அப்போஸ்தலானாகிய யோவானின் சீடனாயிருந்து, பின்னர் சிமிர்னா சபையின் பிஷப்பாக பணியாற்றிய பொலிகார்ப் (கி.பி. 69-159) என்பார் கடைசி வரைக்கும் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்காமல் தனது 86 ஆவது வயதில் இரத்த சாட்சியாக மரித்தார்.
ரோம அரசனை மக்கள் தெய்வமாக ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்ட காலத்தில் பொலிகார்ப் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக வழிபட்டு வந்தமையினால், ரோம அரசினார் கைது செய்யப்பட்டார். தன் இருப்பிடம் தேடி வந்த இராணுவ வீர்ர்களிடம், தனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்ட பொலிகார்ப் தனது கிறிஸ்தவ நண்பர்களை தேவனிடம் அர்ப்பணித்து ஜெபித்த்தோடு தனக்கு நேரிடப்போகும் சித்திரவதைகளுக்கு முகங் கொடுப்பதற்கான தைரியத்தை தரும்படி தேவனிடம் மன்றாடினார்.
பொலிகார்ப் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படும்போது ரோம அரசனே தெய்வம் என்று சொல்லி உயிர் தப்பும்படி பல தடவைகள் வற்புறுத்தப்பட்டார் ஆனால் பொலிகாரப்போ தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இயேசுகிறிஸ்துவை மறுதலித்து ரோம அரசனைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
கடைசியாக பொலிகார்ப் மாகாண ஆளுநர் முன் கொண்டு செல்லப்படார். பொலிகார்ப் வயது முதிர்ந்தவராக இருந்தமையால் மாகாண ஆளுநர் “இயேசுவை மறுதலித்துவிட்டு ரோம அரசனே தெய்வம் என்று சத்தியப்பிரமாணம் செய்: நான் உன்னை விடுதலை செய்கிறேன்.“ எனப் பல தடவைகள் சொன்னான். ஆனால் பொலிகார்ப்போ “86 வருடங்களாக நான் கிறிஸ்துவை சேவிக்கிறேன். அவர் எனக்கு ஒரு தீங்கும் செய்ததில்லை. என்னை இரட்சித்த என் அரசனை என்னால் எப்படி தூஷிக்க முடியும்“ என்று உறுதியுடன் பதிலளித்தார்.
மாகாண ஆளுநர் பல தடவைகள் முயற்சித்தும், பொலிகார்ப் இயேசுவை மறுதலிக்கவில்லை. இதனால், பொலிகார்ப் தன்னைக் கிறிஸ்தவன் எனக் கூறுகிறான் என்று அறிவிக்கப்பட்டு, உயிரோடு நெருப்பில் போடப்பட்டார். பொலிகார்ப் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும்போது இயேசுகிறிஸ்து வுக்காக மரிக்கத் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்துக்காகத் தேவனை துதித்துக் கொண்டே எரிந்து சாம்பலானார்.
இயேசுகிறிஸ்துவின் அன்பை அனுபவித்தவர்கள் அவருக்காக எதனையும் சகித்துக் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்பார்கள். எத்தகைய உபத்திரங்கள் வந்தாலும் அவர்கள் தம்மை நேசித்த இயேசுவை மறுதலிக்கமாட்டார்கள். பொலிகார்ப் அத்தகைய மனிதர்களில் ஒருவர், மரணம் கூட கிறிஸ்துவின் அன்பை விட்டு ஒருவனைப் பிரித்துவிடாது (ரோமர் 8:35-39) என்பதற்கு இவரது வாழ்க்கை சிறந்த விபரணமாய் இருக்கிறது
- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf
No comments:
Post a Comment