- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 1 November 2010

கிறிஸ்தவ வாழ்வின் தன்மை


கலிபோர்னியாவிலுள்ள வேதாகமக் கலாசாலை ஒன்றில் “நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள்“ என்னும் வசனத்தை ஆராய்ந்து படித்துக் கொண்டிருந்தார்கள். உப்பின் சகல தன்மைகளையும் ஆராய்ந்து அது எப்படி கிறிஸ்தவனுடைய வாழ்வுக்கு உவமானமாய் அமையும் என அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தனர்.

தீடிரென சீனநாட்டவரான ஒரு மாணவி “உப்பு தாகத்தை ஏற்படுத்தும் இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்“ என்று கூறினாள். “நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கிறீர்கள்“ அப்படியானால் நாம் உலக மக்களுக்கு தாகத்தை ஏற்படுத்துபவர்களாகயிருக்க வேண்டும்“ என்றான். ஒரு மாணவன அவளைப் பரிகசிக்கும் நோக்குடன்.
அச்சீனப் பெண்ணோ உடனடியாக, “மக்களுக்கு கிறிஸ்துவின்மேல் தாகம் ஏற்படும் வண்ணம் நாம் உலகிற்கு உப்பாயிருக்க வேண்டும்“ என்றாள் உறுதியுடன். அதாவது கிறிஸ்துவை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையை நாம் மக்கள் மனதில் ஏற்படுத்தும் வண்ணம் வாழவேண்டும்

இயேசுக்கிறிஸ்துவிற்கான சாட்சிகளாகவே கிறிஸ்தவர்கள் இவ்வுலகில் இருக்கின்றனர். (அப் 1:8) சகல மக்களுக்கும் இயேசுக்கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க வேண்டியது கிறிஸ்தவர்களாகிய நமது கடமையாக உள்ளது. (மத் 28:19) 

இதனால் எமது வாழ்க்கை மற்றவர்கள் இயேசுக்கிறிஸ்துவண்டை வருவதற்கு ஏதுவான முறையில் இருக்க வேண்டும். நம்மைப் பார்ப்பவர்கள் இயேசுக்கிறிஸ்துவண்டை வர ஆசைப்பட வேண்டும். 

(இவ்வாக்கமானது சகோ. எம். எஸ். வசந்தகுமார் அவர்கள் எழுதிய சில சம்பவங்களில் சில சத்தியங்கள் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்)
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment