்களில் நீயே முதலாவது நபர்“ எனக் கூறினார்.
ஜனாதிபதியிடம் மக்கள் செல்லுவது போலவே நாம் எப்போதும் தேவைப்பட்டியல்களுடனேயே தேவனிடம் செல்கிறோம். நமக்கும் மற்றவர்களுக்கும் வேண்டியவைகளையே அவரிடம் கேட்கிறோம். ஆனால், கொக்கீஸ்சுடன் ஆபிரகாம் லிங்கனைச் சந்திக்கச் சென்ற அப்பெண், ஜனாதிபதிக்கு விருப்பமானது எது என்பதை அறிந்து அதைக் கொண்டுபோனமையால், ஜனாதிபதி மகிழ்வடைந்தார். அப்பெண்ணைப் போலவே நாமும் தேவனிடம் செல்லும்போது தேவனுக்குப் பிரியமானது எது என்பதை அறிந்து, அதை அவரிடம் எடுத்துச் செல்பவர்களாக இருக்க வேண்டும். தேவனுக்குப் பிரியமானதை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அது அவரை சந்தோஷப்படுத்தும்.
(நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment