- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday, 26 September 2012

கடந்தகால பாலியல் அனுபவங்களின் வலிமை


கணக்கொப்புவித்தல்
எமது வாழ்க்கையில் மிகவும் பெலவீனமான காரியங்களைக் குறித்து யாராவதொருவர் அறிந்திருந்து, அதனைக் குறித்து எம்முடன் அடிக்கடி ஆராய்ந்து பார்த்தல் மிகவும் கட்டாயமொனதொன்றாகும்

வல்லமையான செயல் விளைவுள்ள கிறிஸ்தவ வளர்ச்சியைக் காணும்படியாக ஜோன் வெஸ்லி அவர்கள் பயன்படுத்திய பிரபல்யமான வழிமுறையில் வகுப்புக்கூட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது, வெவ்வேறு வயதும் சமுதாயப் பின்னணியும் கொண்டவர்களும், ஒரே பகுதியில் வசித்தவர்களுமான ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கியதாயிருந்தது.

கடந்தகால பாலியல் அனுபவங்களின் வலிமை
 .................. தீர்க்கப்படாத பாலியல் பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள், இந்தப் பிரச்சினைகளைத் தீரக்காமலே தமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வளருகிறார்கள். இவர்கள் மௌனமாக வேதனைப்படுவதுடன் மேலும் சோதனைகளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்

கிறிஸ்துவுக்குள் வளருகின்ற பலர் தமது வாழ்க்கை மாற்றப்படுவதற்கு முன்பதாக ற்பட்ட பாலியல் அனுபவங்களின் வடுக்களுடன் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் சிறுபிள்ளை பராயத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம். ஆபசமான புத்தகங்களுக்கு அடிமைப்பட்டு இருந்திருக்கலாம். அல்லது இவர்கள் மற்றவர்களைத் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம். அவர்கள் எதிர்பாலாருடன் பாலியல் தொடர்பான சம்பாஷனைகளில் அதிகம் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளாக வந்தவுடன் இவர்களுடன் காணப்படும் பாலியல் உணர்வுகள் தானாகவே போய்விடுவதில்லை. அவர்கள் இந்த உணர்வுகளைக் குறித்து சக கிறிஸ்தவர்களுடன் கதைப்பது கிடையாது. ஏனெனில் பாலியல் தொடர்பான சம்பாஷனைகள் சில கிறிஸ்தவ வட்டங்களில் முற்றாக தடை செய்யப்பட்டிருப்பதுடன், அசௌகரிமானதுமாகும்.

இந்தக் காரணத்தால் தீர்க்கப்படாத பாலியல் பிரச்சனைகளோடிருக்கும் கிறிஸ்தவர்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வளருகிறார்கள். அவர்கள் மௌனமாக வேதனைப்பட்டு, யாரும் அறியாமல் தமக்கு வருகின்ற சோதனையுடன் போராடுவார்கள். பின்னர், சடுதியாக அவர்கள் தாங்கள் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் பாலியல் பாவத்தையே செய்யத்தக்க ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேரிடலாம். அந்த சூழ்நிலையை எதிர்க்க முடியாத அவர்கள் விழுந்துவிடுவார்கள். எல்லோருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுக்கும்.

இது ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது. முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள் பலர், தாம் மனந்திரும்புவதற்கு முன் செய்த பாவத்தினால் சாத்தானின் சோதனைக்கு அடிக்கடி உட்படுத்தப்படுவது இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும் என இந்திய கிறிஸ்துவிற்காக இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் கலாநிதி விக்டர் மனோகரன் அவர்கள் எனது ஊழியத்தின் ஆரம்பத்தில் இதனை என்னிடம் கூறினார். சில ஆண்டுகள் கிறிஸ்தவனாய் இருந்த பின்னர், நாளாந்தம் தேவனுடன் செலவு செய்யும் நேரத்தை உதாசீனம் செய்வதன் மூலம் தேவனுடன் ஓர் நெருக்கமான, சிறந்த உறவை வைத்துக் கொள்வதைக் குறித்து நாம் கவலையீனமாய் நடந்துகொள்ளக் கூடும். அளவற்ற முறையில் தொலைக்காட்சி பார்த்தல் இணையத் தளங்களை பாவித்தல் போன்ற பாதகமான பழக்கவழக்கங்கள், எமது வாழ்க்கைக்குள் தீமை நுழைய அனுமதிக்கக்கூடும் இப்படியான சூழ்நிலைகளில் கிறிஸ்தவர்களின் பலவீனமான பகுதிகளைப் பார்த்து அவர்களைத் தாக்கும்படி ஆவலுடன் காத்திருக்கும் பிசாசின் தந்திரமான உபாயங்களுக்குள் (எபே. 6:11) விழுந்துவிடக்கூடியவர்களாக இருக்கிறோம்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி, முன்னர் குறிப்பிட்ட பிரகாரமாய், கணக்கொப்புவித்தலுக்குரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தல் ஆகும். இந்தச் சந்தர்ப்பங்களில் தங்கள் பாலியல் சோதனைகளைக் குறித்துப் பேசுவதற்கு எவரும் கூச்சப்படத் தேவை ஏற்படாது. அவர்கள் யாருக்கு கணக்கொப்புவிக்கிறார்களோ அந்தப் பங்களாளிகள் திருமணத்திற்கப்பாலிலுள்ள அவர்களது பாலியல் நடத்தை குறித்து அவர்கள் பகிர்ந்து கொள்வதை எதிர்பார்ப்பார்கள். இப்படிச் செய்வது, அவர்கள் பாவத்தில் விழுவதற்கு தடையாக அமையலாம். ஒருவன் கிறிஸ்தவனாய் வந்த பின்னரோ அதற்கு முன்னரோ பாரதூரமான பாலியல் பாவத்திற்கு உட்பட்டிருந்தாலோ அல்லது பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தாலோ அதனைக் குறித்து கணக்கொப்புவிக்கும் சக பணியாளர்களுடனோ, தலைவருடனோ உரையாட வேண்டும். என்று நம்புகிறேன். அப்படிச் செய்யும்போது அவர்கள் தங்களது வாழ்க்கையிலுள்ள பாரதூரமான ஒரு பிரச்சினையை வெளியே கொண்டுவருவார்கள். இதனால், மேலும் இந்தப் பகுதியில் தவறிப்போகத் தக்க அறிகுறிகளைக் குறித்து அவதானமாய் இருப்பார்கள்.

இன்னுமொரு வழி, கிறிஸ்தவத் தலைவர்கள் இத்தகைய தலைப்புகளை தங்களது படிப்பத்தல்களிலும், பிரங்கங்களிலும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவற்றை வெளிப்படையாக்குகிறார்கள். இந்தவிதமாக இவ்வித போராட்டங்களில் தாம் மாத்திரமே போராடிக் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். இதன்மூலம் இவற்றை குறித்து மற்றவர்களுடன் சம்பாஷி்க்க அவர்களுக்குத் துணிவு ஏற்படும். இலங்கையிலுள்ள வித்தியாசமான கிறிஸ்தவக் குழுக்களுடன் இந்தப் புத்தகத்திலுள்ளவற்றை பகிர்ந்துகொள்ளும்போது நான் இதனையே உணர்ந்துகொண்டேன்.

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான நடவடிக்கைகள் யாவற்றிலும், என்னைப் பொறுத்தவரையில் சிறுபிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்தலே மிகவும்  மோசமானது என்று சொல்வேன். எனது ஊழியத்திலே, சிறுபிள்ளையாக இருந்தபோது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்கள் அதற்குப் பிற்பாடு தாம் பாலியல் உணர்வுகளோடு மிக அதிகமாகப் போராடியதாகக் குறிப்பிட்டு்ள்ளார்கள். (மற்றைய சாதாரண பிரதிபலிப்பானது பாலியல் தொடர்பான விருப்பமின்மையாகும்) இந்தக் காரியம் அவர்களது அனுமதியுடன் நடைபெறவில்லை. மாறாக அது அவர்கள்மீது பலவந்தப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த சம்பவம், அசாதாரணமான பாலியல் உணர்வுக்குட்படுத்தப்படும். அளவுக்கு, அவர்களது இளம் வயதிலேயே பாலியல் உணர்வுகளைத் தூண்டி எழுப்பி விடுகிறது. இப்படிப்பட்டவர்களில் அநேகர் பெரியவர்களானதும் பாரி பாலியல் பாவங்களில் ஈடுபடுகிறார்கள்.

சிறுபிள்ளையாயிருக்கும்போது துஷ்பிரயோகத்திற்கு ஆளானார்கள் என்ற ஒரே காரணத்தினால், இவர்களது பாலியல் பாவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இருப்பினும், அவர்கள் தங்கள் போராட்டங்களை நம்பிக்கைக்குரிய ஒருவருடன் பகிர்ந்துகொண்டு, தேவனுடைய குணமாதலினால், துஷ்பிரயோகத்தின் தழும்புகள் சுகமடைவதுடன், துஷ்பிரயோகத்குள்ளானதால் ஏற்பட்ட அதிகமான வேதனையையும் பாவத்தையும் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கென்று ஒரு கணக்கொப்புவித்தல் குழு இருந்து, அவர்களது பலவீனங்களை அறிந்து, இந்தப் பகுதியில் அவர்களது நடவடிக்கைகளைக் குறித்து கணக்கொப்புவித்தல் இருந்திருந்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானதாய் அமைந்திருக்கும்.

துஷ்பிரயோகம் மனிதர்களது வாழ்க்கைகளை வெகுவாகப் பாதிக்கின்ற காரணத்தால் பாலியல் துஷ்பிரயோகமானது சமுதாயத்தினால் பாரதூரமான குற்றச் செயலாகக் கருதப்படல்வேண்டும். சபையும் இதனைக் குறித்து மிகவும் கடுமையாகக் கண்டித்து உணர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் காணப்படும் மிகவும் மோசமான இரகசியப் பாவம் இதுவாகும் என்பதனை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அத்துடன் இது அடிக்கடி நிகழ்வதாகவும், எதிர்க்கப்படாமல் மறைக்கப்படுவதாகவும் இருக்கிறது





இவ்வாக்கமானது கலாநிதி அஜித் பெர்ணான்டோ (Director, Youth for Christ(Sri Lanka)) அவர்கள் எழுதிய உணர்வு பூர்வமான நடத்தை : முன்யோசனையின்றி ஏற்படக்கூடிய உறவுகளைத் தடுப்பது எப்படி?“ எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு  Youth for Christ Publication தமிழில் மொழிபெயர்த்தவர் கலாநிதி அன்பழகன் அரியதுரை)

கலாநிதி அஜித் பெர்ணான்டோ அவர்கள் கடந்த 30 வருடங்களாக இலங்கை கிறிஸ்துவிற்காக இளைஞர் அமைப்பின் தேசிய இயக்குநராக பணியாற்றுகிறார். இப்பொறுப்பான பணியோடு இவரும், இவர் துணைவியாரும் தனிப்பட்டவர்களுக்கும் தம்பதியினருக்கும் அவர்களது நாளாந்த வாழ்வில் கிறிஸ்தவ நியமங்களை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஆராதனையில் மிகுந்த ஆர்வமுடையவரான இவர் தனது உள்ளூர் சபையில் அடிக்கடிஆராதனையை முன்னின்று நடத்துபவராக சேவை செய்பவருமாவார். இப்பொறுப்புடன் கிறிஸ்தவ பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக கற்பிப்பதிலும், ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகிறார். ஆங்கிலத்தில் 15 புத்தங்களை எழுதியுள்ளார். இப்புத்தகங்கள் இதுவரை தமிழ், சிங்களம் உட்பட 18 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment