யாத்திராகமப் ’புத்தகத்தில் பல தடவைகள் தேவன் பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. தேவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்யலாமா? (ஆர். ரவீந்திரன், கொழும்பு)
தேவனைப் பற்றிய விவரணங்களில் கிறிஸ்தவர்களை அதிகமாகக் குழப்பியுள்ள விடயம் அவர் பார்வோனின் இதயத்தைக் கடினப்படுத்தினார் எனும் விளக்கமாகும். யாத்திராகமம் 4 முதல் 14 வரையிலான அதிகாரங்களில் 20 தடவைகள் பார்வோனின் இதயம் கடினப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10 தடவைகள் தேவனே பார்வோனின் இதயத்தைக் கடினப்படுதியதாக எழுதப்பட்டுள்ளது.
பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்துவான் என்றும் தேவன் முன்னறிவித்தார். (யாத். 4:21, 7:3) இவை எதிர்காலத்தில் தேவன் செய்யவிருப்பதைப் பற்றிய முன்னறிவித்தலாகும். எனினும், தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவதற்கு முன்பே அவன் தன் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். எகிப்தின் மீதான் வாதைகளில் முதல் 5 வாதைகளின்போது பார்வோன் 10 தடவைகள் தன் இதயத்தைக் கடினப்படுத்தியுள்ளான். (யாத். 7:13,14,22, 8:15,19,32, 9:7,34,35, 13:5) அவ்வாதைகளின்போது இஸ்ரவேல் தேவனாகிய கர்த்தரே உண்மையான தெய்வம் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாதவனாக பார்வோனே தன் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான். பார்வோனின் மந்திரவாதிகள் இது தேவனுடைய விரல் என்று அறிக்கையிட்டும் அவன் அதை அலட்சியப்படுத்தியவிட்டான். எகிப்தின்மீது வந்த வாதைகள் இஸ்ரவேல் மக்களது தேவனே உண்மையான தெய்வம் என்பதை எகிப்தியரில் அநேகருக்கு உணர்த்தியிருந்தமையால் இஸ்ரவேல் எகிப்தை விட்டு வெளியேறியபோது அவர்களும் இஸ்ரவேலரோடு சென்றுள்ளனர். (யாத். 12:38) ஆயினும் அவ்வாதைகள் பார்வோனின் இதயத்தை அசைக்கவில்லை முதல் 5 வாதைகளின் போதும் பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்தியபடியால் அதன் பின்னரர் அவனுடைய இதயக்கடின நிலையிலேயே அவன் இருக்கும்படி அவனது இதயத்தை தேவன் கடினப்படுத்தினார். இதன் மூலம் (யாத். 9:12, 10:20,27, 11:10, 14:4) பார்வோன் தன் இதயத்தைக் கடினப்படுத்தியதைத் தேவன் உறுதி்படுத்தியுள்ளார்.
தேவன் பார்வோனின் சுயசித்தத்திற்கு முரணாக அவனது இதயத்தைக் கடனப்படுத்தினார் என்று நாம் கருதுவது தவறாகும் தேவன் மோசேயைப் பார்வோனிடம் அனுப்புவதற்கும் முன்பே நான் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன் என அவர் மோசேிடம் கூறியது உண்மையாயினும் தேவனுடைய இத்தகைய முன்னறிவிப்புகள் நிபந்தனையுடனான தீர்க்கதரிசன வகையைச் சேர்ந்தனவையாகும். அழிவையும் நியாயத்தீர்ப்பையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எப்போதுமே நிபந்தனையையும் கொண்டிருப்பதையும் நாம் வேதாகமத்தில் அவதானிக்கலாம். அதாவது ஒரு மனிதனை அல்லது தேசத்தை அழிப்பதாக தேவன் அறிவித்தால் அதனோடு,“மனந்திரும்பாதுபோனால்” எனும் விடயமும் சேர்க்கப்பட்டிருக்கும். மக்கள் மனந்திரும்பினால் தேவன் வரவிருப்பதாகச் சொல்லும் அழிவு வராது என்பதற்கு வேதாகமத்தில் பல உதாரணங்கள் உள்ளன. இன்னும் 40 நாட்களில் அழிவு வரும் என்று நினிவே நகர மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. யோனாவின் செய்தியில் மனிந்திரும்புதல் பற்றிய கூற்று இடம் பெறாத போதிலும் பாவத்திலிருந்து மனந்திரும்பினால் அழிவு வராது என நினைத்த மக்கள் மனந்திரும்பினார்கள். இதனால் தான் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீர்ப்பைக் குறித்து மன்ஸ்தாபப்ப்ட தேவன், அவ்வாறு செய்யாதிருந்தார். (யோனா. 3:10) இதேவிதமாக, பார்வோனும் தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்திருந்தால் தேவன் அவன் இருத்யத்தைக் கடினப்படுத்தியிருக்க மாட்டார். ஆனால் பார்வோன் தேவனுடைய செயல்களைக் கண்டும் 10 தடவைகள் தன் இருதயத்கை் கடினப்படுத்தியபடியால் அதன்பின் தான் சொல்லயிருந்தபடியே தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார். எனவே பார்வோனின் இதயத்தைகத் தேவன் கடினப்படுத்த காரணமாயிருந்தது பார்வோனே தவிர தேவன் அல்ல.
யாத். 4:21
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான்.
யாத். 7:3
நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்.
யாத். 7:13,14,22,
13. கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
14. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
22. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
யாத் 8:15,19,32
15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.
19. அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
32. பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.
யாத் 9:7,34,35
7. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
34. மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம் செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.
35. கர்த்தர் மோசேயைக் கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.
யாத். 12:38
அவர்களோடேகூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.
யோனா. 3:10
அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment