யோவான் 2:4 இல் இயேசுகிறிஸ்து தன் தாயாரை ஸ்திரியே என்று அழைக்கிறார். யோவான் 8:10 பாவியான பெண்ணையும் அதேவிதமாக ஸ்திரியே என்றே அழைக்கிறார். இதன் அர்த்தம் என்ன? (எம்.எக்ஸ்.ஜெரால்ட், ஊட்டி, இந்தியா)
இயேசுகிறிஸ்து தன்னுடைய பகிரங்க ஊழிய காலத்தில் பெண்களை இவ்விதமாகவே அழைத்துள்ளார். மத்தேயு 15:28 இலும் லூக்கா 13:12 இலும் பிசாசின் பிடியிலிருக்கும் தன் மகளை விடுவிக்கும்படி கேட்ட கானானியப் பெண்ணையும் யோவான் 4:21 இல் சாமாரியப்பெண்ணையும், யோவான் 20:15 இல் மகதலேனா மரியாளையும் யோவான் 2:4 மற்றும் 19:26 இல் தன் தயாயாரையும் ஸ்திரியே என்றே அழைத்துள்ளார். எனினும் ஸ்திரியே என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள பதம் மரியாதைக் குறைவான பதம் அல்ல.அப்பதம் மரியாதையுடனும் பண்புடனும் பெண்ணை அழைப்பதற்கு அக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட பதமாகும். அக்கால யூத சமுதாயம் பெண்களைத் தாழ்வானவர்களாகக் கருதிய போதிலும் இயேசு கிறிஸ்து பெண்களைப் பற்றி அவ்விதமான எண்ணங் கொண்டிருக்கவில்லை. இதனால் எல்லோரையும் மரியாதையுடனும்“ பண்புடனும் அவர் அழைத்துள்ளார்.
இயேசு கிறிஸ்து பெண்களை அழைக்க உபயோகித்த பதம் மூலமொழியில் மரியாதைமிக்க ஒரு பதமாயினும் மகன் தாயை அழைப்பதற்கு அப்பதம் பொருத்தமற்றது. இயேசு கிறிஸ்து இவ்வாறு தன் தாயாரை அழைக்க காரணம், அவர் தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் தனக்கும் மரியாளுக்கு இடையே அதுவரை காலமும் இருந்த உறவுமுறை மாற்றபப்பட்டமையாகும். உண்மையில் இயேசு கிறிஸ்து தன் பகிரங்க ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை மரியாளை அம்மா என்றே அழைத்திருக்க வேண்டும். ஆனால் பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் மரியாளையும் மற்றப் பெண்களைப் போல் ஸ்திரியே என்றே அழைத்தார். அதன் பின்னர் அவர் மரியாளின் மகனாக அல்ல மாறாக தேவனுடைய குமாரனாகவே செயல்பட்டார். அதுவரை காலமும் தன்பூலோக பெற்றோருக்’கு கீழ்படிந்து வாழ்ந்தவர், பகிரங்க ஊழிய காலத்தில் பரலோகப் பிதாவின் சித்தத்தின்படியே செயல்பட்டார். இயேசு கிறிஸ்து தன்னுடைய பகிரங்க ஊழியத்தை ஆரம்பித்த பின்னர் அதுவரை காலமும் மரியாளுக்கும் இயேசுவுக்கும் இடையே இருந்த உறவு முறை மாற்றப்பட்டமையினால் அவர் அது வரைகாலமும் மரியாளை அழைத்தவிதமாக அவளை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்.
யோவான் 2:4
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
யோவான் 8:10
இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
மத்தேயு 15:28
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
லூக்கா 13:12
இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
யோவான் 20:15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
யோவான் 2:4
அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.
யோவான் 19:26
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
மேலதிக விளக்கத்திற்கு இந்த தொடுப்பினைப் பார்க்கவும்
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment