- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday, 4 November 2010

நட்சத்திர மீன்!


images ஒரு மாலை நேரத்தில் தாத்தாவும், பேத்தியும் கடற்கரையோரம் நடந்து சென்றார்கள். சற்று தூரத்தில் ஒரு இளைஞன் அலையோரத்தில் நின்று, பரபரப்பாக ஏதோ செய்துகொண்டிருந்தான். அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தாத்தாவுக்கும் பேத்திக்கும் புரியவில்லை. எனவே, நெருங்கிச் சென்று பார்த்தார்கள். அந்த இளைஞன் கரையில் ஒதுங்கிய நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அண்ணே? என்று இளைஞனிடம் கேட்டாள் சிறுமி.
பாப்பா, அலையடிக்கும்போது நிறைய நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கித் தத்தளிக்கின்றன. இப்படியே விட்டால் இவை செத்துப் போய்விடும். நாளடைவில் இந்த இனம் அழிந்து போய்விடும். அதனால்தான் ஒவ்வொன்றாக எடுத்து மீண்டும் கடலில் வீசிக் கொண்டிருக்கிறேன்.
தாத்தா கேட்டார்: ஆனால் தம்பி, இந்த ஒரு கடற்கரைதான் இருக்கிறதா? உலகம் முழுவதும் நிறைய கடற்கரைகள் இருக்கிறதே? அங்கெல்லாம் இதுபோன்ற நட்சத்திர மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்து கொண்டிருக்குமே? இப்படி ஒன்றிரண்டு நட்சத்திர மீன்களைக் காப்பாற்றுவதால் பெரிதாக என்ன பயன் கிடைத்துவிடும்?
இளைஞன் மற்றொரு நட்சத்திர மீனை எடுத்து கடலில் வீசியெறிந்தபடியே சொன்னான். நீங்கள் சொல்வது உண்மைதான் தாத்தா, எத்தனையோ நட்சத்திர மீன்கள் கரையொதுங்கலாம், செத்துப்போகலாம். ஆனால், இப்போது நான் கடலுக்குள் வீசியெறிந்த ஒரு மீன் பிழைத்துக் கொள்ளும் அல்லவா? அதுதான் மிகவும் முக்கியம். என்னால் முடிந்த அளவு நட்சத்திர மீன்களைக் காப்பாற்றுவதுதான் எனக்குத் திருப்தியளிக்கிறது என்ற இளைஞன் அடுத்த நட்சத்திர மீனை எடுத்து கடலில் வீசியெறிந்தபடியே சொன்னான்.
தாத்தா, பேத்தியை நோக்கிச் சொன்னார்: "அவர் சொல்வது சரிதான் பாப்பா, இந்த உலகில் நாம் ஒவ்வொருவரும் பயன்தரும் செயல்களை நிறையச் செய்ய முடியும். தேவனுடைய சத்தியத்தை மற்றவர்களுக்கு சொல்வதின் மூலம் நம்மால் முடிந்த அளவு, நம் சக்திக்கு உட்பட்ட நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு செய்கிறோம். அவர்களுடைய இக்கட்டான நிலைமையில் நாம் கூறுகிற சத்தியத்தின் மூலம் அந்த நபரோ அல்லது ஒரு குடும்பமோ இரட்சிக்கப்படலாம். இரட்சிக்கப்பட்ட அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் சத்தியத்தை பறைசாற்றுவதின் மூலம் அநேகர் கர்த்தருக்குள் வழிநடத்தப்பட முடியும். இதற்கு காரணமாயிருந்த உங்களை தேவன் அபரிமிதமாய் ஆசீர்வதிப்பார்.
சிறுவர்களே! மற்றவர்களுடைய தேவையில் தேவவழிநடத்துதலின்படி நீங்கள் உதவும்போது, அந்த காரியம் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். சிறு தேவையானாலும் உங்கால் முடிந்தவற்றை மற்றவருக்கு சந்தோஷமாக செய்யுங்கள். அவை உங்கள் வாழ்வில் பெரும் பலனை கொடுக்கும்.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

1 comment:

  1. அருமையான பதிவு பிரதர்

    ReplyDelete