மிகுந்த அலுவல் காரணமாக மிக அவசரமாய் காரில் ஏறினார் ஒரு விசுவாசி. அவர் சேர வேண்டிய இடம் வந்த்து. காரை நிறுத்துவதற்கு இடம் தேடினார். ஆனால் இடமோ கிடைக்கவில்லை. எனவே No Parking என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் என்னது காரை நிறுத்தி, காரிலுள்ள Wiper இல் ஒரு காகிதத்தை செருகி வைத்துவிட்டு மிக வேகமாக கடந்து சென்றார்.
அந்தக் காகிதத்தில் நான் இந்தக் குடியிருப்பை பத்துமுறை சுற்றினேன். ஆனாலும் என் காரை நிறுத்துவதற்குப் போதிய இடம் கிடைக்கவில்லை. நான் ஒரு அவசர வேலையில் ஈடுபட்டிருக்கின்றேன். “எங்கள் குற்றங்களை மன்னியும்“ என்று எழுதப்பட்டிருந்தது.
திரும்பி வந்த விசுவாசி, காரில் தான் சொருகி வைத்திருந்த காகிதத்தின் கீழே ஏழுதப்பட்டிருப்பதைக் கண்டு வியந்து விரைந்து வந்தார்.
அதில் போலீஸ் அதிகாரி இப்படியாக பதில் எழுதி வைத்திருந்தார்..
“இந்தக் குடியிருப்பை பத்து வருடங்களாக சுற்றி வருகிறேன். இந்த இடத்தில் உங்களுடைய காரை நிறுத்தியதற்கு நான் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் என் வேலை பறிபோகும். எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப் பண்ணாதிரும்”
தெரிந்தும் தவறிழைப்பது குற்றம்!
அந்தக் குற்றத்தை நியாயப்படுத்த முயல்வது அதைவிட குற்றம்!
தண்டனையில்லாமல் அதிலிருந்து தப்பிக்க வழிதேடுவது மகா குற்றம்!
நன்றி : சத்தியவசனம் July - August 2010
தொடர்புடைய பதிவுகள் :
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment