சந்தேகத்திற்கிடமான காரியங்கள் மீது சந்தேகப்படுவதை நிறுத்துங்கள்
வேதாகமம் ஒருநாளும் மாறாத புத்தகம். ஆனால் நாம் மாறிக் கொண்டேயிருக்கும் உலகத்தில் வசிக்கின்றோம். ஒவ்வொரு மனிதரும் அனுசரிக்கும் பழக்கவழக்கங்கள், நினைக்கும் எண்ணங்கள் யாவும் மாறிக் கொண்டிருக்கின்றன. நாகரீகமும் நடையுடை பாவனைகளும் ஒவ்வொரு மனிதர்களது ஈடுபாடுகள் யாவும் மாறிக் கொண்டே இருக்கும்போது ஒரு விசுவாசி எப்பொழுது எவ்விதம் தன் நிலையிலிருந்து மாற வேண்டும்.? எப்பொழுது மாறாமல் இருக்க வேண்டும்.
விசுவாசிகள் அடிக்கடி சங்கடப்படுத்தும் ஒரு கேள்வி என்னவென்றால் நிலையான சத்தியங்களைக் கொண்ட வேதாகமத்தின் வெளிச்சத்தை ஆதாரமாகக் கொண்டு மாறிக் கெண்டே போகும் உலக போக்கிற்கு ஏற்றபடி ஜீவிப்பது எப்படி? மாறிக்கொண்டே போகும் இவ்வுலகத்தில், வேதாகமத்தில் குறிப்பாக சொல்லப்படாத சில விஷயங்களை நாம் சந்திக்கும்போது நம் வாழ்க்கை முறையில் அவற்றுக்கு முகங்கொடுபபது எப்படி? இந்த கேள்விகளைக் கண்டு கலங்க வேண்டாம். தேவன் வாழ்வுமுறைக்கு வழிகாட்டும் வார்த்தையையும் நியமங்களையும் வேதாகமத்தில் கொடுத்திருக்கிறார். நமது மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவற்றை உபயோகித்து இந்த நியமங்களை கடைபிடிக்க அவற்றை நம்மிடம் விட்டுவிட்டார். நம் கிறிஸ்தவ நடத்தை மற்ற நபருடைய அபிப்பிராயத்திலிருந்தோ அவருடைய மனசாட்சியிலிருந்தோ வராமல் நாமே ஆண்டவருடைய வார்த்தையை விளங்கிக் கொள்வதிலிருந்து வருவதற்காக ஆண்டவர் கொடுத்திருக்கும் வேதாகம நியமங்களை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.
தகுதியைப் பற்றிய நியமம்
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது (1 கொரிந்தியர் 6:12) ஆகையால் நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால் : “நான் செய்ய விரும்பும் இந்தக் காரியம் எனக்குத் தகுதியான நடத்தைத் தானா? மேற்கூறிய வசனத்திற்கு முன்னே எழுதப்பட்ட வசனங்களை வாசீப்பீர்களாகில் பவுல் கொரிந்து சபையினரின் பழைய வாழ்க்கையிலிருந்து ஆண்டவர் அவர்களை மீட்பதைப் பற்றி எழுதியிருப்பதைக் காணலாம். மீட்படைந்தவர்களிடமே இந்தக் கேள்வி கேட்கப்படுகின்றது. ஆகவே சந்தேகத்திற்ககிடமான காரியம் கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள பதிய உறவிற்கு உகந்ததா? இக்காரியம் என் பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறதா? இதை அனுவித்தால் என் எதிர்கால நிலை இனிதாயிருக்குமா? இந்தக் கேள்விக்கு பதில் தயக்கம் தருமாயின் அதைவிடடு விலக வேண்டும்.
அடிமைப்படுவதைப் பற்றிய நியமம்
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.(1 கொரிந்தியர் 6:12) சந்தேககப்படக் கூடிய காரியம் செய்வதால், நமது சரீரம், ஆத்துமா, ஆவிக்கு உண்டாகும் விளைவுகளைக் பற்றி யோசிக்க வேண்டும். ஏனென்றால் நான் என்னை எதுவும் அடிமையாக்க அனுமதிக்க கூடாது. இந்த இடத்திலே உணவைப்பற்றி பவுல் பேசுகிறார். அந்தக் காலத்திலே புகைபிடித்தல், டெலிவிஷன்(T.V), லாகிரி வஸ்துக்கள் (Drugs), சினிமா இதைப்போன்ற பிரச்சினைகள் இருக்கவில்லை. எனினும், இந்த விஷயங்கள் எல்லாவற்றிலும் எதற்கும் நாம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்ற நியமத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அடுத்தமுறை புகைபிடிக்கிற ஒருவனை “நீ உன் சாட்சியைக் கெடுக்கிறாய்“ என்று சொல்ல விரும்புவாயாகில் உனக்கு காப்பி, டீ, மேலேயோ, பிரியாணி மேலேயோ, மற்றும் எந்தவிதத்திலோ உனக்கிருக்கும் அடிமைத் தனத்தைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்.! அடிமைத்தனம் கண்கள் மூலமாகவோ, வாயின் மூலமாகவொ, மூக்கின் மூலமாகவோ நுழையக்கூடும். ஆகவே அது எதுவாயிருந்தாலும் உன் நேரத்தை மனதை, சிந்தையை பாதிக்குமாயின் அதன் விளைவுகளை அறிந்து விலக வேண்டும. சந்தேகம் உண்டாக்கும் காரியங்களைச் சரியாக புரிந்து கொண்டு நமது ஆணடவரை விட்டு விலக் செய்யும் எந்த அடிமைத் தனத்திற்கும் துயரமாக விலகிச் செல்ல வேண்டும்.
பக்திவிருத்தியைப் பற்றிய நியமம்
“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.(1 கொரிந்தியர் 10:23). இந்த வசனத்தை வைத்து வேதத்தில் தெளிவாக செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட காரியங்களாக இல்லாவிடில், அவை சரியானவைகள்“ என்று பவுல் சொல்லுகிறார் என்று அர்த்தப்படுத்தக்கூடாது. இவர் சந்தேகம் தரும் காரியங்களைக் குறித்து பேசுகிறார் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். கேள்வி என்னவென்றால், “இந்தக் காரியம் என்னை ஆவியில் வளர்ச்சியடையச் செய்யுமா? அல்லது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் நமது ஆண்டவருடன் நடப்பதற்கும் தடையாயிருக்குமா? கிறிஸதுவின் மீதிருக்கும் அனலைக் குறைக்குமா? என்னுடைய ஜெப ஜீவியத்தைத் தடை செய்யுமா? என் நேரத்தின் கிரம ஒழுங்கை குறைக்குமா? என கேள்வி கேட்டுப் பார்த்து, அப்படி நடக்குமாயின், அதனை மறுக்க வேண்டும். மற்றவர்கள் என்ன செய்தாலும் அதைப் பார்த்து நம் வழியை நிர்ணயிக்கவே கூடாது. இநநியமனத்தின்படி ஆண்டவர் என்னுடன் என்ன பேசுகிறார் என்பதுதான் பக்திவிருத்திக்கு முக்கியமாகும்.
பலவீனரைக் குறித்த நியமம்
“ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.“ (1 கொரி. 8:9)
பலவீனர் என்பது கிறிஸ்துவுக்குள் இருக்கும் அதிகாரத்தை சரியாக விளங்கிக்கொள்ளாத கிறிஸ்தவர்களைக் குறிக்கும். பவுல் இருந்த காலத்திலே இது மோசேயின் நியாப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிசெய்து கொண்டிருந்தவ்களைக் குறித்தது. நமது நடத்தை அப்படிப்பட்டவர்களை எவ்விதம் பாதிக்கும் என்பதை நாம் சற்று கவனிக்க வேண்டும். இந்த நியமத்தை கடைப்பிடிக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் கிறிஸ்துவில் உனக்கிருக்கும் சுயாதீனத்தினாலே நீ செய்யும் காரியம். சத்தியத்தை முழுவதும் அறிந்து கொள்ளாத ஒரு சகோதரனுடைய நம்பிக்கையை அசைக்கும்படி செய்துவிடக்கூடாது. இவ்விதம் சந்தேகம் விளைவிக்கும் காரியங்களை விட்டுவிலகுவது கிறிஸ்துவில் இருக்கும் சுயாதீனத்தை கைக்கொள்வதை விட சிறந்ததாகும்.
இரட்சிக்கப்படாதவர்களுக்கு முன் இருக்க வேண்டிய சாட்சியின் நியமம்.
“நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.“(1 கொரிந்தியர் 10:33) என்ற வசனத்தில் காண்கிறோம். இது ஒரு முக்கியமான சத்தியம். எத்தனையோமுறை தேவனை அறிந்த சபை விசவாசிகளே இரட்சிக்கப்பட்டாதவர்களை தஙகளுடைய அற்பமான சாட்சியினால் ஆண்டவரிடம் இழுக்கமுடியாதபடி செய்துவிடுகின்றனர். இவ்விதம் கெடுதி செய்த பிறகு அவர்கள் மனதை மாற்றுவது மிகவும் கஷ்டம். இன்னார் ஒரு கிறிஸ்தவன் என்றால் அவரிடம் இருந்து எனக்கொரு உபதேசமும் தேவையில்லையே? என்று இரட்சிக்கப்படாத ஒருவர் சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? நீ செய்யலாமா, செய்யக்கூடாதா என்று சந்தேகப்படும் காரியத்தினூடாக மற்றவர்களுக்கு நீ சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு இடையூறாக இருக்குமா? என்று சோதித்து விட்டு விலக வேண்டும்.
நல் மனசாட்சியின் நியமம
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.(1 தீமோத்தேயு 1:5)
மனச்சாட்சியைப் பற்றி சாதாரண மனிதன் விளங்கிக் கொள்ளாத அநேக காரியங்கள் உண்டு. நம் மனச்சாட்சி நமக்கு பிழையற்ற வழிகாட்டியல்ல. அதுவும் தவறுவிடும். வேதாகமம்தான் பிழையற்ற வழிகாட்டி. இருந்தபோதிலும் ஒரு விசுவாசி தவறு செய்யு்ம்போது அது குற்றம் என்று காட்டுவதற்கு ஆண்டவர் அவனது மனசாட்சியை தெளிவாக உபயோகிக்கிறார். சிலவேளை மற்றவர்கள் ஒரு விவாசியை தீர்ப்பு செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவன் மனசாட்சி நிச்சியமாகத் தீர்ப்பளிக்கும்.
ஒரு விசுவாசி ஆண்டவருடைய வார்த்தையில் வளரும்போது, அவனுடைய மனசாட்சி ஆண்டவருடைய சித்தத்தின் தூண்டுதலுக்கு மனம்கொடுக்க ஏவுகிறது. அவனுடைய மனசாட்சி மூலம்தான் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தைகளின் நியமங்களை கடைபிடிக்க ஏவுகிறார். ஆகவே, நான் செய்ய விரும்பும் காரியம் அல்லது செய்துகொ்ணடிருக்கும் காரியம் எனது மனசாட்சிக்கு கஷ்டம் கொடுத்துக் கொண்டிருக்குமேயாகில் அதை விட்டுவிலக வேண்டும்.
ஸ்தோத்தரிக்கும் நியமம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, (எபேசியர் 5:20)
நாம் செய்ய விரும்பும் அல்லது செய்து கொண்டிருக்கும் ஒரு காரியத்திற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்க முடியுமாதலால் அல்லது இந்த வார்த்தைகளைப் பேச முடிவதால் அல்லது இந்த இடத்திற்குப் போக வழியிருப்பதால் உம்மை துதிக்கிறேன்“ என்று சொல்ல முடிந்தால் அதைச் செய்யுங்கள். அவரை ஸ்தோத்தரிக்க முடியாவிட்டால் அந்தக் காரியத்தை ஏற்றுக்கொள்ளாதிருங்கள்.!
மேலே கூறப்பட்ட நியமங்களைத் தவிர, ஒரு விசுவாசிகளுக்கு வேறே நியமம் இல்லை என்று சொல்லுவதற்கு இல்லாவிட்டாலும்ஈ சந்தேகம் விளைவிக்கும் காரியங்களுக்கு உண்மையாய் உபயோகிப்பாயாகில் உன் நடத்தை என்னவாயிருகு்க வேண்டும் அறிந்து கொள்வாய். ஆனால். நீ இதைச் செய்யாமல் இதனைச் செய்யும்படி, இன்னொரு கிறிஸ்தவ சகோதரனுக்கு அப்படியே உபயோகிக்கிக்காதே. சகோதரர் ஒருவர் வேதாகமத்தில் செய்யக்கூடாது என்று திட்டமாய் சொல்லியிருப்பதை செய்வாரேயானால் மட்டுமே அது தவறு என்று தீரப்பு செய்து அவரை திருப்பவதற்கு முயற்சிசெய். இக்கட்டுரையிலே வேதாகமத்தில் கூறப்படாத காரியங்களை செய்வதைப் பற்றி கவனித்தோம். மற்றவர்களுக்கு தீர்ப்பு எடுக்கையில் மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
நமக்கு ஆண்டவர் தகாதது என காண்பிப்பது மற்ற சகோதரர் ஒருவருக்கு தகாததாய் இல்லாமல் இருக்கலாம். உதாரணமாக சில சாதாரண காரியங்கள் நம்மை பழைய பாவ ஜீவியத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியதாக நாம் அவைகளை தவிர்கக் முயலுவோம். அதே காரியங்கள் மற்றவர்களுக்கும் ஏறதல்ல என்று நாம் அவர்களை கண்டிப்பது தவறாகும். மேற்கூறிய நியமங்களை உன் ஜீவியத்தில் கையாண்டதினால் கிடைத்த அறிவுறுத்தல்களை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆத்திரப்படாதே. ஏனென்றால் “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே (ரோமர் 14:10)
தேவ ஆவியானவரின் தலைமையில் வாழும் வாழ்க்கை ஒரு விசுவாசியை ஒருநாளும் நியமங்களை மீறுவதற்கு இழுத்துச் செல்லாது. மாறாக அவனைத் தொடர்ந்து, தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்க உதவிசெய்யும். (ரோமர் 8:29) கர்த்தர் தாமு நம் ஒவ்வொருவரையும் நல்வழியில் நடத்துவாராக!
(நன்றி சத்தியவசனம் :- September - November 2011, கட்டுரையாசிரியர் டி.ஒ.ஹோவாட்)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment