- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 1 January 2014

ஆவிக்குரிய பரிசீலனை-1


1. இன்று நான் எல்லா மனிதருடனும் தாழ்மையாக நடந்தேனா? (தீத்து 3:2)  
ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.

2. இன்று நான் ஏதாவது வீண் வார்த்தைகளை பேசினேனா? மத். 12:36
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. இன்று நான் யாருடனாவது சுயநலமாக செயற்பட்டேனா?  1கொரி. 13:4-5
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 1கொரி. 13:6

4. இன்று நான் வேறு ஒருவரின் தோல்வியில் சந்தோஷப்பட்டேனா?  
[அன்பு] அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

5. இன்று நான் இறைவனுடைய அரசையும் நேர்மையையும் தேடினேனா?  மத். 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்

6. இன்று நான் கர்த்தருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தேனா? கொலோ 1:10
 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,

7. இன்று நான் இறைவனின் அன்பை சந்தேகப்பட்டேனா? மல். 1:2
 நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.

8. இன்று நான் ஏதாவது ஒரு உலக காரியத்தில் பெருமைப்பட்டேனா? கலா 6:14
 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதி ருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்

9. இன்று நான் ஏதாவது செய்யக்கூடிய நன்மையை செய்யாமல் விட்டேன். கலா 6:9
 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

10. இன்று நான் ஏதாவது தீமையை வார்த்தையை பேசினேனா? எபே. 4:29
 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.


11. இன்று நான் பிரதிபலன் பார்த்து நன்மை செய்தேனா? மத். 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

12. இன்று நான் இரகசியத்தைக் காத்துக் கொண்டேனா? நீதி 11:13
புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.

(அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment