- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday, 5 October 2012

மக்களை இரட்சிக்கும் வார்த்தை

 
 

1854 இல் ஆங்கிலக் கப்பலொன்றிலிருந்து ஒருவரது வேதாகமம் தவறிக் கடலில் விழுந்தது. அவ்வேதாகமத்தின் கதை அத்தோடு முடிந்து விட்டதகவே கப்பலிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் ஒரு ஜப்பானிய மீனவனுடைய வலையில் அகப்பட்டது. 
 
 
 
ஜப்பானிய மீனவன் தன் வலையில் அகப்பட்ட வேதாகமத்தை துறைமுக அதிகாரியிடம் கொடுத்தான். அவ்வேதாகமத்தைப் பார்வியிட்ட துறைமுக அதிகாரிக்கு அது சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டது.
 
 
துறைமுக அதிகாரியும் அதன் பிரதி ஒன்றைத் தன்னிடம் கொண்டு வரும்படி கட்டளையிட்டான். சீன வேதாகமத்தை வாசித்த அந்த அதிகாரி இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொண்டு இரட்சிக்கப்பட்டதோடு, அதைத் தன் நண்பனுக்கும் சகோதரருக்கும் காண்பித்தான். அவர்களும் சீன வேதாகமத்தை வாசித்து இரட்சிக்கப்பட்டனர். அத்தோடு இம்மூவரும் அநேகரை இயேசுகிறிஸ்துவுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
 
 
 
கிறிஸ்தவ வேதாகமானது “கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, கொண்டிருப்பதனால் (2 தீமோ. 3:15) வேதாகமத்தை வாசிப்பவர்கள் இயேசு கிறிஸ்துவண்டை வந்து இரட்சிப்படைகின்றார்கள். எனவே, மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேதாகம வார்த்தைகளையே நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 
 
 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment