ஆபிரகாம் தன் மகனைப் பலியிட முற்படும்போது தடுத்த ஆண்டவர் யெப்தா தன் மகளைப் பலியிட முற்படும்போது தடுத்திருக்கலாமே? ஏன் தடுக்கவில்லை.
ஆபிரகாமின் விசுவாசத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே தேவன் அவனது மகனைப் பலியிடும்படி கூறினார். ஆபிரகாம் ஈசாக்கின் மூலமாகத் தன் சந்த்தி விருத்தியடையும் எனும் தேவனது வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, தான் ஈசாக்கைப் பலியிட்டாலும் தேவன் அவனை உயிரோடு எழுப்பி தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என நம்பி தன் மகனைப் பலியிடப் போனான். இது தேவனுடைய கட்டளையின்படியான செயல் என்பதனால் அவன் தன் மகனை பலியிட முற்பட்ட போது தேவன் அவனைத் தடுத்தார். ஆனால், யெப்தாவிடம் தேவன் இவ்விதமாகக் கூறவில்லை. அவனே தனது விருப்பத்தின்படி உணர்சிவசப்பட்டவனாக பொருத்தனை பண்ணி, கவலையோடு தன் மகளைப் பலியிட்டான். அம்மோனியரது ஆக்கிரமிப்பை முறியடிக்க தேவன் தன்னுடைய ஆவியை யெப்தாவிற்கு கொடுத்தபோதிலும் (நியாயதி. 11:29) அவன் தன் மீது வந்த ஆவியானவர் தனக்கு வெற்றியைக் கொடுப்பார் எனும் நிச்சியமற்றவனாக, தேவன் தனக்கு வெற்றியைக் கொடுத்தால் தான் திரும்பிவரும்போது தன்வீட்டு வாசற்படியிலிருந்து தனக்கு எதிர்கொண்டு வருவதைத் தேவனுக்கு சர்வாங்கப் பலியாக செலுத்துவதாக பொருத்தனைப் பண்ணி பின்னர் தனது மகளைப் பலியிட்டான். இவனது பொருத்தனையும் அதன் நிறைவேறுதலும் தேவனுடைய சித்தத்த்தன்படியானதாக இராதமையால் தேவன் அவனைத் தடுக்கவில்லை. தேவன் செய்யச் சொல்லாத்தை நாமாகவே விரும்பிச் செய்யும்போது அதை அவர் தடுப்பார் என நாம் எதிர்பார்க்கலாகாது.
நியாயாதிபதிகள் - 11 அதிகாரம்
29. அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment