ஒரு மனிதர் தன் தலைமுடியை வெட்டுவதற்காகவும் தாடியை சிரைப்பதற்காகவும் தன் வீட்டுக்கு அருகிலுள்ள பாபர் சலூனுக்கு சென்றார். அந்த பார்பர் வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக் கொண்டிருக்கும்போது இருவரும் பலதரப்பட்ட காரியங்களைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள். திடீரென அவர்கள் கடவுளைப் பற்றி உரையாட ஆரம்பித்தனர்.
பார்பர் கூறினார் : 'கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் நம்புகிறதில்லை. ஏனெனில் கடவுள் என ஒருவர் இருந்தால் இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனையும் துன்பமும் கொடுமையும் காணப்பட வேண்டும்? எவ்வளவுபேர் பசி, பட்டினி வியாதியினால் கஷ்ட்டப்படபடுவதைப் பார்க்கிறோம். கடவுள் என ஒருவர் இருந்தால் இவைகளை எல்லாம் அவர் ஏன் அனுமதிக்க வேண்டும்?“ என்று கேட்டான். அதற்கு அந்த வாடிக்கையாளர் பதிலேதும் கூறவில்லை. அவர் அவனுடன் தொடர்ந்தும் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.
வாடிக்கையாளர், தான் வந்த வேலை முடிந்ததும் சலூனைவிட்டு வெளியேறினார் அவர் அந்த பாதை வெளியை வீதியைக் கட்க்கப்போகும் போது பாதை ஓரத்தில் நீண்ட தாடியும், பல மாதங்களாக வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்த அழுக்கான தலைமுடியும் கொண்ட ஒரு வயதான மனிதனைக் கண்டவுடனே அவர் மீண்டும் சலூனுக்குள் ஓடி சென்று, பார்பரை நோக்கி: “ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இநத உலகத்தில் பார்பர் என்ற ஒருவரே இல்லை“ என்று கூறினார்.
உடனே பார்பர் வாடிக்கையாளரை நோக்கி “நீங்கள் எப்படி கூறுவீர்கள்? இதோ நான் இருக்கிறேனே. உங்களுக்கு தலைமுடியையும் தாடியையும் சிரைத்து விட்டேனே...” எனக் கூற, “இல்லை, பார்பர் என ஒருவர் இல்லவே இல்லை. அப்படிப்பட்ட ஒருவர் இருந்திருந்தால் ஏன் நீண்ட தாடியும் வெட்டப்படாத அழுக்கான தலைமுடியும் கொண்ட பலர் தெருவோரங்களில் காணப்பட வேண்டும்?“ எனப் பதிலுக்குக் கேட்டார் அதற்கு பாபர் “அவர்கள் என்னிடம் வராவிட்டால் அதற்கு நான் காரணமா? என் வாய்விட்டு சொன்னான்.
உடனே வாடிக்கையாளர் “இதேபோலத் தான் கடவுள் என்ற ஒருவர் கடவுளாகவே இருக்கிறார். ஆனால் மனிதர்களோ தாங்கள் பிரச்சினைகளையும் வேதனைகளையும் மாற்றக் கூடிய அந்த மெய்யான ஆண்டவரிடம் வருவதேயில்லை. இதனால்தான் இந்த உலகில் இவ்வளவு வேதனையும் துன்பங்களையும் கண்டு கடவுள் இல்லை என்று சொல்லாதே“ எனக் கூறிவிட்டு அந்த சலூனைவிட்டு வெளியேறினார.
(நன்றி : சத்தியவசனம் January - March 2008)
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment