- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday, 6 January 2014

வேதமும் விளக்கமும்- மீகாள், மேராப், மிக்கோலாள் என்போரில் ஆதரியேலுக்குப் பிள்ளைகள் பெற்றவள் யார்?

 2 சாமுவேல் 21:8 இன்படி சவுலின் குமாரத்தியாகிய மீகாள் ஆதரியேல் என்பவனுக்கு 5 குமாரரைப் பெற்றுள்ளாள். ஆனால் 1 சாமுவேல் 18:19 இல்  ஆதரியேலின் மனைவி மீகாள் அல்ல. மாறாக சவுலின் இன்னொரு மகளாகிய மேராப் என்று உள்ளது அதேசமயம் ஆங்கில வேதாகமத்தில் 2 சாமுவேல் 21:8 இல்மேராப் என்றே உள்ளது. ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் 2 சாமுவேல் 21:8 இல் மிக்கோலாள் என்று போடப்பட்டுள்ளது. எனவே மீகாள், மேராப், மிக்கோலாள் என்போரில் ஆதரியேலுக்குப் பிள்ளைகள் பெற்றவள் யார்?
(பாஸ்டர் பி.ஜெயலீலன், பொள்ளாச்சி, இந்தியா)

2 சாமுவேல் 6ஆம் அதிகாரம் 23ஆம் வசனத்தில் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே 2 சாமுவேல் 21:8 இல் மீகாள் ஆதரியேல் என்பவனுக்கு 5 குமாரரைப் பெற்றாள் என குறிப்பிடப்பட்டுள்ளது நமக்கு குழப்பதை ஏற்படுத்தலாம். அதேசமயம் 1 சாமுவேல் 18:19 இல் ஆதரியேல் என்பவனுடைய மனைவி மீகாள் அல்ல மேராப் என்றே உள்ளது. உண்மையில் இவ்வசனம் கூறுகின்றபடி மேராப் என்பவளே ஆதரியேலின் மனைவி. அவளே ஆதரியேலுக்கு 5 குமார்ரைப் பெற்றாள். இவ்விடயம் ஆங்கில மொழிபெயர்ப்பில் 2 சாமுவேல் 21:8 இல் மேராப் என்பவள் ஆதரியேலுக்கு 5 குமாரனைப் பெற்றாள் என சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நம் தமிழ் வேதாகமத்தில் இவ்வசனத்தில் மேராப் என்பதற்குப் பதிலாக மீகாள் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது KJV ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். அவ்வாங்கில மொழிபெயர்ப்பானது இவ்வசனத்தில் எபிரேய மூலப்பிரதிகளை அடிப்படையாக்க் கொண்டிராமல் அரமிக்மொழிபெயர்ப்பிலிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாக்க் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே 2 சாமுவேல் 21:8 மீகாள் அல்ல மேராப்பே ஆதரியேலுக்கு 5 குமாரரைப் பெற்றாள் என்பதே சரியான மொழிபெயர்ப்பாகும். மீகாளுக்கு 2 சாமுவேல் 6:23இன்படி பிள்ளைகள் இருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் மீகாளின் பெயரே மிக்கோலாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 II சாமுவேல் - 21 அதிகாரம்
 8. ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப்பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
 
 1 சாமுவேல் 18:19
19. சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
 
 எனது பின்குறிப்பு
திருவிவிலியத்தில் இது சரியாக மொழிபெயர்க்கப்பட்டள்ளது.  
 
 சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,
 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment