- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Saturday, 5 November 2011

துயங்களை அகற்றும் இயேசு


பிரித்தானியாவின் பிரபல பிரசங்கியான எஃப்.பி. மேயர் (1847-1929) புகையிரதமொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது, துயரத்து்டனிருந்த ஒரு பெண் தன் மனக்குறைகளை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்

பல வருடங்களாக முடமாயிருந்த தன் மகளைப் பராமரித்து வந்த அப்பெண், காலையில் மகளுக்குத் தேவையானதை எல்லாம் செய்துவைத்து விட்டு வேலைக்குச் செல்வது வழமை. தனக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் மகள் வீட்டிலிருப்பதால் அவளைச் சந்திக்க ஆவலோடு அவள் மாலையில் வீட்டுக்குச் செல்வாள். ஆனால் அவளுடைய மக்ள் மரணமடைந்தபோது அவளுடைய மகிழ்ச்சி யாவும் மறைந்து வாழ்வே வெறுமயாகிவிட்டதாக அவள் பிரசங்கியார் மேயரிடம் தெரிவித்தாள். 

எஃபி.பி.மேயர் அப்பெண்ணிடம், இன்றிலிருந்து நீ வீட்டுககுச் சென்று கதவைத் திறக்கும்போது “இயேசுவே நீர் இங்கே இருக்கிறீர் என்று சொல்லிக் கொண்டு அவரை வாழ்த்துவதாக வீடடுகுள் செல்; விளக்கை ஏற்றும்போது அன்றைய தினம் நடந்தவற்றை இயேசுவிடம் சொல்; நீ உன் மகளோடு உரையாடியது போல உனக்கு ஏற்பட்ட சகலவற்றையும் அது நன்மையானதாயிருந்தாலும் தீமையானதாயிருந்தாலும் எல்லாவற்றையும் இயேசுவிடம் சொல்; இரவில் உன் கையை நீட்டி இயேசுவே நீர் இங்கே இருக்கிறீர் என்று சொல்“ என்று கூறினார்


சில மாதங்களின் பின் அப்பெண் எஃப்.பி. மேயரை சந்தித்தாள். ஆனால் அவரால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. புகையிரத்தில் சந்தித்தபோது கவலையால் வாடிப்போயிருந்த அவளது முகம் இப்போது மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. “நீர் சொன்னப்படியே நான் செய்தேன்; என் வாழ்வே மாற்றமடைந்துவிட்டது. இப்போது எனக்கு அவரைப் பற்றித் தெரியும்“ என சந்தோஷததுடன் அப்பெண் மேயரிடம் கூறினாள்.


மானிட வாழ்வின் துயர்களை அகற்றி உண்மையானதும் நிரந்தரமானதுமான மகிழ்ச்சியைத் தரக்கூடியவர் இயேசுக்கிறிஸ்து மட்டுமே. இதனால் வேதாகமம் “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத் தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்து ங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்“ எனக் கூறுகின்றது, (பிலி. 4:6-7)

நன்றி : சில சம்பவங்களில் சில சத்தியங்கள்) 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment