- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Tuesday, 2 November 2010

இருளில் ஒளி

ஒளி இருக்கும் இடத்திற்கு இருள் வருவதில்லை. இதைப்பற்றிய கதை ஒன்று உண்டு. இருட்டு ஒரு முறை ஆண்டவரிடம் சென்று புகார் செய்தது. ஆண்டவரே, இந்த சூரியன் எப்போதும் என்னிடம் வந்து வம்பு செய்து கொண்டேயிருக்கிறது. நான் எங்கு சென்றாலும் என்னைத் துரத்திக்கொண்டே வருகிறது. சூரியனால் நான் மிகவும் தொல்லைப்பட்டு விட்டேன். பொழுது விடிந்தால் அது என்னைக் கட்டிப்போட்டு விடுகிறது. மாலை நேரம் வரும்போது மிகவும் சிரமப்பட்டுதான் நான் அதனிடமிருந்து விடுபட வேண்டியிருக்கிறது. நான் என்ன தவறு செய்தேன்? ஏன் சூரியன் என்னிடம் பகைமை பாராட்டுகிறது? என்னைத் துன்புறுத்துவதற்காக அது இரவு பகலாகச் சுற்றி வருகிறது. அதனிடமிருந்து தப்பிப்பதற்கு வழியே இல்லையா? சூரியனிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லி, கண்டித்து வையுங்கள்.ஆண்டவர் சூரியனை வரவழைத்துச் சொன்னார்:


"நீ ஏன் இருட்டைத் தொல்லை செய்கிறாய்? எதுவானாலும் என்னிடம் சொல்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான் உலகம் முழுவதையும் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். இதுவரை நான் இருட்டைப் பார்த்ததே இல்லையே. இருட்டைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதே! எங்கே இருட்டு? அதை என் முன்னால் வரச் சொல்லுங்கள். நான் ஏதும் குற்றம் புரிந்திருந்தால் அதனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலாவது நான் அதைப் பார்த்து விடுகிறேன்.சரியென்று ஆண்டவர் இருட்டை அழைத்தார். ஆனால், இருட்டால் ஒளியிருக்கும் இடத்திற்கு வரமுடியவில்லை. எப்படி வரமுடியும்? ஒளியே இருட்டைத் தேடிச் சென்றாலும், இருட்டு மிக மிகத் தொலைவாக ஓடிச்சென்றது.


ஒளி என்பது உண்மை. நம்முடைய ஆண்டவரே ஒளியானவர். இந்த ஒளியானவரை தெய்வமாக கொண்டிருப்போரை எந்த சக்தியும் தோற்கடிக்க முடியாது. ஏனெனில் அவர் நமக்கு சிலுவையில் ஜெயத்தை சுதந்தரித்திருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment